Page 1 of 2

நான் படித்த பள்ளியில் ...... ஓயாத நினைவுகள்

Posted: Sat Mar 10, 2012 8:37 am
by ஆதித்தன்
படுக்கப்பத்து
அரசினர் மேல் நிலைப் பள்ளி


மகிழ்ச்சி - சிரிப்பு - சந்தோஷம் என்பவை நம் வாழ்வில் மிகுதியாய் நிறைந்த காலம் பள்ளிப் பருவக் காலம்.

சிரிக்க சிரிக்க நோய்விட்டுப்போகும் என்பார்கள், அதிலும் நினைத்து நினைத்து சிரிக்கும் போது எந்த நோயும் அண்டாது. அதற்காக, தனிமையிலிருந்து சிரிக்காமல், கணிணியின் முன் அமர்ந்து எங்களுடன் சிரியுங்கள்.. நோயே வராது.

சரி, பள்ளியில் நான் படிக்கும் பொழுது நிகழ்ந்த நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. ஆனால் எனக்கு அந்த அளவுக்கு ஞாபக சக்தி இல்லை. இருந்தாலும் , என் நினைவில் உள்ளவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி....

நான், முதல் வகுப்பில் படித்த பொழுது சொல்லிக் கொடுத்த ஆசிரியை முகம் இன்றும் என் மனதில் உள்ளது, ஆனால் பெயர் ஞாபகம் இல்லை. சொக்கன்குடியிருப்பில் இருந்து வரும் அந்த ஆசிரியை மிகவும் கண்டிப்பானவர், ஏனே எனக்கு கண்டிப்பான ஆசிரியர் என்றால் மிகவும் பிடிக்கும். அப்பதான் நல்லா படிக்க முடியும். அதுமட்டுமா ... ஏனோ என்னை ஒன்னாங்க் கிளாஸ்ல இரண்டு வருசம் உட்கார வச்சிட்டாங்க :blove:

இரண்டாம் வகுப்புல யாரு? மறந்திடுச்சி....

7/ஜனவரி/2015 --- மறந்தது இன்று நினைவு வந்துவிட்டது...
இரண்டாம் வகுப்பு டீச்சர் வயதான குண்டு டீச்சர்.... அவங்க பெயர் தெரியவில்லை ... ஆனால் முகம் நினைவில் இருக்கிறது... நான் படிக்கும் சமயத்தில் தான் அவர் இறந்துவிட்டார் என்பது போல என் நினைவில் தோன்றுகிறது... ஆகையால் முதல் வகுப்பினை எடுத்த டீச்சரே எங்களுக்கு இரண்டாம் வகுப்பினையும் சேர்த்து எடுத்ததுபோல் நினைவுகள் நிழலாடுகிறது...


மூன்றாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு ஆசிரியர் துரைராஜ் சாரும் மென்மையானவர்- கண்டிப்பானவரும் கூட. நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது என் கையில் குட்டியோண்டு பென்சில் இருந்தது ..

ஐந்தாம் வகுப்பு கண்ணாடி ஆசிரியர் (கெட் மாஸ்டர்) , இவரால தான் படிப்புல கொஞ்சம் கோட்டைவிட ஆரம்பிச்சேன், படிச்சும் பிட் அடிச்சு எழுத ஐந்தாம் வகுப்புல தான் ஆரம்பிச்சேன். (ஆனால், நான் பிட் அடிச்சு பரிட்சை எழுதுற பார்ட்டி இல்லப்பா- பயம். தொய்ந்த ஆசிரியர் கிடைத்தா! புக்கை எடுத்து எழுதுவேன் :cool: )

இடையில், கணக்குன்னா சுவிட்டா ஆக்கிய ஜெயம் டீச்சரையும்(4 & 5) மறக்க முடியாது.


ஆறாம் வகுப்பு - ஞானசுந்தரர் சார், இவர் ஒரு மாதம்(சரியா 10 நாள்தான்) தான் எனக்கு ஆங்கிலம் பாடம் எடுத்தார், ஆனாலும் இவரை எனக்கு பிடிக்கும், ஒரே மாதம் பாடம் எடுத்த இவரு பேரை மறக்கலன்னா பார்த்துங்களேன்) . ஏனெனில் அவரது கண்டிப்பு. அவர் ஒரு வருடம் ஆங்கிலம் பாடம் எடுத்திருந்தால் நான் ஆங்கிலத்தில் சரளமாக வளர்ந்திருப்பேன், இதுவே.

தாசன் சார். வெற்றிலை போட்டுக்கிட்டு கணக்கு சொல்லி கொடுக்கிற/நாக்கினை மடக்கி மிரட்டுற ஸ்டைலே தனி....

ஏழாம் வகுப்பு - சுமதி டீச்சர், ரொம்ப சாப்ட். ஆசிரியராக டிரெயினிங் டீச்சராக எங்களுக்கு பாடம் எடுக்க வந்தவங்க பின்னர் ஆசிரியர் ஆகி முதல் முதலில் எங்களுக்குத் தான் பாடம் எடுத்தாங்க.

எட்டாம் வகுப்பு : சின்னத்துரை சார். கண்டிப்பான வாத்தியார். பிடிக்காத வரலாறு பாடத்தை என் மண்டையில் ஏற வைத்தவர். முயற்சி என்பதற்கு இவரை ஒரு எடுத்துக்காட்டாக கூட சொல்லலாம். ஏனெனில் , 12ம் வகுப்பு படித்து இடைநிலை வாத்தியாராக வந்தவர், படிப் படியாக வேலை செய்த படியே படித்து பின்னர் மேல் நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியராக உயர்வு பெற்றவர்( நான் 12 முடித்த பின்னர் தான் எங்க பள்ளிக்கு 11/12ம் வகுப்பு தமிழ் ஆசிரியராக மீண்டும் வந்தார்). பண்பாளர்.

ஒன்பதாம் வகுப்பு, இங்கு சொல்லும்படி எந்த ஆசிரியரும் எனக்கு பாடம் எடுக்கவில்லை. ஆனாலும் கணக்கு கூ-முட்டை - ஆங்கில வல்லுனர் ஆறுமுகம்(சிக்ஸ் பேஸ்) மறக்க முடியுமா. கணக்கே தெரியாத இவரை எங்களுக்கு கணக்கு ஆசிரியராக போட்டதால் விளைவு. பத்தாம் வகுப்பில் 18 பேர் கணக்கு பாடத்தில் பெயில்.

பத்தாம் வகுப்பு : இங்கும் சொல்லுபடி எவரும் பாடம் எடுக்கவில்லை. கூமுட்டை ஆறுமுகம் , ஆங்கிலம் எடுத்தார். 9ம் வகுப்பில் நடந்த கூத்தால் இவர் நன்றாக நடத்தினாலும் தலையில் ஏறவில்லை. கடைசி பெஞ்சியில் இருந்து விளையாட்டுதான். சரியா ஆசிரியர் இல்லாததால் படித்த 34 பேரில் 18 பேர் பெயில் ஆயினர், நான் பாஸ் ஆகிப்பிட்டேம்ள.

11ம் வகுப்பு : இப்பொழுதும் சரியான ஆசிரியர் இல்லை. ஆகையால் பெரும்பான்மையான நேரம் வெண்டிக் கதை பேசியே கழிந்தது. காதலும் மனதில் அரும்பியது ( :s_dunno ). இதனைக் காதல் என்று சொல்வதற்கில்லை... பருவ ஹார்மோன்களால் உதயமாகும் ஒர்வித கவர்ச்சிதான்.. ஆனாலும் அதனை காதல் என்ற வார்த்தையால் கண்ணியமூட்டிய நம் மூதாதையர்கள் ரொம்ப புத்திசாலிங்க... பெரும்பாலும் அப்போதைய காதல் என்பது கத்தரிக்காய் ஆகிவிடும் என்பது வேறு கதை.

முதல் குரூப்பில் நாங்க எட்டு பேர், 2 ஆண் + 6 பெண்கள். (அதான் பத்துல கணக்கு பாடத்தில் அவ்வள பேரும் பெயிலாகி வீட்டில் செட்டில் ஆகிட்டாங்களே). இந்த காலக்கட்டத்தில் தான் பள்ளி கணிணியில் கேம்ஸ், பேசிக் ப்ரோக்கிராம் கொண்டு, ஐ லவ் யூ, மற்றும் ப்ரோகிராமிங்க் டாட் மூலம் பெயரை தமிழாக கொண்டு வருவது என கணிணி துறைக்குள் வந்தது.

ஒன்னு சொல்ல மறந்திட்டேன், எனக்கு கணக்குன்னா சூவிட், அதற்கு ஏற்றவாறு 11ம் வகுப்பில் கணக்கை மிட்டாய் மாதிரி சொல்லித்தர புதிதாக ஒரு வாத்தியார் வந்தார் - கண்டிப்பானவர்கூட. ஆனால் 11ம் வகுப்பு இடையில் வந்தவர் 12ம் வகுப்பு தொடங்கும் நேரத்தில் மாற்றல் வாங்கி பேயிட்டார் தூத்துக்குடி. அப்புறம் ... அல்ஜிப்ப்ரா... அப்படி இப்படின்னு காலேஜில் ஏதோ புரியாத மாதிரி சொன்னாங்களா ... அல்லது நமக்கு இதுபோதும்பா 35 மார்க்குக்குன்னு ... அவற்றினை கவனிக்க தவறினேனா தெரியவில்லை...கணக்கும் பாதியாகிடிச்சி...

