அழகிய தேவதை - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 50

Post by Aruntha » Thu May 17, 2012 8:27 pm

தூக்கமே இல்லாமல் புரண்டு கொண்டிருந்த குமாரின் கண்கள் அவனை அறியாமலேயே கடிகாரத்தை பார்த்த வண்ணம் இருந்தது. அத்தனை நாட்களும் என்னடா இந்த சூரியன் இவ்வளவு சீக்கிரம் உதித்து என்னை தூக்கத்திலிருந்து எழுப்புகிறானே என்று சலித்து கொள்ளும் குமார் இன்று என்னடா இன்னும் விடியவே இல்லை என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

நேரம் அதிகாலை 3 மணியை தொட்டது. அவனது கடிகார அலாரம் அடித்தது. அதன் ஒலி கேட்டு கமலியும் எழுந்திருந்தாள். என்னங்க 3 மணியாச்சா? சரி சீக்கிரம் குளியுங்க நான் காபி போடுறன் நீங்க 4 மணிக்கு கிளம்பணும் என்றாள். அவன் போன் பண்ணி ராஜனையும் எழுப்பினான். டேய் ராஜா நேரம் 3 மணியாச்சு எழுந்திரு 4 மணிக்கு வெளிக்கிடணும் என்றான். சரி்டா நான் எழுந்து குளிக்கிறன் நீயும் சீக்கிரமா வெளிக்கிடு என்று கூறி போனை வைத்தான்.

சரியாக 3.45 ராஜன் குமாரின் வீட்டுக்கு பிரியாவுடன் வந்தான். குமார் நான் ரெடியாகிட்டன் நீ ஓகேயா என்ற படி. ராஜன் உங்களுக்கு ஒண்ணு தெரியுமா எனக்கு இராத்திரி இவர் தூங்கின மாதிரியே தெரியல இன்னிக்கு போறததையே யோசிச்சிட்டு இருந்த போல இருக்கு என்றாள் கமலி. சரி நாங்க கிளம்புறம் என்று கூறி காரை எடுக்க சென்றான் குமார். நான் ஓட்டுறன் நீ இரு என்று கூறி காரை தான் ஓட்ட எடுத்தான் ராஜன்.

அந்த அதிகாலை பொழுதிலே அவர்களது குழப்பங்கள் நிறைந்த பயணம் ஆரம்பமானது. ராஜன் எல்லாமே நல்லா நடக்குமில்லா என்று ஏக்கமாய் கேட்டான் குமார். எல்லாம் நல்லா நடக்கும் நீ எதையும் யோசிக்காம இரு என்று அவனை ஆறுதல் படுத்தினான் குமார்.

அதிகாலை வேளை அந்த அழகிய சூரியனின் உதயம் கண்களை கவரும் விதமாக இருந்தது. அந்த பச்சை பசேல் என்ற வயல் வெளியில் பூத்துக் குலுங்கிய நெல் மணியின் மேல் எட்டிப் பார்க்கின்ற பனித்துளிகள் கதிரவனை கண்டதும் மெல்ல கையசைத்து விடை பெற்றன. பறவைகளின் நாதம் காதுகளுக்கு இனிமையை அளித்தது. இத்தனை அழகாய் பரந்து விரிந்து இருந்த இயற்கையை இதுவரை ரசித்த குமாரும் ராஜனும் இன்று ரசிக்கும் மனநிலையில் இல்லை. அவர்களின் எண்ணம் யாவும் டாக்டரம்மாவை சந்திப்பதிலேயே இருந்தது.

நீண்ட தூர பயணத்தின் பலனாக அவர்கள் தம் ஊர் எல்லையை அடைந்தார்கள். கமலியின் உறவுக்காரர் கண்களில் பட்டு விட்டாமல் டாக்டரம்மாவின் வீட்டிற்கு சென்றார்கள். அவர்கள் செல்லும் முன்னே விதி விளையாடுகின்றது போலும். டாக்டரம்மாவின் கணவர் நோயின் உச்சப்பிடியிலே உயிருக்காக போராடிய வண்ணம் இருந்தார்.

டாக்டரம்மா தன் கணவனின் காலடியில் இருந்து அழுத வண்ணம் இருந்தார். அவரின் அந்த நிலைமையை பார்த்த நொடி குமாரால் எதையும் கேட்க முடியவில்லை. என்ன தம்பி இந்த பக்கம் என்று விசும்பலுடன் கேட்ட டாக்டரம்மாவிற்கு இந்த பக்கம் கம்பனி அலுவலா வந்தம் அப்பிடியே சும்மா உங்க பாத்திட்டு போவம் என்று வந்தன் என்று கூறினான்.

அப்பிடியே உங்களையும் கமலிட அம்மா அப்பாவையும் பாத்திட்டு போகலாம் என்று வந்தம் என்றான். அப்பிடியா தம்பி நல்லது நீங்க போய் உங்க மாமனார் மாமியாரை பாத்திட்டு வாங்க என்றார் டாக்டரம்மா. என்னால உங்க கூட வர முடியாது. இவர பாத்துக்கணும் என்றார். பிரச்சினையில்ல அம்மா நீங்க ஐயாவ பாருங்க நாங்க போய்டு வாறம் என்றான் குமார்.

இவருக்கு வருத்தம் ரொம்ப கடுமையாகிட்டு. இன்னும் ஒரு நாளோ இரண்டு நாளோ தான் இவர் உயிரோட இருப்பார். என்னம்மா சொல்றீங்க அம்மா ஒண்ணுக்கும் யோசிக்காதீங்க. அவருக்கு எதுவுமே ஆகாது என்றான் குமாரை பார்த்து நானே டாக்டர் தானே எனக்கு தெரியாததா? என்ன தான் டாக்டரா இருந்து எத்தனையோ மரணத்தை பார்த்தாலும் நானும் சராசரி பொண்ணு தானே என்று கண் கலங்கினாள்.

எதுக்கும் யோசிக்காதீங்கம்மா நாங்க வாறம். காசு எல்லாம் இருக்கா அம்மா என்றான். ஆமா தம்பி இருக்கு என்றாள். ஏதாச்சும் காசு உதவி ஏதும் தேவை என்றால் எனக்கு போன் பண்ணுங்க எனக் கூறி டாக்டரம்மாவின் கையில் 10000 ரூபாவை செலவுக்கு வைச்சிருங்க என்று கொடுத்தான்.

அவன் வந்த விடயம் ஏதோ ஆனால் அங்கு நடந்தது ஏதோ. அவன் விடயத்தில் கடவுள் கூட எதுவுமே உதவி பண்ணவில்லை என்ற வருத்தத்துடன் கமலி வீட்டிற்கு சென்றான். வாங்க மாப்பிளை என்ன திடீரென்று இந்த பக்கம் எனக் கூறியபடி கமலியின் தாயார் அவனையும் ராஜனையும் வரவேற்றாள். இங்கால கம்பனி வேலையா வந்தம் அப்பிடியே உங்களையும் பாத்திட்டு போகலாம் என்று தான் எனக் கூறினான்.

சற்று நேரத்தில் அவர்களிடமிருந்து விடை பெற எழுந்த போது இந்தாங்க தம்பி இதில பலகாரம் கொஞ்சம் செய்தது இருக்கு கொண்டு போய் பிள்ளையள் பேரப்பிள்ளையளுக்கு கொடுங்க என்று கூறி கொடுத்தாள். அவர்களிடமிருந்து அவற்றை பெற்றபடி விடைபெற்றார்கள்.

என்னடா ராஜன் இப்பிடியாச்சு எந்த உண்மையை அறியணும் என்று வந்தமோ அதை அறிய முடியாமல் போய்டு இப்பிடியே இதை சிந்திச்சிட்டு இருந்தால் எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் என்று தலையை பிடித்தபடி கூறினான் குமார். டேய் ஒண்ணுக்கும் யோசிக்காத எல்லாம் நன்மைக்கு தான் எனக் கூறி அவனை ஆறுதல் படுத்தினான் ராஜன்.

அந்த நிமிடம் குமாரின் செல்போன் சிணுங்கியது. ஹலோ நான் குமார் பேசுறன் நீங்க என்று கூற மறுமுனையில் ஹலோ நான் டாக்டர் ஜோன் பேசுறன் என்றார். டாக்டர் நானே உங்களுக்கு போன் பண்ணணும் என்று இருக்க நீங்க போன் பண்ணிட்டீங்க என்றான் குமார். என்ன குமார் எனிதிங் குட் நியூஸ் என்ற டாக்டரின் ஆவலான கேள்விக்கு இல்ல டாக்டர் நான் இப்ப தான் டாக்டரம்மாவ பாக்கலாம் என்று ஊருக்கு வந்தன். ஆனால் இங்க நிலையை அதுக்கு ஏத்த போல இல்லை எனக் கூறி நடந்தவற்றை கூறினான்.

குமார் நீங்க எதுக்கும் கவலை படாதீங்க. இது கூட ஏதாவது ஒரு நல்ல விடயத்துக்காகவே இருக்கலாம். இப்ப உங்களுக்கு சில உண்மை தெரிய கூடாது என்று கடவுள் நினைக்கிறார் போல விடுங்க இத பத்தி இப்ப யோசிக்க வேணாம். அப்புறமா பாக்கலாம் என்று ஆறுதல் கூறினார். சரி டாக்டர் நான் அப்புறமா உங்களுக்கு கோல் பண்ணுறன் என்று கூறி போனை கட் செய்தான்.

ஏதோ சற்று தெம்போடு உண்மை அறியும் மனநிலையில் ஆரம்பமாகிய அவர்களது பயணம் சற்று களை இழந்து காணப்பட்டது. இருந்தும் ராஜனின் ஆறுதல் வார்த்தைகளால் மனதை தேற்றியபடி சென்றான் குமார். அவர்கள் வீட்டை அடைய இரவு 10 மணி ஆகிவிட்டது. எப்பிடியப்பா வேலை எல்லாம் என்றபடி கமலியும் பிரியாவும் வந்தார்கள். எல்லாம் பாத்தாச்சு இருந்தும் முக்கியமான சில தகவல் எடுக்க முடியல இன்னும் ஒரு தடவை போக வேண்டி வரும் எனக் கூறினார்கள்.

அப்பிடியே நேரமிருந்திச்சு கமலி உங்க அம்மா வீட்டுக்கு போய்டு வந்தம் அவங்க பலகாரம் தந்தாங்க என்று கொடுத்தான். அதை ஆவலாய் கமலி பிரிக்கும் போதே அப்பிடியே டாக்டரம்மாவையும் எட்டி பார்த்தம் அவங்க வீட்டுக்காரர் ரொம்ப உடம்புக்கு முடியாம இருக்கார். இன்னிக்கோ நாளைக்கோ என்று கூறினார். ஓ அப்பிடியா என்னங்க உங்களுக்கு லீவு இருந்தா ஒருக்கா நாங்க போய் அவங்கள பாத்திட்டு வருவமா என்றாள்.

அந்த சந்தர்ப்பத்திலாவது டாக்டரம்மாவுடன் கதைக்கலாமா என்ற ஆதங்கத்துடன் சரி நாங்க நாளை மறுநாள் போகலாம் என்றான் குமார்.

மறுபடி பயணம் தொடரும்………………!
பாகம் 51
Last edited by Aruntha on Mon May 21, 2012 7:47 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 51

Post by Aruntha » Mon May 21, 2012 7:47 pm

பயணக் களையும் ஏமாற்றமும் மனதை வாட்ட சோபாவில் போய் சரிந்தான் குமார். என்ன குமார் ராஜனும் தான் உங்ககூட வந்தார் ஆனால் நீங்க இப்பிடி களைச்சிட்டிங்க என்னாச்சு என்றாள் பிரியா. ஒண்ணுமில்ல பிரியா அவனுக்கு போன திட்டம் நல்லபடியா முடிவு தெரியல என்று கொஞ்சம் கவலை அது தான் என்றான்.

என்ன குமார் இதுக்கெல்லாம் போய் மனச குழப்புவாங்களா? சரி அத யோசிக்காம இருங்க என்றாள். இருந்தும் அவனால் அவர்களின் ஆறுதலை ஏற்கும் மனநிலையை உண்டாக்க முடியவில்லை. முடிந்தவரை தன்னை சந்தோசமாக காட்டிய படி இருந்தான்.

தந்தையின் பிரிவில் இருந்து ஓரளவுக்கு மீண்டு கம்பனி வேலைகளில் மனதை செலுத்திய தனேஷ் தன்னுடைய தாயாரையும் ஓரளவு பழைய நிலைக்கு கொண்டு வந்தான். அவர்களின் குடும்பம் தற்போது தனேஷின் வருமானத்தால் சுமூகமாக சென்று கொண்டிருந்தது. ஏதோ சிந்தனையிலிருந்த தனேஷ் தாயின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். என்னப்பா கடுமையான யோசனையா இருக்காய் என்று கேட்டபடி அவன் அருகில் அமர்ந்தார்.

அம்மா இன்னிக்கு செல்வன் வீட்டுக்கு போய் வரலாம் என்று இருக்கன். இப்போ ஒரே வேலை கம்பனி பொறுப்பு என்று நாங்கள் சந்தோசமா இருக்கிறதே குறைவு. அது தான் இன்னிக்கு போகலாம் என்று இருக்கன் என்றான். நல்லதுப்பா போய்டு வா என்றார் தாய்.

தனேஷ் அவங்க நம்மளுக்கு ரொம்பவே உதவி பண்ணி இருக்காங்க. எப்பவும் அவங்களுக்கு நாம கடமைப்பட்டவங்களா இருக்கிறம். அவங்க மனசு நோகும் படி என்றுமே நடந்திட கூடாது என்று அறிவுரை கூறினாள். தாயின் அந்த வார்த்தைகள் அவனை ஏதோ உள்ளுக்குள் உறுத்தி இருக்க வேண்டும். அப்படியே அமைதியாகி விட்டான்.

என்னப்பா அமைதி ஆகிட்டாய். என்னாச்சு என்றாள். ஒண்ணுமில்லம்மா சும்மா தான் என்றவனை பார்த்து செல்வனுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிட்டு. அவங்க நல்ல மனசுக்கு அவங்க பொண்ணுக்கும் நல்ல பையன் அமைவான் என்று கூறினாள். நீயும் சீக்கிரம் நல்ல நிலைக்கு வந்திட்டா ஒரு பொண்ண பார்த்து கட்டி வைச்சிட்டா எனக்கும் சந்தோசம். அப்புறமா நான் நிம்மதியா கண்ண மூடிடுவன் என்றாள்.

என்னம்மா அந்த செல்விய இந்த வீட்டு மருமகளா கொண்டு வா என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டிங்களா? நான் நல்ல நிலைக்கு வந்து அவள கட்டணும் என்று ஆசைப்படுறன். என் ஆசை நிறைவேறுமா? என்னை நல்ல நிலைக்கு கொண்டு வாறவங்க பொண்ண லவ் பண்ணுறது தப்பா என்று தன் மனதுக்குள்ளேயே கேள்வி கேட்டபடி இருந்தான்.

என்னப்பா நீ ஏதோ யோசனைல இருக்காய் என்ற தாயின் குரலை கேட்டு சுதாகரித்தவன் இல்லை அம்மா நான் வாழ்க்கைல நல்ல நிலைக்கு வரணும். அது வரைக்கும் இந்த கல்யாண பேச்சு எதுவும் வேணாம் என்று கூறி எழுந்தான். சரிப்பா நீ சொல்றதும் சரி தான். நான் இப்போதைக்கு உன் கல்யாண பேச்சு எடுக்கல சரியா என்றாள். என் செல்ல அம்மா என்று கூறி அவளை கட்டி அணைத்தான். சரி அம்மா நான் செல்வன் வீட்டுக்கு போய்ட்டு வாறன் என்றான்.

செல்வன் வீட்டுக்கு சிவாவையும் அழைத்து செல்லலாம் என சிந்தித்தவன் சிவா வீட்டை நோக்கி சென்றான். டேய் தனேஷ் வாடா மச்சான் ரொம்ப நாளைக்கு அப்புறம் எப்பிடி நல்லா இருக்கிறியா என்று கேட்டான். நல்லா இருக்கன்டா வேலையோட நேரம் போய்டும் அப்புறம் எங்க நேரம் என்றான் சலிப்பாக.

