அழகிய தேவதை - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 42

Post by Aruntha » Sat Apr 21, 2012 6:49 pm

டாடி என்ன கேக்கிறீங்க உங்கள புரிஞ்சுக்கவே முடியல என்றாள். இல்லம்மா உன் மனசு பூரா செல்வன் இருக்கான் என்றது எனக்கு எப்பவோ தெரியும். அதுக்கும் மேல அவங்க குடும்பத்தையும்எ உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றதும் தெரியும். நானும் அவங்க குடும்பத்தை பார்த்த வரைல நீ அங்க போய் சந்தோசமா வாழலாம் என்றார்.

யெஸ் டாடி எனக்கு செல்வன ரொம்ப பிடிக்கும். உங்களோட அதை பத்தி பேசணும் என்று இருந்தன் ஆனால் எப்பிடி ஆரம்பிக்கிறது என்று தான் இதுவரை கதைக்கல. இன்னிக்கு நீங்களே கேட்டிட்டிங்க. அவங்க குடும்பத்தில அவங்க நட்புக்குள்ள வாழணும் என்று எனக்கும் ஆசையா இருக்கு டாடி என்றாள்.

சரியடா நீ இத பத்தி எதுவுமே கவல படாத. நான் முறைப்படி போய் அவங்க வீட்டில சம்பந்தம் பேசுறன். இத பத்தி நீயும் இப்போதைக்கு அவங்க கூட எதுவும் கதைக்காத. ஒரு நல்ல நாளா பாத்து கதைக்கலாம் என்றார்.

ரேவதியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. டாடியை கட்டியணைத்து முத்தமிட்டு விட்டு மாடிப்படிகளில் ஏறி தன் அறைக்குள் அடைக்கலமானாள். கட்டிலில் படுத்தவளிற்கு வானில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. தன்னை யாரோ பல்லக்கில் சுமந்து செல்வது போல உணர்ந்தாள்.

அவளுக்கு அந்த நொடி செல்வனோடு கதைக்க வேண்டும் என தோன்றியது. அவன் போனிற்கு அழைப்பு எடுத்தாள். அவள் கஷ்ட காலம் அவன் போன் எடுக்கவில்லை. ரமி அவனது போனை எடுத்தாள். ஹலோ செல்வன் நான் ரேவதி பேசுறன் என்றாள். மறு முனையில் அது தெரிது நான் ரமி பேசுறன் என்றாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரேவதி வார்த்தைகள் தடுமாறி நின்றாள். என்னம்மா ரேவதி பேச்சையே காணம் செல்வன எதிர்பார்த்து எடுத்தியா நான் போன் எடுத்து சொதப்பிட்டனா என்று கலாய்த்தாள். அப்பிடி இல்ல ரமி நான் நீங்க மூணு பேரும் இல்லாட்டா இன்னிக்கு தனியா என் காரோட மாட்டிட்டு முழிச்சிருப்பன். அது தான் நன்றி சொல்ல எடுத்தன் என்றாள்.

ஓ அப்பிடியா நன்றி சொல்ல எடுத்திங்களோ? ஓகே ஓகே ஆனால் நட்புக்குள்ள இப்பிடி கஷ்டப்பட்டு நன்றி சொல்றது எல்லாம் ரொம்ப ஓவர் மெடம். அதெல்லாம் தேவையில்லை சரி சரி நீங்க யார் கூட போன் பேந எடுத்திங்களோ அவன்கிட்டயே குடுக்கிறன் என்ன மனசுக்குள்ள திட்டுறது தெரிது என்றாள் ரமி.

ஐயோ ரமி அப்பிடி எல்லாம் இல்ல நான் அப்புறம் பேசுறன் என்றாள். இல்ல ரேவதி இரு போன் குடுக்கிறன் என்று கூறி செல்வனிடம் போன் குடுத்தாள். யாரு ரமி போன்ல என்ற செல்வனின் வினாவிற்கு நீ மொட்டை மாடில ரசிச்சியே நிலவு உன் ரசனையை பார்த்து உனக்கு போன் பண்ணிச்சு என்றாள். ஏய் ரேவதியா இங்க கொண்டு வா போனை என்று வாங்கி ஹாய் ரேவதி சொல்லுடா என்றான்.

என்ன ரொம்ப கலாய்க்கிறாங்க. அதென்ன மொட்டை மாடி நிலவு என்றாள் ரேவதி. அதுவா இவங்க இரண்டு பேருக்கும் வேலையில்லை அவ்வளவு தான் என்றான். டேய் நமக்கா வேலையில்லை. நீ ரேவதி போனதில இருந்து போய் நிலவ பாத்து கவிதை சொல்லிட்டு இருந்தது அவளுக்கு எங்கடா தெரிய போது என்று செல்வி கூற ஏய் வாய மூடுடி என்று கடிந்தான்.

சரி சார் நாங்க ஒண்ணும் பண்ணல. நீங்க நிலவு கூட பேசிட்டுவாங்க நாங்க போறம் என்று கூறி செல்ல முயன்றவர்களை ஏய் நாங்க என்ன உங்களுக்கு தெரியாம லவ்வா பண்ண போறம் பேசாம நில்லுங்க என்றான் செல்வன்.

செல்வனின் இந்த வார்த்தைகள் கேட்டு அதிர்ச்சியடைந்தாள் அவனின் வார்த்தைகள் ரேவதியை கவலையில் ஆழ்த்தியது. அப்பிடி என்றால் செல்வனுக்கு என்னை பிடிக்காதா என்று வருந்தினாள். என்ன ரேவதி சைலன்ஸ் ஆகிட்டாய் என்ற செல்வனின் கேள்விக்கு ஒண்ணுமில்ல செல்வா சும்மா தான் பேசலாம் என்று எடுத்தன் என்றாள். ஓ அப்பிடியா எப்பிடி நல்லா இருக்கிறியா? கார் நாளைக்கு கிடைக்குமா என்று கேள்வி கேட்டான். அவள் எல்லாவற்றிற்கும் ஒற்றை வரியில் ஆம் என்று பதில் கூறினாள்.

என்னம்மா ரேவதி கலகலப்பையே காணல. உன் குரலில பயங்கரமா டல் தெரிது. என்னாச்சுடா என்றான். ஒண்ணுமில்ல செல்வா தூக்கம் வருது சும்மா போன் பண்ணிட்டு தூங்கலாமென்று இருந்தன் அது தான் என்றாள். சரிடா நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ. நாங்க நாளைக்கு பேசலாம் என்று கூறி போனை துண்டித்தான் செல்வன்.

டேய் செல்வா இது எத்தின நாளா நடக்குது. தினமும் அவள் உனக்கு போன் பண்ணிட்டு தான் தூங்குவாளோ? இன்னிக்கு தான் எங்ககிட்ட மாட்டினீங்களா என்றாள் செல்வி. ஆமா செல்வி எனக்கும் அது தான் புரியல என்று பக்க பாட்டு பாடினாள் ரமி.

லூசாடி நீங்க இரண்டு பேரும். உங்களுக்கு தெரியாமல் நான் யார் கூடயும் பேசுவனா? அப்பிடி பேசினாலும் அடுத்த நிமிசம் உங்களுக்கு சொல்லிடுவன் தானே அப்புறம் ஏனடி என்னை வதைக்கிறீங்க என்றார். சரி சரி கூல் டியர் கூல் சும்மா வம்புக்கு கேட்டா இப்பிடி டென்ஷன் ஆகிறாய் உன்னை பத்தி தெரியாதா என்றாள் ரமி.

செல்வன் கூறிய வார்த்தைகளால் மனசொடிந்து போய் இருந்தாள் ரேவதி. அப்படி என்றால் செல்வனின் மனசில என் மேல காதல் இருக்காதா? நான்தான் அவன் மேல ஆசைய வளர்த்திட்டு இருக்கனா? அப்பிடி என்றால் அவன் சின்ன வயசில இருந்து பழகிற ரமிய நேசிக்கிறானா? ஒண்ணுமே புரியலயே. எதுக்காக நாம என்ன உங்களுக்கு தெரியாம லவ்வா பண்ண போறம் என்றான்.

அவன் மனசில ஏதாச்சும் நினைச்சாலோ இல்ல ஆசைப்பட்டாலோ உடனயே செல்விகிட்டயோ ரமிகிட்டயோ சொல்லிடுவான். அப்பிடி என் மேல ஆசையிருந்தா சொல்லியிருப்பானே அவங்ககிட்ட. அப்போ அவன் மனசில நான் இல்லயா என்று வருந்தினாள். அப்போ என்னோட பழகினது எல்லாம் வெறும் நட்பா என்று குழம்பினாள்.

சரி எதுக்கும் டாடி போய் முறைப்படி கதைக்கட்டும். எதுவா இருந்தாலும் ஏற்றுக் கொள்ற மனச நான் தான் வளர்க்கணும். அவங்க எல்லாருமே நல்ல நண்பர்கள். அவர்களுக்குள்ள காதல் என்ற பேச்சுக்கு இடமில்ல. அப்பிடி காதல் என்றால் பல வருடம் பழகிய ரமிய அவன் காதலிச்சிருக்கலாமே என்று மனதுக்குள் நினைத்தாள். இவளை அறியாமலே அவள் விழிகளில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடி தலையணையை நனைத்தது. அப்படியே தூங்கி விட்டாள்.

மறுநாள் விடுமுறை நாள் என்பதால் ரமி மற்றும் செல்வி குடும்பத்தவர் எல்லோரும் காலையே அவர்கள் வீட்டு நீச்சல் தடாகத்தில் இருந்தார்கள். கமலி நான் இன்னிக்கு உங்களுக்கும் சேர்த்து சோறும் இரண்டு மூணு பொரியல் வகையும் பண்ணுறன் என்றாள் பிரியா. சரி அப்ப நான் எல்லாருக்கும் சேர்த்து கோழில ஏதாச்சும் கறி பண்ணுறன் அப்போ எல்லாம் ஒண்ணா சாப்பிடலாம் என்றாள் கமலி.

சரிப்பா கொஞ்ச நேரம் எல்லாரும் இருந்து கதைச்சிட்டு சமையல ஆரம்பிக்கலாம் என்றனர். அவர்கள் வேலை, ஊர் புதினம், நட்பு, வாழ்க்கை, சினிமா இப்பிடி எல்லா விடயங்கள் தொடர்பாகவும் கலந்து கதைத்தார்கள். அந்த நேரத்தில் செல்வன் தனேஷிற்கு கம்பனியில் வேலை போட்டு குடுக்கலாமா என்று தந்தையை கேட்டான்.

அதற்கு அவர் நானும் இதை பத்தி கேக்கலாம் என்று தான் இருந்தன். உங்கள் எல்லாருக்கும் இன்னும் சில மாதத்தில காலேஜ் முடிது. எல்லாருமே வந்து ஒரு சின்ன புறஜக்ட் ஒண்ணு செய்தா என்ன உங்களுக்கும் முன் அனுபவமா இருக்கும் நீங்க எல்லாரும் இளம் வயதுகள். எங்கள விட கொஞ்சம் துடியாட்டம் கூட. வித்தியாசமான சிந்தனை ஏதாச்சும் இருக்கும் என்றார்.

நானும் தனேஷ் பத்தி சிந்திச்சன். அவன நல்லாக்க வேண்டியது நம்ம கடமை. அவனுக்கு தகப்பனுக்கு தகப்பனா நாங்க தான் இருக்கணும் என்றார். அவனுக்கு நல்ல தொழில சம்பளம் என்று வந்து தானே சொந்த காலில நிக்க ஆரம்பிச்சிட்டா பிரச்சினை இல்லை என்றார். ஆமா குமார் நீ சொல்றதும் சரி தான்டா நாம தான் அவனுக்கு இனி எல்லாஆம எந்த குறையும் விட கூடாது என்றான் ராஜன்.

சரிப்பா செல்வா நீ இத பத்தி தனேஷ் கிட்டயும் சிவா கிட்டயும் பேசு. செல்வி, ரமி உங்களுக்கு நம்ம கம்பனில வேக் பாக்கிறதில இஷ்டம் தானே என்றார். என்ன இது கேள்வி நமக்கு சந்தோசம் தான் நம்மள நம்பி வேலை தர நீங்களே தயாரா இருக்கிறப்ப நாங்க தயங்குவமா என்றார்கள்.

சரி நீங்களும் வேலைக்கு போய் உலகத்தை கொஞ்சம் அறிஞ்சா தான் நாளைக்கு வாறவன சமாளிக்கலாம். வாழ்க்கைய எப்பிடி வாழுறது என்று தெரியும். அதுக்கு பல விதமான மனிதர்களோட பழகினால் தான் நல்லது என்றாள் கமலி. ஏன் ஆன்டி தெரியாதவன கட்டணும் நல்லா பழகின புரிஞ்ச ஒருத்தன கட்டினால் எந்த பிரச்சினையும் இல்லையே என்றாள் ரமி.

நீ சொல்றதும் சரி தான் ரமி. தெரிஞ்ச புரிஞ்ச ஒருத்தன வாழ்க்கை துணையா அடைஞ்சா அதில எவ்வளவு மகிழ்ச்சி இருக்கு. ஒவ்வொரு நொடியும் அவங்கட மனச பாத்து நடப்பாங்க. வாழ்க்கையும் ரொம்ப சந்தோசமா போகும் என்றாள் பிரியா.

என்னப்பா பிள்ளைங்க இன்னும் காலேஜே முடிக்கல அதுக்கிடைல கல்யாணத்துக்கு போய்ட்டிங்க அம்மாக்களுக்கு பொண்ணுங்கள வீட்ட விட்டு கலைக்கிறதே எண்ணம் என்றான் குமார். ஆமா இவங்கட கதைய கேட்டா பழகி புரிஞ்சவங்கள கட்டினால் தான் சந்தோசம் என்று சொல்றாங்க அப்ப நாங்க இவங்கள சந்தோசமா வைச்சிருக்கலயா என்றான் ராஜன்.

என்ன நாங்க ஒரு பேச்சுக்கு சொலல எங்க பக்கமே கோல திருப்பிட்டிங்களா? ஆள விடுங்கடா சாமி நீங்க இருந்து அடி படுங்க நாம் சமையல் அலுவல பாத்திட்டு அப்புறமா வந்து சண்டை போடுறம் என்று நழுவினார்கள் கமலியும் பிரியாவும்.

டாடி நீங்க பேசிட்டு இருங்க நாங்க மாடிக்கு போய்டு வாறம் என்று எழுந்தார்கள் ரமி, சிவா, செல்வி மூவரும். சரிப்பா என்று கூறி அனுப்பிய குமார் ராஜனை பார்த்து நாமளும் எத்தின நாளைக்கு தான் நாங்களும் நண்பர்களா இருக்கிறது நாம இரண்டு குடும்பமும் உறவாகினால் என்ன என்றார். என்னடா சொல்றாய் என்று குமாரை ஆச்சரியமாக பார்த்தான் ராஜன்.

உறவுகள் தொடரும்………………….!
பாகம் 43
Last edited by Aruntha on Sun Apr 22, 2012 9:19 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 43

Post by Aruntha » Sun Apr 22, 2012 9:17 pm

அது இல்லடா ராஜன் நமக்கும் பையன் பொண்ணு இருக்கு நாம அவங்கள கல்யாணம் பண்ணி வைச்சு உறவுக்காரங்களானால் என்ன என்றான். ஆமா நீ சொல்றதும் சரி தான். இருந்தாலும் நம்ம பசங்க மனசில என்ன இருக்கென்று யாருக்கு தெரியும். சின்ன வயசில இருந்து சகோதரங்கள் போல வளர்ந்து வாறாங்க நல்ல நண்பர்களாக இருக்கிறாங்க நாம திருமணம் என்ற பேச்சை எடுத்து அவங்க உறவ கொச்ச படுத்த கூடாது. எதுக்கும் நாங்க கமலி, பிரியா கூட கதைச்சு பாப்பம் என்றான் ராஜன்.

ஒரே வீடா பழகிட்டம். என் பொண்ணு உன் வீட்டில வாழ வந்தா எனக்கும் சந்தோசம் தான். நமக்குள்ள உன் பசங்க என் பசங்க என்ற வேறுபாடே இல்ல. அவங்களுக்கு இரண்டு வீடும் ஒரே போல தான் பாக்கலாம் என்றான்.

சமையல் முடித்து விட்டு அங்கு வந்த கமலியும் பிரியாவும் என்ன ரொம்ப பெரிய டிஸ்கஷன் போகுது போல நாங்களும் வரலாமா என்றார்கள். ஆமா உங்கள தான் பாத்திட்டு இருக்கம் என்றான் குமார். எங்கள பாத்திட்டு இருக்கிறீங்களா? சரி சரி சீக்கிரம் சொல்லுங்க என்ன விசயம் என்றாள் கமலி.

அதெல்லாம் பெருசா ஒண்ணுமில்ல கல்யாண விசயம் தான் என்றான் ராஜன். என்ன கல்யாணமா? பொண்ணு பாத்திட்டிங்களா? எப்ப கல்யாணம்? அப்பாடா சீக்கிரம் நாள சொல்லுங்க எனக்கு ஒரு தொல்லை தீர்ந்திச்சு என்றாள் பிரியா.

என்னப்பா நீங்க பொண்ணு பாக்கலயா? ராஜன் மட்டும் தான் பாத்திருக்காரா? சீக்கிரம் நீங்களும் பாத்தாஒரே மேடைல வச்சு பெருசா கல்யாணத்தை முடிக்கலாம் என்றாள் கமலி.

அடிப் பாவிங்களா எப்படா எங்கள விரட்டுறது என்று குறியா இருக்கிறீங்களா என்று அவர்களை செல்லமாக கோபித்தார்கள். சரி சரி நீங்க இரண்டு பேரும் சைற் அடிக்கிற தெல்லாம் நமக்கு தெரியாது என்று நினைச்சிங்களா? சரி சரி பிழைச்சு போங்கஎன்றார்கள் கமலியும் பிரியாவும்.

டேய் மச்சிசீக்கிரம் விடயத்தை சொல்லு இல்லாட்டி இதிலயே நம்மளுக்கு பொண்ணு பாத்து கல்யாணமும்பண்ணி வச்சிடுவாங்க என்றான் ராஜன்.

