Page 17 of 19

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Tue Jul 03, 2012 9:20 pm
by Aruntha
ஆதி மனவனே என் கைல மாட்டினா கொன்னுடுவன் கவனம் சரியா

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Tue Jul 03, 2012 9:49 pm
by mnsmani
புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள். புலவர்களுக்கு சண்டையும் சச்சரவும் தேவைதான். ஆனால் அதில் ஒரு அமைதி வேண்டும்.

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Wed Jul 04, 2012 6:27 am
by ஆதித்தன்
mnsmani wrote:புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள். புலவர்களுக்கு சண்டையும் சச்சரவும் தேவைதான். ஆனால் அதில் ஒரு அமைதி வேண்டும்.
என்னண்ணே இப்படிச் சொல்லிட்டீங்க... என்ன விடுங்க, இன்னிக்கு இல்லைட்டானாலும் நாளைக்கு ஒர் பட்டத்தை எப்படியாவது வாங்கிப்புடலாம் :grain: .

ஆனால், இந்தப் புள்ளையப்போய் புலவர்னு சொல்லிப்புட்டீங்களே!!!!

மனசு தாங்கல :Bcry: :Bcry: :Bcry:

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Fri Jul 06, 2012 10:06 am
by MALATHI
ARUNTHA WHAT ARE U DOING WHY NOT WRITING THE STORY PLEASE KEEP THE WRITING.

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Fri Jul 06, 2012 6:21 pm
by Aruntha
மாலதி நான் கொஞ்சம் பிஸி அது தான். இன்னிக்கு எப்பிடியாச்சும் கதை போடுறன் சரியா

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 73

Posted: Tue Jul 10, 2012 12:10 am
by Aruntha
அவன் யாருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க வேண்டும் என்று நினைத்தானோ யாருடைய இலக்கத்தை மறந்திருந்தானோ அந்த இலக்கத்தை போனில் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தான். ஆவலோடு சென்று அழைப்பை எடுத்தான். ஹலோ டாக்டரம்மா சொல்லுங்க உங்களோட கதைக்கணும் என்று தான் என் மனசு சொல்லிட்டு இருந்திச்சு ஆனால் உங்களோட நம்பர் எனக்கு நினைவு இல்லை அது தான் அழைப்பு எடுக்க முடியாமல் திண்டாடிட்டு இருந்தன் உங்க அழைப்பை பார்த்ததுமே கடவுளை பார்த்தது போல இருக்கு என்றான் சிவா.

தம்பி சிவா என்னை மன்னிடுப்பா என்னோட நிலைமை அப்பிடி பண்ண வைச்சிட்டு உன் அம்மாவோட உயிரை காப்பாத்த தான் அப்பிடி பண்ணினன் என்றாள் டாக்டரம்மா. யாரு என்னோட அம்மா? எனக்கு அம்மா கமலி மட்டும் தான் வேற யாருமே இல்லை என்றான் சற்று கோவமாக. அவனிடமிருந்து அந்த பதிலை எதிர்பார்க்காத டாக்டரம்மா அதிர்ந்து போய் இருந்தார். என்னப்பா சொல்றாய் உனக்கு அம்மா அப்பாவ இருந்தவங்க மாணிக்கமும் அவரோட மனைவியும் தான் அவங்கள உன்னால வெறுக்க முடியாது என்றார்.

அவங்கள என் அம்மா அப்பா என்று கூப்பிட்டத நினைக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு அவங்க வெறும் சுயநலவாதிகள் என்று கூறினான். சிவா நான் சொல்றத பொறுமையா கேள் என்று டாக்டரம்மா ஆரம்பிக்க நான் எதையும் கேட்கிற நிலைமைல இல்லை நீங்க எதுவும் எனக்கு சொல்ல வேண்டாம் என்றான் சிவா. தம்பி நான் சொல்ல வாறது என்ன என்றால் என்று ஆரம்பிக்க அவரின் கதையை மேலும் கேட்க விரும்பாமல் சிவா தடுமாற டாக்டரம்மா அருகில் ரம்யா வந்தாள். என்னாச்சும்மா யாரு சிவாவா போனில என்று கேட்டாள். ஆமா என்று கூற என்னவாம் என்று கேட்டாள். அவன் ரொம்ப கோவமா இருக்கான் என்றார் டாக்டரம்மா.

தாங்க நான் பேசி அவன சமாதானபடுத்திறன் என்று கூறி அவரிடம் இருந்து தொலைபேசியை வாங்கினாள் ரம்யா. ஹலோ சிவா நான் ரமி பேசுறன் என்னடா பண்ணுறாய்? தூங்கலயா என்றாள். என்ன ரமி கேக்கிறாய் எப்பிடி எனக்கு தூக்கம் வரும்? என் வாழ்க்கையே கேள்விக் குறியாகி போய் இருக்கு. ஆசையா அம்மா அப்ப என்று சொன்னவங்க இன்று என்னை யாரோ என்று சொல்லிட்டாங்க. அதுக்கும் மேல நான் பாசமா அங்கிள் ஆன்டி என்று சொன்னவங்க இன்னிக்கு என்னை பெத்தவங்களா இருக்கிறாங்க. எனக்கு மட்டும் கடவுள் எதுக்கு இப்பிடி சோதிக்கிறார் என்னால எதுவுமே முடியலடா என்றான். என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு இனி எனக்கென்று எதுவுமே இல்லை என்றான்.

