சுய நலம்...

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by ஆதித்தன் » Sun Jun 15, 2014 11:43 pm

அனல் பறக்குது போலிருக்குது...
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...21

Post by cm nair » Tue Jun 17, 2014 12:12 am

யமுனா கன்னத்தை பிடித்தவாறு விக்கித்து நின்றாள். ராஜமும்,

சந்தியாவும் - யமூனாவிற்கு இது தேவைதான் என்பதை பார்வையால்

பரிமாறி பேசாமலிருந்தனர். யமுனா கோபமும் அழுகையுமாக

கைப்பையை எடுத்து கொண்டு 'அண்ணி நான் கிளம்பேறேன்' என்று

வெளியேறினாள். பத்மினி படுக்கையில் விழுந்து குலுங்கி குலுங்கி

அழுதாள்.ராஜத்திற்கும், சந்தியாவிற்கும்அவளை கண்டு அழுகை

பிறந்தது. தன் கண்களை துடைததவாறு ராஜம், 'அம்மா..பத்மினி' என்று

பரிவுடன் அழைக்கவும் ராஜத்தை கெட்டி பிடித்து கொண்டு 'அம்மா..

என்னை மன்னிச்சிடுங்கம்மா... வீட்டுக்கு வந்தவளை நான்

அடிச்சிட்டேன்' என கூறியழுதாள் பத்மினி. 'அவள் சொன்னது தவறு

தானே.. அது யாரானாலும் அப்படிதான் செய்வார்கள்... நீ ஒன்றும் தவறு

செய்யவில்லை.. அவள் கேட்டு வாங்கி கொண்டாள் பத்மினி.. என்று

சந்தியா ஆறுதல் படுத்தினாள். பின் ஹாலுக்கு சென்ற சந்தியா நடந்த

விஷயங்கள் அனைத்தையும் தன் கணவன் முரளியிடம் கூறினாள்.

பூகம்பம் வெடிக்க போவது உறுதி என்றறிந்த முரளி சந்தியாவை நாளை

வந்தால் போதும் என்றான். அடிப்பட்ட நாகம் கொத்தாமல் விடுமா..?

அடியை வாங்கி கொண்டு சென்ற யமுனா கோபாலுக்கு போன்

செய்தாள். இன்டர்‌வ்யூ வெற்றியடைந்த நிலையில் சிறிது லேசான மன

நிலையில் வந்து கொண்டு இருந்தான் கோபால். போன் ஒலிக்கவே

எடுத்தான். 'என்ன..யமுனா..' என்றதும் மறுமுனையில் யமுனா அழுது

தீர்ததாள். 'என்னம்மா' பதறினான் கோபால். அழுதவாறு பட்டும்

படாமலும் நடந்தததை சொல்லி முடித்தாள். கோபாலுக்கு பத்மினி

மீதுள்ள கோபம் அதிகமாகியது. போனை துண்டிததான். 'என்

தங்கையை.. அதுவும் வீடு தேடி வந்தவளை அடிக்க இவளுக்குக்கென்ன

தைரியம்..இரண்டில் ஒன்று என்று முணுகியபடி வீடு வந்து சேர்ந்தான்

கோபால். கதவை திறந்த சந்தியாவிடம் ஒன்றும் பேசாமல் கால்,முகம்

கழுவி படுக்கை அறைக்கு நுழைந்தான். ராஜமும்,சந்தியாவும் பயந்தபடி

இருந்தனர். படுக்கை அறையில் பத்மினி படுத்து கிடந்தாள். அவள் தலை

முடியை(இதற்குத்தான் ஆண்கள் நீண்ட தலை முடி உள்ள பெண்கள்

வேண்டும் என்கிறார்களோ?) பிடித்து எழுப்ப 'அம்மா..' வலியில் அலற

கோபால் மறுக்கரத்தால் அறைய போக பத்மினி அவன் கரங்களை

பிடித்தாள். 'என்ன நடந்தது-னு தெரியாமே அடிக்கிற உரிமை

உங்களுக்கில்லை..அதற்குள் சந்தியா இடையில் வரவும் பத்மினி தன்

கரத்தினை எடுத்தாள். 'என்ன தைரியமிருந்தா..யமுனா மீது கை

வச்சிருப்பே...என்றான் கோபத்துடன். 'எல்லாம் தெரிஞ்சது அப்பறம் நீ

செய்யறதை செய் என்றாள் சந்தியா. 'எல்லாம் தெரிஞ்சுதானே

செய்யறேன் என்றவனிடம் 'என்னட..உனக்கு தெரியும்' என்றாள் ராஜம்.