அது ஒண்ணுமில்ல சும்மா கதைச்சிட்டு இருந்தம். எத்தின நாளைக்கு தான் நாம இரண்டு குடும்பமும் நண்பர்களா இருக்கிறது உறவாகினால் என்ன என்று? அட ஆமா இத பத்தி நாங்க கூட கதைச்சிருந்தம் நீங்களும் சிந்திச்சீங்களா? நம்ம செல்வனுக்கும் ரமிக்கும் சம்பந்தம் பண்ணினா என்ன என்றாள் கமலி? ஆமா எனக்கும் அதில விருப்பம் இருக்கு நம்ம ரமி உங்க வீடு என்று வித்தியாசம் நமக்குள்ள இருந்ததில்ல. நம்ம பொண்ணு நம்ம வீட்டிலயே வாழுறத பாக்கலாம் என்றாள் பிரியா.

இது பத்திநாங்களே உங்க கூட பேசலாம் என்று இருந்தம் ஆனால் நீங்களே ஆரம்பிச்சிட்டீங்க என்றாள் கமலி. இருந்தாலும் பசங்க மனசில என்ன இருக்கோ தெரியல. நமக்கு சேர்ந்து வாழ பிடிக்கல நாம எல்லாம் சகோதரங்கள் போல அப்பிடி ஏதாச்சும் சொல்லிட்டா வம்பாகிடும் என்றாள் பிரியா.

சரி பெத்தவங்க நாம ஒண்ணா சிந்திக்கிறம். சந்தர்ப்பம் வரும் போது அவங்க மனச பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறமா கதைக்கலாம். இப்ப இதை பத்தி எதுவும் காட்டிக்க வேணாம் என்றார்கள். சரி என்றுகூறி மீண்டும் அவர்கள் பேச்சு தொடர்ந்தது.

ஏய் ரமி போன் றிங் பண்ணுது யார் என்று பார் என்றாள் செல்வி. போனை எடுத்தவள் ஹலோ என்றாள். மறுமுனையில் ரேவதியின் தந்தை. ஹலோ அங்கிள் நான் ரம்யா பேசுறன் சொல்லுங்க என்றாள். குமார் இருக்காராஅவரோட கொஞ்சம் பேசணும் என்றார். இருங்க அங்கிள் நான் அங்கிள் கிட்ட போன் குடுக்கிறன் என்று கூறியவள் நீச்சல் தடாகத்தை நோக்கி விரைந்தாள்.

அங்கிள் ரேவதி டாடி போன்ல இருக்கார் உங்க கூட பேசணுமாம் என்றாள். போனை வாங்கிய குமார் சொல்லுங்க டாக்டர் என்றான். என்ன குமார் டாக்டர் என்றெல்லாம் கூப்பிட்டு நாம எல்லாம் நல்ல நண்பர்கள் ஆகிட்டம் நரேஷ் என்றே கூப்பிடுங்க என்றார். சரி நரேஷ் என்ன திடீரென்று போன் சொல்லுங்க என்றான்.

உங்களோட சில விசயம் கதைக்கணும் இன்னிக்கு வீட்டுக்கு வந்தால் கதைக்கலாமா என்றார். அதுக்கென்ன இன்னிக்கு நாம எல்லாரும் ஒண்ணா சந்தோசமா கதைச்சிட்டு இருக்கம். நீங்களும் ரேவதியும் வாங்க கதைச்சிட்டு சாப்பிட்டு இரவு வீட்டுக்கு போகலாம் என்றான் குமார். சரி குமார் நான் இன்னும் 1 மணி நேரத்தில வாறன் என்று கூறி போனை துண்டித்தார்.

என்ன டாடி யாரு வாறாங்க என்றபடி வந்தான் செல்வன். டாக்டர் நரேஷூம் ரேவதியும் வாறாங்களாம். ஏதோ எங்க கூட முக்கியமான விசயம் கதைக்கணுமாம் என்றார்.

என்னப்பா அவங்க எங்க கூட என்ன கதைக்கணும் என்று கேட்டாள் கமலி. யாருக்கு தெரியும் கதைக்கணுமாம் என்றார் நான் வர சொல்லி கூற இன்னும் 1 மணி நேரத்தில வாறன் எண்டார். அப்பிடியே சாப்பிட்டு இரவுக்கு போகலாம் என்று சொன்னான் என்றார். ஓஅப்பிடியா சரி வரட்டும் நம்மட நட்பு வட்டத்தில ஒருத்தங்க அதிகரிக்கிறாங்க என்றார் ராஜன்.

ரேவதி வாறாளா அப்ப நம்மட பொழுது நல்லா போகும் என்று மகிழ்ந்தாள் ரம்யா. ஆமா இன்னிக்கு சிவாவும் தனேஷூம் இல்லை என்று கவலையா இருந்தம் ரேவதி வாறமால கொஞ்சம் ஓகே என்றாள் செல்வி. சரி அப்ப எல்லாரும் சேர்ந்து நீச்சலடிக்கலாம் என்றான் செல்வன்.

ஏய் செல்வி ரேவதிக்கு போன் பண்ணி சொல்லு தடாகத்தில குளிக்கிறதுக்கு ஏத்த போல உடுப்பு கொண்டு வர சொல்லி என்றான் செல்வன். ஓகேடா சொல்லிட்டா போச்சு என்று போனை எடுத்தாள் செல்வி.

ஹலோ ரேவதி என்ற செல்வியின் குரலிற்கு சொல்லு செல்வி என்றாள் ரேவதி. நீ வீட்டுக்கு வரும் போது நீச்சலடிச்சு மாத்த உடுப்பு கொண்டு வா என்றாள். சரிடி நான் எல்லாம் கொண்டு வாறன் என்று கூறியனாள். அதற்கிடையில் செல்வன் போனை பறித்து என்னடி திடீரென்று விசிற் ஏதாச்சும் விசேசமா என்றான்.

அதெல்லாம் என்னால சொல்ல முடியாதுப்பா அப்பா வாறார் தானே அப்ப பேசிக்கலாம் என்றாள். என்னடி ரொம்பவே வெக்கப்படுறாய் சொல்லு என்ன என்றான். சீ போடா அரை மணி நேரம் வெயிட் பண்ணு வந்து சொல்றம் என்று கூறி போனை துண்டித்தாள்.

என்னடா போன் பேசலயா என்ற ரமியின் கேள்விக்கு இல்லடி ஏதோ சொல்ல வந்தாள் என்ன என்று கேட்க சீ போடா என்று சொல்லி வெக்கப்பட்டு போன் கட் பண்ணிட்டாள் என்றான். என்ன ரேவதி அப்பிடி சொன்னாளா? அவள் அப்பிடியெல்லாம் கதைக்க மாட்டாளே என்றாள் செல்வி. ஆமாடி அது தான் நானும் யோசிச்சிட்டு இருக்கன் என்றான். சரி விடு இன்னும் அரை மணி நேரத்தில வந்திடுவாங்க தானே அப்ப கேட்டு தெரிஞ்சுக்கலாம் என்றான்.

மறுபடி அவர்கள் குடும்ப கலாட்டா ஆரம்பமானது. ஆன்டி ரொம்ப தாகமா இருக்கு பசிக்குது என்ன சாப்பிட இருக்கு என்றாள் ரமி. ஃபிரிஜ் ல யூஸ் இருக்கு போய் எல்லாருக்கும் எடுத்திட்டு வாம்மா என்றாள் கமலி. அப்பிடியே மேசைல செய்த கட்லட் ம் இருக்கு எடுத்திட்டு வாங்க சாப்பிட என்றாள். செல்வி நீயும் வா என அவளையும் இழுத்துக் கொண்டு சென்றாள் ரமி.

செல்வியும் ரமியும் யூஸ் எடுத்து வர ரேவதியும் நரேஷ்ம் வந்தார்கள். வாங்க நரேஷ் எல்லாருமே வெளில இருக்கிறம் நீங்களும் எங்களோட இதில இருங்க என்றான் குமார். எல்லாரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். என்னப்பா எல்லாரும் இதில இருக்கிறீங்க இப்பிடி புல் தரையில உட்காருறதிலயும் ஒரு சுகம் இருக்கு என்று கூறி அவர்களுடன் புட் தரையில் அமர்ந்தார் நரேஷ்.

வா ரேவதி எப்பிடி இருக்காய்? என்று அவளின் கையை பிடித்தபடி அருகில் அமர்ந்தாள் செல்வி. என்ன மெடம் இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கிறீங்க முகத்தில கூட சந்தோசம் களை கட்டி இருக்கு என்று சீண்டினாள் ரமி. ஆமா ரேவதி நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்காய் என்றான் செல்வன்.

என்னப்பா எல்லாரும் ரொம்ப தான் ரேவதிய கலாய்க்கிறீங்க. அவளுக்கு உங்க கூட இருக்கிறதிலயே ஒரு தனி சந்தோசம் இருக்கு என்று சிரித்தார் நரேஷ். அதுக்கென்ன அங்கிள் ரேவதிய எங்க கூட விட்டிட்டு போங்க அவள் ரொம்ப சந்தோசமா இருப்பாள் என்றாள் செல்வி.

அப்பிடியா நாங்க நினைச்சதையே நீயும் சொல்றாயம்மா. ஆமா அத பத்தி தான் நானும் கதைக்க வந்தன் என்றார் நரேஷ். எதுவுமே புரியாமல் அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தொடரும்………!
பாகம் 44
Last edited by Aruntha on Thu Apr 26, 2012 4:07 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 44

Post by Aruntha » Thu Apr 26, 2012 4:06 pm

என்ன நரேஷ் சொல்ல வாறீங்க ஒண்ணுமே புரியல என்றார் குமார். அதுவா நான் கேக்கிறது தப்பா சரியா எனக்கு தெரியல ஆனால் என் மனசில பட்டத கேக்கிறன். தப்பா நினைக்காதீங்க என்றார். இதென்ன நட்புக்குள்ள தப்பு ரைட் என்று கதைச்சிட்டு சொல்லுங்க என்றான் குமார்.