12ம் வகுப்பு: மீண்டும் ஆசிரியர் திண்டாட்டம். ஆங்கிலம் நடத்திய சுப்பையா சார், ரொம்ப கஷ்டப்பட்டு புரியவைப்பார், ஆனா புரியாது :(

தமிழ் ஆசிரியை. ரொம்ப ஜாலி டைப். நம்ம தான் தமிழுன்னா படிக்காமலே பாஸ் ஆவோம்ல. ..... ஆமாம்... அன்றைய காலக்கட்டத்தில் என்னுடைய இலக்கு பாஸ் ஆக வேண்டும் என்பதனைத் தவிர... 1150-க்கு மேல் மார்க் வாங்கி பர்ஸ்ட் வர வேண்டும் என்பதே கிடையாது.... ஆனால் இப்பொழுது 1190 எடுத்து ... 10 மார்க் குறைஞ்சிடுச்சேன்னு முட்டி முட்டி படிச்சிட்டு அழுறாங்க... ரொம்ப பாவம். :wal:

வேதியியல் (கெமிஸ்ட்ரி) டீச்சர் : படி படின்னு உயிரை வாங்குவாங்க... அதனால் தான் என்னவே ... அவங்க படிக்க சொன்னால் மட்டும் பெரும்பாலும் படிக்கலைன்னு சொல்லி.. மறத்தடியில் உட்கார்ந்து காற்றோட்டமாய் படிப்ப்ப்ப்ப்போம்

உயிரியல் (பையாலாஜி) : நாளைக்கு படிச்சிட்டு வரல வீட்டுக்கு விட மாட்டேன், என்பார்கள். நாம என்னிக்கு வீட்டுல படிச்சோம். சொன்ன 5 கேள்வி பதிலை தமிழ் டீச்சர் கிளாஸ்ல படிச்சிட்டு , இவங்க கிளாஸ்ல பார்க்காம எழுதுறது. 30 நிமிடம் போதும் அவங்க கொடுக்குறத படிக்க( எந்த டீச்சர் படிக்க சொன்னாலும் , அவங்க கிளாஸ்கு முந்தைய கிளாஸ் நடக்கும் போது படிப்பது தான் நம்ம வேலை- வீட்டில் படிக்கமாட்டேன்) யாராவது படிக்க சொல்லி படிக்கலன்னா, (உடனே மற்றவங்ககிட்ட கூட்டு சேர்ந்து சார், இன்னிக்கு படிக்கல சார், கண்டிப்பா நாளைக்கு படிச்சிட்டு வர்றோம் சார்/டீச்சர்). அப்படிதான் ஒரு நாள் பயாலஜி டீச்சர் படிச்சாச்சானு கேட்டாங்க, நாங்க இல்லைன்னு சொல்லியாச்சு, சரி படிங்க அடுத்த பிரிடு வந்ததும் எழுதனும்னு சொல்லிட்டு போய்ட்டாங்க( எங்கேயும் போகல , பக்கத்து 11ம் வகுப்புல படிக்க சொல்லிட்டு உட்கார்ந்து இருந்திருக்காங்க, எனக்கு தெரியாது ) பிள்ளைங்க எல்லாரும் இவ்ள பெரிய கொஸ்டினா இருக்கு எப்படி ஒரு மணி நேரத்துல படிக்க முடியும்னு என்னிடம் கேட்டாங்க, உடனே, இது எல்லாம் மலையா , சரியா இந்த நாலு வார்த்தைய படிச்சிட்டு சும்மா கதை எழுத வேண்டியதுதான் அப்படின்னு அதிலிருந்த முக்கிய நாலு லைனை குறிப்பு கொடுத்தேன் :edu: ( அதுக்காண்டி நம்ம வீட்டுக் கதை சோக கதை...பல்லி மிட்டாய் கிடைக்காத கதை எல்லாம் எழுதக் கூடாது) என்றேன். இதை பக்கத்து ரூம்ல இருந்து கேட்டுக்கிட்டு இருந்த டீச்சர், வந்தவுடன் வைச்சாங்க ஆப்பு. படிச்சாச்சா .... சைலண்ட் ... சரி படிச்சவங்க ஒவ்வொரு வர்ரா வந்து ஒப்பிவிங்கன்னு சொன்னாங்க பாரு....... (மனதில்...அடடா ஏதோ எழுத சொல்லுவாங்க - ஐந்துல மூன்று எழுதுறக்குள்ள பெல் அடிச்சிடுனும் பார்த்தா- அதிசயமா இன்னிக்கு இப்படி சொல்லிட்டாங்களே)

அனைவரும் மெளனம்.