'அதான் அவ...மௌனம் சாதிக்கிறாளே..அதிலிருந்து தெரியலே...அவ

தப்பு செய்தாளா... இல்லையா என்று.. என்றான் கோபால்.பத்மினி

ஒன்றும் பேசவில்லை.அவள் விழிகளில் நீர் பிரவாகம். சந்தியா

எல்லாவற்றையும் கூற கோபால் அதிர்ச்சி அடைந்தான். யமுனா தான்

பேசியதை அவனிடமிருந்து மறைத்து விட்டிருந்தாள். பத்மினியிடம்

அவனுக்கு கோபம் இருந்தாலும் அவள் அக்னி என்பதை அவன்

உணர்ந்து இருந்தான். கோபம் யமூனாவின் மீது திரும்பியது.

'ச்சே..என்றவாறு வெளியே சென்றவன் அகர்பத்தி புகைக்க

தொடங்கினான்.

கண்ணால் காண்பதுவும் போய்.. காதால் கேட்பதுவும் போய்..தீர

விசாரிப்பதே மெய் என்றார்கள் பெரியவர்கள். அதை யார் பின்

பற்றுகிறார்கள்? அதற்கு முன்னே வந்து விடுகிறதே கோபம். கோபம்

யாரையும் வாழ வைப்பதில்லை..கோபம் கொள்பவனயே அது சுட்டு

விடும்...கோபம் கொண்டால் உடல் தளரும்... எல்லாம் அறிவுரைக்கு

நல்லாதான் இருக்குது என்கிறேர்களா...தனிமையில் சிந்தித்து பாருங்கள்

...புரியும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by ஆதித்தன் » Tue Jun 17, 2014 8:25 am

பால் மாதிரி உடனே அமுங்கிடுச்சு
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...22

Post by cm nair » Tue Jun 17, 2014 12:17 pm

பத்மினிக்கு அழுது கொண்டிருப்பதில் பயனில்லை என தோன்றியது.

யாரும் எதுவும் சாப்பிடவில்லை என்பதை விட எல்லாரும் பல

எண்ணங்களால் சாப்பிட மறந்து போனார்கள் 'பாவம்..அம்மா..அவர்கள்

மருந்து சாப்பிட வேண்டியவர்கள்.. அவர்களை சாப்பிட வைக்க

வேண்டும். வீட்டிற்கு வந்த அண்ணியும் சாப்பிடலை என்று

எண்ணியவள் சமையல் அறைக்கு நுழைந்தாள். இதை கண்ட

சந்தியாவிற்கும் ராஜத்திற்கும் அவள் போக்கு வியப்பாக இருந்தது.

சாம்பாரும்,கோஸ்ஸு பொறியலும் செய்து முடித்தவள் குளியல்

அறைக்கு சென்று குளித்து முடித்தாள். விளக்கு ஏற்றியவள்

கண்ணீருடன் பிரார்த்தனை செய்தாள். எல்லா லைட்-யும் போட்டு

வீட்டை பிரகாசமாக்கினாள். ராஜமும், சந்தியாவும் அவளை

விசித்திரமாக பார்த்தார்கள். ஊதுவத்தியின் மணம் மனதை

லேசாக்கியது. ராஜமும், சந்தியாவும் முகம், கை,கால் அலம்பி

பிரார்த்தனை செய்தார்கள். இவ்வளவு வேதனை இருந்தும் அவள்

நடந்து கொண்ட விதம் அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. வெளியே

சென்ற கோபாலுக்கு யமுனா -பத்மீனியை குறித்து பேசியது

பிடிக்கவில்லை.மனம் ஏனோ வெறுப்பில் தலை தூக்க வெகு

நாட்களுக்கு பின் தீர்த்தம் (மது) அருந்தினான். வீட்டில் அமைதி.

கடிகாரம் 8 மணி அடித்து தன் வேலையை முடித்தது. மெல்ல எழுந்த

பத்மினி ' அம்மா..அண்ணி வாங்க..சாப்பிடுங்க... என்றழைத்தாள்.

'இல்லேம்மா...பசியில்லே' என்று பொய் கூறினார்கள் இருவரும்..

என்றாலும் சாப்பிடும் நிலையில் அவர்களில்லை. 'காலையில்

சாப்பிட்டது...மருந்து வேற சாப்பிடணம்..அண்ணியும் வீட்டிலே

சாப்பிட்டு வந்ததுதானே...என்னாலே உங்களுக்கு கஷ்டம்' என்றாள் சிறு

விம்மலுடன். 'அழாதே..பத்மினி.. சந்தியா இப்போ சொன்னதை கோபால்

யோசிக்க மாட்டான்னா....என்ன..' என்ற ராஜம் 'அவனும் வரட்டும் '

என்றாள். பத்மினிக்கு தெரியும் கோபால் இன்று சாப்பிட மாட்டான்

என்று. 'அவர் வந்தா..நான் அவரோட சாப்பிடேறேன்... நீங்க வாங்க '

என்றவள் இருவருக்கும் பரிமாறினாள்.ராஜம் சாப்பிட உட்கார்ந்தாள்.

சந்தியா சாப்பிட உட்காரும் நேரம் கதவு தட்டப்பட்டது. பத்மினி கதவை

திறக்க செல்ல பின்னால் சந்தியாவும் சென்றாள். கதவை திறந்தவர்கள்

திகைத்தனர். கோபால் ஃபுல் ஃபிடில் நின்றிருந்தான். 'கோபால்'என்ற

சந்தியாவிடம் செய்கையால் பேச வேண்டாம் என்றவன் பத்மினியின்

பக்கம் திரும்பி 'என்க்கு ஒண்ணும் வேண்டாம்...எனக்கு தூக்கம் வருது..

என சொல்லவும் அவன் வாயிலிருந்து வந்த வாடையால் பத்மினி

வாந்தி எடுக்க ஓடினாள்.உள்ளே நுழைந்த கோபால் காலை கழுவி உடை

மாற்றி படுக்கை அறையின் லைட் அணைத்து படுத்தான். வாந்தி எடுத்த

பத்மீனியை பின்னால் வந்த சந்தியா தாங்கி பிடித்து கொண்டாள்.

'அண்ணி..தயவு செய்து..அம்மாகிட்டே சொல்ல வேண்டாம் என்றாள்

கண்ணில் நீர் மல்க.'இல்லேம்மா..' என்றவள் 'என்னம்மா.. முடியலயா'

என்றாள். தன்னை சுதாரித்து கொண்டவள் 'ஒண்ணுமிலே.. வாங்க..

அம்மா ஏதாவது நினச்சிக்க போறாங்க' என்றாள் பத்மினி. ராஜம்-

கோபால் சென்று படுக்கை அறைக்கு நுழைவதை கண்டாள். ஆனா

இவங்க ரெண்டு பேரும் எங்கே..என நினைக்கும் சமயம் இருவரும்

எதிரில். 'என்ன...அவன் சாப்பிடலயா...'என்றாள் ராஜம். 'கொஞ்சும்

நேரங்கழிச்சு சாப்பிடலாமேனு..சொன்னார்...இல்லயா..அண்ணி..?

வார்த்தைகள் பொய்யாகி தயங்கி வெளியே வந்தது. 'ஆ..மா..ம்மா...

நீங்க சாப்பிடுங்க...' என்றாள் சந்தியா.'ஏன்..நீயும் சாப்பிடு..சந்தியா..

அவள் பரிமாறி வச்சிருக்க இல்லயா...? என்றாவ று கை அலம்ப

எழுந்தாள் ராஜம். சந்தியா பத்மினியின் முகத்தை நோக்கினாள்.

'சாப்பிடுங்க அண்ணி..என்றவளுக்கு கோபாலை நினைத்தபோது

வேதனை இரட்டிப்பாகியது..கட்டுப்படுத்தி கொண்டவள் தண்ணீர்

அருந்தினாள்.


கவலை…. கரையான் புற்று போன்றது. உள்ளே இருந்து அரித்து

கொண்டே இருக்கும்.. அதற்கு வாய் விட்டு அழுவது தான் சிறந்தது.

பொய் சொல்ல துவங்கினால் எல்லாமே பொய்யாகி விடுகிறது..எதுதான்

உண்மை.. ?உறவுகள்..?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by ஆதித்தன் » Tue Jun 17, 2014 12:33 pm

பொய்த்ததெல்லாம் மெய்யானாலும் பொய்ப்பதில்லை, கண்ணீர்.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...23

Post by cm nair » Wed Jun 18, 2014 10:27 pm

சந்தியாவிற்கு பத்மினியின் நிலை புரிந்தது. அவள் பத்மீனியை சாப்பிட

வற்புதவில்லை. ராஜம் மருந்து சாப்பிட்டு படுத்தாள். சாப்பிட்டு முடித்த

சந்தியா சமையல்அறை ஒழுங்கு படுத்த பத்மினிக்கு உதவினாள்

சந்தியாவிற்கும் புரியவில்லை… பத்மினியின் வாழ்க்கை என்ன

ஆகுமென்று.? பத்மினி படுக்கை அறையின் கதவு திறந்து ஒரு

படுக்கையை எடுத்து ராஜத்ின் படுக்கைக்கு கீழ் விரித்து கொடுத்தாள்.

திரும்பி படுக்கை அறைக்கு வந்தவள் உறக்கம் வராமல் பால்கனியில்

சென்று அமர்ந்தாள். வானத்தை வெறித்து பார்த்தாள்.

'ஏன்.. என் வாழ்க்கை மட்டும் இப்படி.. நான் என்ன தவறு செய்தேன்...

எல்லாம் அறிந்தும் கோபாலை உயிருக்கு உயிராக நேசித்ததா...

எல்லாம் அவன் என்று நினைத்தாத... அவன் ஏன் என் அன்பை,

மனத்தை புரிந்து கொள்ளவில்லை...எங்கு...எப்பொழுது..செய்த தவறு...

அன்புக்காக ஏங்க வேண்டிய நிலை..? திடீரேரென்று கல்லூரி நினவிற்கு

காலம் அழைத்து சென்றது. ராஜா..செல்வா...டேவிட்... கண்ணில் வந்து

மறைந்தார்கள். மூவருமே தன்னை காதலித்தது... தன் பின்னால்

பைத்தியம் போல் சுற்றியது. இதில் ராஜா அவளது ஸீநியர்.. செல்வா

குடும்ப நண்பரின் மகன் வேறு கல்லூரியில்.! டேவிட் பக்கத்து வீடு.

இன்ஜிநியரிங்க் காலேஜ். யாருக்கும் அவள் பதில் தரவில்லை. காதலை

பயந்தாள். அப்பொழுது சூழ்நிலையில் பலரும் கூறியது பருவத்தின்

கோளாறு..ஏமாற்றி விடுவார்கள் என்பது தான். இதில் செல்வாவும்,

டேவிட்-ம் உயிரோடு இல்லை. செல்வாவின் சகோதரி கூறி அறிந்தாள்.

டேவிட் கடைசியாக ஒரு கடிதம் எழுதியிருந்தான்.. அதை அவள்

படிக்காமல் கிழித்து எறிந்தாள். அடுத்த நாள் அவன் இறந்து விட்டான்

தற்கொலையென்று போலீஸ் வந்த போதுதான் அறிந்தாள். ராஜா..

எங்கே..என்ன என்று ஒன்றும் அவள் அறிந்திருக்கவில்லை. அவர்களின்

சாபமா... சிந்திக்க வைத்தது. பெண் பாவம் பொல்லாதது என்பார்கள்..

ஆணுக்கும் அவ்வாறு உண்டா..? என்னிடம் என்ன இருந்து.... அவர்கள்

என்னை காதலித்தார்கள்... அதற்குரிய விடை அவளுக்கு

கிட்டவில்லை.. தெரியவில்லை.அதனால் தான் நான் நேசிப்பவர்

என்னை புரிந்து கொள்ளவில்லயோ..?பழய நினைவுகளை மறக்க

முயன்றாள்.

போன காலம் திரும்புவதில்லை.!காதல் ..அதை கண்டவர்கள் உண்டா...

காற்று போன்றதா...உணர மட்டும் கூடியது. யாருக்கும் யாரையும்

காதலிக்கலாம். தான் காதலிப்பவர்கள் தன்னை காதலிக்க வில்லை

என்றாலும் கூட...கற்பனையில் அதை தடுத்து நிறுத்த யாராலும்

முடியாது..அவர் அவர்களின் மனம்,கனவு, கற்பனை...அவர்

அவர்களுடையது... அதற்காக ஒரு பெண்ணின் மனம் அறியாமல்

பலரும் ஒரு பெண்ணயே காதலித்தால் அவள் என்ன செய்ய முடியும்..?

இது மஹாபாரதம் யுகம் அல்லவே..பாஞ்சாலியாக...மாற...

காதலிப்பதற்காக மட்டுமல்ல இந்த மனித பிறவி...அதில் பல

நிர்ணயங்களை நமக்கும் மேல் உள்ள சக்தி படைத்துள்ளது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by ஆதித்தன் » Thu Jun 19, 2014 9:34 am

கற்பனை மனம் அளப்பரியா உலகம்..
அதில் பயணிக்கும் கதாபாத்திரம் தான் வினோத நோய் :tong:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: சுய நலம்...

Post by Aruntha » Fri Jun 20, 2014 11:25 am

பெண்ணுக்கு பெண் எதிரி என்பது நியமாகிறது.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...24

Post by cm nair » Thu Jun 26, 2014 9:13 am

ராத்திரி பாதி தூக்கத்தில் எழுந்த கோபால் நீர் குவளையிலிருந்து

தண்ணீர் குடித்தவன் சிறு வெளிச்சத்தில் பால்கனியில் பத்மினி

அமர்ந்திருப்பதை பார்த்தான்.மீண்டும் திரும்பி படுத்து

கொண்டான். அவள் வயிற்றில் வளரும் அதனால் எவ்வளவு

சோதனைகள்...வேதனைகள்..! திடீரென்று திரும்பி பார்த்த

பத்மினி கோபால் திரும்பி படுப்பதை கவனித்து தன் படுக்கையில்

வந்து படுத்தவள் எப்போது உறங்கி போனாள் என தெரியாது.

காலை மணி 5 அடிக்க கண் முழித்தவள் எழுந்திருக்க

முடியாமல் மீண்டும் படுத்து கிடந்தாள். தலை விண்னென்று

வலித்தது. சிறிது குளிர்வது போலிருந்தது. ஒருக்களித்து சுருண்டு

படுத்து உறங்கினாள். மணி 7 அடித்தும் பத்மினி வெளி வராத

கண்ட ராஜம் படுக்கை அறையின் கதவை மெதுவாக தட்டினாள்.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கோபால் எழுந்தபோது பத்மினி

எழுந்திருக்காது கண்டு அதிர்ச்சி அடைந்தவன் நேற்று இரவு

அவள் பால்கனியில் அதிக நேரம் அமர்ந்திருந்தது நினைவில்

வந்தது. வேலைக்கு போக வேண்டியதை எண்ணி அவன்

வெளியேறவும் ராஜம் உள்ளே நுழைந்தாள். சந்தியா சமையல்

அறையில் வேலையாக இருந்தாள். கோபால் தன் கடமைகளை

செய்ய துவங்கினான்.ராஜம்,'பத்மினி'அவள் கையை பிடித்தபோது

அனல் போல் சுட்டது.நெற்றியில் கைவைத்து ார்த்தவள்

'அம்மா...சந்தியா..' என்றழைக்க சந்தியா ஓடி வந்தாள்.'நல்ல

ஜுரமிருக்கு' என்றாள். இருவரும் பத்மீனியை மெதுவாக எழுப்பி

மேலே படுக்கையில் கிடத்தினர். சந்தியா டீ போட்டு கொடுத்து

குடிக்க வைத்தாள். கோபால் குளித்து கொண்டிருந்தான்.டீ

குடித்து பத்மினி மீண்டும் சுருண்டு படுத்து விட்டாள்.

வெளியே வந்த ராஜம் குளியல் அறையில் வெளி வந்த

கோபாலிடம் 'நல்லா ஜுரம் அடிக்குது' என்றாள்.'டாக்டர் கிட்டே

கூட்டிக்கிட்டு போங்க...எனக்கு வேலைக்கு போகணம்' என்றவன்

உடை மாற்ற படுக்கை அறைக்கு சென்றவன் ஓரக்கண்ணால்

பத்மீனியை பார்த்தும் பாராதவன் போல் உடை மாற்றி வெளி

வந்தான். சந்தியா சிற்றுண்டி பரிமாறினாள். சாப்பிட்டு

முடித்தவன் நூறு ருபாய்யைராஜத்ிடம் கொடுத்து பத்மீனியை

டாக்டரிடம் அழைத்து செல்ல கூறினான். அவன் போன பின்

சந்தியா டாக்டர் லதாவை வரவழைத்தாள். ஊசி போட்டு

மருந்தும் கொடுத்த லதா, 'பயப்படறத்துக்கு ஒண்ணுமில்லே..

பலவீனம்தான்' என்று கூறிவிட்டு சென்றாள். பத்மினி மீண்டும்

உறங்கி போனாள்.சந்தியாவும்,ராஜமும் சமையலை செய்து

முடித்தனர் இப்போது பத்மினி நன்கு வியர்த்ிருந்தாள். சந்தியா

தன் வீட்டிற்கு கிளம்பி சென்றாள். நாட்கள் உருண்டு ஓடியது.

பத்மினிக்கு 6 மாதம் என்றாலும் கோபால்-பத்மினி உறவில் எந்த

மாற்றமும் இருக்கவில்லை.இருவரும் அவர் அவர்களது

நிலையில் பிடிவாதமாக இருந்தனர். பின் இருவரும் பேசி

பிரிவது என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் அவர்கள் பேசி

தீர்மானம் எடுத்தது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பத்மினி

தன் பால்ய கால தோழியான கண்மணியிடம் போன் மூலம்

எல்லாம் கூறினாள்.அவர்கள் இருவரது நட்ப்பும் 25 வருட

நட்பு..! கண்மணி தன் கணவன் கணேசன்,தாய் பாக்கியத்துடனும்

ஏழ்மையிலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.ஏழையானாலும்

மனதால் செல்வந்தார்களாக இருந்தனர். கணேசன் பத்மீனியை

பார்த்ததில்லை. கண்மணி கூறிய போதெல்லாம் அவளை காண

நினைத்திருந்தான். பிறந்த வீட்டில் பத்மினிக்கு இடமில்லை.

காரணம் எல்லோரும் 'வாழாவெட்டி' என்று கூறுவார்களாம்.அவர்

அவர்களது வேதனை அவர் அவர்களுக்கே..வாயில்

அரைப்பதற்கு ஏதேனும் கிடைத்தால் போதுமே..!கண்மணியின்

குடும்பம் அவளை ஏற்க தயாராக இருந்தனர். பத்மினிக்கு

எல்லாம் கண்மணிதான்..!

காலமும் ,வாழ்க்கையும் ஒன்றோடு ஒன்று பின்னி

பிணைந்தது.காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வலியும்

வேதனையும் அடிபபட்டவனுக்கே தெரியும்...வெளியே

பார்ப்பவனுக்கு தெரியாது. சிலரில் அனுதாபம்...சிலரில் வாய்

பேச்சும் கேலியும் தான் மிஞ்சும். ஆனால் யாரும் இல்லாதவர்க்கு

இறைவன் யாரையாவது காட்டாமாலா போகிறான்...?
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: சுய நலம்...25

Post by cm nair » Thu Jun 26, 2014 9:34 am

70 வயதான ராஜத்ிடம் விஷயத்தினை சொல்ல கோபால்

பயந்தான்.கோபாலும் பத்மினியும் கலந்து ஆலோசித்து ஒரு

முடிவுக்கு வந்தனர். வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய

கோபால் இரவு சாப்பட் ட்டிற்கு பிறகு ராஜத்ிடம், 'பத்மினியோட

அக்கா..போன் பண்ணி அவளை அங்கு கொண்டு வந்து விட

சொன்னாங்க..அது மட்டுமில்லே எனக்கு ஆஃபீஸ் வேலை

விஷயமா மும்பை போக வேண்டியிருக்கு என்றான். பொய்யின்

மீது பொய்யாக அடுக்கியவன்,'அதனாலே கொஞ்சும் நாள் நீங்க

தம்பி ரகு வீட்டில் இருங்க' என்றான். அப்பாவியான ராஜம்

சிந்தித்தாள். தன்னால் தனியாக இருக்க முடியாது என்ற

நிலையில் அவள் 'சரி..பத்மினி எப்போ கொண்டு விட போறே'

என்றாள். 'நாளைக்கு' என்றவன் 'உங்களை காலையில்

விட்டுட்டு...சாயந்திரம் அவள கொண்டுபோய் விடணம்... அதற்கு

அடுத்த நாள் எனக்கு மும்பை போகணும்' என்றான். ''சரி'