காப்பியுடன் வந்த சிவாவின் அம்மாவை பார்த்து அம்மா எப்பிடி நல்லா இருக்கிறீங்களா? என்றான். இருக்கமப்பா நீ எப்பிடி என்றாள். நான் நல்லம் அம்மா சரி அப்பா என்ன செய்யுறார் அவரோட உடல் நிலை எப்பிடி என்று கேட்கவும் அவனது அப்பா வரவும் சரியாக இருந்தது. நல்லா இருக்கன் தம்பி. என்ன ஆரம்பத்தில பிடிச்சதெல்லாம் சாப்பிடுவன். இப்ப டாக்டர் சொல்றத மட்டும் தான் சாப்பிடுறன் அது தான் மற்றும் படி நல்லமப்பா என்றார். சரிப்பா உடம்ப பத்திரமா பாருங்க என்றான்.

டேய் மச்சி நீ இப்ப நீ இப்ப பிஸியா என்றான். இல்லடா சும்மா தான் இருக்கன் சொல்லு என்றான். இல்லடா நாங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து இருந்து ரொம்ப நாளாச்சு இப்ப செல்வன் வீட்டுக்கு போறன் நீயும் வந்த சந்தோசமா இருக்கும் என்றான்.

அதுவரை சிரித்த முகமாக இருந்த சிவாவின் தாயின் முகமும் தந்தையின் முகமும் இருண்டது. ஏற்கனவே செல்வன் குடும்பத்துடன் பழக விடாதமையால் தங்களில் கோவமாக இருக்கும் அவனை அந்த நொடி தடுத்தால் தப்பாகிடும் என்று எதுவுமே பேசாமல் இருந்து விட்டார்கள்.

சரி மச்சி இருடா நான் சீக்கிரமா வெளிக்கிட்டு வாறன் என்று அறைக்குள் சென்றான். அப்புறம் தம்பி அம்மா எப்பிடி இருக்காங்க வேலையெல்லாம் எப்பிடி போகுது என்றார் மாசிலாமணி. அம்மா நல்லா இருக்காங்க நான் இப்போ வேலைக்கு போறதால குடும்பமும் நல்லா போகுது வேலை ரொம்பவே பிடிச்சிருக்கு அப்பா என்றான். சரிப்பா சீக்கிரமா நல்ல நிலைக்கு வந்து கல்யாணத்தை பண்ணிக்கோ அப்ப தான் அம்மாவுக்கும் உதவியா இருக்கும் என்றார்.

இத தான் அம்மாவும் சொன்னாங்க. நல்லா உழைக்கணும் அப்பா அப்புறமா இப்போ செல்வனுக்கு பேசி முடிச்சிட்டினம். வாற மாசம் நிச்சயதார்த்தம் பண்ண போறாங்க ஆனால் கல்யாணம் இன்னும் 2 வருசத்தால தான். நம்மளுக்கு இப்ப தான் சின்ன வயது முதல் உழைச்சு நாலு காசு சம்பாதிப்பம் அப்புறமா வாழ்க்கைய பத்தி யோசிக்கலாம் என்றான் தனேஷ்.

வயசில சின்னவங்களா இருந்தாலும் வாழ்க்கைய நல்லா புரிஞ்சு வச்சிருக்கிறீங்கள் என்றார் மாசிலாமணி. இது தான் சந்தர்ப்பம் என்று எதிர்பார்த்த தனேஷ் சிவாக்கும் செல்விக்கும் காதல் இல்லை என்பதை உறுதிப்படுத்த மெதுவாக பேச்சு கொடுத்தான். சிவா கூட ரொம்ப பெரிய லட்சியம் எல்லாம் வச்சிருக்கான். அவனுக்கு தான் வாழ்க்கைல நிறையவே சம்பாதிச்சு தன் சொந்த காலில நிக்கணும் என்று ஆசை. அதுக்கும் மேல தன்னை இவ்வளவு காலமும் பெத்து வளர்த்த அப்பா அம்மா ஆசைப்படி அவங்க பாக்கிற பொண்ண தான் கட்டிக்கணும் என்று சபதமே எடுத்து வச்சிருக்கான். இந்த காலத்தில இப்பிடி பையன் யாருக்கம்மா கிடைக்கும் என்றான் தனேஷ்.

என்னப்பா சொல்றாய் சிவா கூட இப்பிடி எல்லாம் சிந்திக்க ஆரம்பிச்சிட்டானா? ரொம்ப சந்தோசமா இருக்கு என்றார் மாசிலாமணி. அவனோட ஆசையே அம்மா அப்பா பாக்கிற பொண்ண தான் கட்டிக்கணும் என்றது தான். அவன் காலேஜ்ல எவ்வளவு தான் பொண்ணுங்களோட பழகினாலும் சகோதரத்துவம் நட்பு என்ற எல்லையை தாண்டவே மாட்டான் என்று கூறினான்.

தனேஷின் எண்ணமெல்லாம் அவர்களின் மனதில் செல்வி சிவா பத்தி இருக்கிற தப்பான அபிப்பிராயத்தை போக வைக்கணும் என்பது தான். அதன் படி அவனோட முயற்சி வெற்றியும் கண்டது. ரொம்ப சந்தோசமப்பா நம்மள பத்தி அவன் மனசில என்ன இருக்கு என்று ஒரு நாள் கூட நம்மளோட கதைக்க மாட்டான். இப்பிடி உயர்வான சிந்தனை இருக்கிறதே இப்ப நீ சொல்லி தான் தெரிது. நாங்க ரொம்ப பாக்கியசாலிப்பா என்று மார்தட்டினார். அவர்களுக்கு அவனின் நட்பை தெளிவுபடுத்திய திருப்தியில் பெரு மூச்சு விட்டான் தனேஷ்.

சரி மச்சி நான் ரெடி போவமா என்றபடி வந்தான் சிவா. சரிப்பா பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க என்று வழியனுப்பினர் அவன் தாயும் தந்தையும். அப்பாடா ஒரு மாதிரி அவங்களுக்கு உனக்கும் செல்விக்கும் உள்ள உறவ தெளிவு படுத்திட்டன். இனி பிரச்சினை இருக்காது என்றான் தனேஷ். ஆமாடா நீ கதைச்சிட்டு இருந்ததை கேட்டிட்டு தான் இருந்தன். நான் அப்பவே ரெடி ஆகிட்டன். நீ கதைச்சு முடியும் மட்டும் தான் பாத்திட்டு இருந்தன் என்றான். அட பாவி நீ ரொம்ப புத்திசாலி தான் என்று கூறியபடி செல்வன் வீடு நோக்கி சென்றார்கள்.

நட்பு தொடரும்………..!
பாகம் 52
Last edited by Aruntha on Tue May 22, 2012 10:35 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 52

Post by Aruntha » Tue May 22, 2012 10:34 pm

தனேஷ் உங்கிட்ட ஒண்ணு கேக்கலாமா? என்றான் சிவா. சொல்லுடா என்ன என்று கேள்விக் குறியாக கேட்டவனை நீ யாரயாச்சும் லவ் பண்ணுறியா என்றான். அவன் கேட்ட கேள்வியால் தடுமாறியவன் ஒரு நொடி மோட்டார் சைக்கிளை பிறேக் போட்டான். என்னடா நான் ஏதாச்சும் தப்பா கேட்டிட்டனா சாரி மச்சி என்றான். இல்லடா அப்பிடி நீ எதுவும் தப்பா கேக்கல. காதல் என்கிறத சிந்திக்கிற அளவுக்கு எனக்கு இன்னும் தகுதி வரலடா. எப்ப அந்த தகுதி வருதோ அப்ப பாக்கலாம் என்றான்.

அப்ப காதல் இல்லை என்று சொல்லல காதலிக்க இன்னும் தகுதி வரல என்று சொல்றாய் அப்பிடி தானே என்றான். ஏனடா இப்பிடி தடீரென்று கேள்வி கேக்கிறாய் அப்பிடி எல்லாம் ஒண்ணும் இல்ல சும்மா இரு என்று கூறினான். அவன் சொல்வதிலும் நியாயம் இருந்ததால் எதுவும் மேற்கொண்டு கேட்க விரும்பாதவனாய் அமைதியாகினான் சிவா.

ஹாய் வாங்கடா என்ன போன் கூட பண்ணாம வந்திட்டீங்க என்றபடி வந்தாள் ரம்யா. என்ன வாறதுக்கு பெமிஷன் கேக்கணுமோ என்றான் சிவா. அப்பிடியெல்லாம் இல்லடா சும்மா தான் கேட்டன் என்றான். டேய் செல்வா செல்வி யாரு வந்திருக்காங்க என்று பாருங்க என்றாள் ரமி. அவளின் குரல் கேட்டு வெளியில் வந்த செல்வியும் செல்வனும் வாங்கடா ரொம்ப சந்தோசமா இருக்கு. எவ்வளவு நாளுக்கு பிறகு ஒண்ணா சந்திக்கிறம் என்று கூறி ஒருவரை ஒருவர் கட்டியணைத்தார்கள்.

எப்பிடி இருக்காய் செல்வி என்றபடி சென்று அவளின் அருகில் அமர்ந்தான் தனேஷ். இருக்கன்டா நீ எப்பிடி இருக்காய் என்ன ஆபிஸ் போனதும் எங்கள மறந்திட்டியா என்றாள் செல்ல கோபமாக. என்னடா என் செல்விய நான் மறப்பனா என்றான். என்னடா உன் செல்வியா உதைப்பன்டா அவள் என் சிஸ்டர் என்றான் சிவா. ஓ அப்ப நான் யாராம் அவள் என்னோட செல்ல தங்கையடா என்றான் செல்வன். அது என் நண்பிடா என்றாள் ரமி.

ஐயோ என்னை வச்சு காமடி பண்ணலயே என்று சிணுங்கினாள் செல்வி. என் செல்லத்தை நான் காமடி பண்ணுவனா என்று அவள் கன்னத்தை கிள்ளினான் செல்வன். அது தானே நாம யாருமே உன்னை காமடி பண்ணல. உண்மைய சொன்னம் என்றான் சிவா. ஏய் செல்வி சொல்லுடி நீ என் நண்பி இல்லையா என்றாள் ரமி. யாருப்பா இல்லை எண்டா என்ன கொடுமை பண்ணிறீங்கப்பா எல்லாரும் என்றாள். இரு செல்வி நீ சொல்லு நீ என் செல்வி இல்லையா என்றான் தனேஷ்.

இப்ப உங்களுக்கு என்ன தான் வேணும்? சரி நான் தனித்தனியா சொல்லலப்பா நான் உங்க எல்லாரோடயும் செல்லமான செல்வி தான் சரியா என்றாள். அது தானே பாத்தம் இல்லை என்று சொல்ல முடியுமா என்றான் சிவா. அது தானே எப்பிடி முடியும் என்று பக்க பாட்டு பாடினான் தனேஷ். அது தானே தனேஷ் அவள் உன் செல்வியாச்சே எப்பிடி இல்லை என்று சொல்ல முடியும் இல்லையா சிவா என்றான் செல்வன். ஆமா யாரு இல்லை எண்டா என்றான் சிவா. டேய் என்ன நக்கலா ஒரு பேச்சுக்கு சொன்னா ரொம்ப தான் துள்ளுறீங்க என்றான் தனேஷ்.

சரியா போச்சு இன்னிக்கு இந்த லூசுகளிட வாய்க்கு நான் தான் அவலா கிடைச்சிருக்கன். கடவுளே என்னை காப்பாத்துப்பா என்றாள் செல்வி. யார பாத்து லூசு என்றாய் நீ மட்டும் என்னவாம் என்று வம்பு பண்ணினாள் ரம்யா. அப்பிடி கேளு ரமி என்றான் செல்வன். என்னப்பா ஒரே கலாட்டாவா இருக்குது என்றபடி வந்தார்கள் பிரியாவும் ராஜனும். என்ன எல்லாரும் ஒண்ணா சேர்ந்த சந்தோசத்தில இருக்கிறீங்களா சரி சரி இருங்க என்றவள் செல்வி கமலி எங்கம்மா என்றாள்.

டாடி லேசா தலைவலி என்று சொன்னார் அது தான் மம்மி அவர் கூட றூம்ல இருக்கா என்றாள். ஓ அப்பிடியா சரி நான் போய் பாக்கிறன் என்று மேல் மாடிக்கு செல்ல ஆயத்தமானவளை இரும்மா பிரியா நான் போய் பாக்கிறன் நான் அவனோட கொஞ்சம் இருந்திட்டு கமலிய கீழ அனுப்பிறன் என்றான் ராஜன்.

குமார் என்று அழைத்தபடி சென்றவனை வாப்பா உள்ளுக்கு என்றான் குமார். என்னடா தலைவலி என்று செல்வி சொன்னாள் இப்போ எப்பிடி என்றபடி அவனின் அருகில் அமர்ந்தான். கமலி நான் இவன் கூட இருக்கன் கீழ சிவா, தனேஷ் எல்லாம் வந்திருக்காங்க நீ போய் பாரும்ம என்றான். சரி நீங்க பேசிட்டு இருங்க என்று கூறியபடி எழுந்து ஹாலுக்கு வந்தாள் கமலி.

வாப்பா சிவா எப்பிடி இருக்காய் எவ்வளவு நாளாச்சு உன்னை பார்த்து என்றபடி அவன் அருகில் அமர்ந்தாள் கமலி. எப்பிடியப்பா உன் வேலை எல்லாம் போகுது என்றாள். எல்லாம் நல்லா போகுதும்மா நீங்க எப்பிடி இருக்கிறீங்க என்றான். நான் நல்லா இருக்கன் செல்வன்ட அப்பா தான் கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருக்கார் என்றாள். அப்பாக்கு என்னாச்சும்மா டாக்டரிடம் காட்டினீங்களா? என்று பதைபதைப்பாய் கேட்டான்.

இல்லப்பா லேசா தலைவலி தான். அவர் கொஞ்சம் கம்பனி வேக் என்று மனசை போட்டு குழப்பிட்டு இருக்கார் .இரண்டு மூணு நாளா அவர் நல்லா இல்ல என்றான். இருங்கம்மா நான் போய் அப்பாவ பாத்திட்டு வாறன் என்றான் சிவா. இருடா நானும் அப்பாவ பாக்க வாறன் என்றபடி அவனோடு சேர்ந்து சென்றான் தனேஷ்.

மெதுவாக சென்று குமாரின் கதவை தட்டினார்கள் தனேஷூம் சிவாவும். வாங்கப்பா என்னப்பா எப்ப வந்திங்க என்றார் குமார். இப்ப கொஞ்சம் முன்னாடி தான் வந்தம் அம்மா உங்க உடம்புக்கு கொஞ்சம் முடியல என்றா அது தான் இப்ப எப்பிடியப்பா நல்லா இருக்கிறீங்களா என்றான் சிவா. உடம்புக்கு ஒண்ணும் இல்லப்பா லேசா தலைவலி அவ்வளவு தான் என்றான் குமார்.

உடம்ப பத்திரமா பாருங்கப்பா ஆபிசுக்கெல்லாம் நீங்க வர வேணாம். நாங்க முடிஞ்சளவுக்கு பாக்கிறம் இல்லாட்டி ராஜன் அங்கிளிட்ட கேக்கிறம் நீங்க வடிவா ரெஸ்ட் எடுங்க என்றான் தனேஷ். தனேஷ் அவனுக்கு ஒண்ணுமில்லப்பா நேற்று ஒரு கம்பனி வேலையா வெளில போனம் நாங்க நினைச்சு போன அளவுக்கு அது நமக்கு சாதகமா அமையல. தூர பயணம் அந்த கவலை எல்லாம் சேர்ந்து தான் இவன் இப்பிடி இருக்கான் நான் பாத்துகிறன் என்றார் ராஜன்.

நீங்க போய் கதையுங்கடா நாங்க கொஞ்சத்தில கீழ வாறம் என்றார் ராஜன். ஓகே அங்கிள் என்றபடி சென்றார்கள் தனேஷூம் சிவாவும். என்னடா டாடி என்னவாம் என்றான் செல்வன். அவருக்கு லேசா தலைவலி தானாம் இப்ப ஓகே என்றான் சிவா. ரம்யா டாடிகிட்ட போய் செல்போன் ஒருக்கா வாங்கி வாம்மா அதில ஒரு நம்பர் பாக்கணும் என்றாள் பிரியா. சரி மம்மி என்றபடி மேலே சென்றாள் ரம்யா.

டேய் குமார் உன்னை தான் சொன்னனே எதையும் யோசிக்காம இருடா என்று. நீ இன்னுமே அந்த டாக்டர் சொன்னதையே யோசிச்சிட்டு இருக்காய். சீ ஏன் தான் நீ அன்னிக்கு நரேஷ் வீட்டுக்கு போனாய் என்று இருக்கு. சரி டாக்டர் ஜோன் சொன்னது தப்பா கூட இருக்கலாம். சரி அதை தெளிவாக்க நாம எவ்வளவு கஷ்டப் பட்டு ஊருக்கு போனம். அதுவும் சரிவரல. ஏதோ சில உண்மை கடவுள் நமக்கு தெரிய கூடாது என்று நினைக்கிறார் போல விடுடா என்றான் ராஜன்.

எப்பிடியடா அதை மறந்து இருக்க ஏலும்? நினைச்சாலே தலை எல்லாம் வலிக்குது. தாங்க முடியல. என்னோட இத்தின வருச திருமண வாழ்க்கைல கமலிக்கு மறைச்ச விடயமே இது மட்டும் தான். அதுக்கும் மேல பொய் வேறசொல்லி இருக்கன். ஊருக்கு போறத மறைச்சு கம்பனி வேலையா போறம் என்று. என்னால முடியலடா என்றான் குமார். நான் மட்டும் என்னவாம்? உன்ன போல தானே பிரியாக்கு பொய் சொல்லிட்டு வெளிக்கிட்டன்.

விடுடா நல்ல விடயத்துக்கு பொய் சொல்றது தப்பு இல்ல. இப்ப நாங்க உண்மைய சொல்லி இருக்கிறவங்க நிம்மதியையும் குழப்ப கூடாது. நாம இரண்டு பேர் தான் நிம்மதி இல்லாம இருக்கிறம் என்றால் எதுக்கு அவங்க நிம்மதியையும் கெடுக்கணும். நீ இப்படி ஒரே யோசிச்சிட்டு இருந்தால் கமலிக்கும் சந்தேகம்வரும். கொஞ்சம் றிலாக்ஸ் ஆகு. நாம டாக்டரம்மாக்கு போன் பண்ணி அவங்க வீட்டுக்காரர் எப்பிடி என்று கேட்டு அவர் கொஞ்சம் ஓகே என்றால் போய் அவங்ககிட்ட இந்த உண்மையை கேக்கலாம் என்றான் ராஜன். ஆமாடா அதுவும் சரி தான் என்றான் குமார்.

இந்தா இப்பவே நீ டாக்டரம்மாக்கு போன் போட்டு பேசு என்று செல்போனை அவன் கைல குடுத்தான் ராஜன். தயங்கியபடி வாங்கிய குமாரை பார்த்து நான் இருக்கன் பயப்பிடாம போன் பண்ணு என்று ஆறுதல் கூறினான். ஹலோ டாக்டரம்மாவா? நான் கமலி வீட்டுக்காரர் குமார் பேசுறன். இப்ப எப்பிடி இருக்கார் உங்க வீட்டுக்காரர் என்றான். தம்பி கடவுள் புண்ணியத்தில அவர் பிழைச்சிட்டார். இப்ப எழும்பி நடக்கிறார். இன்னும் இரண்டு நாளில சரியாகிடுவார். இது கடவுளிட அதிசயமப்பா இந்த நிலைமைல இருந்து தப்பினவங்க யாருமே இல்லை என்றார்.

நல்லதம்மா ரொம்ப சந்தோசம். நான் சுகம் கேக்க தான் போன் பண்ணினான். அப்புறமா பேசுறன். கமலிக்கும் சொல்றன் என்று கூறி போனை கட் பண்ணினான். என்னடா டாக்டரம்மா என்ன சொன்னாங்க என்ற ராஜனை பார்த்து அவங்க வீட்டுக்காரர் நல்லாகிட்டாராம் என்றான் சிரித்தபடி. அப்பிடியா சரி நாளைக்கே நாம ஊருக்கு போய் டாக்டரம்மாகிட்ட எல்லா உண்மையையும் கேப்பம் என்றான் ராஜன். சரி நாளைக்கு நாம ஊருக்கு போக என்ன சாட்டு சொல்றது வீட்டில. திடீரென்று கம்பனி விடயம் என்றால் நம்ப மாட்டாங்க என்ன தான் பண்ணுறது என்றான் குமார்.

நீ யோசிக்காதடா இப்ப தான் அவங்க போன் பண்ணினாங்க நாளைக்கு அந்த திட்டம் பத்தி கதைக்க. நாளைக்கு காலைல வெளிக்கிடணும் என்று சொல்லுவம். நான் சமாளிக்கிறன் நீ போய் குளிச்சிட்டு வா என்றான் ராஜன். சரிடா இப்பா தான் எனக்கு நிம்மதியா இருக்கு என்றபடி சற்று மகிழ்வாக எழுந்து குளியலறை நோக்கி சென்றான் குமார். சரி நான் கீழ போய் பசங்க கூட பேசிட்டு இருக்கன் என்றபடி வெளியே வந்தான் ராஜன். வாசலில் ரம்யா நின்று கொண்டிருந்தாள். எப்பம்மா வந்தாய் என்று கேட்டவனை பார்த்து நீங்க எது தெரிய கூடாது என்று பேச ஆரம்பிச்சிங்களோ அப்பவே வந்திட்டன் என்றாள். அதிர்ந்து போய் அவளை பார்த்தான் ராஜன்.

தொடரும்………………..!
பாகம் 53
Last edited by Aruntha on Thu May 24, 2012 9:14 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 53

Post by Aruntha » Thu May 24, 2012 9:13 pm

டாடி உங்களுக்கும் அங்கிளுக்குமிடைல ஏதோ இருக்கு. அவங்க ரொம்ப குழப்பத்தில இருக்காங்க. அது தான் தலைவலி என்று சொல்லி ஒரே றூம் ல இருக்கார். அண்டைக்கு ரேவதி வீட்டுக்கு நிச்சயதார்த்தம் பத்தி கதைக்க போய் வந்ததில இருந்தே அவர் சரியில்ல. நானும் பாத்திட்டு தான் இருக்கன். ரேவதி அப்பா கூட ஏதாச்சும் பிரச்சினையா? இந்த கல்யாணத்தில ஏதாவது குழப்பமா சொல்லுங்க டாடி என்னாச்சு? எதை எல்லார்கிட்டயும் மறைக்கிறீங்க என்றாள்.

ஒண்ணுமில்லம்மா அதுசும்மா கம்பனி விடயம் தான். ஒரு திட்டம் ஆரம்பிச்சம் அது தோல்வியாகிட்டு அதால ரொம்பவே காசு நட்டமடைஞ்சிட்டு.அதை சொன்னால் எல்லார் மனசும் கஷ்டபடும் அது தான் சொல்லாம மறைச்சம் என்றான். இல்ல டாடி நீங்க சொல்றது பொய். நீங்க ஏதோ மறைக்கிறீங்க அது தான் உண்மை என்றாள். அவளோடு வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க குமாரும் குளித்துவிட்டு வர சரியாக இருந்தது. டாடி என் மேல சத்தியம் பண்ணுங்க உங்களுக்கு பிரச்சினை கம்பனி தான் என்று கூறி ராஜனின் கைகளை எடுத்து தன் தலை மேல் வைத்தாள் ரம்யா.

என்ன செய்வது என்று தெரியாமல் குமாரை பார்த்தபடி நின்றான் ராஜன். ரம்யா உனக்கு இப்போ என்ன தெரிஞ்சாகணும் சொல்லு என்றான் குமார். இல்ல நீங்களும் டாடியும் சேர்ந்து ஏதோ மறைச்சிட்டு இருக்கிறீங்க. உங்களுக்கும் தலைவலி இல்ல எதையோ யோசிச்சு குழப்பத்தில இருக்கிறீங்க சொல்லுங்க அங்கிள் என்றாள். குமாரும் ராஜனும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர். குமார் சென்று தன் அறை கதவை தாழ்ப்பாள் போட்டான்.

உண்மை தான் ரம்யா. நீ கேக்கிறது சரி. நாம ஒரு உண்மைய மறைக்கிறம் தான். ஆனால் அந்த உண்மை இப்போ வெளில தெரிஞ்சா எல்லாரும் கஷ்டமா இருக்கும். அது தான் என்றான். நீ சின்ன பிள்ளை உனக்கு இப்போ இது தெரிறது நல்லதில்ல விட்டிடு என்றான். இல்ல அங்கிள் சொல்லுங்க நீங்க தேடுற விடயத்துக்கு நான் ஏதாவது உதவி பண்ணுறன். இல்ல எனக்கு ஏதாச்சும் ஐடியா தோணினால் சொல்றன் என்றாள்.

அவள் சொல்வதும் ஒரு வகையில் சரியாக பட்டது. ராஜன் குமாரை பார்த்தான். குமாரும் சொல்லுவமா என்று கண்களால் கேட்டான். சரி நான் சொல்றன் என்று குமார் நடந்தவற்றை கூற ஆரம்பித்தான். இத பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியாது. அண்டைக்கு ரேவதி வீட்டுக்கு போன இடத்தில தான் தெரிய வந்திச்சு. அதால தான் வேலை அலுவல் என்று கூறி ஊருக்கு போனம் டாக்டரம்மாவ பாக்க. ஆனால் அங்க இருந்த நிலைமை எங்களுக்கு சாதகமா அமையல. அது தான் நாளைக்கு மறுபடியும் போகலாம் என்று யோசிக்கிறம் என்றான்.

என்ன அங்கிள் சொல்லுறீங்க? அப்பிடி என்றால் உங்களுக்கு மூணு பசங்களா? செல்வன் செல்விக்கு சகோதரம் இருக்கா? பையனா? பொண்ணா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள். எங்களுக்கு எதுவுமே தெரியலம்மா நாமளே குழப்பத்தில இருக்கிறம். நம்பவே முடியல. நம்பாமல் இருக்கவும் முடியல என்ன செய்யுறது என்று யோசிக்கிறம் என்றார்.

இருந்தாலும் அங்கிள் நீங்க திடீரென்று டாக்டரம்மாவிடம் போய் கேக்காமல் போனில இத பத்தி சொல்லுங்க. நாங்க உங்களோட கதைக்கணும். ஊரில இருந்து வெளிக்கிட்டு வெளில எங்காச்சும் வர சொல்லுங்க. அங்க வச்சு இத பத்தி கதையுங்க. இல்ல விடயத்தை சொல்லாம உங்களோட முக்கிய விடயம் கதைக்கணும் என்று சொல்லி கூப்பிடுங்க. அவங்ககிட்டயும் பிழை இருந்தால் உடன வருவாங்க என்றாள்.

நீங்க அடிக்கடி ஊருக்கு போனால் யாராச்சும் பார்த்தா தப்பாகிடும். அப்புறம் கமலி ஆன்டிக்கிட்ட ஊரில உங்கள பாத்தது என்றால் அவங்க கேக்கிற கேள்விக்கு நீங்க பதில் சொல்ல முடியாது என்றாள். அவள் சொல்லிய கருத்தும் சரியாகவே இருந்திச்சு. உனக்கு சொன்னதால ஏதோ எங்களுக்கும் ஒரு வழி கிடைச்ச போல இருக்கு என்று கூறிய குமார் உடனடியாக டாக்டரம்மாவிற்கு போன் எடுத்தான்.

ஹலோ டாக்டரம்மா நான் குமார் பேசுறன். எப்பிடி இருக்கிறீங்க உங்க வீட்டுக்காரர் எப்பிடி என்றான். அவர் இப்போ நல்லா இருக்காரப்பா நான் இப்ப தான் நிம்மதியா இருக்கன் என்றார். அம்மா உங்களோட நான் கொஞ்சம் தனிப்பட கதைக்கணும். அதுக்காக தான் அண்டைக்கு கூட வீட்டுக்கு வந்தன். இருந்தாலும் உங்கட நிலைமைல எதுவும் கதைக்க கூடாது என்று விட்டிட்டன். இப்போ கண்டிப்பா கதைக்க வேண்டிய சூழ்நிலைல இருக்கன் என்றான். என்னப்பா என்ன கதைக்கணும் என்று சற்றே பதற்றமாக கேட்டார்.

ஒண்ணுமில்லம்மா சும்மா தான் நாளைக்கு உங்களால பட்டிணத்துக்கு அல்லது ஊருக்கு வெளில எங்காச்சும் வர ஏலுமா என்றான். கண்டிப்பா வாறனப்பா என்றார். நீங்க பட்டிணத்துக்கெல்லாம் வராதீங்க ரொம்ப தூரம். நீங்க ஊருக்கு வெளில நம்மட அயலூருக்கு வாங்க நாங்களும் வந்திடுறம் என்றான். சரிப்பா நாளைக்கு காலைல பத்து மணிக்கு அங்க வாறன் என்று கூறி போனை துண்டித்தாள். அப்பாடா ஒரு மாதிரி நம்ம பிரச்சினைக்கு நாளைக்கு விடிவு காலம் வந்திடும் என்ற ஆறுதலோடு பெருமூச்சு விட்டான் குமார்.

என்னவோ நீ சொன்ன ஐடியால எல்லாம் நல்லா நடந்தா சரிம்மா என்றான் குமார். ரமி இத பத்தி மற்றவங்க யார்கூடயும் எதுவும் கதைக்காதம்மா. இது நமக்குள்ளயே இருக்கட்டும் என்றான் ராஜன். என்ன டாடி எனக்கு தெரியாதா இத இப்ப வெளில சொன்னா எவ்வளவு பிரச்சினை வரும் எண்டது. நீங்க யோசிக்காதீங்க எல்லாம் நல்லபடி நடக்கும் என்று அவர்களை ஆறுதல் படுத்தினாள். சரி நேரமாச்சு அம்மா தேட போறாங்க நான் போன் நம்பர் வாங்க வந்தன் சரி வாங்க எல்லாருமே சேர்ந்து கீழ போவம் என்று கூறி அவர்களை அழைத்து கொண்டு சென்றாள்.

என்னம்மா போன் நம்பர் வாங்க இவ்வளவு நேரமா என்று கேட்டபடி அவள் அருகில் வந்தாள் பிரியா. இல்லம்மா டாடி யார் கூடயோ போன் பேசிட்டு இருந்தார் அது தான் காத்திட்டு இருந்தன் என்று கூறி சமாளித்தாள். என்னப்பா சிவா காபி குடிச்சியா என்றபடி அவன் அருகில் அமர்ந்தான் குமார். ஆமா குடிச்சிட்டன் எனக்கு பிடிச்ச பூந்தி தந்தாங்க அம்மா அதுவும் சாப்பிட்டன் என்று கூறி சிரித்தான்.

சரிம்மா நேரமாச்சு நாங்கள் கிளம்பட்டுமா என்றான் தனேஷ். ஆமா அம்மா நேரமாச்சு வீட்டில அம்மாவும் அப்பாவும் பாத்திட்டு இருப்பாங்க நாங்க கிளம்பிறம் என்றான் சிவா. சரிப்பா அடிக்கடி வீட்டுக்கு வந்திட்டு போப்பா உன்னை பாக்காமல் ரொம்ப கஷ்டமா இருக்கு என்றாள் கமலி. ஆமா சிவா வீட்டுக்கு வந்து போப்பா உன்னை பத்தி ஒரே கமலி பேசிட்டு இருப்பா என்றாள் பிரியா. கண்டிப்பா வந்து போவன் அம்மா என்று கூறி வெளியில் வந்தான் சிவா. தனேஷூம் அவனை தொடர்ந்து சென்றான்.

அவர்கள் போன திசையையே எல்லாரும் பார்த்தபடி நின்றார்கள். தனேஷ் செல்வி கூட சிரித்து கதைத்த பழகிய மகிழ்ச்சியில் உற்சாகமாக சென்றான். என்னடா ரொம்ப குஷி ஆக இருக்காய் என்றான் சிவா. என்ன நான் மட்டும் தான் குஷியா? நீ கூட தான் சந்தோசமா இருக்காய் அப்புறம் என்ன இரண்டு பேருமே ரொம்ப ஹப்பி என்றான் தனேஷ். ஆமாடா தனேஷ் எனக்கு செல்வன் வீட்டுக்கு போனாலே ஒரு நிம்மதி சந்தோசம் தானா வருது என்று கூறினான் சிவா. சரிடா உன் வீடு வந்தாச்சு நீ இறங்கிக்கோ நான் வீட்டுக்கு போகணும் அம்மா தனியா இருப்பாங்க என்று கூறியபடி சென்றான் தனேஷ்.

