சின்ன மனசு சிரிச்சான் ராஜா - சிறுகதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

சின்ன மனசு சிரிச்சான் ராஜா - சிறுகதை

Post by ஆதித்தன் » Sun Mar 11, 2012 7:04 am

சின்ன மனசு சிரிச்சான் ராஜா - சிறுகதை
கேட்டு வளர்ந்த கதைகளின் நினைவுத் தொகுப்பு.
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு அவர் பெயர் ”சிரிச்சான் ராஜா ”. சிரிச்சான் ராஜாவோட ஒரே மனைவியின் பெயர் ”பல்லி ராணி “ . இவங்களுக்குள் கல்யாணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகுது. பல்லி ராணிக்கு மான் என்றால் கொள்ள பிரியம், ஆகையால் ஒரு குட்டிப் புள்ளி மானை பிடித்துக் கொண்டு வரும்படி சிரிச்சான் ராஜாக்கிட்ட சொன்னா....
http://img1.dinamalar.com/cini//CNewsIm ... divelu.jpg[/fi]வாள் என்றால் வால் பிடிக்கும் நம்ம சிரிச்சான் ராஜா, வேட்டையன் வேடத்தில் வில் அம்பு ஏந்திக் கொண்டு காட்டுக்குள் தன்னந்தனியாக மான் குட்டிப் பிடிக்க போனார். சிரிச்சான் ராஜா காட்டுக்குள்ள தேடிப்பார்த்தாரு மானு கிடைக்கல.... கொஞ்சம் தொலைவில் ஒரே ஒர் முயல் மட்டும் நல்லா தூங்கிக்கிட்டு இருந்தது.. அந்த முயல எழுப்பி மான் எங்க போயிருக்குன்னு கேட்கலாமா? சரி...

ஏய் முயலே !!!
நல்ல தூக்கத்துல இருந்த முயல் சத்தத்தக் கேட்டு பயந்து அதிரடிச்சி எழும்பி நின்றது... சிரிச்சான் ராஜா மீண்டும் சத்தமா... ஏ முயலே , இங்குள்ள மான்களெல்லாம் எங்கே? எனக் கேட்டார்....

சிரிச்சான் ராஜா கையில் கொண்டு வந்த ”அட்டை வில் அம்பை” பார்த்த முயல், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு பவ்யமாக ....

வணக்கம் ராஜா, இந்த காட்டில் தலைக்கணம் பிடித்த ஆமை ஒன்று இருக்கிறது. அந்த ஆமை அதோ தெரிகிறதே அந்த மரத்திற்கு முன்னால் தெரியும் கல்லை அடைந்த பின்தான் இதன் குறுக்கே மான்கள் செல்ல வேண்டும் , இல்லையென்றால் சிங்க ராஜாவிடம் மானின் மறைவிடத்தைச் சொல்லிவிடும். இதற்குப் பயந்து ஆமை போன பின்னரே மான்கள் எல்லாம் இவ்விடத்திற்கு வரும். அதுவரை இங்கு அமருங்கள், ஆமை என்னை தாண்டி அந்த கல்லை அடைந்ததும் சொல்லுங்க ராஜா, நான் ஒர் மான் பிடிச்சுத்தாறேன் என்றது, முயல்.

மான் எப்படிடா பிடிக்கிறது என்று யோசனையுடன் இருந்த சிரிச்சான் ராஜாவுக்கு இது சரி என்றே பட்டது. உடனே சரி என்றது... முயல், எப்பாடா இனி நிம்மதியா தூங்கலாம் (ஆமை கல்லத் தொட்டதும், ராஜா எழுப்பி விடுவாரு.. நாம ஒடிப்போய் மரத்த தொட்டு முதல்ல வந்தடலாம்னு நினைச்சி தூங்க ஆரம்பிச்சுச்சு)....

மான் பிடிக்க வந்த சிரிச்சான் ராஜா, ஆமை எப்படா வரும்னு முயல் பக்கத்துலக் காவல் இருந்தாரு.....

சின்ன நடையா நடந்தாலும் பலத்த சிந்தனைக்குப் பின்னான நடையா எடுத்து வைத்து ஆமை மெதுவா நடந்து வந்தது. அதைப் பார்த்த சிரிச்சான் ராஜாவுக்கு கோபம் வந்திடுச்சி ... இவ்வளவு மெதுவா நடந்து வந்தால் எப்படி அந்த கல்ல சீக்கிராமா தொட முடியும்... கோவத்துல சிரிச்சான் ராஜா .... இங்கிருந்து ஓடிப்போய் ... ஆமைகிட்ட வந்து ....

ஏய் தலைக்கணம் பிடித்த ஆமையே ! நான் சிரிச்சான் ராஜா, இங்கு மான் பிடிக்க வந்திருக்கிறேன். நீ இவ்விடத்தை விட்டு சென்றால் தான் மான் வருமாமே... அதோ அங்கு தூங்கிக் கொண்டிருக்கும் முயல் எல்லாத்தையும் சொல்லிவிட்டது... வேகமாக இங்கிருந்து செல் . இல்லையெனில் என் அம்பை உன் மீது ஏவிடுவேன்...