ரேவதி உங்க எல்லார் கூடயும் பழக ஆரம்பிச்சதில இருந்து தான் ரொம்பவே சந்தோசமா இருக்கிறாள். எப்பவுமே உங்க குடும்பத்தை பத்தி தான் பேசுவாள். எனக்கும் உங்க குடும்பத்தை ரொம்ப பிடிச்சு போய்ட்டு. அது தான் என் மனசில ஒரு சின்ன ஆசை நாம காலம் பூரா நண்பர்களா இருக்காம ஒரே குடும்பம் ஆகினால் என்ன? என்று கேள்விக் குறியாய் முடித்தார்.

குமார் என்ன சொல்வதென தெரியாது தடுமாற்றமாய் கமலியை பார்க்க அவள் பிரியாவையும் ராஜனையும் பார்த்தாள். அவர்கள் தம் இருவர் குடும்பமும் சம்பந்தம் வைப்பதை பத்தி பேசி கொண்டிருந்த விடயத்திற்கு முடிவு கூட எடுக்கவில்லை நரேஷ் இப்பிடி கேட்டதும் என்ன சொல்வதென தெரியவில்லை. சில நொடி மௌனம் நிலவியது.

என்ன நான் ஏதாச்சும் தப்பா கேட்டிட்டனா? ஏதோ என் மனசில பட்டத கேட்டன் தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க என்றார் நரேஷ். அப்பிடி இல்ல நீங்க திடீரென்று கேட்க என்ன சொல்வது என்று தெரியல என்றார் குமார். இதில நாம முடிவெடுக்க என்ன இருக்கு கடவுள் யாருக்கு யார் என்று எழுதி வைத்திருக்கிறாரோ அது தானே நடக்கும் என்றார் ராஜன்.

குமார் மற்றும் கமலியின் தர்ம சங்கட நிலையை புரிந்த பிரியா நாம பேசி என்ன பண்ணுறது பசங்க மனசில என்ன இருக்கென்டது தான் முக்கியம் அவங்களுக்கு என்ன இஷ்டமோ அதை தானே நாம பண்ணணும் என்றாள். அவளின் வார்த்தைகளால் ஆறுதலடைந்த கமலி நீ சொல்றதும் சரி பிரியா இதில முடிவெடுக்க போறது நாம இல்ல. பசங்க தான். நாம மனசில ஆயிரம் கற்பனைகளை வளர்க்கலாம் வாழ போறவங்க அவங்க அவங்க கிட்ட தானே கேக்கணும் என்றாள்.

அவர்கள் ஐவரிடமும் மறுபடியும் அமைதி நிலவியது. அந்த அமைதியை குலைக்க யாருமே விரம்பவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

சற்று தொலைவிலே பேசிக் கொண்டிருந்தார்கள் செல்வன் செல்வி ரமி மற்றும் ரேவதி. அவர்களுக்கு இங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாது இருந்தது. ஆனால் என்ன நடக்க போதோ என்று அலைபாயும் மனதோடு இருந்தாள் ரேவதி.

ஏய் ரேவதி நான் உன்னை வந்ததில இருந்து பாக்கிறன் நீ நல்லாவே இல்ல ஏதோ குழப்பத்தில இருக்கிறாய் என்றான் செல்வன். அப்பிடி ஒண்ணுமில்ல செல்வா என்று மறுபக்கம் பார்த்த படி பதில் கூறினாள் ரேவதி. சரி நீ சொல்றத நான் நம்புறன் அத என் முகத்தை பார்த்து சொல்லு எதுவுமே இல்லை என்று என்றான். ஆனால் அவளால் அது முடியவில்லை. மனதுக்கு பிடித்தவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்த்து பொய் சொல்வதென்பது முடியாத காரியம் ஆக இருந்தது.

அவள் பதில் எதுவுமே கூறாமல் கண்களை தாழ்த்தி ஒண்ணுமில்ல என்று சொல்றன் அப்புறம் என்ன? என்னில நம்பிக்கை இல்லையா என்றாள். இல்ல நான் நம்ப மாட்டன் நீ ஏதோ குழப்பத்தில இருக்காய் என்றான் செல்வன். ஆமா ரேவதி நீ இன்னிக்கு சகஜமாவே இல்ல ஏதாச்சும் பிரச்சினையா என்றாள் செல்வியும். ஏய் டாடி கூட ஏதாச்சும் பிரச்சினையா? அவர் ஏதாச்சும் திட்டிட்டாரா என்றாள் ரமி.

அவர்களின் பாசமான பேச்சு, அக்கறை என்பவற்றை பார்க்க அவளால் பொய் கூறவும் முடியவில்லை. இருந்தும் தன் தந்தை பேச வந்த விடயத்தை அவர்களிடம் நேரடியாக சொல்லுமளவிற்கு அவளிற்கும் மனதில் துணிவில்லாம இருந்தது. ஒண்ணுமில்ல நாங்க ஏன் தனியா இதில இருப்பான் வாங்களன் உங்க மம்மி டாடி கூட போய் இருக்கலாம் என கதையை மாற்றினாள்.

என்ன நம்மகி்ட்ட இருந்து தப்பிக்க பாக்கிறியா? சரி வா போகலாம் என்று கூறி அனைவரும் எழுந்து சென்றார்கள். அங்கு நிலவிய அமைதியை பார்த்து செல்வன், செல்வி, ரமி குழப்பமடைந்தார்கள். என்ன எல்லாருமே சைலன்சா இருக்கிறீங்க. ஏதாச்சும் மௌன பிரார்த்தனை நடத்துறீங்களா என்றான் செல்வன்.

அந்த அமைதியை அவன் குரல் கலைத்தாலும் அங்கு யாராலுமே எதுவும் பேச முடியவில்லை. என்ன ரேவதி ஒரு மாதிரி இருந்தாள் அவள என்ன என்று கேட்க ஒண்ணுமில்ல என்றாள். இப்ப இங்க நீங்க எல்லாருமே அப்பிடி தான் இருக்கிறீங்க என்னாச்சு என்றாள் செல்வி. ஏய் ரேவதி சொல்லு நீயும் டல் ஆக இருக்காய் உன் டாடியும் டல் ஆக இருக்கார் ஏதாச்சும் பிரச்சினையா என்றாள் ரமி.

இல்ல அது வந்து என்று தடுமாற்றமாய் பேசியவள் ஓடிச் சென்று தன் டாடியின் தோளோடு சாய்ந்தாள். அவளின் பார்வை செல்வனை நோக்கி நிமிர்ந்தது. கண்கள் லேசாக கலங்கியது. அனைவருமே அதிர்ந்தார்கள். ஆனால் அவர்களிடமிருந்த மௌனம் மட்டும் கலையவில்லை.

அவளின் கலங்கிய விழிகளை பார்த்த செல்வன் மெதுவாக அவளருகில் சென்றான். அவளை மெதுவாக தன் தோளோடு அணைத்தான். அவள் விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்த வண்ணம் என்னாச்சும்மா ரேவதி ஏதாச்சும் பிரச்சினையா? மனசு திறந்து கதைச்சா தானே தெரியும். இப்பிடி எல்லாரும் மௌனமாக இருந்தால் என்ன என்று தான் நாம யோசிக்கிறது என்றான்.

அவள் அவன் நெஞ்சில் தலை புதைத்து அழ ஆரம்பித்தாள். என்னம்மா ரேவதி இப்ப எதுக்கு அழுறாய் என்று அவளை தன் பக்கம் திருப்பினாள் ரமி. ரேவதி செல்வனை பார்த்து நீ என் வாழ்க்கை பூரா என் கூட இருப்பாயா? என்றாள். அவளின் கேள்வி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. எல்லார் பார்வையும் செல்வனையும் ரேவதியையுமே நோக்கியது.

என்ன இது நாம எப்பவும் உன் கூட இருப்பம் இதில உனக்கு என்ன சந்தேகம் உனக்கென்ன பைத்தியமா என்றான் செல்வன். என்னாச்சு ரேவதி ஏன் இப்பிடி திடீரென்டு எமோஷனலா இருக்காய் நாம ஏன்டி உன்ன விட்டு போக போறம் என்றாள் செல்வி. ரேவதி சும்மா உன் மனச போட்டு குழப்பாத நாம எப்பவும் உன் கூட தான் இருப்பம் என்றாள் ரமி.

செல்வன் நீங்க ரேவதிக்கு சொல்ற ஆறுதல் வேற ரேவதிட மனசில இருக்கிற ஏக்கம் வேற என்றார் குமார். டாடி என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல என்றான் செல்வன். நீங்க நாலு பேரும் இப்பிடி இருங்க என்ன நடந்திச்சு எதுக்கு நமக்குள்ள இவ்வளவு அமைதி நிலவிச்சு என்று சொல்றன் என்றார்.