டீச்சர் விட்டாங்க பாரு கமண்ட் , என்ன நீங்க 10 நிமிடத்துள படிச்சீ கதை எழுதி கொடுப்பீங்களா! அதை நாங்க திருத்தனும்... சரி வாங்க ... நீங்கதான் முதல்ல சொல்லுங்க படிச்சதை.... :grain:

(எழுத சொன்னா ஏதோ எழுதிடுவேன், ஆனால் சொல்ல சொன்னால்!!! அப்படியே நின்றேன்,....)

அப்புறம் ஒவ்வொன்றாக படித்து ஒப்பித்தோம், அனைவரும்.... நான் இரண்டு மணி நேரம் வித்தியாசமாகவும் .... கடினமாக தொடர்ந்து படித்ததும் அன்று தான். பரிட்சைக்கு முந்நாள் தவிர வேறு எந்த நாளும் தொடர்ந்து 1/2 மணி நேரத்துக்கு மேல் படித்தது இல்லை.

படித்தோம் .... வெற்றிகரமாக அனைவரும் பாஸ் ஆகினோம்.

ஏதோ ... இதை எழுதும் பொழுது உண்மையில் என் மனதில் அனைவரும் வந்து சென்றனர், பலர் இதில் விடுபட்டிருக்கலாம். அதற்காக அவர்களை நான் மறந்தேன் என்று அல்ல. உண்மைகளை மறக்க வேண்டும், புதுமைகள் நல்லதாக அமைய வேண்டும் என்பதற்காக தவிர்த்திருக்கிறேன்.

சின்னம் ... டேய் அங்க பாரு சரியான!!!! :dotting:
பொய் சொன்னீயா? உண்மைய சொன்னீயா? :ank:

வாத்தியார்: இந்த சாக் பீசை யார் எறிந்தது??? .. ப்ரண்ட்: நான் எறிந்த சாக்பீஸ் அங்க இருக்கு சார் ...
வாத்தியார்: நீ எறிந்தது இருக்கட்டும் .... இத அந்த பொண்ணு மேல எறிந்தது யாரு.. அதச் சொல்லு .. ப்ரண்ட்: நான் எறிந்த சாக்பீஸ் அங்க இருக்கு சார்...
வாத்தியார்: போடுங்கடா... அவ்ளபேரும் முட்டுக்கால் போட்டு .. (அப்படின்னும் கடைசி வரைக்கும் யார் எறிந்தாங்கன்னே தெரியாமல் போயிடுச்சி வாத்தியாருக்கும்... கம்ப்ளெயிண்ட் செய்த பொண்ணுங்களுக்கும்)

இப்படி எல்லாம் நட்பாய் நடந்த பள்ளிக் கால கோலம் அழிந்திடுமா!!!

நாம் செய்த கேளிக்கை தான் மறக்குமா? :hape: ஆனால் அந்த கேளிக்கையினையும் .. மடத்தனத்தினையும் .. தவறுகளையும் மட்டும் சொல்லாமல் செல்வது நல்லப்பிள்ளைக்கு அழகு.


ஒகே..... ரொம்ப எழுதிவிட்டேன்... மீதத்தை அவ்வப்பொழுது சொல்கிறேன்... மனதில் அசைபோடுங்கள் ...


இதுவரை பொறுமையாக படித்த அனைவருக்கும் என்
:thanks:

Re: நான் படித்த பள்ளியில் ...... ஓயாத நினைவுகள்

Posted: Sat Mar 10, 2012 12:29 pm
by RukmaniRK
பள்ளி ஆசிரியர் அனைவரையும் மறக்காம எழுதுன ஆதி சார்க்கு பாராட்டுக்கள். ஆனா காதலி பேரை மட்டும் சென்சார்ல கட் பண்ணிடிங்களே!!!!இது என்ன நியாயம்.......

Re: நான் படித்த பள்ளியில் ...... ஓயாத நினைவுகள்

Posted: Sat Mar 10, 2012 12:58 pm
by muthulakshmi123
ஆதித்தன் சார் சொன்ன சொல்ல மறந்த (இல்லை சொல்ல மறைத்த) எல்லா நினைவுகளும் அருமை பரவாயில்லை ஆசிரியர் பெயர் களை ஞாபகமாக வைத்திருக்கிறீர்களே!!!!!!!! பாராட்டுக்கள்..