அம்பையும் வில்லையும் பார்த்த ஆமை, முயலை விடவும் பவ்யமாக, இந்த முட்டாள் சிரிச்சான் அரசினிடம், முயல் ஏதோ கதைவிட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்ட ஆமை. அரசே ... நானும் மான்களைத் தேடித்தான் வந்திருக்கிறேன்... அவைகள் மறைந்திருக்கும் இடம் எனக்கு தெரியும் , ஆனால் ????

ஆனால் என்ன? சொல்...

அரசே, உங்கள் வேகத்திற்கு என்னால் நடக்க முடியாது ஆகையால் என்னை தோளில் சுமந்து சென்று அங்கேத் தெரியும் மரம் வரைத் தூக்கிச் சென்றால் நான் மான் மறைந்திருக்கும் இடத்தை காண்பிக்கிறேன் என்றது....

மான் என்றதும் வாய பிளந்த முட்டாள் சிரிச்சான் அரசன் , இப்பொழுதும் சரி என்று ஆமையை தன் தோளில் தூக்கிக் கொண்டு வேகமாக மரத்தை நோக்கி நடந்தார்....

முயலார் வாயில அல்வா!

சிரிச்சான் ராஜா ஆமையை நம்பி, முயலை மறந்து வேகமாக ஆமையை தூக்கிக் கொண்டுச் சென்றார்....

கல்லுப் பக்கத்துல போகுறதுக்குள்ள சிரிச்சான் ராஜாவுக்கு மூச்சு வாங்கிட்டு .... ஆமைய இறக்கிவிட்டுட்டு .... தண்ணி தண்ணின்னு கத்த ஆரம்பிச்சாட்டாரு சிரிச்சான் ராஜா....

பாவம் ஆமை... என்னடா வேகமா மரத்த தொட்டு முதல் பரிசு வாங்கிடலாம்னு நினைச்சா இப்படி இடையில கழுத்த அறுக்கிறானே ... தண்ணிக்கு எங்க போறது...

சுற்றிச் சுற்றிப் பார்த்த ஆமைக்கு , அந்தப்பக்கம் பாட்டி உட்கார்ந்து வடை சுட்டுக்கிட்டு இருந்தது தெரிந்தது...

சிரிச்சான் ராஜா, கவலைப்படாதீங்க ராஜா ... அதோ அங்க பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருக்கு அங்க போய் தண்ணீர் குடிச்சிட்டு வாங்க நான் மரத்துக்கிட்ட போய் உட்கார்ந்து இருக்கேன் என்று சொல்லிட்டு போயிட்டு (ஆமை காரியத்துல கண்ணியமாக ஒதுங்கிட்டு) ....

தாகத்தில் மூச்சு அடைக்கும் போது மான் நினைவு வருமா என்ன , சிரிச்சான் ராஜா வேகமாக பாட்டியை நோக்கி நடக்கலானார்...

பல்லிராணி, மான் கனவில் பஞ்சனையில் மல்லாந்து கிடந்தாள்(பாவம் ராஜா படும் பாடு தெரியுமா என்ன?

வேகமாக பாட்டியை நோக்கிச் சென்ற சிரிச்சான் ராஜா... பாட்டியின் அருகே சென்றதும் தண்ணீ.... தண்ணீ ....என கத்தலானார்....

பாட்டி , வேடன் உடையில் இருந்த ராஜாவை தன் உதவிக்கு(காக்க விரட்ட ) வைத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு , எனக்கு ஒரு உதவி செய்வாயா சத்தியமிடு என்று கேட்டாள் பாட்டி...

தாகத்தின் உச்சத்தில் இருந்த சிரிச்சான் ராஜாவும் சம்மதம் தெரிவித்தார்... பாட்டி தண்ணிய கொடுத்துட்டு, நான் வடை சுட்டு முடிக்கும் வரை காக்கா வடைய தூக்கிட்டு போகாம பார்த்துக்கணும்னு பக்கத்துல காக்க விரட்ட வைச்சுப்பிட்டா ...

பாவம் சிரிச்சான் ராஜா, சத்தியத்திற்கு இணங்க காக்க விரட்டிக்கிட்டு இருந்தபடியே .. பல்லிராணியை நினைக்கலானார்....

மான் பிடிக்க வந்த ராஜா காக்க விரட்ட ஆரம்பிச்சுட்டாரு......


இதன் தொடர்ச்சியை உங்களது படைப்பிற்கு விட்டுச் செல்கிறேன்...

நண்பர்களே தொடருங்கள்....
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: சின்ன மனசு சிரிச்சான் ராஜா - சிறுகதை

Post by ramkumark5 » Sun Mar 11, 2012 9:01 pm

இந்த மாதிரி ஒரு கதைய யாருமே சொன்னதில்லை. உங்க கதைய தஞ்சாவூர் கோயில் கல்வெட்டு’ல எழுதி வச்சிருங்க. நாளைய சங்கதிகள் பாத்து பயன் அடைவாங்க.