ஏன் சிவா இப்பிடி சொல்றாய் உனக்கு நான் இருக்கன் உனக்காக ஒரு வாழ்க்கை இருக்கு. உன் வாழ்க்கையை பிரகாசபடுத்த உன் கூட நான் இருப்பன்டா நீ எதுக்குமே கவலை படாத என்றாள். நீ இப்போ ரொம்ப குழப்பத்தில இருக்கிறாய். உன்னோட அம்மா அப்பால எந்த தப்பும் இல்லடா நீ அவங்கள நினைச்சு கோவ படாதடா. அவங்க உன்னை பெத்தவங்களா இல்லாவிட்டாலும் உன்னை 20 வருமா வளர்த்தவங்க. நீ பிரிஞ்சு போய்டுவாய் என்ற பயத்தில உண்மை சொல்லாம விட்டிருக்கலாம். நீ அவங்கள உயிரா நேசிக்கிறாய் அது எனக்கு தெரியும். உன்னால அவங்கள எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வெறுக்க முடியாது. இப்போ உன் மனசில அவங்க மேல வெறுப்பு இல்லை கோவம் தான் இருக்கு. அது தான் உன்னை இப்பிடி பேச வைக்குது என்றாள்.

ரமி நீ என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது அவங்க எனக்கு துரோகம் பண்ணிட்டாங்க என்றான். சிவா நீ கோவப்படு அதுக்கு உனக்கு உரிமை இருக்கு காரணம் உன் மனசில ஏமாற்றம் கோவம் எல்லாமே இருக்கு. ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நீ அவங்க மேல காட்டாத. அவங்க மனசை காயப்படுத்தாத. நீ வார்த்தைகளை பயன்படுத்தும் போது ரொம்பவே கவனமா இரடா. நீ வார்த்தைய கொட்டினால் உன்னால திருப்ப எடுக்க முடியாது. அதனால இந்த விசயத்தில நீ ரொம்ப கவனமா இருடா என்றாள். இல்ல ரமி என்னால அவங்கள மன்னிக்க முடியலடா என்றான்.

சிவா நீ அவங்கள வெறுக்கிறதால என்ன பலன் ஆக போது? கொஞ்சமாவது சிந்திச்சு பார்த்தியா? நீ கோவப்பட்டு ஒருத்தர் மேல ஒருத்தர் வெறுப்ப சம்பாதிக்கிறதால ஆகப் போறது எதுவுமே இல்லை எல்லா குடும்பங்களுக்கும் குழப்பம் தான் ஏற்படும். நடந்தது நடந்து முடிஞ்சிட்டு அதனால எல்லாம் விதி என்று நினைத்து அவங்க பெரியவங்கள மன்னிக்கிறது தான் நம்ம சின்னவங்களோட பண்பு என்று அவனை ஆறுதல் படுத்தினாள். இப்போ நீ உன்னை வளர்த்தவங்கள வெறுத்து ஒதுக்கினால் அவங்க மேல நீ இது வரைல காட்டின பாசம் எல்லாமே பொய் என்றாகிடும். ஊர் உலகத்தை பொறுத்த வரைக்கும் நீ அவங்க குழந்தை தான். சட்டபடி பிறப்பு பத்திரம் எல்லாம் அவங்க பெயரில தான் இருக்கு. எல்லாத்தையும் உன்னால தூக்கி போட முடியாது. கொஞ்சம் பொறுமையா இருந்து சிந்திச்சு பாரு எல்லாமே புரியும் என்றாள்.

என்னால முடியல ரமி. நான் இவங்க மேல காட்டின பாசம் உண்மை தான். என்னால அவங்கள வெறுக்க முடியல தான். இருந்தும் அவங்க நான் குமார் அங்கிள் குழந்தை என்று தெரிஞ்சதும் அவங்க கூட பழக விடாமல் தடுத்தது தான் எனக்கு பிடிக்கல. எனக்கு உண்மை தெரியாது அவங்க பாசத்தை தடுக்காமல் விட்டிருக்கலாம் தானே என்றான். சிவா நீ உன்னோட நிலைமைல இருந்து சிந்திக்கிறாய் அவங்கட நிலைல இருந்து ஒரு நிமிசம் நினைச்சு பாரு. அவங்க மேல தப்பில்ல என்றது உனக்கு புரியும் என்றாள். அவள் அவனை போல் சிறுவயதானவளாக இருந்தாலும் அந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு ஏற்ற அறிவுரை மற்றும் ஆறுதலை வழங்கினாள். அத்தனை நேரமும் குழப்பத்துடனும் கோவத்துடனும் இருந்த சிவா ரம்யாவின் ஒவ்வொரு வார்த்தைகளை கேட்டதும் சற்று ஆறுதல் அடைந்தது. சற்று அமைதியாகினான். மேலும் அவள் தொடர்ந்தாள்.

தொடரும்……….!
பாகம் 74

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Tue Jul 10, 2012 6:06 pm
by ஆதித்தன்
நீண்ட இடைவெளிக்குப் பின், மாலதிக்கு கொஞ்சம் வேலை கொடுத்திட்டீங்களா அருந்தா..

தொடரட்டும் ..

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Tue Jul 10, 2012 9:25 pm
by Aruntha
Athithan wrote:நீண்ட இடைவெளிக்குப் பின், மாலதிக்கு கொஞ்சம் வேலை கொடுத்திட்டீங்களா அருந்தா..

தொடரட்டும் ..
ஆமா எழுதிட்டன் இன்னிக்கு மற்றதும் எழுதணும் பாக்கலாம்

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Fri Jul 13, 2012 11:23 am
by mnsmani
ஆயிரம் பார்வகளை தாண்டி செல்லும் இத்தொடர் வழங்கும் அருந்தாவுக்கு பாராட்டுகள். :great: :great: :great: :great: :great:

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Posted: Sat Jul 14, 2012 8:26 pm
by Aruntha
ரொம்ப நன்றி மணி சார் :thanks: :thanks: :thanks: