Page 1 of 1

துணைக்களப் பதிவு விதிமுறைகள் - முதலில் படியுங்கள்

Posted: Fri May 15, 2015 11:37 am
by ஆதித்தன்
செய்தால் உடனடி பணம் என்ற இந்தத் துணைக்களத்தில் பலரை முதலாளிகளாக காணும் கனவில் படுகை கோல்டன் மெம்பர்கள் தனக்கு நிறைவேற்றப்பட வேண்டிய சிறியப் பணிகளை பதிவாக வெளியீடு செய்து, செய்பவர்களுக்கு குறிப்பிட்ட பணத்தினை உடனடியாக வழங்கும் வசதியினைக் கொண்டு செயல்படுகிறது.

பணிகளைச் செய்பவர்களுக்கு உறுதியாக பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையில், உறுப்பினர்களுக்கு ஏமாற்றம் நடைபெறாமல் இருக்க படுகை தனது பாதுகாப்பு வளையத்தினையும் அமைத்துக் கொடுக்க வேண்டியது அவசியம். ஆகையால் பணியினை வழங்கும் முதலாளிகளுக்கும், சுயமாக செயல்படும் சுயதொழிலாளர்களுக்கும் சிறிய விதிமுறையினை இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

முதலாளிகளுக்கான விதிமுறைகள்:
[*] ஒரு தலைப் பதிவில்(Topic) கொடுக்கப்பட்ட பணிக்கான கூலி 2 Cent முதல் 20 Cent வரை கொடுப்பதற்கு எந்தவொர் அனுமதியும் தேவையில்லை. ஆனால் அதற்கும் மேற்பட்ட தொகையினை பணிக்கூலியாக நிர்ணயம் செய்ய குறைந்தப்பற்ற பிணைத்தொகையை(10 நபர்க்கான கூலி) படுகை நிர்வாகத்திற்கு வழங்கிவிட்டே செய்தல் வேண்டும். பிணைத்தொகையை அவசியமில்லாத பொழுது திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

[*] ஒருவர் 3 தலைப் பதிவுகளை ஒரே நேரத்தில் நிர்வாகம் செய்து கொள்ளலாம். நான்காவது டாபிக்கினை தொடங்க முன்பையதில் ஏதேனும் ஒன்றினை மூடிவிட்டு செய்தல் ஆரம்பிக்கலாம் அல்லது பிணைத்தொகையை கொடுத்துவிட்டு தொடங்கலாம். ஒர் பதிவினை மூட, தலைப்பினை மூடப்படுகிறது என்று தலைப்பதிவில் மாற்றிவிட்டு பின்னூட்டத்திலும் சொல்லிவிட்டால் டாபிக் பூட்டப்படும்.

[*] ஒர் டாபிக்கினை பூட்டுவதற்கு முன் அங்கு கடைசியாக பணியினைச் செய்ததாக பின்னூட்டமிட்டிருக்கும் அனைத்து நபர்களுக்கு சரியான பதிலிரைத்துவிட்டு செய்தல் நலம்.

[*] பணியினைச் செய்துவிட்டு தகவல் கொடுக்கும் நபர்க்கு அன்றே அல்லது அடுத்த நாளிலோ பணத்தினை வழங்கிடுதல் வேண்டும், கிடைப்பில் போடுதல் வேண்டாம். அதைப்போல் ஐந்து நபர்க்கு மேல் பணியினைச் செய்துவிட்டு காத்திருப்பில் இருக்கிறார் என்பதும் நல்லதல்ல... உடனுக்கூடன் பணத்தினை வழங்க ஏதுவாக இருங்கள்.

[*] தவறாக பணிகளைச் செய்தவர்களுக்கு, அதனை பதிவில் பின்னூட்டமாக தெரிவித்து நிராகரித்துவிடுங்கள். இல்லாவிட்டால் பணம் கொடுக்காமல் கிடைப்பில் போடுவது போன்ற தோற்றத்தினை நிர்வாகத்திற்கு காட்டிவிடும்.

[*] செய்த பணிகளுக்கு சரியாக பணம் வழங்காதப் பற்றத்தில் எச்சரிக்கை தகவல் என்று ஒன்று வருகிறதோ இல்லையோ, கோல்டன் மெம்பர்சிப் என்று நீங்கள் வாங்கிய மெம்பர்சிப் மரியாதை பறிபோய்விடும்.

சுயதொழிலாளர்களுக்கான விதிமுறைகள்:
[*] நீங்களே சுயமாக பணிகளை முடித்துவிட்டு, சரியான தகவலைக் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ள வேண்டும். பதிவில் எப்படி செய்தல் வேண்டும்... என்ன யாது என்று வீண் விவாத பயிற்சிகள் கூடாது.

[*] சரியாக செய்த பணிக்கு கண்டிப்பாக பணம் கிடைக்கும். அப்படி 4 நாட்களுக்குள் பணியினைக் கொடுத்தவரிடமிருந்து பதில் கிடைக்காவிட்டால் 7 - 10 நாட்களுக்குள் படுகையின் கவனத்திற்கு கொண்டு சென்றால் விசாரிக்கப்படும்.

[*] சரியாகச் செய்தேன் என்பதற்கு தகுதியான ஆதாரங்களை வழங்குதல் வேண்டும் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பக்கம் சரி என்று இருப்பின், பணி கொடுத்த முதலாளி அதற்கான பதிலை அளிக்காமல் அலட்சியப்படுத்தும் பொழுது பணிக்கான தொகையை நிர்வாகம் வழங்கும்.


படுகை பெரும்பாலும் தனிமடல் & இமெயில் தொடர்புகளை விரும்புவதில்லை. ஆகையால் எந்தவொரு கேள்வியாக இருந்தாலும் படுகை உதவிக்களத்தில் கேட்டுக் கொள்ளுதல் வேண்டும். அதைப்போல், அந்தந்த பதிவிக்கான விசாரணையும் அந்தந்த பதிவிலேயே கேட்டு முடிக்கப்படும். விடுமுறைக்காலத்தில் இருப்பவர்கள், முன்பே திட்டமிட்டு பணிகளை ஒதுக்கிவிட்டுச் செல்லுங்கள்... அக்கறையின்மையால் தவறுகள் நேர வாய்ப்புகள் கொடுக்க வேண்டாம்.


மாற்றம் காலத்தின் சூழலுக்கு உட்படும்.
கடைசியாக மாற்றியமைக்கப்பட்ட நாள் :: 15 மே 2015

:thanks:

Re: துணைக்களப் பதிவு விதிமுறைகள் - முதலில் படியுங்கள்

Posted: Mon Nov 16, 2015 12:32 am
by vimal1875
நான் சாப்பிடப்போகிறேன்..

இன்று இரவு 1 மணிக்கு மேல் நான் ஆன்லைனில் இருப்பேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நேரத்தில் பேய் பிசாசு ஏதாவது இருந்தால், அனுப்பி வையுங்கள்.. என் துணைக்கு.

நன்றி.

Re: துணைக்களப் பதிவு விதிமுறைகள் - முதலில் படியுங்கள்

Posted: Sun Aug 20, 2017 7:09 pm
by rkraju
Hi sir,
Enakkoru free domain web page vendum sir

Re: துணைக்களப் பதிவு விதிமுறைகள் - முதலில் படியுங்கள்

Posted: Sun Aug 20, 2017 7:45 pm
by ஆதித்தன்
rkraju wrote:Hi sir,
Enakkoru free domain web page vendum sir
blogger.com > free sub domain blogspot - open pannikalam.

free domain venumna, 2000 pay panni gold member anal... dot com domain free tharuveyn