Re: நான் படித்த பள்ளியில் ...... ஓயாத நினைவுகள்

Posted: Sat Mar 10, 2012 8:30 pm
by ஆதித்தன்
RukmaniRK wrote: காதலி பேரை மட்டும் சென்சார்ல கட் பண்ணிடிங்களே!!!!இது என்ன நியாயம்.......
இன்று அல்ல, அன்றும் சென்சார் போர்டில் கட் பண்ணித்தான் வச்சிருந்தேன். அம்புட்டு நல்ல பையன் நான். ஆனால், அதுவே என்னை கெட்டவனாகவும் மாற்றிடுச்சி என்பதுதான் வருத்தம்.

அதுக்காண்டி பிறர் சொல்லும் கெட்டவன் நான் இல்லை, உள்ளுக்குள் மட்டும் தான் தவறு செய்துவிட்டமோ என வருந்தும் கெட்டவன்.

Re: நான் படித்த பள்ளியில் ...... ஓயாத நினைவுகள்

Posted: Tue Mar 13, 2012 5:41 pm
by thamilselvi
யார்தான் தவறு செய்யல, நம்மல அறியாம நாம எங்கயோ சில தவறுகள் செய்யறோம்தான்......... அதனால நாம நேசிக்கிற பல விஷயங்கள இழந்தும் போகிறோம்.......வலிக்கின்ற மனங்களுக்குள் இருந்து தான் சிறந்த படைப்புகள் உருவாகும்........கவலப்படாதீங்க..........எல்லாம் நல்லதற்கே என்று எடுத்துக்கொள்ளுங்கள்

Re: நான் படித்த பள்ளியில் ...... ஓயாத நினைவுகள்

Posted: Tue Mar 13, 2012 6:09 pm
by ஆதித்தன்
thamilselvi wrote:யார்தான் தவறு செய்யல, நம்மல அறியாம நாம எங்கயோ சில தவறுகள் செய்யறோம்தான்......... அதனால நாம நேசிக்கிற பல விஷயங்கள இழந்தும் போகிறோம்.......வலிக்கின்ற மனங்களுக்குள் இருந்து தான் சிறந்த படைப்புகள் உருவாகும்........கவலப்படாதீங்க..........எல்லாம் நல்லதற்கே என்று எடுத்துக்கொள்ளுங்கள்
உங்கள் ஆறுதலுக்கு மிக்க நன்றி.

Re: நான் படித்த பள்ளியில் ...... ஓயாத நினைவுகள்

Posted: Tue Mar 13, 2012 8:07 pm
by muthulakshmi123
Athithan wrote:
thamilselvi wrote:யார்தான் தவறு செய்யல, நம்மல அறியாம நாம எங்கயோ சில தவறுகள் செய்யறோம்தான்......... அதனால நாம நேசிக்கிற பல விஷயங்கள இழந்தும் போகிறோம்.......வலிக்கின்ற மனங்களுக்குள் இருந்து தான் சிறந்த படைப்புகள் உருவாகும்........கவலப்படாதீங்க..........எல்லாம் நல்லதற்கே என்று எடுத்துக்கொள்ளுங்கள்
உங்கள் ஆறுதலுக்கு மிக்க நன்றி.

தமிழ் செல்வி சொல்வதெல்லாம் உண்மையா ஆதித்தன் சார்..

Re: நான் படித்த பள்ளியில் ...... ஓயாத நினைவுகள்

Posted: Tue Mar 13, 2012 9:07 pm
by ஆதித்தன்
muthulakshmi123 wrote:
தமிழ் செல்வி சொல்வதெல்லாம் உண்மையா ஆதித்தன் சார்..
அனைவருக்கும் பொதுவான ஒர் உண்மை.

எனக்கானது என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். :ays:

Re: நான் படித்த பள்ளியில் ...... ஓயாத நினைவுகள்

Posted: Tue Mar 18, 2014 4:50 pm
by kannan77
தமிழ் எழுத மட்டும் தான் அழகி ன்னு (சாப்ட்வேர்) நெனச்சேன்.ஆதி சாரோட பள்ளி நினைவுகளும் கூட அழகி திரைப்படம் மாதிரி தான் இருந்தது

Re: நான் படித்த பள்ளியில் ...... ஓயாத நினைவுகள்

Posted: Wed Jan 07, 2015 9:16 pm
by vickykumar
:great: