பிரசவ வழி

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

பிரசவ வழி

Post by MALATHI » Mon May 14, 2012 11:43 am

என் வாழ்கையில் நடந்த சம்வம் இது.
நான் காதல் திருமணம் புரிந்தவள். எனக்கு தாய்,தந்தை கிடயாது. என் மாமியார் மிகவும் நல்லவர். ஆனால் அந்த காலத்தில் எப்படி வாழ்ந்தாரோ அதையே பின் பற்றுபவர்.நான் மாசமாக இருந்த சமயதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன், அப்பொழுது ஆன சிறிய செலவுகளுக்கே பொழம்புவார், இவ்வளவு செலவு ஆகிவிட்டதே என்று, எனக்கோ பயம் ,இந்த செலவிற்கே இப்படி சொல்பவர், நாளை ஆப்ரேஷன் என்று வந்து விட்டால் நம்மை பேசியே கொன்றுவிடுவாரே என்று, யோசித்து பார்த்து என் கணவரிடம் அரசு மருதுவமனையில் சிகிச்சை மேற்கொல்லாம் என்று ஆலோசனை சொன்னேன் அவரோ கூடவே கூடாது என்று கூறி விட்டார்.நானும் 9 மாத காலம் வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன்.என் அத்தையும் விடாது பொழம்பிக் கொண்டிருந்தார் அந்த நேரத்தில் தான் அரசு மருத்துவமனையில் வேளை பார்க்கும் ஒரு நர்ஸ் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஒரு கிராமத்தில் புதிதாக கட்டபட்டுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டால் சுகப்பிரசவமாகும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டால் அருவைசிகிச்சைதான் என்று பயமுறுத்திவிட்டு சென்று விட்டார்.தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடர்ந்தேன இல்லை அரசு மருத்துவமனை சென்றேனா என்று நாளை சொல்கிறேன்.
Last edited by MALATHI on Tue May 15, 2012 3:09 pm, edited 1 time in total.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பிறசவ வழி

Post by umajana1950 » Mon May 14, 2012 1:16 pm

மாலதி,
தயவு செய்து கொஞ்சம் பிழை இல்லாமல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். பிரசவ வலியா? அல்லது பிறசவ வழியா?. முதலில் இதை தெளிவு படுத்துங்கள்.
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: பிரசவ வழி

Post by MALATHI » Mon May 14, 2012 5:52 pm

மன்னிக்கவும்,வேகமாக எழுதியதால் பிழை ஏற்பட்டு விட்டது
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: பிரசவ வழி

Post by MALATHI » Tue May 15, 2012 3:19 pm

அரசு மருத்துவமனை நர்ஸ் என்னை பயமுறுத்திவிட்டு சென்றவுடன் என்ன செய்வது என யோசித்தேன், உடனே நான் என் கணவரை எவ்வளவு நச்ச முடியுமோ அவ்வளவு நச்சினேன். கூட என் அத்தையும் சேர்ந்து கொண்டார்.எங்கள் இருவரின் தொல்லை பொருக்க முடியாதவர், சரியென்று ஒத்து கொண்டார். பிரசவ நேரமும் வந்தது, நானும் அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்றேன். பிரசவ வலி எடுக்கும் நேரத்தில் ஸ்கேன் செய்து பார்த்தனர். என்னை விட சிறு வயது பெண்கள் எனக்கு பிரசவம் பார்த்தனர்.என்னை எவ்வளவு சிரம படுத்த முடியுமோ அவ்வளவு சிரமப்பட வைத்தனர். ஆனால் குழந்தை பிறக்கவேயில்லை நேரம் செல்ல செல்ல குழ்ந்தை துடிப்பு குறைவது எனக்கு நன்றாக தெரிந்தது. பிரசவம் பார்த்த அந்த நர்ஸ் இடம் சொன்ன போது அவள் இன்னும் முயற்சி செய்யுங்கள், தனியார் மருத்துவமனைக்கு சென்றால். பணம் அதிகம் செலவாகிடும் என்று சொன்னால்.நானும் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்து பார்தேன். குழந்தை பிறக்கவேயில்லை.கடைசியில் அவர்களே, இதற்கு மேல் முடியாது என்று தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சொன்னார்கள்.என் கணவர் என்னை தூக்கி கொண்டு ஒடினார்,தனியார் மருத்துவமனைக்கு சென்றதும் தான் ஸ்கேனில் தெரிந்தது குழந்தைக்கு குடல் சுற்றியிருந்தது என்று. டாக்டர் 10 நிமிடம் கால தாமதம் ஆனாலும் குழ்ந்தையை காப்பாற்ற இயலாது என்று கூறிவிட்டார். ரொம்பவும் மோசமான் நிலமையில் உள்ளது தன்னால் ஆப்ரேஷன் செய்ய இயலாது பெரிய டாக்டர் வர வேண்டும், அது வரை வலி பொருத்துதான் ஆக வேண்டும் என்று கூறி விட்டார். 15 நிமிடம் என்னை படிகளில் ஏற சொல்லி 3 ரூம்களுக்கு மாற்றி படாத சித்ரவதை அனுபவித்து ஒரு வழியாக் டாக்டர் வந்து என் மகனை உயிருடன் காப்பாற்றி கொடுத்தார். ஆனால் குழந்தை கோழை குடித்துவிட்டது, என்று அவனை படுக்கவைத்து வயிற்றை அமுக்கி ஒருவார காலம் அவனை இங்க் பெட்டரில் வைத்து இருந்தனர்.இது எதுவுமே எனக்கு தெரியாத படி என் விட்டில் உள்ள அனைவரும் நடந்து கொண்டனர். நான் மயக்கமாய் இருந்த ஒரு இரவு முழுவதும் என் கணவர் தூங்கவேயில்லையாம்.என் அருகிலேயே இருந்து எனக்கு பணிவிடை செய்து உள்ளார். நான் அட்மிட் ஆன் ரூமில் இரண்டு பெட் என் அருகில் சின்ன பெண் ஒருவளுக்கு அப்ரண்டீஸ் ஆப்ரேஷன் செய்துள்ளனர். அவளின் தாய் கூட சிறிது நேரம் உறங்கினாராம், ஆனால் என் கணவர் உறங்கவேயில்லையாம்.நான் கண்விழித்தவுடன் என் கணவர் எங்கே என்று கோவமாக கேட்டேன் . என் வீட்டில் இருந்தவர்கள் அமைதியாக சொன்னார்கள், அவன் இப்பொழுதுதான் வீட்டிற்கு போனான் என்று. எனக்கோ பயங்கர கோபம், வீட்டில் என்ன வேலை அவர்க்கு இங்கே நான் இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டுஇருக்கிறேன் அவர் வீட்டில் இருக்கிறாரா என்று கேட்டேன். பக்கத்து பெட்காரம்மா என்னை அடித்துவிடுவது போல் வந்தார். நான் கூட என் மகளை இப்படி கவணிக்கவில்லை அந்த தம்பி சிறிது கூட கண் அசராது உன்னை பார்த்து கொண்டார். நான் எவ்வளவு சொல்லியும் கூட தூங்கவேயில்லை. இப்பொழுதுதான் வீட்டிற்க்கு சென்றான். எழுந்ததும் இவ்வளவு அதிகாரமாய் கேட்கிறாயா, இந்த காலத்தில் இப்படியொரு புருஷன் யாருக்கும் கிடைக்காது என்று கூறினார். எனக்கு அப்பொழுதுதான் உறைத்தது நாம் எவ்வளவு பெரிய தவறு செய்துள்ளோம் என்று, தன் குழ்ந்தையை குட கவனிக்காது என்னை கவனித்து உள்ளாரே என்று,என் குழந்தை பிறந்து ஒரு வார காலம் நான் இருக்கும் ஆஸ்பிட்டலில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையில் வைத்து சிகிச்சை மேற்க் கொண்டுள்ளனர், இது எதுவுமே எனக்கு தெரியாது. அடுத்து என்ன ஆனாது எவ்வளவு செலவு ஆனது என்று நாளை கூறுகிறேன்.
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: பிரசவ வழி

Post by MALATHI » Thu May 17, 2012 3:37 pm

:ros: ஒரு வாரம் கழித்து என் குழந்தை முழு குணம் அடைந்தவுடன் தான் எனக்கு விஷயமே தெரிந்தது,என் கணவர் ஒரு வார்த்தை கூட என்னை திட்டவேயில்லை, ஆனால் என்னுடய அறியாமையால் மொத்தம் 1 லட்சம் செலவானது.இதன் மூலம் நான் சொல்வது என்னவென்றால் வீட்டில் பெரியவர்கள் ஏதேனூம் சொல்லத்தான் செய்வார்கள் அதையெல்லாம் பெரிதாக நினைத்துக்கொண்டு இருந்தால் என்னை போல்தான் அவஸ்த்தை படனும்.
இப்படிக்கு
மாலதி :wav:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிரசவ வழி

Post by ஆதித்தன் » Thu May 17, 2012 7:15 pm

உங்களது அனுபவக் கதை நன்றாக இருந்தது.

எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. :ros: :ros:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பிரசவ வழி

Post by muthulakshmi123 » Mon May 21, 2012 3:32 pm

ungal pirasava neram nangal kuta erunthathu pola erukku...valthukkal ungalzlukkum ungal kanavarukkum
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: பிரசவ வழி

Post by rajathiraja » Fri Jun 15, 2012 10:08 pm

அப்போ இந்த சம்பவத்தின் தலைப்பை “பிரசவத்திற்கான வழி” என்றும் “பிரசவ வலி” என்றும் சொல்லலாம்.
MALATHI
Posts: 44
Joined: Wed Apr 11, 2012 11:49 am
Cash on hand: Locked

Re: பிரசவ வழி

Post by MALATHI » Tue Jul 03, 2012 11:42 am

muthulakshmi123 wrote:ungal pirasava neram nangal kuta erunthathu pola erukku...valthukkal ungalzlukkum ungal kanavarukkum
thankyou sister
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”