தொடரும்……….!
பாகம் 54
Last edited by Aruntha on Sun May 27, 2012 4:03 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 54

Post by Aruntha » Sun May 27, 2012 4:02 pm

வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு கட்டிலில் சாய்ந்தான் தனேஷ். தனேஷ்க்கு செல்வியின் நினைவாகவே இருந்தது. அவளின் சிரிப்பு கதை எல்லாம் அவனிற்கு படம் போல் கண் முன்னால் ஓடியது. நீண்ட நாட்களுக்கு பின் அவளுடன் அருகில் இருந்து கதைத்தது அவளுடன் சிறு சண்டைகள் போட்டது எல்லாமே மகிழ்வாக இருந்தது அவனுக்கு. என்னப்பா ரொம்ப நேரம் தூங்காம இருக்கிறியே நாளைக்கு ஆபிஸ் போகணும் சீக்கிரம் தூங்கு என்ற தாயின் குரல் கேட்டு சுய உலகிற்கு வந்தவன் அவளின் நினைவுகளின் அணைப்போடு தூங்க சென்றான்.

நீண்ட நாட்களுக்கு பின் செல்வன் செல்வி வீட்டிற்கு சென்று அவர்களுடன் சிரித்து மகிழ்ந்தது கமலியின் பாசம், குமாரின் அரவணைப்பு, ரமி குடும்பத்தாரின் அக்கறையான விசாரிப்பு எல்லாமே சிவாவிற்கு மகிழ்வாக இருந்தது. அவர்களின் பாச மழைக்குள் மீண்டும் மீண்டும் குளித்திடஅவனது மனது ஏங்கியது. கமலி அவனுக்கு பிடித்த பூந்தியை செய்து அன்பாக ஊட்டியதை நினைத்து உள்ளம் பூரித்தபடி இருந்தான்.

குமாரின் போன் வந்ததிலிருந்து ரொம்பவே குழப்பத்திலிருந்தார் டாக்டரம்மா. எதுக்காக குமார் போன் பண்ணிவர சொன்னான்? அதுவும் முக்கிய விடயம் என்றானே என்னவாக இருக்கும்? அதுக்காக தான் ஏற்கனவே வந்ததாக சொன்னானே நிலைமை சரியில்லை என்று போனதாக சொன்னானே! ஒரு வேளை அவனுக்கு ஏதாச்சும் உண்மை தெரிஞ்சிருக்குமா? கடவுளே என்ன சோதனை இது என்று தூக்கமில்லாமல் புரண்டபடி இருந்தார்.

குமார் ஏதாச்சும் கேட்டால் உண்மையை சொல்லுவமா வேண்டாமா? சீ சீ எதுக்கு நான் இப்பிடி குழப்பத்தில இருக்கன். இந்த உண்மை யாருக்குமே தெரியாதே அப்புறம் எதுக்கு நான் பயப்பிடணும்? என்னால என் மனசு கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லையே. என் மனசாட்டியே என்னை சாகடிச்சிடும் போல இருக்கே கடவுளே என் மனச ஒரு நிலைப்படுத்து என்ற படி தூங்க சென்றார் டாக்டரம்மா.

கமலி குடும்பமும் பிரியா குடும்பமும் ஒன்றாக பிரியா வீட்டில் இரவு சாப்பாடு சாப்பிட்டார்கள். அந்த நேரம் குமார் டேய் ராஜன் அந்த டோனர் எனக்கு போன் பண்ணினார். நாளைக்கு நாம கம்பனி அலுவலா வெளில போகணும். காலைல சீக்கிரமா எழும்பி வெளிக்கிடு என்றான். என்னப்பா இப்ப 2 நாள் முன்னாடி தானே போனீங்க அப்புறம் என்ன நாளைக்கும் போறீங்களா என்றாள் கமலி. ஆமா கமலி அவங்க நாளைக்கு வரட்டாம் போனால் தான் முடிவு தெரியும் என்றான் ராஜன்.

அப்ப நாளைக்கு சீக்கிரமா போய் ஒரு நல்ல முடிவோட வாங்க என்றாள் பிரியா. நீங்க எதுக்கும் யோசிக்காதீங்க அண்டைக்கு போய் தான் உங்க வேலை முடியல. நாளைக்கு போங்க எல்லாமே நல்ல படியா நடக்கும். கடவுள் எப்பவும் நம்ம கூட தான் இருப்பான் என்றாள் ரம்யா. அவர்களின் நிலைமை அறிந்து அவள் கூறிய ஆறுதல் வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. சரி சரி உங்க கதையளஅப்புறமா பாக்கலாம் எனக்கு பசிக்குது சீக்கிரமா சாப்பாட போடுங்க என்றான் செல்வன். உனக்கு எந்த நேரமும் சாப்பாட்டு யோசனை தான் அவனுக்கு முதல்ல போடுங்க சாப்பிடட்டும் என்றாள் செல்வி.

மறுநாள் காலை நேரத்தோடு ஆயத்தமானார்கள் குமாரும் ராஜனும். அவர்களின் பற்பல எதிர்பார்ப்புக்கள் ஏக்கங்கள் நிறைந்த பயணம் அந்த அதிகாலை வேளை மெதுவாக ஆரம்பித்தது. ரம்யா அவர்களை ஆறுதல் வார்த்தை கூறி உற்சாகமாக வழியனுப்பினாள். உங்களுக்காக நான் கடவுளிட்ட வேண்டிக்கிறன் நீங்க போங்க எல்லாமே நல்லா நடக்கும் என்று கூறினாள். உன் வாக்கு நல்லா அமையணும் என்றான் குமார். அவர்கள் கதைத்துக் கொண்டிருக்க கமலியும் பிரியாவும் வந்தார்கள். சரிப்பா பாத்து பத்திரமா போய்டு வாங்க என்று வழியனுப்பினார்கள்.

நான்கு மணி நேர பயணத்தின் பின் அவர்கள் அயலூரை அடைந்தார்கள். அவர்களுக்கு சில நிமிடங்கள் முன்பாகவேடாக்டரம்மா வந்து அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார். வாப்பா குமார் எப்பிடி இருக்கிறாய்? என்ன திடீரென்று போன் போட்டு வர சொன்னாய் என்னாச்சு? எதுவும் பிரச்சினையா என்றார். பிரச்சினை என்று எதுவும் இல்லை. இருந்தாலும் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அத பத்தி கேக்க தான் வந்தன் என்றான் குமார். உண்மையா என்னப்பா என்கிட்ட என்ன இருக்கு என்றபடி அவனை பார்த்தார் டாக்டரம்மா.

டாக்டரம்மா நான் கேக்க போற விடயம் உங்கள காயப்படுத்துதோ தெரியல. இருந்தாலும் அதை பத்தி அறியவேண்டியசூழ்நிலையிலநான் இருக்கன் என்றான் குமார். என்னப்பா சொல்லு என்றார் டாக்டரம்மா. அம்மா இது இன்றைக்கு நேற்றைக்கு நடந்த விடயமில்லை. இருபது வருசத்துக்கு முந்திய விடயம். ஆனால் அது பத்தி இப்ப தான் நான் அறிஞ்சதில உங்கள சந்திக்க வந்தன் என்றான் குமார்.

குமாரின்வார்த்தைகளை கேட்ட டாக்டரம்மாவிற்கு உடம்பெல்லாம் வியர்த்து கொட்டியது. உடலில் சற்று நடுக்கம் தெரிந்தது. குரல் தளுதளுத்தது. என்னப்பா சொல்றாய் என்றபடி குமாரை பார்த்தாள். அது ஒண்ணுமில்லம்மா குமார் இப்ப ஒரு வாரம் முன்னாடி அவனுக்கு தெரிஞ்ச டாக்டர் ஒருத்தன சந்திச்சான். அதுவும் அவன் இருபது வருசத்துக்கு பிறகு அவரை சந்திச்சிருக்கான். அவர் கமலிட பிரசவம் இவனோட குழந்தையள் பத்தி ஒரு சில கருத்து சொல்லி இருக்கான். அதில இருந்து இவன் ரொம்ப குழப்பத்தில இருக்கான் அது தான் உங்ககிட்ட வந்தம் என்றான் ராஜன்.

என்னப்பா சொல்றாய் என்ற டாக்டரம்மாவிற்கு அந்த டாக்டர் கமலி பிரசவத்துக்கு ஒரு மாசம் முன்னாடி வெளியூர் போனப்ப அவங்க உடம்பு சரியில்லாம இருந்த போது அவங்கள சோதிச்சிருக்கார். அப்போ ஸ்கான் எடுத்து பாத்திருக்காங்க. ஆனால் ஸ்கான் றிப்போட் வாறதுக்கிடைல இவங்க டிஸ்சார்ஜ் ஆகி வந்திட்டாங்க. இப்ப ஒரு வாரம் முன்னாடி சந்திச்சப்ப அவங்க கேட்டாங்க உங்க மனைவியும் மூணு குழந்தையளும் எப்பிடி இருக்காங்க என்று. அதுக்கு குமார் தனக்கு இரண்டு பசங்க என்று சொல்ல அவர் இல்லை மூணு பசங்க தான் ஸ்கான் றிப்போட்ல நான் பாத்தன் என்று சொன்னார் என்றான் ராஜன்.

ராஜன் சொல்ல சொல்ல டாக்டரம்மாவிற்கு இந்த உலகமே சுற்றுவது போல இருந்தது. என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தார். என்ன டாக்டரம்மா அமைதியாகிட்டிங்க. கமலிக்கு பிரசவம் பார்த்தது நீங்க தான். எங்களுக்கு இருக்கிறது இரண்டு குழந்தைங்கதான். அப்பிடி அந்த டாக்டர் சொல்றபடி பார்த்தா மூணு குழந்தைங்க இருக்கணும். இதுக்குள்ள ஏதாச்சும் உண்மை மறைஞ்சு இருக்கா என்றான் குமார். சொல்லுங்கம்மா உண்மைய சொல்லுங்க என்றான்.

அப்பிடிஎதுவும் இல்லைப்பா நீசும்மா மனச போட்டு குழப்பாத என்றார் டாக்டரம்மா. இல்லை நீங்க பொய் சொல்றீங்க. உங்களோட குரல், ரென்ஷன் எல்லாம் பார்த்தால் அந்த டாக்டர் சொன்னதெல்லம் உண்மை தான் சொல்லுங்க என்ன நடந்திச்சு? அப்போ எனக்கும் கமலிக்கும் பிறந்த மற்ற குழந்தை எங்க என்றான் குமார்.

ஆமா குமார் நீ சொல்றது உண்மை தான். உனக்கும் கமலிக்கும் பிறந்தது மூணு குழந்தைங்க தான். மூணும் நல்லபடியா தான் பிறந்திச்சு. ஆனால் அந்த சூழ்நிலைல இன்னொரு உயிர காப்பாத்துறதுக்காக உன்னோட ஒரு குழந்தைய அவங்களுக்கு கொடுக்க வேண்டியதா போச்சு. உனக்கு இரண்டு பையனும் ஒரு பொண்ணும் பிறந்தாங்க என்றார். நிலைகுலைந்து போய் டாக்டரை பார்த்தபடி நின்றான் குமார்.

அதிர்ச்சி தொடரும்………..!
பாகம் 55
Last edited by Aruntha on Mon May 28, 2012 9:14 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 55

Post by Aruntha » Mon May 28, 2012 9:13 pm

என்ன சொல்றீங்க டாக்டரம்மா நீங்க சொல்றதெல்லாம் உண்மையா என்றான் குமார். ஆமா குமார் என்னை மன்னிச்சிடு அந்த நேரத்தில எனக்கு மனிதாபிமானமாக பார்த்த போது உங்களுக்கு துரோகம் பண்ணுவதாக தெரியவில்லை. ஒரு குடும்பத்தில இரண்டு பேரை காப்பாத்துறது மட்டும் தான் தெரிஞ்சுது. அதால அப்பிடி ஒரு தப்ப பண்ணிட்டன் என்று அழுதார்.

அவங்க குழந்தையே இல்லாம சாகிற நிலைமைல இருந்தாங்க. அதுவும் ஆறு தடவை பிரசவத்தில அவங்க குழந்தை இறந்திட்டு இந்த தடவையும் இறந்து பிறந்ததால ரொம்ப உடைஞ்சு போய்ட்டாங்க. இந்த குழந்தை மாறின விடயம் அவங்க மனைவிக்கே தெரியாது. அவங்கட உயிர காப்பாத்துறதுக்காக அவங்க கேட்டப்ப என்னால ஒண்ணும் பண்ண முடியல. உங்கட மூணு குழந்தைகள் தான் கண்ணுக்கு தெரிஞ்சிச்சு ஒரு ஆண் குழந்தைய எடுத்து குடுத்திட்டன் என்றார்.

குமாரால் டாக்டரம்மா மேல் கோவப்படவும் முடியவில்லை. அவர் நிலைமையை புரிந்து கொள்ள முடிந்தாலும் அவனுக்கு அந்த குழந்தையை பார்க்க மனது ஏங்கியது. சரி அந்த குழந்தையை யாருக்கு குடுத்தீங்க? நாம எவ்வளவு வசதியா இருக்கிறம் அந்த குழந்தை எப்பிடி இருக்கோ கஷ்ட படுதோ தெரியல சொல்லுங்கம்மா என்றான்.

எனக்கு நான் குடுத்தவங்க இப்ப எங்க இருக்காங்க என்று தெரியாது. ஆனால் ஒரு வசதியான பரம்பரை பணக்காரங்களான ஒரு பண்ணை குடும்பத்துக்கு தான் கொடுத்தன். கண்டிப்பா உன் குழந்தை நல்ல நிலைமைல வசதியா தான் வாழுவான் யோசிக்காதப்பா என்றார். அவனால் சமாதானமாக முடியவில்லை. சரி குடுத்தவங்க பெயர் விபரம் சொல்லுங்க என்றான். எனக்கு தெரியாதப்பா அப்பிடி தெரிஞ்சா கண்டிப்பா உனக்கு சொல்லுவன் என்றார்.

தம்பி இத பத்தி நீ வேற யாருக்கும் சொல்லியிருக்கிறியா? என்றார் தயங்கியபடி டாக்டரம்மா. இல்ல எனக்கும் ராஜனுக்கும் தான் தெரியும். உண்மை தெரியாமல் எல்லாரையும் கஷ்டபடுத்த கூடாது என்று தான் சொல்லல என்றான். தம்பி இத இப்பிடியே விட்டுடுப்பா. உன் பையன் நல்லா தான் இருப்பான். வசதியா தான் வாழுவான். எங்க இருக்கான் என்று மட்டும் தெரியல. சில சமயம் வெளிநாட்டில கூட இருக்கலாம் என்றார்.

இதபத்தி தெரிஞ்சா கமலியோட குடும்பம் அம்மா, அப்பா எல்லாம் என்னை திட்டியே தீர்த்திடுவாங்க. நான் பண்ணினது தப்பு தான். என்னோட நிலைமைல வேற எதுவும் பண்ண முடியலப்பா. தயவு செய்து என் நிலைமைய புரிஞ்சு என்னை மன்னிச்சுக்கோ என்று கூறி அவன் காலில் விழுந்தார் டாக்டரம்மா. எழுந்திருங்கம்மா என்ன இது எவ்வளவு பெரியவங்க நீங்க இப்பிடி என் காலில போய் எழும்புங்க என்று அவரை தூக்கினான குமார்.

குமாரால் என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. சரி இத பத்தி நாங்க யாருக்கும் சொல்லல. ஆனால் ஒண்ண மட்டும் சொல்லுங்க என் பையன் எங்க இருக்கான் என்று தெரிஞ்சு மறைக்கிறீங்களா? இல்லை உண்மைலயே தெரியாதா என்றான். உண்மைல தெரியாது தம்பி கண்டிப்பா தெரிஞ்சா உன் வீட்டுக்கு வந்தே செல்லுவன் என்றார். அதற்கு மேல் என்ன பண்ண முடியும் என்ற நிலையில் கிளம்ப ஆயத்தமானான் குமார்.

அம்மா ஏதாச்சும் தகவல் தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுங்க என்றான் ராஜன். ஆமாப்பா கண்டிப்பா சொல்றன். இந்த விடயம் வெளில தெரியாம பாருங்க என்று மறுபடியும் கெஞ்சினார் டாக்டரம்மா. கண்டிப்பா சொல்லல இத அவங்களுக்கு தெரியபடுத்தினால் குடும்பத்திட ஒட்டு மொத்த சந்தோசமும் போய்டும் என்று எங்களுக்கு தெரியும். அதால நாம யாருக்குமே சொல்ல மாட்டம் யோசிக்காதீங்க. இருந்தாலும் விபரம் தெரிஞ்சா உடன அறிய தாங்க என்று கூறியபடி காருக்குள் ஏறினான்.

அவர்கள் போன திசையையே பார்த்தபடி நின்றார் டாக்டரம்மா. எந்த உண்மையை மறைக்க நினைத்தாரோ அந்த உண்மை இத்தனை வருடங்களின் பின் அவர் வாயாலேயே சொல்ல வேண்டிய நிலை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவர்களிடம் உண்மையை கூறியது அவரின் இத்தனை நாள் குற்ற உணர்வை சற்று போக்கியிருந்தது.

என்ன குமார் டாக்டரம்மா இப்பிடி சொல்றாங்க? அப்பிடிய என்றால் நம்ம பையன் எங்க எப்பிடி இருக்கான் என்று தெரியலயே! இத பத்தி இப்ப யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேணாம் நமக்குள்ளயே இருக்கட்டும். பையன பத்தி ஏதாச்சும் விபரம் தெரிஞ்சு அவன் எங்க இருக்கான் என்று அறிஞ்சால் மட்டும் கமலியாக்களுக்கு சொல்லுவம். அதுவரைக்கும் எதுவுமே தெரிய வேணாம் என்றான் ராஜன்.

ஆமாடா நாமளே இப்ப ரொம்ப குழப்பத்தில இருக்கம். இத போய் சொன்னால் கமலியும் ரொம்ப கஷ்டபடுவாள். அவள பொறுத்தவரை அவளுக்கு இரண்டு குழந்தையாவே இருக்கட்டும் என்றான் குமார். குமாரின் செல்போன் சிணுங்கியது. ஹலோ அங்கிள் நான் ரம்யா பேசுறன் போன விடயம் என்னாச்சு என்றாள். எங்கம்மா நிக்கிறாய் உனக்கு பக்கத்தில ஒருத்தரும் இல்லையா என்றான் குமார். இல்ல அங்கிள் நான் தனியா தான் இருக்கன் சொல்லுங்க என்றாள்.

ஆமா ரமி அந்த டாக்டர் சொன்னதெல்லாம் உண்மை தான். எங்களுக்கு மூணு குழந்தைங்க தான் ஒரு பொண்ணு இரண்டு பையன் பிறந்திச்சாம். டாக்டரம்மாவே சொன்னாங்க என்று நடந்தவற்றை கூறினான். என்ன அங்கிள் சொல்றீங்க அப்போ உங்க பையன் எங்க இருக்கான் என்று அவங்களுக்கும் தெரியாதா? என்ன கொடுமை இது அவங்க யாருக்கு கொடுத்தாங்க என்று கேக்கலயா? என்றாள். எல்லாம் கேட்டாச்சும்மா அவங்க யாரோ பெரிய பண்ணை பணக்காரங்களுக்கு தானாம் கொடுத்தாங்க. அவங்க இப்ப எங்க இருக்காங்க என்று தெரியாதாம். உள்ளுரிலயா, இல்லை வெளிநாட்டிலயா எதுவுமே தெரியாதாம். ஆனால் பையன் நல்ல வசதியா வாழுவான் என்று மட்டும் சொன்னாங்க என்றான்.

சரி அங்கிள் எதுக்கும் யோசிக்காதீங்க. இந்த உண்மை தெரியாமல் போனால் நாங்க இருக்கிறதில்லையா? சரி எங்கோ உங்க பையன் நல்லா இருக்கானே அவ்வளவும் போதும். அவன் உங்க பையனா இருந்தால் உங்க கூட சந்தோசமா மட்டும் தான் இருந்திருப்பான். ஆனால் இப்ப இரண்டு உயிர வாழ வைச்ச ஒரு ஜீவனா இருக்கான். அவன கடவுள் நல்லா வச்சிருப்பார் நீங்க வீட்டுக்கு வாங்க என்றாள்.

சரிம்மா நாங்கவந்திட்டு தான் இருக்கிறம். இத பத்தி யாருக்கும் எப்பவும் தெரிய வர கூடாது சரியா என்றான். என்ன அங்கிள் இதெல்லாம் நீங்க சொல்லியா தெரியணும் எங்களுக்கே எவ்வளவு கஷ்டமா இருக்கு பெத்தவங்க கமலி ஆன்டிக்கு தெரிஞ்சா எப்பிடி துடிச்சு போவாங்க எனக்கு தெரியாதா? கண்டிப்பா சொல்ல மாட்டன் நீங்க நிம்மதியா வாங்க எதையும் யோசிக்காதீங்க என்றாள். சரியடா என்று கூறி போனை துண்டித்தான் குமார்.

டேய் குமார் முதல் டாக்டர் ஜோன்க்கு போன் பண்ணி சொல்லு அவரால தான் இவ்வளவு உண்மையும் தெரிய வந்திச்சு என்றான் ராஜன். ஆமாடா நான் இந்த டென்ஷனில அத மறந்திட்டன் என்று கூறி டாக்டர் ஜோன்க்கு போன் டயல் செய்தான். ஹலோ டாக்டர் நான் குமார் பேசுறன் என்றான். தெரிது சொல்லுங்க குமார் என்ன திடீரென்று போன் பண்ணுறீங்க என்றார்.

ஆமா டாக்டர் நான் இப்ப தான் ஊரில இருந்து வந்திட்டு இருக்கன். டாக்டரம்மாவ சந்திச்சன். நீங்க சொன்னதெல்லாம் சொல்லி விபரம் கேட்டன். அவங்களும் உண்மைய சொன்னாங்க என்று கூறி நடந்தவற்றை கூறினான். அப்பிடியா அப்புறம் பையன் பத்தி எதுவும் தெரியலயா? சரி விடுங்க இத்தனை வருசத்துக்கு அப்புறமா தான் அந்த உண்மை உங்களுக்கு தெரியணும் என்று இருக்கு அதே போல உங்க பையனும் கண்டிப்பா உங்களுக்கு கிடைப்பான் கவலைப்படாதீங்க என்று தைரியமூட்டினார் டாக்டர்.

டாக்டர் உங்களுக்கு நான் ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறன். என் வாழ்க்கைல இவ்வளவு பெரிய உண்மைய சொல்லி இருக்கிறீங்க எனக்கு நீங்கள் கடவுள் போல என்றான். என்ன குமார் இப்பிடி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு. சரி அத விடுங்க இத பத்தி இப்போ வீட்டுக்கு சொல்லாதீங்க என்றார். கண்டிப்பா சொல்ல மாட்டன். இத நான் சொன்னால் அத தாங்கிற சக்தி என் கமலிக்கு இல்லை. அந்த நிமிசமே அவள் உடைஞ்ச போய்டுவாள் அப்புறமா அவள தேற்ற என்னால முடியாது என்றான். நல்லது பையன பத்தி தெரிய வாறப்ப நாங்க பக்குவமா எல்லாருக்கும் சொல்லலாம் இப்ப இத பத்தி யோசிச்சு கவல படாம இருங்க என்று கூறினான். சரி டாக்டர் ரொம்ப சந்தோசம் என்று கூறி போனை கட் செய்தான்.

மனதில் பாரத்தை சுமந்த படி அவர்கள் பயணம் பட்டணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. டேய் என் பையன் என்னை போல இருப்பானா இல்ல கமலி போல இருப்பானா? செல்வன மாதிரியே இருப்பானா? எனக்கு அவன பாக்கணும் போல இருக்கடா. என் மனச என்னால கட்டுப்படுத்தவே முடியலடா. ஏன் தான் கடவுள் இப்பிடி நம்மள சோதிக்கிறார் என்று கண்கலங்கினான் குமார்.

பயணம் தொடரும்……!
பாகம் 56
Last edited by Aruntha on Tue May 29, 2012 10:02 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 56

Post by Aruntha » Tue May 29, 2012 10:02 pm

சரிடா வீட்டுக்கு அருகில வந்திட்டம் அப்சற் ஆகாம வா என்றான் ராஜன். அப்பிடி இல்லடா என்னால என்னை கொன்ட்ரோல் பண்ண முடியலடா முடிஞ்சளவுக்கு முயற்சிக்கிறன் என்றபடி காரிலிருந்து கீழே இறங்கினான். அம்மா டாடி வந்தாச்சு என்ற படி ஓடி வந்தான் செல்வன். அவனை அப்படியே அணைத்து முத்தமிட்டான் குமார். அவன் மனதில் அவன் செல்வனாக தெரியவில்லை. அவனின் கைமாறிய குழந்தையாகவே தெரிந்தான். என்ன டாடி செல்வன அப்பிடி பாக்கிறீங்க என்ற செல்வியின் குரலால் சுயநினைவுக்கு வந்தவன் ஒண்ணுமில்ல சும்மா என்ற படி வீட்டுக்குள் நுழைந்தான்.

சரி ரொம்ப தூரம் போய் வாறீங்க போய் குளிச்சிட்டு வாங்க எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறன் என்றாள் கமலி. பிரியாவும் கமலியும் சாப்பாடு எடுத்து வைத்தார்கள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள். என்ன மாதிரி போன வேலை எல்லாம் நல்லபடி முடிஞ்சுதா என்றாள் கமலி. ஓரளவு ஓகே ஆகிட்டு ஆனால் இன்னும் சரியான முடிவா தெரியல நமக்கு அந்த திட்டம் கிடைக்குமா கிடைக்காதா என்று கூறினான் ராஜன்.

என்னப்பா நீங்களும் குமாரும் ஒரு விடயத்தில இறங்கி அதில தோல்வி எண்டதே வந்தில்லை. எல்லாம் நல்லா நடக்கும் கவலைப்படாதீங்க. கடவுள் எப்பவும் நம்ம பக்கம் தான் என்றாள் பிரியா. அந்த நம்பிக்கைல தான் நாங்களும் இருக்கிறம் எல்லாமே நல்லா நடக்கணும் என்று அந்த கடவுள தான் கேக்கிறம். இது மட்டும் நல்ல படியா அமைஞ்சா ஒட்டு மொத்த குடும்பமே சந்தோசமா இருக்கலாம் என்றான் குமார்.

டாடி என்ன இப்பிடி கவலைபடுறீங்க நீங்க ஒரு நாளும் இப்பிடி ஒரு விடயத்துக்கும் கவலை பட்டதே இல்லை. எதுக்காக இப்பிடி இருக்கிறீங்க? பிஸ்னஸில இதெல்லாம் சகஜம் தானே டாடி. சும்மா அத நினைச்சு கவலைப்படாம இருங்க. அது வெற்றிகரமா நமக்கு கிடைச்சால் சந்தோசம் இல்லாட்டி அது தான் நமக்கு கடவுளால தந்தது என்று விட வேண்டியது தானே சும்மா அத நினைச்சு கவலைப்படாதீங்க என்றாள் செல்வி.

ஆமா டாடி செல்வி சொல்றதும் சரி தான். சரி அப்பிடி என்ன தான் திட்டம் நாங்களும் அடுத்த தடவை வாறம் எல்லாரும் சேர்ந்தே அத பத்தி ஆராயலாம். எங்களுக்கும் இதுவரை வெளி வேலை பார்த்து பழக்கமில்லை. நாங்களும் வந்து பார்த்து பழகினால் பிஸினஸூக்கு உதவியா இருக்கும் தானே என்றான் செல்வன். அடுத்த தடவை நானும் தனேஷூம் வாறம் டாடி என்றான் செல்வன்.

என்னடா செல்வா அவங்க பெரியவங்களே எத்தனை தரம் போய் இன்னும் சரிவரல. நீங்க மட்டும் போனதும் உங்கள பாத்திட்டு தர போறாங்களா? அவங்க அனுபவசாலிங்கள் அவங்களே பார்க்கட்டும். நீங்களும் போய் அந்த திட்டத்தில உதவி பண்ணலாம் என்றால் அங்கிளும் டாடியும் உங்கள கூட்டிட்டே போயிருப்பாங்க தானே ரொம்ப பெரிய மனுஷங்க போல கதைக்காமல் போய் உன் வேலைய பாருடா என்றாள் ரம்யா.

உனக்கு பொறாமையடி கனக்க கதைக்காமல் சாப்பிடு போடி என்றான் செல்வன். சரி சரி நீங்க சண்டை போடாதீங்கப்பா ஏதாச்சும் உங்கட கெல்ப் தேவை என்றால் கண்டிப்பா கேப்பம் சரியா உங்கள விட்டால் நமக்குவேற யாருப்பா இருக்காங்க என்றார் குமார். சரி சும்மா பேசிட்டு இருக்காம சாப்பிடுங்கப்பா எப்ப பார்த்தாலும் பிஸினஸ் பிஸினஸ் தான் உடம்பையும் கவனியுங்க என்றாள் கமலி. சரிங்க மெடம் நாங்க சாப்பிடுறம் என்றான் குமார்.

என்ன தலைவியாரே நீங்க அமைதியா இருக்கிறீங்க உங்க பக்கத்தில எதுவும் சொல்ல இல்லையா என்றான் ராஜன். உங்களுக்கு எப்பவும் வம்பு தான் வீட்டுக்கு வாங்க கவனிக்கிறன் என்றாள் பிரியா. டாடி இன்னிக்கு ராத்திரிக்கு உங்களுக்கு கஷ்டகாலம் தான் தேவையில்லாம வாயகுடுத்து மாட்டிக்கிட்டீங்க என்றாள் ரம்யா. அம்மா தாயே வாய் தவறி சொல்லிட்டன் என்னை மன்னிச்சுக்கோ என்றான் ராஜன். அப்படியே சிரிப்பொலியில் மிதந்தது அவர்களது வீடு.

சற்று நேரம் இருந்து கதைத்து விட்டு பிரியாவும் ராஜனும் தங்கள் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானார்கள். ரமி வாறியா இல்ல இருந்து அரட்டை அடிச்சிட்டு தான் வருவியா என்றாள் பிரியா. தெரிதெல்லா அப்புறம் என்ன கேள்வி நான் அப்புறமா வாறன் நீங்களும் உங்க புருஷனும் வீட்டுக்கு கிளம்புங்க என்றாள் ரமி. அடி வாயாடி உனக்கு ரொம்ப வாய் நீண்டிட்டு என்று செல்லமாக தட்டினாள் பிரியா.

டாடி பத்திரமா அறைய பூட்டிட்டு இருங்க இல்ல உங்க ராச்சசி பொண்டாட்டி உங்கமேல கொலை வெறில இருக்காங்க கொன்னுடுவாங்க கவனம் என்றாள் ரமி. டாடி உங்களுக்கு பயம் எண்டா சொல்லுங்க நான் உங்களோட வாறன் என்றாள். அடிப்பாவி அவள் மறந்தாலும் நீ நினைவூட்டுறியே என்று அவளை செல்லமாக கடிந்தபடி சென்றான் ராஜன்.

சரி வாங்க மாடிக்கு போகலாம் என்ற படி சென்றாள் செல்வி. அவர்கள் மூவரும் அறையில் இருந்து கதைகள் கூறி சிரித்தபடி இருந்தார்கள். டேய் செல்வா உன் ரேவதி என்ன பண்ணுறாள் ரொம்ப நாளாச்சு அவள சந்திச்சு என்றாள் ரமி. ஆமாடா ரேவதிக்கு போன் பண்ணு கதைக்கலாம் என்றாள் செல்வி. நான் அப்புறமா கதைக்கிறன் நீங்க இருங்கடி என்றான் செல்வன். டேய் இப்ப போன் பண்ணுறியா இல்ல நான் பண்ணட்டுமா என்றாள் ரமி. அம்மா தாயே நீ எடுத்து வம்பு பண்ணாத நானே போன் பண்ணுறன் என்றான் செல்வன்.

டேய் போனை மைக்ல போடு என்றாள் செல்வி. வேணாம் அதெல்லாம் முடியா நான் பேசுறன் என்றான் செல்வன். அவன் போனை டயல் செய்ய ரமி பறித்து ஸ்பீக்கரில் போட்டாள். ஹாய் செல்வா கண்ணா என்னடா பண்ணுறாய் என்றாள் ரேவதி. இருக்கன் நீ என்ன பண்ணுறாய் என்றான் செல்வன். இருக்கன்டா உன்னை நினைச்சிட்டே இன்னும் கால் பண்ணல என்று என்றாள். என்னடா இப்ப தான் உன்னை சுத்தி இருந்த அந்த குட்டிப்பிசாசு இண்டும் போச்சா என்றாள்.

செல்வனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவளுக்கு போன் ஸ்பீக்கரில் இருப்பதை சொல்ல முடியாமல் தவித்தான். செல்வியும் ரமியும் அவனை சைகையால் பேசாம கதை நாம இருக்கிறம் என்று சொன்னால் கொலை விழும் என்று கூறினார்கள். ஏனடி அவங்க பாவம் குட்டிப்பிசாசு என்றாய் என்றான் செல்வன். அட பாவி என்னடா இன்னிக்கு அவங்களுக்கு சப்போட் பண்ணுறாய் வழமையா நீ தானே சொல்லுவாய் அந்த குட்டிப்பிசாசுங்க நிண்டதால தான் போன் பண்ண லேட் எண்டு. இன்னிக்கு மட்டும் என்ன நல்லவன் போல நடிக்கிறாய்? உன்னை நம்ப முடியாதடா எப்ப யாருக்கு சப்போட் பண்ணுவாய் என்று என்றாள் ரேவதி.

அடப்பாவி இதெல்லாம் நடக்குதா சரி கதை கதை என்று மெதுவாக கூறினாள் ரமி. செல்வன் அப்பாவியாக சிரித்தான். என்னடா சிரிக்கிறாய் சரி உன் செல்ல தங்கை அது தான் அந்த குட்டிச்சாத்தான் செல்வி என்ன பண்ணுறாள் என்றாள். செல்வி அவனை பார்த்து முறைத்தாள். இருக்கிறாள் என்றான். சரி உன் உயிர் தோழி அது தான் அந்த வாயாடி சாத்தான் ரமி என்ன பண்ணுறாள் என்றாள்.

அதுக்கு மேல் பொறுமை இழந்த செல்வன் நீ சொல்றத எல்லாம் என் பக்கத்தில போனை ஸ்பீகரில போட்டிட்டு கேட்டிட்டு இருக்காங்க உன்னோட குட்டிப்பிசாசுங்க என்றான் செல்வன். ஐயோ முதலே சொல்ல கூடாதா லூசுடா நீ என்று சொல்லியபடி அவசரமாக போனை கட் பண்ணினாள் ரேவதி. டேய் திருப்ப டயல் பண்ணடா உன் மகாராணிக்கு என்றாள் ரமி. இல்ல இப்ப வேணாம் அப்புறமா கதைக்கலாமே என்றான் செல்வன். இப்ப நீ டயல் பண்ண போறியா இல்ல நான் டயல் பண்ணட்டா என்றாள் செல்வி. நானே டயல் பண்ணுறன் என்று கூறி டயல் செய்தான்.

டேய் ஸ்பீக்கரில போடுடா என்றாள் செல்வி. ஹலோ என்று தழுதழுத்த குரலில் கூறினாள் ரேவதி. அடிப்பாவி மவளே நாங்க எல்லாம் உனக்கு குட்டிப்பிசாசா? உனக்கு என்ன தைரியமடி என்றாள் ரமி. என்ன பாத்து குட்டிச்சாத்தானா? குட்டிச்சாத்தான் என்ன பண்ணும் தெரியுமா? என் பக்கத்தில வந்தா உன் ரத்தத்ததை குடிச்சிடுவன் என்றாள் செல்வி.

ஐயோ என் செல்லங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க நான் செல்லமா தான் உங்கள அப்பிடி சொன்னன் இல்லையா செல்வா என்றாள் ரேவதி. செல்வனால் எதுவும் பேச முடியல. நம்மளுக்கு முன்னால தான் மரியாதை எல்லாம் இவங்க வாயில நாம தனிய மாட்டினால் என்ன எல்லாம் சொல்லுறாங்க மவளே நாளைக்கு வீட்டுக்கு வா உன்னை கவனிக்கிறம் என்று செல்லமாக சண்டை போட்டு விட்டு மகாராஜா நாங்க உங்கள டிஸ்டப் பண்ணலப்பா நீங்க உங்க பட்டத்து ராணியோட போன் கதையுங்க நாங்க கிளம்புறம் என்று கூறி வெளியில் வந்தார்கள் செல்வியும் ரமியும்.

அட பாவி நான் கதைக்க ஆரம்பிக்கும் போதாவது சொல்லி இருக்கலாமே இப்பிடி மாட்டி விட்டிட்டியே போடா போய் அவங்கள சமாளியடா லூசு பயலே என்று திட்டினாள் ரேவதி. சரி நான் நாளைக்கு பேசுறன் இப்ப அவங்கள சமாளிக்கிறன் என்று கூறி எழுந்தான் செல்வன்.

செல்ல சண்டைகள் தொடரும்…..!
பாகம் 57
Last edited by Aruntha on Wed May 30, 2012 6:07 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 57

Post by Aruntha » Wed May 30, 2012 6:07 pm

ஹாய் என்ன கண்ணுக்குட்டி என்ற படி சென்று ரம்யாவின் கைகளை பிடித்தான் செல்வன். சீ போடா என்ற படி அவனை விட்டு விலகினாள். என்ன செல்லம் இப்பிடி பாக்கிறாய் என்றபடி செல்வியின் கன்னங்களை தட்டினான். தொடாதடா என்னை அப்புறம் நான் ராச்சசியா மாறிடுவன் என்றாள் செல்வி.

என்னடா செல்லம், கண்ணு என்று கொஞ்சுறாய். எங்கள பாத்து குட்டிச்சாத்தான், குட்டிப் பிசாசு என்று சொன்னவன் தானே அப்புறம் என்ன போடா அங்கால என்று செல்வியும் ரமியும் அவனை தள்ளினார்கள். ஐயோ என் கண்ணுங்கள அப்படி சொல்லுவமா? சும்மா செல்லமா தானே சொன்னம் அதுக்கு போய் கோவிச்சிட்டு என்று அவர்களை அணைத்தான்.

செல்லமா சொன்னாயா சரி வா செல்வி நாங்களும் செல்லமா இவனுக்கு அடிப்பம் என்று கூறி அவனை போட்டு அடித்தார்கள். அடியே வலிக்குது விடுங்கடி என்று கத்தினான். வலிக்குதா வலிக்கட்டும் குட்டிப் பிசாசுகள் இப்பிடி தான் அடிக்கும் புரிஞ்சுகிட்டா சரி என்று கூறினார்கள். ஐயோ சாமிங்களா நாங்க சொன்னது தப்பு தான் மன்னிச்சுக்கோங்க வேணும் என்றால் நாளைக்கு ரேவதி வருவாள் அவளை நீங்களே கேட்டுக்கோங்க. இப்ப ஆள விடுங்கப்பா என்று கூறி அறைக்குள் சென்றான்.

இருவரும் அவன் பின்னே அறைக்குள் நுழைந்தார்கள். சரி சொல்லுடா இது மட்டும் தான் நமக்கு நீங்க வைத்திருக்கிற செல்ல பெயரா இல்லை இன்னும் இருக்கா சொல்லுடா என்றாள் செல்வி. சரி சரி சொல்லு நாங்க உன்னை எதுவுமே பண்ண மாட்டம் என்றாள் ரமி. இல்லடி வேற ஒண்ணுமில்ல இது மட்டும் தான் என்றான் செல்வன். டேய் சொல்லுடா இல்லை உன்னை கொன்னுடுவம் என்றாள் செல்வி.

சொல்லுவன் தப்பா நினைக்க கூடாது சரியா என்றான். சரி என்று இருவரும் தலையை ஆட்டினார்கள். குட்டிச்சாத்தான், குட்டிப்பிசாசு, வாலு, லூசுக்குட்டியள் அப்புறம் நினைவில்லடி. ஏதோ அந்த நேரம் வாயில வாறத சொல்லுவம்டி நம்புங்க என்றான் செல்வன். சரி நம்புறம் மீதிய நாளைக்கு ரேவதி கூட வைச்சு பாத்தக்கிறம் என்று கூறி விட்டு சென்றார்கள். அப்பாடா என்று பெருமூச்சு விட்ட படி தூங்க சென்றான் செல்வன்.

அடி இவங்க இரண்டு பேரையும் நாளைக்கு ஒரு கை பாக்கமல் விட கூடாது. ரொம்ப தான் ஆட்டம் போடுறாங்க நாம யார் என்று காட்டணும் என்று கூறியபடி சென்றாள் ரமி. ஆமாடி இவங்களுக்கு இருக்கு ஆப்பு என்று பக்கப்பாட்டு பாடினாள் செல்வி. சரி செல்வி நேரமாச்சு நாள் கிளம்பிறன் என்று கூறி வீட்டுக்கு சென்றாள் ரமி. செல்வியும் தனது அறையை நோக்கி விரைந்தாள்.

மறுநாள் காலை நரேஷ் போன் பண்ணினான். ஹலோ குமாரா நான் நரேஷ் பேசுறன் இன்னிக்கு சாயந்தரம் நீங்க வீட்டில நிப்பீங்களா என்றான். ஆமா 4 மணிக்கு பிறகு நிப்பம் எல்லாரும். என்ன ஏதாச்சும் முக்கிய விடயமா என்றான் குமார். அப்பிடி பெருசா ஒண்ணுமில்லை நாம செல்வி ரேவதி நிச்சயதார்த்தம் பத்தி கதைச்சம் தானே அது தான் எப்ப என்று பேசி முடிக்கலாம் அது தான். இன்னிக்கு நல்ல நாள் அது தான் முறைப்படி கதைக்கலாம் என்று என்றான். சரி அப்ப வாங்க எல்லாம் கதைக்கலாம் என்றான் குமார்.

உறவுக்காரங்கள் என்று யாரும் வர மாட்டாங்க. நானும் ரேவதியும் என் நண்பன் ஜோன் ம் தான் வருவம் என்றான். சரிப்பா நமக்கும் யாரு எல்லாம் ஊரில தான். எங்க குடும்பமும் ராஜன் குடும்பமும் தான். நாங்களும் ரேவதிய பார்த்து நீண்ட நாளாச்சு இன்னிக்கு பாக்கலாம் அப்பிடியே இரவு சாப்பிட்டு போகலாம் வாங்க என்றான். சரிப்பா பின்னேரம் சந்திப்போம் என்றபடி போனை கட் பண்ணினான் நரேஷ்.

கமலி என்றபடி சமையலறைக்குள் நுழைந்தான் குமார். இன்னிக்கு செல்வன் ரேவதி நிச்சயதார்த்தம் பத்தி கதைக்க நரேஷ் வாறதா போன் பண்ணினான். நானும் சரி என்று சொல்லிட்டன். 4 மணி போல வருவாங்க. நானும் அப்பிடியே இராத்திரிக்கு இங்க சாப்பிட்டு போகலாம் வாங்க என்று சொல்லிட்டன் என்றான். சரிப்பா நல்லது அப்ப அந்த வேலைய நான் பாக்கிறன். நீங்களும் ஆபிஸில இருந்து கொஞ்சம் நேரத்தோட வாங்க என்றாள் கமலி.

ராஜனும் வர குமார் ஆபிஸிக்கு வெளிக்கிட்டான். செல்வன் நீ இன்னிக்கு ஆபிஸ் வராதப்பா ஏதாச்சும் வேலை இருந்தால் பாரு ரேவதியாக்கள் வாறாங்க நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிக்க என்றான். டாடி அவனுக்கு என்ன வேலை இருக்கு ஒண்ணே ஒண்ணு தான் இருக்கும் வெட்டியா இருந்து ரேவதி கூட போன் பேசுறது என்றாள் செல்வி. என்னடிரொம்ப துள்ளுறாய் தெரியுமா என்று கூறி தமுதுகில் அடித்தான்.

ஏனடா அவளை அடிக்கிறாய் அவள் என்ன தப்பா சொல்லிட்டாள் உண்மைய தானே சொன்னாள். அங்கிள் உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இவனும் ரேவதியும் வெளில சும்மா செல்வி, ரமி எண்டு செல்லம் கொஞ்சுவாங்க இரண்டு பேரும் போன் பேசுறப்ப நம்மள குட்டிச்சாத்தான், குட்டிப்பிசாசு என்று தான் சொல்லுவாங்க. நேற்றுதான் வசமா மாட்டினாங்கள் எண்டாள் ரமி. என்னடி போட்டு குடுக்கிறீங்களா என்றபடி அவளை அடிக்க கை ஓங்கினான்.

என்ன காலைலயே ஆரம்பிச்சாச்சா என்றபடி வந்தார் பிரியா. சரி நீயும் செல்வியும் சேர்ந்து அவங்கள கதைக்க விடாமல் குழப்பிட்டு இருந்தால் குட்டிப்பிசாசு எண்டு தானே சொல்லுவாங்க. இப்பிடியாச்சும் மரியாதையா சொல்றாங்களே என்று சந்தோசபடுங்க என்றார் பிரியா. என்ன பிரியா உன் அனுபவம் பேசுதா என்றான் ராஜன். ஆமா நீங்க என் தங்கையையும் தம்பியையும் இப்பிடி தானே சொல்லுவீங்க அப்புறம் என்ன புதுசா கேக்கிறீங்க என்றாள்.

இது என்ன புதுக்கதை சொல்லுங்க ஆன்டி நீங்க லவ் பண்ணியா கல்யாணம் பண்ணினீங்க? சொல்லவே இல்லை. அப்போ உங்களுக்குள்ளயும் லவ் ஸ்ரோறி இருக்கா சொல்லுங்க சொல்லுங்க என்றாள் செல்வி. அடிப்பாவி நாங்க லவ் ஒண்ணும் பண்ணல. நிச்சயம் பண்ணி ஆறு மாதத்தால தான் கல்யாணம் நடந்திச்சு அப்ப போன் பேசுவம் அத சொன்னன் என்றபடி வெட்கத்துடன் சென்றாள் பிரியா. ஹாய் ஆன்டிக்கு வெட்கம் வந்திட்டே என்றபடி சிரித்தான் செல்வன்.

சரி காலைலயே உங்க கலாட்டாவ ஆரம்பிச்சிட்டீங்களா சரி நீங்க நடத்துங்கப்பா நான் கிளம்பிறன் என்றான் ராஜன். என்ன டாடி நீங்களும் வெட்கத்தில எஸ்கேப் ஆகிறீங்களா என்றாள் ரமி. இவங்களுக்குள்ள மாட்டினால் கதை சரிப்பா வாடா ஆபிஸிக்கு நேரமாச்சு என்றபடி குமார் காரை ஸ்டாட் செய்ய ராஜனும் சென்று ஏறினான். அங்கிள் உங்க காதல் மனைவிக்கு முத்தம் குடுக்காமல் போறீங்களே பீல் பண்ண போறாங்களே என்றாள் செல்வி. உனக்கு ரொம்ப கூடிப் போச்சு என்று கூறி அவள் காதை திருகினாள் பிரியா.

பிரியா இன்னிக்கு செல்வன் ரேவதி நிச்சயம் பத்தி கதைக்க நரேஷூம் அவர் நண்பர் ஜோன்ம் வாறாங்கள். அப்பிடியே இரவு சாப்பிட்டு தான் போவாங்க என்றாள். அப்பிடியா சரி எல்லாரும் சேர்ந்து சமைச்சிட்டா போச்சு என்றாள் பிரியா. கமலி எல்லாருக்கும் நான் மதிய சாப்பாட பாக்கிறன். நீங்க அவங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் சுவீற்ஸ் செய்யுங்க. இரவு சாப்பாட்டு வேலையையும் பாருங்க என்றாள் பிரியா. சரி என்ற படி சமையலறையை நோக்கி சென்றாள் கமலி.

மூன்று மணிக்கெல்லாம் ஆபிஸ் வேலையை முடித்து கொண்டு குமாரும் ராஜனும் வீட்டுக்கு வந்தார்கள். சரியாக நான்கு மணிக்கு நரேஷூம் ஜோனும் ரேவதியும் வந்தார்கள். வாப்பா நரேஷ் எப்பிடி இருக்காய் என்ற படி அவர்களை வரவேற்றான் குமார். இவர் தான் டாக்டர் ஜோன். என்னோட குடும்ப நண்பன் என்று ஜோனை எல்லாருக்கும் அறிமுகம் செய்தார் நரேஷ். ஒரு சந்தோசமான விடயம் என்ன தெரியுமா? ஜோனுக்கு கமலியையும் குமாரையும் முதலிலயே தெரியும் என்றான்.

அப்பிடியா என்ன சொல்றீங்க என்று கமலி கேட்க இருபது வருடங்களுக்கு முன் நடந்தவற்றை கூறினார் நரேஷ். என்ன டாக்டர் இவ்வளவு வருசம் கழிச்சும் எங்கள நினைவில வச்சிருக்கிறீங்களா என்று கமலி கேட்க உங்கள யாரப்பா மறப்பாங்க உங்க மேல குமார் வைத்திருந்த பாசத்தை நினைச்சு தான் உங்க இரண்டு பேரையும் நான் இன்னிக்கு மட்டும் மறக்காமல் இருக்கன் என்றார்.

இது என் பையன் தமிழ்ச்செல்வன் செல்வன் என்று கூப்பிடுவம். இவள் தமிழ்ச்செல்வி செல்வி என்று கூப்பிடுவம். இவங்க எங்க குடும்ப நண்பர்கள் ராஜன் அவன் மனைவி பிரியா ஒரே செல்ல பொண்ணு ரம்யா என்று அவர்களையும் அறிமுகப்படுத்தினான் குமார். ரேவதிக்கு ஏத்த பையன் அப்படியே நம்ம ராஜகுமாரிக்கு ஏத்த ராஜகுமாரன் என்றார் ஜோன்.

சற்று நேரம் கதைத்து சிற்றுண்டிகள் சாப்பிட்டு தேனீர் அருந்திய பின் நிச்சயதார்த்தத்துக்குரிய நாள் பற்றி கதைத்தார்கள். வாற 20 ம் திகதி நல்ல நாள். அன்னிக்கு உங்களுக்கு எப்பிடி வசதி அந்த திகதில வைக்கலாமா இல்ல 25 ம் திகதியும் நல்ல நாள் அன்னிக்கு வைக்கலாமா? நீங்களே சொல்லுங்க என்றார் நரேஷ். 20 ம் திகதி சனிக்கிழமை எல்லாருக்கும் லீவு நாள் கூட அன்னிக்கு என்றால் வசதியா இருக்கும் என்று நினைக்கிறன் என்றார் குமார்.

ஆமா நானும் அப்பிடி தான் யோசிச்சன் இருந்தாலும் உங்கட கருத்தையும் கேக்கலாம் என்று தான் என்றான் நரேஷ். இன்னிக்கு 5 ம் திகதி. இன்னும் 15 நாள் இருக்கு. உறவுக்காரங்களுக்கும் சொல்லிட்டா எல்லாம் ஓகே தானே என்றான் குமார். ஆமா நிச்சயதார்த்தத்தை இப்போ நெருங்கின உறவுக்காரங்களோட செய்வம் அப்புறம் கல்யாணம் இன்னும் 1 வருசத்தால தானே செய்யுற ஐடியா அதனால எல்லாருக்கும் சொல்லி பெருசா செய்யலாம் என்று நினைக்கிறன் என்றான் குமார்.

நானும் அப்பிடி தான் நினைக்கிறன் என்னோட நெருங்கின உறவுக்காரங்கள் ஒரு 30 பேர் வருவாங்க அப்புறமா நண்பர்கள் என்று சொல்லி எனக்கு பெருசா ஒருத்தரும் இல்ல ஜோன் வீடு மட்டும் தான் அப்புறம் என் ஹாஸ்பிடல்ல இருந்து ஒரு 10 பேர் மொத்தம் 50 பேர் தான் வருவாங்க என்றான் நரேஷ். ஆமா எங்களுக்கும் அப்பிடி தான் உறவுக்காரங்கள ஊரில இருந்து ஒரு 2,3 குடும்பம் தான் வருவாங்க. அதோட இங்க ஆபிஸில இருந்து கொஞ்ச பேர் அப்புறம் செல்வனோட நண்பர்கள் சிவா, தனேஷ் குடும்பம் இவ்வளவு தான் என்றான் குமார்.

என்ன ராஜன் குடும்பத்தை மறந்திட்டீங்க என்றார் நரேஷ். அவங்க யாருப்பா நம்ம குடும்பம் போல தான். நம்மட வீட்டு விசேசத்துக்கு அவங்களுக்கோ அவங்க வீட்டு விசேசத்துக்கு நமக்கோ சொல்றது இல்ல. நாங்க எப்பவும் ஒரே வீடு தான் இது நம்ம வீட்டு விசேசம் என்றான் குமார். ஆமா நரேஷ் செல்வன் யாரு நம்ம பையன். அவனுக்கு ஒரு விசேசம் என்றால் அது நம்ம எல்லாருக்கும் தான் என்றான் ராஜன்.

இப்பிடி நண்பர்களை பாக்கிறது அருமை. ஒரே குடும்பமா அதுவம் 15 வருசத்துக்கு மேல இருக்கிறத பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு என்றார் ஜோன். இவங்க நட்ப வர்ணிக்க வார்த்தைகளே இல்லைடா அது ஒரு பொக்கிஷம் என்றான் நரேஷ். சரி அப்ப ஒரு 100 பேருக்குள்ள தான் நிச்சயதார்த்ததுக்கு வருவாங்க. சிம்பிளா செய்து முடிப்பம் என்றார் நரேஷ். ஆமா அப்புறமா கல்யாணத்தை எல்லாருக்கும் சொல்லி ரொம்ப பெருசா செய்யலாம் என்றார்கள்.

சரி ரேவதி வா நாம மேல போவம் என்றாள் செல்வி. செல்வி, செல்வன், ரமி, ரேவதி 4 பேரும் மாடிக்கு சென்றார்கள். வாடி மவளே வா உன்னை தான் எதிர்பாத்திட்டு இருக்கம் என்றபடி அவளின் காதை பிடித்தாள் செல்வி. ஐயோ வசமா மாட்டிட்டனா செல்வா என்னை காப்பாத்துடா என்றபடி அவனுக்குள் சென்று மறைந்தாள் ரேவதி. என்ன அவனுக்குள் ஒழிச்சா விட்டிடுவமா என்ற படி அவளை இழுத்தாள் ரமி.

தொடரும்……..!
பாகம் 58
Last edited by Aruntha on Thu May 31, 2012 8:07 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 58

Post by Aruntha » Thu May 31, 2012 8:06 pm

சற்று நேரம் அவர்களின் செல்ல சீண்டல்கள் சண்டைகள் தொடர்ந்து சென்றது. செல்வி நேரமாச்சு சாப்பிட வாங்க என்ற கமலியின் குரல் கேட்டு அனைவரும் மாடியிலிருந்து கீழே வந்தார்கள். ஒன்றாக அமர்ந்து கதைகள் பேசிய வண்ணம் சாப்பிட்டார்கள். ஆன்ரி உங்க சமையல் சூப்பர் என்றால் ரேவதி. என்ன இப்பவே மாமியாருக்கு ஐஸ் வைக்கிறியா என்றாள் பிரியா. ஐயோ இல்ல ஆன்ரி உண்மைய தாக் சொன்னன் என்றாள்.

சரி நேரமாச்சு நாங்க கிளம்பிறம் என்று கூறி புறப்பட ஆயத்தமானார்கள் நரேஷ் வீட்டார். சரிப்பா சீக்கிரமா நிச்சயதார்த்த வேலைய பாக்கணும். இனி நிச்சயதார்த்தம் முடியும் மட்டும் ஒரே வேலையா தான் இருக்கும். சரி என்று கூறி புறப்பட்டார்கள்.

நம்ம வீட்டில நடக்க போற முதலாவது விசேஷம் செல்வனோட நிச்சயதார்த்தம். சொல்லுறது நெருங்கினவங்களா இருந்தாலும் நல்ல கிறாண்ட் ஆக செய்யணும் என்றாள் கமலி. ஆமா நானும் அதை தான் யோசிக்கிறன். எதுக்கும் நாளைக்கு உங்க அப்பாக்கு போன் போட்டு விடயத்தை சொல்லு. அவரும் யார் யாருக்கு சொல்லணும் என்று சொல்லுவார் என்றான் குமார்.

ஆமா கமலி குமார் சொல்றதும் சரி ஊரில இருக்கிறவங்களுக்கு எல்லாம் சொல்ல ஏலாது. முக்கியமானவங்களுக்கு மட்டும் சொன்னால் சரி தானே அது யார் என்று உன்னோட அப்பா அம்மாவ கேட்டால் பிரச்சினை இல்லை என்றாள் பிரியா. அப்படியே அவர்களின் நிச்சயதார்த்த திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டன.

மறுநாள் ஆபிஸிற்கு கிளம்பினார்கள் குமாரும் ராஜனும் செல்வனும். ஆபிஸில் சென்று முக்கிய விடயங்களை பார்த்தபின் செல்வன் குமாரின் அறைக்கு சென்றான். டாடி நீங்க பிஸியா இருக்கிறீங்களா என்றான். இல்லப்பா என்ன ஏதாச்சும் ஆபிஸ் வேக்ல பிரச்சினையா எண்டார். இல்ல டாடி உங்களோட கொஞ்சம் பேசணும் என்றான். என்னப்பா வீட்டில எவ்வளவு நேரம் ஒண்ணா இருக்கிறம் இங்க பேசணும் என்று வாறாய் சரி சொல்லுப்பா என்றார்.

இல்லை டாடி வீட்டில இருந்து இத பத்தி பேச முடியா. அது தான் உங்களோட தனியா இத பத்தி பேசுவம் என்று கூறினான். என்னப்பா பெரிய மனுசன் போல கதைக்கிறாய் சரி நிச்சயதார்த்தம் எண்டதுமே உனக்கு குடும்ப பொறுப்பு வந்திட்டா என்று சிரித்தார். உள்ள வரலாமா என்ற படி வந்தான் ராஜன். என்னடா புதுசா கேட்டிட்டு வாறாய் வாப்பா என்றான் குமார். என்ன அப்பாவும் மகனும் ரொம்ப கதைக்கிறீங்க ஏதும் பர்சனலா அப்ப நான் போய்ட்டு அப்புறமா வரட்டா என்றான். இல்ல அங்கிள் சும்மா தான் வாங்க நீங்களும் இருங்க சேர்ந்தே கதைக்கலாம் என்றான். சரி சொல்லுப்பா என்றான்.

டாடி தனேஷ பத்தி என்ன நினைக்கிறீங்க என்றான். என்னப்பா அவனுக்கு என்ன குறை ரொம்ப பொறுப்பான பையன். உனக்கு கூட இன்னுமே குடும்ப பொறுப்பு வரலடா. அவன் இப்பவே எவ்வளவு பொறுப்பா இருக்கிறான். அவனோட அப்பா இல்லாத குறையை அவன் அம்மாக்கு தெரியாமல் எவ்வளவு பொறுப்பா இருக்கிறான். இப்பிடி பிள்ளையள இந்த காலத்தில பாக்கிறதே அருமையடா என்றார் குமார்.

உண்மை தானப்பா நானும் தான் அவன பாக்கிறன். ஆபிஸில செல்வன் கூட சும்மா ஜாலியா வேக் பாக்கிறான். ஆனால் அவன் ரொம்ப சின்சியர். ஏதாச்சும் புதுசா சாதிக்கணும் என்ற வெறியோட வேலை பாக்கிறான். இப்பிடி செய்தால் என்ன அப்பிடி செய்தால் என்ன என்று ஒரே ஐடியா கேப்பான். எனக்கு அவன ரொம்ப பிடிக்கும். நல்ல துருதுரு என்று உற்சாகமான பையன் என்றார் ராஜன்.

உண்மை தானப்பா நானும் அவன பாக்கிறன். அவன் எதிர்காலத்தில ரொம்ப நல்லா இருப்பான். அவன் நம்மள எல்லாம் விட பண வசதில தான் கொஞ்சம் குறைவு. அவன் குணத்தில கோடீஸ்வரன். அவனோட குணம், பாசம், நேர்மை இதுக்கு முன்னால நதம எல்லாம் கிட்டயேநிக்க ஏலாதப்பா என்றார் குமார்.

ஆரம்பத்தில உங்களோட இரவு நேரமாகும் மட்டும் இருந்து கதைப்பான் பம்பலடிப்பான். எப்ப அவன் அப்பா இறந்தாரோ அன்னிக்கு இருந்து சாயந்தரம் ஆறு மணிக்கு மேல வெளில நிக்க மாட்டான். அம்மா தனியா இருப்பாங்க என்று சொல்லிட்டே கிளம்பிடுவான். இப்பிடி அம்மால பாசமா இருக்கிறவங்க தனக்கு வாற மனைவிய கூட ரொம்ப அன்பா பாப்பாங்கள் என்றார் குமார். அவன கட்ட போறவள் உண்மைலயே ரொம்ப குடுத்து வைச்சவள் என்றான்.

டாடி நான் உங்கள ஒண்ணு கேக்கலாமா என்றான். என்னடா சொல்லு உனக்கில்லாத உரிமையா என்றான். இல்ல டாடி நான் கேக்கிறது தப்பா சரியா என்று எனக்கு தெரியல. இப்பிடியான தனேஷ கட்டிக்க போற அந்த குடுத்து வைச்ச பொண்ணு நம்ம செல்வியா இருந்தா என்னப்பா என்றான். என்ன சொல்றாய் செல்வன் என்று கேள்விக்குறியோடு அவனை பார்த்தார் குமார்.

டாடி நம்ம செல்விய யாரோ ஒருத்தனுக்கு கட்டி வைக்க தான் போறம். அது நம்ம தனேஷா இருந்தால் என்ன டாடி? அவன் எங்கட மனசுக்கு அறிஞ்சவன் அதே நேரம் செல்விய ரொம்பவே புரிஞ்சு வைச்சிருக்கிறான். அதுக்கும் மேல அவன் செல்வில உயிரையே வைச்சிருக்கான். அவன் அம்மாக்கு கூட செல்விய ரொம்ப பிடிக்கும் என்றான். நீ சொல்றது சரி தான் செல்வா ஆனால் வாழ்க்கை என்று வாறப்ப நாங்க நிறைய விடயம் யோசிக்கணுமில்லையா என்றார் ராஜன்.

ஆமா அங்கிள் நீங்க சொல்றது உண்மை தான் இருந்தாலும் அவன் குணத்தில ரொம்ப நல்லவன். நாம செல்விய கட்டிக் குடுக்கிறதா இருந்தா அவன இன்னும் நல்ல நிலைமைக்கு கொண்டு வரலாம் தானே என்ன சொல்றீங்க என்றான். நீ சொல்றது சரி தானப்பா இத பத்தி நாம முடிவெடுக்க ஏலாது. செல்விட மனசில என்ன இருக்கு அதுக்கும் மேல கமலியோ் எல்லாம் பேசிப்பாக்கணும் என்றார் குமார்.

அவன் நல்ல பையன் தான். நீ சொல்ற போல செல்விய அவனுக்கு கட்டிக் குடுத்தால் சந்தோசமா இருப்பாள் தான். என்ன தேவை என்றால் நமக்கு பக்கத்தில இருக்கிற காணில நம்மட வீடு போல ஒரு வீடு கட்டி அதையே அவனுக்கு சீதனமா குடுத்தால் அவன் செல்வி எல்லாம் நம்ம கூடயே இருப்பாங்க. இது பத்தி முதல் தனேஷோட அபிப்பிராயத்தையும் கேக்கணும். அப்புறமா செல்வியோட கதைக்கணும். அதுக்கும் மேல வீட்டில கதைச்சு முடிவெடுக்கணும் என்றான் குமார்.

நீ சொல்றதும் சரி தான் குமார். பணம் என்ன இன்னிக்கு வரும் நாளைக்கு போய்டும். குணம் தான் எப்பவும் முக்கியம். அவனிட்ட அது ரொம்பவே இருக்கு. நம்ம பொண்ணும் நமக்கு பக்கத்தில இருப்பாள் இத பத்தி நாம கொஞ்சம் யோசிக்கலாம் போல இருக்கு என்றான் ராஜன். ஆமாடா நானும் அத தான் சிந்திக்கிறன். செல்வன் சொல்றதும் சரி தான் என்றான்.

சரி முதல் தனேஷோட பேசிப்பாத்திட்டு அப்புறமா இத பத்தி யோசிப்பம் என்றான் குமார். டாடி தனேஷ் கூட பேச தேவையில்லை. தனேஷ் செல்விய ரொம்பவே நேசிக்கிறான். அது எனக்கு தெரியும். அவன் மனசில இருக்கிற நேசத்தை செல்விக்கு சொல்லாம இருக்கிறான். அதுக்கு முக்கியமான காரணம் அவனோட ஸ்ரேடஸ் தான் என்றான். நீ எப்பிடி உறுதியா சொல்றாய் என்று ராஜன் கேட்க குமாரும் ஆமா உனக்கு எப்பிடி நம்பிக்கையா தெரியும்? தனேஷ் சொன்னான என்றான் குமார்.

இல்ல அவன் சொல்லல ஆனால் நான் தனேஷோட அப்பாவோட சாவு வீட்டுக்கு போய் தங்கினப்ப அவன் டைறி தற்செயலா என் கண்ணில பட்டிச்சு. அத எதேச்சையா எடுத்து வைக்க போனப்ப தான் அவன் எழுதின ஒரு சில விடயம் என்னோடதும் சிவாவோடதும் கண்ணில பட்டிச்சு. அப்போ சிவா தான் பாக்கலாம் என்றான். அப்போ தான் அவன் அதில செல்விய பத்தி ரொம்பவே எழுதி இருந்தான். அவள் மேல அவன் வைச்சிருந்த பாசம் தெரிஞ்சிச்சு அதுக்கும் மேல அவன் மனசில இருக்கிற நேசத்தை யாருக்குமே சொல்லல. அதுக்கு பிரதான காரணம் அவனோட குடும்ப நிலைமை என்றான்.

அப்பிடியா செல்வன் இதையெல்லாம் நீ ஏன் முன்னாடியே சொல்லல என்றார் குமார். இல்ல டாடி அவனும் ஒரு நல்ல நிலைக்கு வரட்டும் என்று பாத்திட்டு இருந்தன். அதுக்கும் மேல நானும் செல்வியும் ஒண்ணா பிறந்தம் எனக்கு மட்டும் நிச்சயதார்த்தும் நடக்கிறதில எனக்கு விருப்பம் இல்லை. நமக்கு பிறந்த நாளில இருந்து என்ன விசேஷம் என்றாலே ஒண்ணா தான் நடக்கும். இப்போ என் வாழ்க்கைல இப்பிடி ஒரு நல்ல காரியம் நடக்கிறப்ப செல்விக்கு இல்லாம இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு டாடி என்றான்.

என்னப்பா சொல்றாய் இத பத்தி நான் கூட யோசிச்சன். இப்போ நிச்சயதார்த்தம் தானே அப்புறமா நல்ல வரண் கிடைக்கேக்க அவளுக்கும் நிச்சயம் பண்ணிட்டு கல்யாணத்தை ஒண்ணா வைச்சுக்கலாம் என்று யோசிச்சன் என்றான். இல்ல டாடி எனக்கு நிச்சயதார்த்தம் கூட ஒண்ணா நடந்தால் சந்தோசமா இருக்கும் என்றான்.

உங்களுக்கு தனேஷ செல்விக்கு கட்டி வைக்கிறதில சம்மதம் எண்டா நிச்சயத்தை கூட ஒண்ணா வைச்சுக்கலாம் டாடி. உங்களுக்கும் மம்மிக்கும் சம்மதம் என்றால் செல்விய நான் பாத்துக்கிறன். அவள நான் சம்மதிக்க வைக்கிறன். அவளுக்கு தனேஷ் மேல ரொம்ப மரியாதை இருக்கு. அவளும் அவனை நல்லாவே புரிஞ்சு வைச்சிருக்கிறாள். பக்குவமா எடுத்து சொன்னால் சம்மதிப்பாள் என்றான் செல்வன்.

எனக்கு நீ சொல்றது சரியா தானப்பா இருக்கு. சரிப்பா இருந்தாலும் நான் எதுக்கும் உன் அம்மாவோட பேசிட்டு சொல்றன். அப்புறமா நீ செல்வி கூட பேசு என்றான் குமார்.

தொடரும்…………..!
பாகம் 59
Last edited by Aruntha on Fri Jun 01, 2012 9:56 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 59

Post by Aruntha » Fri Jun 01, 2012 9:55 pm

வீட்டுக்கு அனைவரும் ஒன்றாக வந்தார்கள். என்ன பிரியா ரமி நீங்களும் இங்கயா சரி கமலி ரொம்ப களைப்பா இருக்கு நம்ம மூணு போருக்கும் குடிக்க ஏதாச்சும் கொண்டு வா என்ற படி சோபாவில் அமர்ந்தான் குமார். டாடி இருங்க நான் முகம் கழுவிட்டு வாறன் என்றான் செல்வன்.

டேய் செல்வா நீ எங்கயோ ரமி செல்விய கூட்டிட்டு வெளில கிளம்பணும் என்றாய் போகலயா என்றார் குமார். என்ன டாடி வெளிலயா எப்ப சொன்னன் என்றான் செல்வன். அது தான்டா நானும் ராஜனும் பேசிட்டு இருந்தப்ப சொன்னாய் அதுக்கிடைல மறந்திட்டியா என்றார். என்னால வர முடியாதுப்பா நான் உன் அம்மா பிரியா ஆக்கள் கூட நிச்சயதார்த்தம் பத்தி கொஞ்சம் பேச வேண்டி இருக்கு என்றார் குமார்.

ஆமா டாடி நான் மறந்தே போயிட்டன். சரி நீங்க வெளில போகாட்டி உங்க காரை குடுங்க என்றான். சரிப்பா எடுத்திட்டு போ என்றார். செல்வி ரமி இரண்டு பேரும் சீக்கிரமா வெளிக்கிடுங்க நாங்க வெளில போய்டு உடன வருவம் என்றான் செல்வன். என்னடா எங்க போகணும் சொல்லு என்றாள் செல்வி. அதுவா வெளில வா சொல்றன் அது போகும் வரைக்கும் சப்றைஸ் என்றான் செல்வன். டேய் சொல்லுடா உன் சப்றைஸ்ம் நீயும் என்றாள் ரமி.

ஏய் நேரமாகுது சீக்கிரம் ரெடி ஆகுங்க போகும் போது காருக்குள்ள வைத்து சொல்றன் என்றான் செல்வன். சரி என்று கூறி செல்வியும் ரமியும் உடை மாத்த சென்றார்கள். அவர்கள் வந்து அமரவும் கமலி தேனீரோடு வரவும் சரியாக இருந்தது. தேனீர் அருந்தி விட்டு மூவரும் வெளியில் செல்ல ஆயத்தமானார்கள். குமார் அதற்கிடையில் தனது அறைக்கு சென்றான்.

செல்வன் ஒரு நிமிசம் மேல வந்திட்டு போடா. என் பாங் காட்ல காசு எடுத்திட்டு வரணும் நான் மறந்திட்டன் என்று கூறி அவனை மேலே அழைத்தான். இதோ வாறன் டாடி என்றபடி மேலே சென்றான். டேய் செல்வா பணம் ஒன்றும் எடுக்க தேவையில்லை உன்னோட பேச தான் கூப்பிட்டன். நான் அம்மாவோட கதைச்சிட்டு அவங்களிட சம்மதத்தையும் வாங்கிட்டு சொல்றன் நீ அப்புறமா செல்வி கூட இத பத்தி பேசு. நாங்க பேசுறப்ப நீங்க வீட்டில இருக்கிறது நல்லது இல்ல அது தான் வெளில போக சொன்னன் என்றார். சரி டாடி நீங்க மம்மி கூட பேசிட்டு போன் பண்ணுங்க நான் அப்புறமா இத பத்தி செல்வி கூட பேசுறன் என்றான்.

டேய் செல்வா என்ன தான் பண்ணுறாய் நேரமாச்சுடா என்றாள் ரமி. வந்திட்டு இருக்கன் என்றபடி மாடிப் படிகளில் இறங்கினான். சரி எல்லாரும் இருங்க நாங்க கிளம்பிறம் என்று கூறி புறப்பட்டார்கள். செல்வா உன்னை ஒண்ணு கேக்கலாமா என்றாள் ரமி. சொல்லு என்ன என்று அவளை கேள்விக் குறியொடு பார்த்தான். இல்லை இப்போ நாம வெளில போறது எதுவும் அலுவலா போல தெரியல. ஏதோ வீட்டில அவங்க பேசுறதுக்காக நம்மள வெளில அனுப்பின போல இருக்கு. அதுக்கு நீயும் சப்போட் போல தெரிது சொல்லுடா என்றாள்.

அம்மா தாயே உனக்கு மட்டும் எப்பிடி இப்பிடிஎல்லாம்தோணுது. லூசாடி நீ டாடி ஏதாச்சும் ரேவதிக்கு கிப்ட் வாங்கி குடுக்க சொன்னார் அது தான் நீங்க இரண்டு வாலும் வந்தால்செலக்ட் பண்ணுவீங்க என்று கேட்டன். அதுக்கிடைல ஆயிரத்தெட்டு கேள்வி என்றான் செல்வன். ஓ அப்பிடியா பொண்டாட்டிக்கு கிப்ட் வாங்க நாம தான் கிடைச்சமா என்றாள் செல்வி. என் செல்ல தங்கையையும் உயிர்த்தோழியையும் விட்டா எனக்கு யாரப்பா இருக்கிறாங்க என்றான் செல்வன்.

டேய் நீ ரொம்ப ஐஸ் வைக்காத அதோட நீ சொல்றத எல்லாம் நம்ப உன் உடன் பிறப்பால மட்டும் தான் முடியும். என்னால முடியாது. இருந்தாலும் இதுக்குள்ள ஏதோ இருக்குது என்றாள் ரமி. உன் சந்தேகத்துக்கெல்லாம் பதில் சொல்ல என்னால முடியாதுப்பா என்ற படி அவளை பார்த்தான் செல்வன். அவன் பார்வை ஆயிரம் அர்த்தங்கள் கூற அத்தோடு மௌனமானாள் ரமி.

என்னப்பா வந்ததும் அவங்கள் வெளில போய்ட்டாங்க. செல்வன் பாவம் ஆபிஸில இருந்து வந்ததும் கிளம்பிட்டான். எதுவா இருந்தாலும் நாளைக்கு பாத்திருக்கலாம் தானே என்று கடிந்தாள் கமலி. கமலி அப்பிடி சொல்லாதீங்க குமார நாங்க சில விசயம் பேசி முடிவெடுக்க வேண்டி இருக்கு. அதுக்கு செல்வி இங்க இருக்கிறது நல்லதில்ல. அது தான் வெளில அனுப்பினம் என்றான் ராஜன்.

அப்பிடி என்னப்பா பிள்ளையளுக்கு தெரியாத விடயம் கதைக்கணும் என்று சற்று பரபரப்பானாள் கமலி. என்னப்பா நீங்களும் சேர்ந்து சொல்றீங்க அப்பிடி என்ன தான் என்று ராஜனை பார்த்து கேட்டாள் பிரியா. ஐயோ நீங்க இரண்டு பேரும் குழம்பிற போல ஒண்ணுமில்ல எல்லாம் நம்ம செல்வி வாழ்க்கைய பத்தி கதைக்க தான் என்றான் குமார். அப்பிடியா செல்வி வாழ்க்கையா என்றபடி அவனை பார்த்தாள் கமலி.

ஆமா செல்வனுக்கு தனக்கு மட்டும் நிச்சயதார்த்தம் பண்ணுறதில இஷ்டம் இல்லை. தானும் செல்வியும் ஒண்ணா பிறந்தம் எதுவா இருந்தாலும் ஒண்ணா நடக்கணும் என்று ஆசைப்படுறான் என்றான் ராஜன். அதுக்கென்ன இப்ப நிச்சயம் தானே அத தனி தனியா வைக்கலாம் அப்புறமா கல்யாணத்தை ஒண்ணா வைச்சிட்டா போச்சு இதில என்ன இருக்கு என்றாள் கமலி.

அதில்ல கமலி சரி நீ நம்ம தனேஷ் பத்தி என்ன நினைக்கிறாய் என்றான் குமார். அவனா ரொம்ப தங்கமான பையன். நல்ல குடும்ப பொறுப்பு இருக்கு அவனுக்கென்ன இப்ப நல்ல வேலையும் இருக்கு என்றாள் கமலி. என்ன குமார் செல்விய பத்தி கதைச்சிட்டு உடன தனேஷ பத்தி கேக்கிறீங்க அப்பிடி என்றால் செல்விக்கு தனேஷ………. என்று இழுத்தாள் பிரியா.

ஆமா இன்னிக்கு இத பத்தி செல்வன் என் கூட கதைச்சான். அப்போ ராஜனும் என் கூட தான் இருந்தான். அவன் தனேஷ் நம்ம செல்விக்கு பொருத்தமானவனா என்று கேட்டான். நம்மட மனசு அறிஞ்ச பையன். அதோட செல்விய கூட நல்லாவே புரிஞ்சு வைச்சிருக்கான் என்றான் குமார். அவன் பண வசதி குறைவு என்றாலும் குணத்தில அவன் ரொம்ப நல்ல பையன் உங்களுக்கு சம்மதம் என்றால் எனக்கென்ன மறுப்பு என்றாள் கமலி.

அதுக்கும் மேல தனேஷ் செல்வி மேல உயிரையே வைச்சிருக்கிறான். அவனோட மனசார அவன் செல்விய நேசிக்கிறான். இது தற்செயலா செல்வனுக்கும் சிவாக்கும் தெரிஞ்சிருக்கு. இருந்தாலும் அவன் அத பத்தி யார் கூடயும் கதைக்கல. அதுக்கு பிரதான காரணம் அவனோட குடும்ப நிலைமை என்றான் ராஜன். நம்மகிட்ட தாராளமா பணம் இருக்கு அவனை நல்ல நிலைமைக்கு ஆளாக்கிட்டா அவனும் நமக்கு சமனா வந்திடுவான் தானே என்றாள் பிரியா.

எனக்கு சிவாவையும் தனேஷையும் ரொம்ப பிடிக்கும் செல்விக்கு யாராச்சும் ஒருத்தன பேசி முடிக்கலாமா என்று உங்களோட கதைக்க தான் யோசிச்சன் ஆனால் தனேஷ் மனசில இப்பிடி ஒரு ஆசை இருக்கிறப்ப இன்னும் நல்லதா போச்சு என்றாள் கமலி. ஆஹா உனக்கு கூட இப்பிடி எல்லாம் சிந்திக்க தோணுதா என்றான் குமார். ஏன் என் பசங்களில எனக்கு அக்கறை இருக்காதா என்றாள் கமலி.

ஹலோ மெடம் அவங்க உனக்கு மட்டுமில்ல குமாருக்கும் தான் பசங்க சொல்றப்ப நம்ம பசங்க என்று சொல்லு என்றாள் பிரியா. அது தானே நல்ல உறைக்கிற மாதிரி சொல்லு பிரியா என்றான் குமார். என்ன பிரியா நீ அதுக்கிடைல கட்சி மாறி அவங்களுக்கு சப்போட் பண்ணுறாய் என்றாள் கமலி. சரி சரி நல்ல விசயம் கதைக்கிறப்ப எதுக்கப்படா சண்டை போடுறீங்க அமைதி அமைதி என்றான் ராஜன்.

சரி நாங்க எல்லாம் முடிவெடுத்தா சரியா செல்வி மனசில என்ன இருக்கென்று தெரிஞ்சுக்காம நாமளே கதைக்கிறம் அவள் மனசையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் தானே என்றாள் பிரியா. ஆமா நமக்கெல்லாம் சம்மதம் என்றால் செல்வன் இப்பவே செல்வி கூட கதைப்பான். தனேஷ் மனசில செல்வி இருக்கிற விடயம் ஏற்கனவே ரம்யாக்கு தெரியும். செல்வனும் சிவாவும் சொல்லிட்டாங்க. இது பத்தி இன்னும் செல்வியோட தான் கதைக்கல.

அப்பிடியா சரி அப்போ இப்பவே நீங்க செல்வனுக்கு போன் போட்டு பேசுங்க என்றாள் கமலி. குமார் செல்வனுக்கு டயல் செய்தான்.

தொடரும்……………!
பாகம் 60
Last edited by Aruntha on Tue Jun 05, 2012 8:45 pm, edited 1 time in total.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”