என்றபடி படுத்தாள் ராஜம்.பத்மினிக்கு வேதனையாக

இருந்தாலும் மனம் தளராமல் இருக்க முயற்சி செய்தாள். காலை

மணி 5 அடிக்கவே அனைவரும் எழுந்தனர்.அவரவர்

கடமையினை செய்தனர்.அனைவரும் ஒன்றாகவே சிற்றுண்டி

உண்டனர்.ராஜத்திற்கு ஆச்சரியமாகவும்,மகிழ்ச்சியாகவும்

இருந்தது பத்மினியும் அவர்களுடன் சாப்பிட அமர்ந்தது!

பாவம்.. அது பத்மினி தன்னுடன் இருக்கும் கடைசி நாளேன

ராஜம் அறிந்து இருக்கவில்லை. ராஜம் கிளம்பினாள். பத்மினி

கண் கலங்க ராஜத்ின் கால்களில் விழ போகும் நேரம் ராஜம்

அவளை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டவாறு

'நல்லா...சந்தோஷமா இரும்மா'என்றாள். 'இனி எதம்மா

சந்தோஷம் என்று எண்ணிய பத்மினி கண் கலங்கினாள்.கோபால்

'ஒரு..போன் செய்யனம்..நீங்க பின்னால் வாங்க' என்றபடி

வெளியேறினான். கோபால்..தம்பி ரகுவை அழைத்து

விவரங்களை பட்டும் படாமலும் கூறினான். ஓரளவு விவரங்கள்

தெரிந்து வைத்திருந்த ரகு சிறிது அதிர்ச்சி அடைந்தாலும் 'சரி'

என்றான். நாய் வாலை நிமிர்த்த முடியாது.. கோபாலின்

மனத்தை மாற்றவும் முடியாது. பத்மினியின் பிடிவாதத்தில்

நியாயம் இருப்பதால் ஒன்றும் சொல்ல முடியாது. ராஜத்தை

வாசல் வரை வழியனுப்பிய பத்மினி தன் பொருட்களை

பெட்டியில் அடுக்க ஆரம்பித்தாள். கோபால் - ராஜத்தை ரகுவின்

வீட்டில் விட்டு வீடு திரும்பினான்.கதவை திறந்த பத்மினி

அவனுக்கு பிடித்ததை சமைத்து வைத்து இருந்தாள்.ஒன்றும்

பேசாமல் அவன் சாப்பிட்டு முடிக்கவும் கடைசியாக பத்மினி

அவன் சாப்பிட்ட தட்டிலெல்லாம் பரிமாறி சாப்பிட்டாள். கண்கள்

கலங்கியது கோபாலின் மனத்திலும் இனம் புரியாத வேதனை.

மாலை 3 மணிக்கு இருவரும் வக்கீல் ராஜசேகரை காண

சென்றனர். ராஜசேகர் கண்மணியின் மாமா என்பதால்

கண்மணிசொல்லி எல்லாம் அறிந்து இருந்ததால் அவர்களுக்கான

ஏற்பாட்டிற்க்கு வர சொன்னதோடு மட்டும் அல்லாமல் பேசி

பார்த்து பயனில்லை என தெரிந்தபோது என்ன செய்ய வேண்டும்

என்பதை கூறியதோடு அல்லாமல் கோபாலிடம் ஜீவனமசா

தொகையையும் குறிப்பிட்டு நாளை வர கூறினார். வெளியே

வந்த பத்மினியும் கோபாலும் முரளியின் வீட்டிற்கு சென்றனர்.

இருவரும் ஒன்றாக வந்ததை கண்ட முரளியும்-சந்தியாவும்

மகிழ்ச்சி அடைந்தனர். மெதுவாக கோபால் நிலையினை கூறி

மறு நாள் வக்கிலிடம் வர சொன்ன போது இருவரும் அதிர்ந்து

போனார்கள். சந்தியாவிற்கு பத்மீனியை எண்ணியபோது அழுகை

வந்தது.

'இன்னென்ன சமயத்திலே இப்படி எல்லாம் நடக்கனமேனு இருந்த

அதை மாற்ற யாராலையும் முடியாது. சில விஷயங்கள்

எவ்வளவு தடுத்தாலும் நடந்தே தீரும்'
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”