பல் வலியிலிருந்து பூரணமாக குணமடைய எளிய வழி

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12058
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பல் வலியிலிருந்து பூரணமாக குணமடைய எளிய வழி

Post by ஆதித்தன் » Sat Apr 20, 2019 7:57 am

பல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்து வருகிறது என்பதனை தெருவுக்கு தெரு உதித்து வரும் பல் மருத்துவமனைகள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

நோய்க்கான காரணம் தெரிந்து, அதற்கான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் மருத்துவமனைகள் எண்ணிக்கை அதிகரிக்காது. ஏனெனில் நாம் நோயற்ற வாழ்வுக்கான மருத்துவ வளர்ச்சியினைத்தான் எதிர்பார்க்கிறோம்.

ஆனால், மருத்துவத் துறை புதியது புதியதாக தீர்வற்ற கண்டுபிடிப்புகளை பரிசோதனை செய்வதற்கே ஒவ்வொருவரையும் ஆயுளுக்கும் பயன்படுத்துவது மட்டுமில்லாமல், மேலும் மேலும் பலரும் அதே நோயினால் பாதிக்கப்படுவதால் மருத்துவர்களின் தேவை அதிகரிக்கிறது.

சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறையினால் நோயாளிக்கு சரியான சிகிச்சை வழங்க முடியவில்லை என்று கூறுகிறது. மற்றொரு நாளிதழ் செய்தி, இந்திய மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லை என்றுச் சொல்கிறது.

இவ்வாறு மக்கள் நோயினால் அவதிபடுவதற்கு வெவ்வேறு காரணங்களைச் சொல்லும் பொழுது, வள்ளுவர் மிக எளிய தீர்வாக

யாக்கைக்கு பிணியென்பது இல்லையாம் அருந்தியது
அற்றது போற்றி உணின், என ரொம்ப தெளிவாகச் சொல்லி வைத்துவிட்டார்.

பல் வலியினை பூரணமாகக் குணப்படுத்துவதற்கான வழியும் இதுவே. ஆனால், ஒர் சில அடிப்படைகளை கூர்ந்து கவனித்தல் வேண்டும்.

அடிப்படிய என்னென்னு கேட்டால்... ரொம்பத் தடாலாக... பல் விளக்காதீர்கள் என்று சொல்லிடுவேன்.

பல் விளக்கக்கூடாதா? இதென்ன முட்டாள்தனமாக இருக்கிறது?

பல் விளக்கினால் தானே சுத்தமாக இருக்கும்??

நீங்க, சொல்றது சரியில்லை என்று உடனே கோவமும் .. சிரிப்பும்.... எதிர்ப்பு கருத்தும் உருவாகலாம்.

ஆனால், பல் வலி வந்திருக்கிற ஒருவர், பல்லே விளக்குவது இல்லையா? பல் விளக்காத காரணத்தினால்தான் பல் வலி வந்துச்சா?

கொஞ்சம் யோசிச்சி பாருங்க....

நீங்க சரியா, டாக்டர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகச் சொல்லக்கூடிய நல்ல பேஸ்ட் .. நல்ல ப்ரஸ் வைத்து, விளக்கக்கூடாது.. துலக்கத்தான் செய்யணும்.. அப்படின்னுலாம் சொன்னதற்கு செவி சாய்த்து... பல்ல நல்லா தினம் காலை மாலை என இரண்டு வேலையும் துலக்கினாலும் விளக்கினாலும் பல் வலி வரத்தானே செய்து??

கொஞ்சம் யோசிச்சி பாருங்க...

இல்ல... நான் நாலு நால் இரண்டு தடவை பல் விளக்குவேன்...... அப்புறம் மறந்திடுவேன்... அதான் எனக்கு வருது... நான் தான் தப்பு செய்றேன்.. அபடின்னு நீங்க நினைத்தாலும் நினைக்கலாம்.

பெரும்பான்மையான நபர்கள் இரண்டு தடவை பல் விளக்குவது கிடையாது. ஆனால், உண்மையில் இதுதான் காரணாமா? என்றுப் பார்த்தால்... பல் வலி இரண்டு தடவை வந்த ஒர் நபர்க்கு... இரண்டு தடவை பல் விளக்கினாலும் வரும்.

சொத்தப் பல் ஒன்று வந்திடுச்சின்னு... பிடிங்கிப் போட்டாலும், அடுத்தப் பல் சொத்தப்பல்லா மாறிடுது.

இப்படி சொத்தப்பல் உருவாகி பல் வலி வரக்காரணம் என்ன? இதன் மூலம் நாடாமல் பல் வலியிலிருந்து தப்பிப்பது என்பது ரொம்ப கடினம்.

பல் வலிக்கு காரணம் வாய் அசுத்தம் அல்ல.

வாய் அசுத்தம் உருவாகக் காரணமான, அன்றாட கழிவுகளாகிய மலம் & சிறுநீர் ஆகும்.

செரிக்கப்பட முடியா உணவுப்பொருளால் உருவாகும் மலம் கொஞ்சம் வயிற்றில் தேக்கமாகி நாட்பட்ட கழிவுத் தேக்கமாகி, அதன் வெளிப்பாடே வாயில் அசுத்தமாக வெளிப்படுகிறது.

வாயில் அசுத்தம் உருவாகியிருக்கும் பொழுது பசி என்ற உணர்வு இருப்பதில்லை என்பதனை கொஞ்சம் தனக்குத்தானே உணர்ந்து பாருங்கள்.

அதாவது, வயிற்றில் செரிமானம் கெட்டு கழிவு தேங்கியிருக்கும் பொழுது, பசி எடுப்பதில்லை. அதனையும் மீறி ரொம்ப கடமையுணர்வுடன் நேரத்திற்கு சாப்பிடுகிறேன் என்று சாப்பிட்டீர்கள் என்றால், கழிவு தேக்கம் அதிகமாகிறது.

கழிவு தேக்கம் அதிகமானப் பின்னரும், தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நாட்பட்ட கழிவுகள் உருவாகி, அதன் வெளிப்பாடு வாயிலும் உருவாகுகிறது.

இந்த நேரமும், வாயினைச் சுத்தப்படுத்திவிட்டேன் என்று நீங்களாக நினைத்துக் கொண்டாலும், அடுத்தும் பசியினை கவனிக்காமல் சாப்பிட்டால்.. பல் வலிக்கு காரணம் ஆகிறது.

ஆகையால், கழிவுகளின் மூலம் தான் பல் வலி உருவாகிறது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

கழிவினை வெளியேற்ற கடுக்காய் உதவியாக இருப்பதால், பல் வலிக்கு கடுக்காய் சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், கழிவுகளை வெளியேற்றும் பணியினை உடல் சரியாக செய்துவிடும்... அதனை செய்வதில் இடையூறாக நீங்கள் அதிகபடியாக உணவினைக் கொடுத்து கெடுத்துத்தான் செரிமானப் பிரச்சனையை உருவாக்கி, கழிவுகள் தேக்கத்திற்கும் காரணம் ஆனது... என்று சொல்லும் அக்குபஞ்சர் மருத்துவம்... சாப்பிடுவதனை கொஞ்சம் நிறுத்துங்கள், பசியினை கவனிக்க ஆரம்பியுங்கள்... பசித்தால் பசிக்கு மட்டும் உணவு சாப்பிடுங்கள் என்றுச் சொல்கிறது.

ஆம், வாயில் கொஞ்சம் அசுத்தமாக இருப்பது உணர்ந்த அன்றே வாயை சுத்தப்படுத்துறேன்னு பல் விளக்கினால் வேலைக்கு ஆகாது. வாயைக் கட்டணும். அதாவது உணவுக்கு தடை போடணும். பசிச்சால், கொஞ்சமாக பசி அளவுக்கு மட்டும் சாப்பிடணும்... போதும் என்ற உணர்வினை வயிற்றிலிருந்து பெற்ற உடனே நிறுத்திவிடணும்... நல்லா சாப்பிடுறேன்னு செரிமான பணிக்கு இடையூறு செய்தல் கூடாது.

இவ்வாறு வாய் அசுத்தம் தெரிந்த உடனே பசியையும் உண்பதிலும் கவனத்தினை செலுத்தினால், பல் வலி வராமல் பூரணமாக தடுத்துவிடலாம்.

சாப்பிடாவிட்டால், வேலை செய்ய கடினமாக இருக்குமே என்று எல்லாம் நினைக்காதீர்கள்.... நல்லா வேலை செய்தால், பசிக்கும்... பசிக்கு கொஞ்சம் சாப்பிடுங்க... வேலை செய்யுங்கள்.... பசித்தால் கொஞ்சம் சாப்பிடுங்கள்.

அதனைத்தான், அருந்தியது அற்றது போற்றி உணின் என்று வள்ளுவர் கூறுகிறார்.

காலையில் சாப்பிட்டால்... அப்புறம் மதியம் தான் சாப்பிட முடியும்... ஆகையால் கொஞ்சம் நிறைய சாப்பிட்டுக்கிறேன் என்பது எல்லாம்... அவரவர் உடலுக்கு ஏற்ப மாறுபடும்.

உங்கள் உடல் செரிமான பிரச்சனை ஏற்பட்டு நோய் ஏற்படுகிறது என்றால், சாப்பிடும் முறையில் தான் கை வைக்கணும்.

புதியதாக கடைப்பிடிப்பவர்ககு மயக்கம் வரலாம்... ஏதோ சாப்பிடாததால் தான் மயக்கம் வந்தது என்று நினைக்காதீர்கள்.

சாப்பிடாவிட்டால் பசிதான் வரணும். அப்படி பசிச்சும் சாப்பிடாவிட்டால், ஏற்கனவே சாப்பிட்டதனைக் கொண்டு உடல் தயாரித்த சுகரை, கிளைக்கோஜனாக மாற்றி வைத்திருக்கும் சத்தினைக் கொண்டு சமாளித்துக் கொள்ளும்... அப்படியும் நீங்கள் இருந்த கிளைக்கோஜன் எல்லாம் குலோஸ் ஆகிற அளவுக்கு பட்டினியாக கிடந்தால்... மயக்கம் வருவது என்பது நேரடியாக காற்றிலிருந்து உடலுக்குத் தேவையான சுகரினை தயாரிக்க... மற்றப் பணிகளுக்கு எல்லாம் ஓய்வு கொடுப்பது ஆகும். அப்படி மயக்கம் போட்டவர்கள், 1 மணி நேரம் கழித்து சர்வ சாதரணமாக உடல் தெம்புடன் எழுந்துவிடுவார்கள்... அவ்வாறு பலர் யாருமில்லா இடத்தில் மயக்கம் போட்டு விழுந்து... எழுந்து வந்திருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் நாம் தான் அதனை பெரிய விடயமா எடுத்து பயந்து, தண்ணீரை அடித்து, உடனடி பூஸ்ட்டப்பாக எனர்ஜி கொடுத்து எழுப்பி விடுகிறோம்... அதோடு விடுவதில்லை... குளுக்கோசும் ஏத்திவிடுறோம்... ஆனால், அதே பணியினை உடலே தனக்குத்தானே செய்து கொள்கிறது என்பதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்... ஏற்றுக்கொள்ள விடாமல் விளம்பரம்... தொழில்...சம்பாத்தியம் தடுக்கிறது.

அதென்ன சுகர்... சுகர் நோய் அல்லவா??? அப்படின்னா... குளுக்கோஸ் தான் சுகர். குளுக்கோஸ்னா நல்லதாகவும்... அதனையே சுகர்னு கூப்பிட்டால் நோயாகவும் அழைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது.

நாம் சாப்பிடும் சாப்பாடு அனைத்தும் சுகராகத்தான் மாற்றப்படுகிறது... சுகர் தான் நாம் செய்யும் வேலைக்கான சத்து. நாம் எவ்வளவு வேலை செய்கிறோமோ... பேசுகிறோமோ... ஓடுறோமோ... பயப்படுகிறோமோ அதற்குத் தகுந்தவாறு செலவுக்கான சுகர் இரத்தத்தில் இருக்கும்.... இரத்தித்தில் இருக்கும் சுகர்தான் நமக்கான பெட்ரோல்.. 200 கிலோமீட்டர் தொலைவு போகணும்னா 4 லிட்டர் பெட்ரோல் போட்டு வைச்சிக்கிற மாதிரி.... அடுத்த தெருவில் நாய் கிடக்கிறது... கடிக்க வந்தால் ஓடியே போய்விடணும் என்று பயந்து கொண்டே சென்றாலும் சரி... அய்யோ டைம் ஆச்சு.... பஸ் வந்திடுமே.... ஓடிப்போயாவது பிடிக்கணும் என்று படுக்கையிலிருந்து எழுந்த பொழுதே மனதில் தயார் ஆகிக் கொண்டாலும், அந்த ஓடுதலுக்கு தேவையான சுகர் உங்களது இரத்தத்தில் கலந்துவிடும்.

அதாவது இரத்தத்தில் சுகர் என்பது நம் எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் தேவைக்கும் ஏற்ப கூடுதலாகவும் குறைவாகவும் என மருத்துவத்துறை சொல்கிற சராசரி நிலை தாண்டி இருக்கலாம்... அது தவறில்லை. ஆகையால், காலைல போய் சுகர் டெஸ்ட் எடுக்கணும் என்பது எல்லாம் வீணான கற்பனை அளவே... அதனை வைத்து சுகர் நோயாளியாக மாறிவிடாதீர்கள்.

சரி, பல் வலிக்கு வாங்க!

பல் வலி இனி வரக்கூடாது என்று நினைப்பவர்கள்... முதல் பேஸ்ட் கொண்டு பல் விளக்குவதனை விடுங்கள்.

சாதாரண பல்பொடி கொண்டு, கையினால் பல் விளக்குங்கள்.

பல் விளக்குவதற்கு முன் பல் எவ்வளவு தூய்மையாக... அசுத்தமாக இருக்கிறது என்பதனை கொஞ்சம் கவனிச்சி... அதற்கு ஏற்ப உண்ணும் உணவில் கட்டுப்பாட்டை கொண்டு வாருங்கள்.

நல்லா தூய்மையாக இருந்தால்... நறு நறுன்னு கடிக்க வேண்டும் போல இருந்தால்... வெடக்கோழி அடிச்சி முழுசா எழும்பைக்கூட விடாமல் கடிச்சி சாப்பிடுங்க... சத்து கெத்தா, கிளைக்கோஜனா மாறி ஆரோக்கியம் வலுவா மாறும்.

அதுவே கொஞ்சம்... மச மசன்னு இருந்தால்.. எளிமையாக சீரணம் ஆகக்கூடிய... பசிக்கு மட்டும் இட்லி சாப்பிட்டுக்கோங்க..... பசிக்கு மட்டும் பழங்கள் சாப்பிட்டுக்கோங்க.. கெட்டுப்போன ஆரோக்கியம் திரும்பிவிடும்.

இப்படி உடல் செரிமான பணியினை உங்களது உணவு மூலம் எளிமைப்படுத்திக் கொண்டால் பல் வலி வராது.

பல் மருத்துவம் என்கிற பெயரில் இருக்கிற பல்லை இல்லாமல் ஆக்க வேண்டிய அவசியமும் வராது.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”