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

JUST FOR JOKE
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சின்ன மனசு சிரிச்சான் ராஜா - சிறுகதை

Post by ஆதித்தன் » Sun Mar 11, 2012 9:19 pm

ramkumark5 wrote: :wink:

JUST FOR JOKE
நிஜமாலுமே!!!

ரெக்கமண்ட் பண்ணியிருக்காருன்னு பார்த்தால்... சிரிக்கிற சிரிப்பப் பாருங்க :liear:
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: சின்ன மனசு சிரிச்சான் ராஜா - சிறுகதை

Post by rajathiraja » Mon Mar 12, 2012 7:20 pm

காக்கா விரட்டிக் கொண்டிருந்த சிரிச்சான் ராஜா(சத்தியமா நான் இல்லைங்க!) அசதியில் அப்படியோ தூங்கி விட்டார்.
திடீரென தலையில் 'சொத்' என்று ஏதோ விழுந்து முகத்தில் வழிந்தோட,
நாக்கை சுழற்றி நக்கிப் பார்த்த சிரிச்சான் ராஜா, தான் இதுவரை சுவைத்திராத வித்தியாசமாக சுவையாக இருக்கிறதே என தலையை தூக்கி மேலே பார்க்க,
எச்சம் போட்ட காக்கா கை கொட்டி சிரித்தது.

கடுப்பாகி போன சிரிச்சான் ராஜா, (வெறும் ராஜான்னு போட்டால் உங்களுக்கு என் ஞாபகம் தான் வந்து தொலைக்கும் என்பதற்காக ஒவ்வெரு தடவையும் சிரிச்சான் ராஜான்னே எழுத வேண்டி இருக்கு.) எனக்கு மானும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேண்டாம் என கோபத்துடன் எழுந்திருக்க,
பல்லி ராணியின் முகம் ஞாபகத்துக்கு வர மீண்டும் புறப்பட்டான் மானைத் தேடி....


தொடருங்கள்!

ஆதித்தன் சார்!
பேரை மாத்தி போடுங்க சார்! எல்லோரும் என்னை பார்க்கிற மாதிரியே இருக்கு!
Last edited by rajathiraja on Sat Mar 24, 2012 6:02 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சின்ன மனசு சிரிச்சான் ராஜா - சிறுகதை

Post by ஆதித்தன் » Mon Mar 12, 2012 7:49 pm

rajathiraja wrote: பேரை மாத்தி போடுங்க சார்! எல்லோரும் என்னை பார்க்கிற மாதிரியே இருக்கு!
மெய்யாலுமா???

அப்படின்னா இருக்கட்டுமே. அப்படியாவது ஒவ்வொருவரும்.... உங்களை நினைத்துக் கொண்டாவது கதை எழுத முயற்சிக்கட்டும். :):
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: சின்ன மனசு சிரிச்சான் ராஜா - சிறுகதை

Post by Aruntha » Mon Mar 12, 2012 7:51 pm

நான் இந்த பக்கமே தலை வச்சு படுக்க மாட்டன். ராஜா சார் பேர தூக்கிடுங்க அப்ப தான் வருவன்
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: சின்ன மனசு சிரிச்சான் ராஜா - சிறுகதை

Post by rajathiraja » Mon Mar 12, 2012 8:05 pm

Aruntha wrote:நான் இந்த பக்கமே தலை வச்சு படுக்க மாட்டன். ராஜா சார் பேர தூக்கிடுங்க அப்ப தான் வருவன்

என்னாச்சு! அருந்தாக்கா கட்சி மாறிட்டது போல இருக்கு.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: சின்ன மனசு சிரிச்சான் ராஜா - சிறுகதை

Post by Aruntha » Mon Mar 12, 2012 8:07 pm

அருந்தா தனிக்கட்சி தான் யார் கட்சியும் இல்லப்பா. இப்ப மறுபடியும் வம்புக்கிழுக்காதீங்க
N. Uma
Posts: 7
Joined: Mon Jan 06, 2014 1:24 pm
Cash on hand: Locked

Re: சின்ன மனசு சிரிச்சான் ராஜா - சிறுகதை

Post by N. Uma » Sat Feb 15, 2014 7:50 pm

பல்லி ராணிக்கிட்ட போய் அவஸ்தைபடுவதைவிட இங்கேயே பாட்டிக்கிட்ட உட்கார்ந்து காக்கா விரட்டுறது
எவ்வளவோ நல்ல வேளை என்று இருந்திருப்பார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சின்ன மனசு சிரிச்சான் ராஜா - சிறுகதை

Post by ஆதித்தன் » Sun Feb 16, 2014 12:37 am

நீண்ட இடைவெளிக்குப் பின், கதையினைப் படித்து கருத்து சொன்ன உமா மேடத்திற்கு எனது நன்றி.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”