கலங்கிய விழிகளுடனும் ஏக்கமான பார்வையுடனும் நின்ற ரேவதியை தன் கைகளால் அணைத்த படி அமர்ந்தான் செல்வன். அவள் கைகளை மெல்ல பிடித்து உணர்வு பூர்வமாக அரவணைத்து ஆறுதலை பகிர்ந்தபடி இருந்தாள் ரமி.

ரேவதி டாடி ஏன் இன்னிக்கு எங்கள சந்திக்கணும் என்று வந்தார் தெரியுமா என்றார். ஏன் என்ற கேள்விக் குறியோடு தந்தையை பார்த்தான் செல்வன். ரேவதிக்கு நம்ம வீடு ரொம்ப பிடிச்சிருக்காம். அவள் இந்த வீட்டில வந்து வாழணும் என்று அவங்க ஆசைபடுறாங்க என்றார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத செல்வனின் கைகள் அவனை அறியாமலே அவளை அணைத்திருந்த பிடியில் இருந்து விலகியது. அவனது சடுதியான விலகலை எதிர்பார்க்காத ரேவதி தடுமாற்றத்தோடு அவனை நிமிர்ந்து நோக்கினாள். இவற்றையெல்லாம் ரமி அவதானிக்க தவறவில்லை.

நீண்ட மௌனம் நிலவியது. ரமி உடனடியாக அந்த மௌனத்தை கலைக்க எண்ணி என்ன அங்கிள் செல்வனுக்கு ரேவதிய ரொம்ப பிடிக்கும் அவன் அவளோட வாழ்க்கைல வந்தா அவன் ரொம்பவே சந்தோசமா இருப்பான் என்றாள். என்ன செல்வி நான் சொல்றது சரி தானே என்று தனக்கு துணைக்கு செல்வியையும் இழுத்தாள். ஆமா டாடி இவனுக்கு ரேவதிய ரொம்ப பிடிக்கும் நம்மகிட்ட கூட அவள விட்டுக்குடுத்து கதைக்க மாட்டான் என்றாள் செல்வி.

ஏய் ரமி எனக்கு உன்னையும் தான் பிடிக்கும். உன்னை கூட நான் யார் கிட்டயும் விட்டுக்குடுத்து கதைக்க மாட்டன் நீ என்ன இப்பிடி சொல்றாய் அதுக்கு செல்வியையும் துணைக்கு இழுத்து கொண்டு என்றான். டாடி எனக்கு ரேவதிய ரொம்ப பிடிக்கும். அவளோட குழந்தை தனம், புரிந்துணர்வு, மனசில எதையும் வச்சிருக்காம பேசுற தைரியம் எல்லாமே பிடிக்கும். ஆனால்…….. என்று ஏதோ பேச எடுத்தவனை அப்புறம் என்ன இது தானே வாழ்க்கைக்கு தேவை என்றாள் பிரியா.

மௌனம் தொடரும்………………….!
பாகம் 45
Last edited by Aruntha on Fri May 04, 2012 8:58 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 45

Post by Aruntha » Fri May 04, 2012 8:57 pm

பிரியாவின் வார்த்தைகள் மனதிற்கு ஆறுதல் அளிக்க ரேவதியின் பாசத்தையும் குழந்தை தனங்களையும் பிடித்த கமலி குமாரை நோக்கி பார்வையை நிமிர்த்தினாள். அவன் புன்னகையால் சம்மதத்தை தெரிவிக்க செல்வனுக்கு சம்மதம் என்றால் நமக்கு சம்மதம் என்றாள் கமலி. இந்த வார்த்தைகளை சற்றும் எதிர்பார்க்காத செல்வன் தன் மனதின் அத்தனை மகிழ்ச்சியையும் ஒன்றாக்கி ஓடிச் சென்று கமலியை கட்டியணைத்து முத்தமிட்டான்.

செல்வா இந்த முத்தம் அம்மாக்கு வேணாம். அங்க ஒரு ஜீவன் உனக்காக துடித்து கொண்டிருக்கு போய் அவளுக்கு குடு என்றார் குமார். போங்கப்பா என்று கூறி தாயின் மடியில் தலை புதைத்தான். டேய் செல்வா நீ இப்பிடி பொண்ணு போல வெட்கப்படுறது நம்மட ஆண் சமூகத்துக்கே அவமானமடா எழுந்திரு என்றார் ராஜன். என்ன அங்கிள் எல்லாருமே சேர்ந்து கலாய்க்கிறீங்களா என்றான் செல்வன்.

இவர்களின் இந்த குறும்புகளை ரசித்த வண்ணம் மனம் முழுவதும் பூரிப்பில் நிறைய செல்வனை பார்த்த படி நின்றாள் ரேவதி. அவர்களின் அன்பான குடும்பத்தில் தானும் சேர்ந்து வாழ போவதை எண்ணி மகிழ்ந்தாள். செல்வன் தன் தாயை கட்டியணைத்து முத்தமிட்டதிலேயே ரேவதி மேல் எவ்வளவு காதல் வைத்திருந்தான் என்பது அனைவருக்கும் புரிந்தது.

சரி செல்வா ரொம்ப வெட்கப்படாத போய் ரேவதிய என்ன என்று கேள் என்றாள் செல்வி. சைலன்ஸ் ப்ளீஸ் என்று அனைவரையும் அமைதியாக்கினாள் ரமி. சென்று ரேவதி கைகளை பற்றிய படி ”ரோஜா பூ மாலையிலே ஒரு முல்லை பூ சேர்கிறதே…. இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புறா சேர்ந்ததே” என்று பாடல் பாடிய படி அவளை செல்வன் அருகில் அழைத்து வந்தாள்.

ரேவதி நாணத்தில் தலையை குனிந்த படி நின்றாள். அனைவரும் கை தட்டி ரம்யாவிற்கு சப்போட் பண்ணினார்கள். செல்வி இரு நானும் வாறன் ரமி என்று சொல்லி ரேவதியின் கையை பிடித்த வண்ணம் ”கலகலக்குது கலகலக்குது கொலுசுச் சத்தம் கலகலக்குது எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்து விட்டாள் பாத்துக்கோ எங்கண்ணன் தோள் மேலே பூமாலை” என்று பாட அடி நிறுத்துங்கப்பா என்ன எல்லாரும் சேர்ந்து என்னோட ரேவதிய கலாய்க்கிறீங்க காணும் வாம்மா ரேவதி என்று அவள் கைகளை பற்றினான். அங்கு நிலவிய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாதிருந்தது.

கமலி ரேவதியியை அழைத்து அவள் அன்போடு அணைத்து முத்தமிட்டாள். உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு நாம எல்லாரும் எப்பவும் ஒரே குடும்பமா இருக்கணும். நாங்க எல்லாருமே ஆசைப்பட்டது நம்ம நட்பை புரிந்து அது ஆயுளுக்கும் குலைந்திடாம கொண்டு போற பொண்ணு தான் எங்க குடும்பத்து வரணும் என்று. நாம ஆசைப்பட்டது வீண் போகல என்றாள்.

ஆமா ரேவதி நீ வாழ போறது கமலி வீடா இருந்தாலும் எங்க வீட்டுக்கும் நீ பொண்ணு தான். உனக்கு ஒரு மாமியார் இல்ல இரண்டு மாமியார் பத்திரமா நடந்துக்கோ என்று அவளை நக்கலாக சீண்டினாள் பிரியா. ஐயோ ஆன்டி என்ன ஆளாளுக்கு இப்பிடி சொல்றீங்க நான் வசமா மாட்டிக்கிட்டனா என்றாள் ரேவதி. ஏய் ரேவதி மாமியார் என்ன மாமியார் உனக்கு இரண்டு நாத்தனார் இருக்கம் பாத்து நடந்துக்கோ இல்ல தொலைச்சிடுவம் என்றாள் ரமி.

என்னடி இந்த நிமிசம் மட்டும் ரேவதி என்று பாசமா இருந்திங்க இப்ப இப்பிடி சொல்றீங்க கதை சரியா என்றாள் ரேவதி. ஏய் மரியாதை நாத்தனாரை பாத்து மரியாதை இல்லாம என்னடி என்று சொல்றியா உன்னை என்ன பண்ணுவம் தெரியுமா என்றாள் செல்வி.

ரேவதி பாத்தியா இவ்வளவு நாளும் உன்னை எவ்வளவு பாசமா பாத்தாங்க இப்ப அண்ணி ஆக போற மரியாதை கூட இல்லாம இப்பிடி சொல்றாங்க நீ அவங்கள ஒரு கை பாக்காம இப்பிடி இருக்கிறியே என்றார் குமார். ஆமா ரேவதி உன் கைக்குள்ள இந்த இரண்டு பேரையும் அடக்கி போட்டுக்கோ இல்ல ரொம்ப கஷ்டம் என்றார் ராஜன்.

அவர்களின் ஒருமித்த குடும்பத்தின் சந்தோசம் அவர்கள் ரேவதி மேல் காட்டிய பாசம் எல்லாவற்றையும் பார்த்து நரேஷ் ரொம்ப நிம்மதி அடைந்தார். எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? நீங்க எல்லாம் இவ்வளவு பாசமா அவளோட வம்பு பண்ணி அவள கிண்டல் பண்ணுறது அவளிட முகத்தில இருக்கிற சந்தோசம் இதை எதையுமே நான் எதிர்பார்க்கல. உண்மையிலயே என் பொண்ணு அதிஷ்டகாரி தான். அவளுக்கு கிடைச்ச உறவுகள் எல்லாமே ரொம்ப நல்லவங்களா இருக்கிறீங்க என்றார்.

இதென்ன நரேஷ் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி கொண்டு இருக்கிறீங்க. இது வரையில நாம இரண்டு குடும்பமும் தான் ஒரே குடும்பம் போல இருந்தம். இனி நாம மூணு குடும்பமும் ஒரே குடும்பம் தான். உங்க குடும்பம் எங்க குடும்பம் என்று பிரிச்சு பேசாதீங்க. நம்ம குடும்பம் என்று சொல்லுங்க என்றான் ராஜன். ஆமா நரேஷ் இப்ப நம்ம குடும்பம் கொஞ்சம் பெருசா வந்திருக்கு அப்பிடியே சந்தோசமும் பெருசா வளர்ந்திட்டா சரி என்று கூறி சிரித்தான் குமார்.

ரேவதி இப்ப உனக்கு சந்தோமாடி என்றாள் செல்வி. ஏய் மரியாதையா பேசு அவள் உனக்கு அண்ணி சரியா என்றான் செல்வன். அட பாவி அதுக்கிடையல அவளுக்கு சப்போட் பண்ணுறியா உன்னை என்ன பண்ணுறன் பாரு என்றாள் ரமி. ஏய் ரமி அவன் என்னை கட்டிக்க போறவன் நீ அடிச்சா தொலைச்சுடுவன் என்றாள் ரேவதி. அட பாருடா பூனை போல பதுங்கிட்டு இருந்த நம்ம ரேவதி பேசுற பேச்சை. எல்லாம் இவன் குடுக்கிற தைரியம் தான் என்று கூறி செல்வனையும் ரேவதியையும் துரத்தி துரத்தி அடித்தார்கள் செல்வியும் ரம்யாவும்.

மகிழ்ச்சி தொடரும்….!
பாகம் 46 [link]viewtopic.php?f=6&t=3&p=6024#p6024[/link]
Last edited by Aruntha on Sun May 06, 2012 9:52 am, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by ஆதித்தன் » Sun May 06, 2012 7:11 am

45 பாகங்களைத் தாண்டித் தொடரும் அழகிய தேவதை தொடர்கதை ... கூகுளில் "அழகிய தேவதை" என்ற தேடலில் முதன்மையான பக்கத்தை இடம்பிடித்துள்ளது என்பதனை நேற்று ஒர் அழகிய தேவதையை தேட முனைந்த பொழுது பார்த்தேன்.

தொடரட்டும்..... உங்கள் மகிழ்ச்சி தொடர்!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Sun May 06, 2012 9:44 am

ஆமா ஆதி நீங்க சொல்லி தான் நானும் பார்த்தன். ரொம்ப சந்தோசமா இருக்கு. என் கதை கூட குகிளில் முதல் பக்கத்தை இடம் பிடித்திருக்கிறது என்று நினைக்கையில். ரொம்ப நன்றி நம்ம படுகைக்கு.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 46

Post by Aruntha » Sun May 06, 2012 9:51 am

மகிழ்ச்சிக்கு குறைவில்லாது அவர்கள் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருந்தது. செல்வனும் ரேவதியும் காதல் வானில் சிறகடித்து பறந்தார்கள். அவர்களை கிண்டல் செய்து சீண்டுவதில் செல்வியும் ரம்யாவும் குறியாக இருந்தார்கள். அவர்களுடன் இடையிடையில் சிவாவும் தனேஷூம் ஒன்று சேர்வார்கள்.

குமார் குடும்பத்திற்கும் ராஜன் குடும்பத்திற்கும் தாம் செல்வனையும் ரம்யாவையும் சேர்த்து வைத்து தாம் உறவாகவில்லை என்ற சிறு வருத்தம் இருந்தது. இருந்தும் அவர்கள் சிறு வயது முதல் சகோதர்கள் போல் நட்புடன் பழகியதால் அவர்களிடம் அந்த எண்ணம் தோன்றாமையை எண்ணி அந்த விடயத்தை மறந்தார்கள். சரி நமக்கு காலம் பூரா நண்பர்களாக வாழ தான் கடவுள் எழுதி இருக்கார் அதை நாம எதுக்கு மாத்தணும். உறவுக்காரரை விட நண்பர்களுக்கு தான் உரிமை அதிகம் என்று கூறி சிரித்தார்கள்.

காலேஜில் கடைசி எக்சாம் நடந்து கொண்டிருந்தது. இத்துடன் அவர்களின் படிப்புகள் நிறைவடையும் நிலையில் இருந்தது. பரீட்சை முடிந்ததும் குமார் சொல்லியது போல் செல்வனிற்கும் அவன் நண்பர்கள் சிவா, தனேஷிற்கும் தன் கம்பனியில் வேலை கொடுப்பதற்கான ஆயத்தங்களை பார்க்க தொடங்கினார். அவர்களின் ஆசைக்கு சிவா வீட்டில் மட்டும் மறுப்பு பதிலாக கிடைத்தது. அவன் வேலைக்கு போவதை அவனது பெற்றோர் விரும்பவில்லை.

அவன் வேலைக்கு போவது பிடிக்கவில்லையா அல்லது செல்வன் தந்தையின் கம்பனியில் போவது பிடிக்கவில்லையா தெரியவில்லை. இருந்தும் அவர்கள் அவனது இந்த விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்தார்கள். அவர்களை வற்புறுத்த விரும்பாத சிவா தன் ஆசைகளுக்கு கையசைத்தான். தனேஷூம் செல்வனும் குமாரின் கம்பனியில் இணைந்தார்கள். ரமியும் செல்வியும் சிறு சிறு உதவிகள் செய்தார்கள். அவர்களும் தங்கள் ஓய்வு நேரங்களில் கம்பனிக்கு சென்று முடிந்த வேலைகளை பார்த்தார்கள்.

பெற்றவர்களின் செயற்பாடுகளால் நண்பர்களிடமிருந்து தூர விலக வேண்டிய கட்டாயத்தில் இருந்த சிவா மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்தான். அவன் மனதளவில் குழம்பியிருப்பதை அவதானித்த அவன் தந்தை அவனை தன்னுடைய நண்பனின் கம்பனியில் வேலைக்கு சேர்த்தார். அந்த வேலை பிடித்திருந்தமையால் சிவா சற்று மனது அமைதியாகினான். நண்பர்களுடன் வேலை செய்யவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் அவர்களை வார இறுதி நாட்களில் சந்தித்து மகிழ்வாக இருந்தான்.

டேய் செல்வா என்னடா பண்ணுறாய் என்ற படி செல்வனின் அறையை நோக்கி வந்தாள் ரம்யா. ஏய் ரமி சார் இப்பெல்லாம் ரொம்ப பிஸி அவங்க ராத்திரி ஆகினால் ரேவதி கூட போன்ல பேசிட்டே இருப்பார். நம்மள எல்லாம் கவனிக்க மாட்டார் என்றாள் செல்வி. ரேவதி பாருடா நான் உன் கூட பேசுறத இவங்க நக்கல் பண்ணுறாங்க என்று போனில் சிணுங்கினான் செல்வன். இங்க பாருடா மெடம் கிட்ட சார் கம்ளைன் பண்ணுறார் இதுக்கெல்லாம் நாம அசர மாட்டம் என்றாள் ரமி. ஆமா அவங்க கிட்ட சொன்னா என்ன பயமா என்று பக்க பாட்டு பாடினாள் செல்வி.

சரி இந்தா நான் போன் மைக்ல போடுறன் நீங்களும் அவள் கூட கதையுங்க என்றான் செல்வன். ஐயோ உங்க கொஞ்சல் எல்லாம் நம்மளால கேட்டிட்டு இருக்க முடியாதுப்பா நம்மள விட்டால் காணும் என்று சிரித்தார்கள் செல்வியும் ரமியும். ஏய் ரமி ரேவதி உன் கூட பேச போறாளாம் என்று ரமி கிட்ட போன் குடுத்தான் செல்வன். அவள் அவுட் ஸ்பீகரில் போன் போட்டாள்.

ஹலோ ரமி எப்பிடி இருக்காய் என்றாள் ரேவதி. நாம நல்லா தான் இருக்கம் ஆனால் செல்வன் தான் உன் போட்டோவ கைல வச்சிட்டு ரொம்ப வழிஞ்சிட்டு இருக்கான் என்றாள் ரமி. ரேவதி அவன் உன் போட்டோவ வச்சி என்ன பண்ணுறான் தெரியுமா அதுக்கு குடுக்கிற முத்தம் என்ன அந்த போட்டோவோட பேசுற பேச்சென்ன அப்பப்பப்பா அதெல்லாம் நம்ம வாயால சொல்ல முடியா என்றாள் செல்வி.

அவர்களிடம் இருந்து போனை பறித்த செல்வன் ஐயோ ரேவதி இவங்க என்ன சும்மா உன்கிட்ட பத்தி வைக்கிறாங்க உன் போட்டோ ஒண்ணுமே என்கிட்ட இல்ல என்றான் செல்வன். சரி சரி செல்வா நான் உங்கள நம்புறன் இவங்க இரண்டும் வாண்டுகள் அவங்க கதைய விடுங்க என்றாள். அடிப்பாவி நாம இரண்டு பேரும் இவ்வளவு சொல்றம் நீ அவனுக்கு சப்போட்டா? இருடி மவளே நீ வீட்டுக்கு வருவாய் தானே அப்ப பாரு என்ன பண்ணுறம் என்று ரமியும் செல்வியும் ஒரே குரலில் இரைந்தார்கள். நீயாச்சு உன் ரேவதியாச்சு நாம போறம் என்று கூறி செல்வியும் ரமியும் வெளியில் சென்றார்கள்.

என்ன அவங்க கோவிச்சிட்டு போய்ட்டாங்களா என்றாள் ரேவதி. ஆமா இரு நான் போய் அவங்கள சமாதான படுத்துறன் சரியா. ஓகே ரொம்ப நேரம் பேசிட்டம் நாளைக்கு பேசுவமா என்றான் செல்வன். ஆமா நாளைக்கு பேசலாம் ஆனால் இப்ப நான் கேக்கிறதுக்கு மட்டும் உண்மைய சொல்லிட்டு போங்க என்றாள் ரேவதி. என்ன கேக்க போறாய் நான் என்ன சொல்லணும் என்றான் செல்வன். இல்ல எனக்கு ஒரு சந்தேகம் செல்வியும் ரமியும் சொன்னது உண்மையா? என் போட்டோவ கைல வச்சு முத்தம் குடுக்கிறீங்களா? என்று கேட்டவளை அடி லூசு நான் ஏன் போட்டோல முத்தம் குடுக்கணும்? போன் பண்ணி உனக்கே குடுத்திடுவனே இல்லாட்டி உன் வீட்டுக்கு வந்து குடுப்பன் என்றான்.

அட பாவி நான் ஒரு பேச்சுக்கு சொன்ன நீ ரொம்ப தான் கதைக்கிறாய்? ஆசை தோசை அப்பளம் வடை போடா போய் தூங்குடா குட் நைற் என்று கூறி போனை கட் பண்ணினாள் ரேவதி. அடிப்பாவி அதுக்குள்ள போனை வச்சிட்டியா? இரு உன்னை தூங்க விடுறனா பார் என்று தனக்குள் சொல்லியவன் அவளுக்கு காதல் ததும்ப மெசேஜ் அனுப்பினான். ஒண்ணு இரண்டல்ல பல மெசேஜ் அனுப்பியதும் அவளால் அவன் இம்சை தாங்க முடியாமல் அவனுக்கு போன் பண்ணினாள்.

என்னடா செல்வா ரொம்ப தான் மெசேஜ் போடுறாய்? உன் காதல் கொஞ்சல் எல்லாம் தாங்க முடியலடா. என்ன உனக்கு முத்தம் தானே வேணும் இந்தா என்று கூறி தொலைபேசியில் முத்தம் கொடுத்தாள். அட என் ரேவதி எனக்கு முத்தம் தந்திட்டாள் என்று கூறி சிரித்தான். சரி சார் ஊரை கூட்டி சொல்லாம போய் தூங்குங்க என்று நாணத்தோடு கூறி போனை கட் செய்தாள்.

செல்வன் ரேவதி திருமண விடயம் கலந்து பேசி பல நாட்கள் ஆகியதாலும் ரேவதியின் படிப்பு முடிந்ததாலும் அவர்களின் நிச்சயதார்த்த விடயம் பேச குமார் நரேஷை சந்திப்பதற்காக அவர்களின் வீட்டிற்கு சென்றார். வாங்க குமார் என்று அவனை வரவேற்றார் நரேஷ். அது தான் போனில பேசின விடயம் பத்தி கதைக்க வந்தன் என்றார் குமார். ஆமா நாம இப்ப ஊரறிய நிச்சயம் பண்ணி வைப்பம். அப்புறமா ஒரு வருசத்தால கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்றார்.

அந்த நொடி நரேஷின் போன் சிணுங்கியது. ஹலோ யார் பேசுறது என்ற நரேஷின் குரலிற்கு டாக்டர் நாங்க ஹாஸ்பிடல்ல இருந்து பேசுறம் நேற்று ஆபரேஷன் பண்ணின பையனுக்கு திடீரென்று உடம்புக்கு முடியல அவசரமா ஒரு ஐந்து நிமிசம் வந்து பார்த்திட்டு போவீங்களா என்றார். இருங்க நான் 15 நிமிசத்தில வாறன் என்றார் நரேஷ்.

குமார் அவசரமா நான் ஹாஸ்பிடல் வரைக்கும் போகணும். இருங்க நான் அரை மணி நேரத்தில வந்திடுவன் என்றார். இல்ல நரேஷ் நான் போய்ட்டு இன்னொரு நாளைக்கு வாறன் என்ற குமாரை இல்ல குமார் என் நண்பர் ஜோன் டாக்டர் ஒருத்தன் இன்னும் கொஞ்ச நேரத்தில வருவார். அவர் வந்தா வீட்டில யாரும் இல்ல நீங்க ஒரு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தா நான் வந்திடுவன் என்றார். ஓகே நரேஷ் நீங்க போய்ட்டு வாங்க நான் வெயிட் பண்ணுறன் என்று கூறினார் குமார்.

நரேஷ் காரை எடுத்து கொண்டு ஹாஸ்பிடல் நோக்கி வரைந்தார். நரேஷ் சென்று சில நிமிடங்களில் நரேஷ் கூறிய அவர் நண்பர் ஜோன் வந்திருந்தார். வாங்க நரேஷ் அவசரமா ஹாஸ்பிடல் வரைக்கும் போயிருக்கான் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவான் உங்க கூட பேசிட்டு இருக்க சொன்னான் என்றார் குமார்.

உங்கள எங்கயோ பாத்த போல இருக்கே என்று கூறியவர் நீங்க குமார் தானே என்றார். ஆமா நீங்க யாரு எப்பிடி என் பெயர் தெரியும் என்றான் குமார். நான் உங்கள ஒரு இருபது வருடத்துக்கு முன்னாடி பாத்திருக்கிறன். உங்க மனைவி பிள்ளைங்க எல்லாம் எப்பிடி இருக்காங்க என்றார். குமாரிற்கு ஒரே குழப்பமாக இருந்தது. எனக்கு ஒண்ணுமே புரியல நீங்க எப்பிடி என்னை பத்தி ……. என்று நிறுத்தியவனை பார்த்த உங்களுக்கு என்னை நினைவில இருக்க சந்தர்ப்பம் இல்லை ஆனால் நீங்க என் நினைவில எப்பவும் இருக்கிறீங்க என்றார் ஜோன்.

கேள்விக்குறி தொடரும்……………………!
பாகம் 47
Last edited by Aruntha on Mon May 07, 2012 10:07 am, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 47

Post by Aruntha » Mon May 07, 2012 10:06 am

குமார் நீங்க உங்க மனைவி கர்ப்பமா இருந்த சமயத்தில ஒருக்கா ஊரில இருந்து பட்டிணம் வந்திங்க தானே. நான் நினைக்கிறன் அவங்களுக்கு அது எட்டாவது மாதமா இருக்கணும். அப்ப திடீரென்று உங்க மனைவிக்கு உடம்பு சரியில்லாம போக நீங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணினீங்க தானே அது நினைவிருக்கா என்றார். ஆமா ரொம்பவே நினைவிருக்கு அதை என்னால மறக்கவே முடியாது என்றார் குமார். அன்னிக்கு உங்க மனைவிக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் நான் தான் என்றார் ஜான்.

அப்பிடியா என்னை ரொம்பவே நினைவு வச்சிருக்கிறீங்க டாக்டர் என்று ஆச்சரியமா பார்த்தான் குமார். அப்பிடி எல்லாம் ஒண்ணும் இல்லை அன்னிக்கு உங்க மனைவிக்கு லேசா உடம்பு களைப்படைஞ்சதால தான் உடம்புக்கு முடியாம போச்சு. ஆனால் நீங்க அவங்களுக்கு என்னாயிடுமோ என்று துடிச்ச துடிப்பு நீங்க கலங்கின கலக்கம் எல்லாம் பார்த்து உங்க மேல ஒரு மரியாதையே வந்திச்சு தெரியுமா. ஒரு புருஷன் தன் பொண்டாட்டி மேல இப்பிடியும் பாசம் காட்டுவானா என்று நாம எல்லாருமே பேசிக்கிற அளவுக்கு உங்க பாசம் இருந்திச்சு தெரியுமா. அதனால உங்கள மறக்கவே முடியாது என்றார் டாக்டர் ஜான்.

அது மட்டுமில்ல உங்கள பத்தி நான் என் மனைவிகிட்ட கூட சொல்லி இருந்தன். அன்றைல இருந்து அவள் மேல நான் ஒரு மடங்கு அதிகமாகவே பாசம் காட்டினன். அதனால இன்னிக்கு மட்டும் நான்அவள் மேல அக்கறை காட்டினாலும் சரி அன்பு காட்டினாலும் சரி அவ உடன சொல்லுவா இதெல்லாம் அந்த புண்ணியவான் குமாருக்கு தான் போய் சேரும் என்று. இன்னிக்கு மட்டும் உங்கள பத்தி நாம குடும்பத்தில பேசிட்டு தான் இருக்கம் என்றார் ஜான்.

ஜான் சொல்லியதை நினைத்து சிரித்த படி நின்றான் குமார். என்ன டாக்டர் சொல்றீங்க என்னால நம்பவே முடியல. உண்மையிலயே நான் அன்னிக்கு பைத்தியம் போல தான் நின்றன். இப்ப தான் தெரிது என்று கூறி சிரித்தான். என் பெயர் கூட மறக்காம வச்சிருக்கிறீங்களே ரொம்ப சந்தோசம் என்றான்.

சரி உங்க மனைவி பிள்ளையள் எப்பிடி இருக்கிறாங்க? இன்னும் அதே பாசத்தோட தான் உங்கமனைவிய நேசிக்கிறீங்களா என்றார் டாக்டர். என்ன டாக்டர் கேள்வி இது அவள இப்ப நான் ஆரம்பத்த விட அதிகமாகவே நேசிக்கிறன் அவள் என் உயிர் என்றான் குமார். சரி உங்க பிள்ளைங்க மூணு பேரும் என்ன பண்ணுறாங்க படிக்கிறாங்களா என்றார் ஜோன். ஆமா டாக்டர் அவங்க படிக்கிறாங்க எனக்கு மூணு பிள்ளைங்க இல்ல இரண்டு தான் ஒரு பொண்ணு ஒரு பையன் என்றான் குமார்.

என்ன சொல்றீங்க குமார் அப்ப பிரசவத்தில உங்க ஒரு குழந்தைக்கு ஏதாச்சும் ஆயிடிச்சா என்றார். இல்ல டாக்டர் எனக்கு பிறந்ததே இரண்டு குழந்தைங்க தான் என்றான் குமார். இல்ல குமார் நீங்க வந்தப்ப நான் உங்க மனைவிய ஸ்கான் பண்ணி பாத்தன் மூணு குழந்தைங்க அவங்க கர்ப்பத்தில இருந்திச்சு. எனக்கு அந்தறிப்போட் மறுநாள் தான் கிடைச்சிச்சு நீங்க முதல் நாள் பின்னேரமே டிஸ்சாஜ் அகி போயிட்டிங்க.

ஊரில உங்களுக்கு ஸ்கான் வசதி இருக்காது உங்களுக்கு குழந்தை பிறக்கிற போது தான் எத்தின குழந்தை என்ன குழந்தை என்று தெரியும் அத நான் உங்களுக்கு முன்னாடியே சொல்ல நினைச்சன். ஆனால் உங்கள தொடர்பு கொள்ள என்கிட்ட அட்ரஸ் போன் நம்பர் எதுவும் இருக்கல அதனால அப்பிடியே விட்டிட்டன் என்றார்.

என்ன சொல்றீங்க டாக்டர் எனக்கு பிறந்ததே இரண்டு குழந்தைங்க தான். அதுவும் பிரசவத்தில என் மனைவிக்கு கொஞ்சம் பிரச்சினை இருந்ததால ஊரில பிரசவம் பாக்கல. ஊருக்கு வெளில இருக்கிற ஹாஸ்பிடல்ல அதுவும் நம்ம ஓரு டாக்டரம்மா தான் பாத்தாங்க என்றான் குமார். இல்ல குமார் நான் அடிச்சு சொல்லுவன் உங்க மனைவி கர்ப்பத்தில இருந்தது மூணு குழந்தைகள் தான். என் ஸ்கான் றிப்போட் எண்டைக்குமே தப்பானதில்ல. என்னை தேடி தான் அதிகமா எல்லாரும் ஸ்கான் பண்ண வருவாங்க அவ்வளவு பேமஸ் ஸ்கான்ல என்றார் டாக்டர்.

டாக்டர் கூறிய வார்த்தைகளை கேட்ட குமார் அதிர்ச்சியடைந்து போய் இருந்தான். ஏதோ தப்பு நடந்திருக்கு டாக்டர் நான் எதுக்கும் நம்ம ஊரு டாக்டரம்மாட்ட போய் கேக்கிறன் என்றான் குமார். ஆமா குமார் இதில ஏதோ தப்பு நடந்திருக்கு நீங்க போய் விசாரியுங்க என்றார் ஜோன். டாக்டர் இத பத்தி நீங்க யாரோடயும் கதைக்காதீங்க நான் டாக்டரம்மாட பேசிட்டு உங்களுக்கு சொல்றன் என்றார் குமார்.

ஆமா குமார் நான் யார்கிட்டயும் இத பத்தி சொல்லல. இந்தாங்க என்னோட விசிற்றிங் காட். நீங்க எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளுங்க. முதல் போய் உங்க டாக்டரம்மாகிட்ட பேசுங்க அப்புறமா எனக்கு போன் பண்ணுங்க என்றார் ஜோன். அவர்களின் பேச்சு ஓரளவு முடியவும் நரேஷ் வரவும் சரியா இருந்தது. ஹலோ ஜோன் வந்து ரொம்ப நேரமாச்சா? சாரிப்பா ஹாஸ்பிடல்ல இருந்து அவசரமா போன் வந்திச்சு போக வேண்டியதாயிற்று என்றான் நரேஷ்.

என்ன நரேஷ் நம்ம தொழில பத்தி எனக்கு தெரியாதா? இதெல்லாம் பிரச்சினையே இல்ல. நீ இல்லாதது எனக்கு பெருசா தெரியல குமார் கூட பேசிட்டு இருந்ததில நேரம் போனதே தெரியல என்றான் ஜோன். என்ன அதுக்கிடைல குமார் உனக்கு நண்பனாகிட்டானா என்று வினவ இல்லடா அவர எனக்கு முன்னாடியே தெரியும். அவன் மனைவி கர்ப்பமா இருந்த காலத்தில ஒரு நாள் செக்கப் பண்ணினன். அப்போ அவர் அவங்க மனைவி மேல காட்டின பாசத்தை பாத்து பிரமிச்சு போய்டன். அதனால இவர என்னால மறக்க முடியாது என்றான் ஜோன்.

ஓ அப்பிடியா ரொம்ப சந்தோசம். இப்ப கூட அவன் பொண்டாட்டில ரொம்ப உசிரா தான் இருக்கான் என்றான் நரேஷ். சரி நான் குமார அறிமுகபடுத்த மறந்திட்டனே என் பொண்ணு ரேவதிய இவங்க பையன் செல்வனுக்கு தான் பேசி இருக்கு. எப்ப நிச்சயம் பண்ணலாம் என்று பேச தான் வந்தான் என்றான். ஓ அப்பிடியா அப்ப நீங்க ஒண்ணுக்க ஒண்ணு சொந்தமாகிடிங்களா என்று சிரித்தான் ஜோன்.

என்னகுமார் ஒரு மாதிரி இருக்காய் முகம் எல்லாம் வாடிட்டு இரு நான் ஏதாச்சும் குடிக்க எடுத்து வாறன் என்று எழுந்தான் நரேஷ். அப்பிடி இல்ல நரேஷ் எனக்கு கொஞ்சம் வேக் இருக்கு ஆபிசில இருந்து போன் வந்திச்சு நீ வரும் வரை தான் பாத்திட்டு இருந்தன் நான் அப்புறமா வாறன் என்று கூறி எழுந்தான். சரிப்பா நான் தேதி பாத்திட்டு உனக்கு போன் பண்ணுறன் என்று கூறி அவனை வழியனுப்பி வைத்தான் நரேஷ்.

குழப்பம் தொடரும்………….!
பாகம் 48
Last edited by Aruntha on Tue May 08, 2012 2:31 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 48

Post by Aruntha » Tue May 08, 2012 2:30 pm

நல்ல விதமாக சுப காரியம் கதைக்க சென்ற குமார் பல குழப்பங்களுடன் தம் வாழ்வின் பாரிய ஒரு உண்மையை தெரிந்து கொண்டு வந்து கொண்டிருந்தான். அவனால் காரை கூட ஒரு மனதாக ஓட்ட முடியவில்லை. மனது மிகவும் அலை பாய்ந்த வண்ணம் இருந்ததது.

அவனால் டாக்டர் ஜோன் கூறிய வார்த்தைகளை சாதாரணமாக எடுக்கவும் முடியவில்லை. இருந்தும் அதை பற்றிய பூரணமான உண்மைகளை அறியாமல் அவனால் அது பற்றி கமலிக்கும் கூற முடியாதிருந்தது. செய்வதறியாத குழப்பத்துடன் வீட்டை அடைந்தான்.

என்னப்பா எல்லாம் கதைச்சு முடிஞ்சுதா? நரேஷ் என்ன சொன்னார் எப்ப நிச்சயதார்த்தத்தை வைக்கலாமாம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்ட படி இருந்தாள் கமலி. அவனால் அவளுக்கு பதில் சொல்லும் மனநிலை இருக்கவில்லை.

இல்லடா அத பத்தி பேசல. நாம் போனதும் அவருக்கு ஹாஸ்பிடல்ல இருந்து போன் வர அவசரமா போய்ட்டார். அப்புறமா அவரோட நண்பர் ஒருவர் வந்தார் அதனால இத பத்தி பேசல சும்மா கதைச்சிட்டு வந்திட்டன். அவர் நல்ல நாளா பாத்திட்டு போன் பண்ணுறதா சொன்னார் என்றார். ஓ அப்பிடியா பறவாயில்ல அப்புறமா போன் பண்ணட்டும் என்று கூறி இருங்க குடிக்க ஏதாச்சும் எடுத்து வாறன் எனக் கூறி சமயலறைக்குள் சென்றாள் கமலி.

அப்படியே சோபாவில் சாய்ந்து படுத்தான் குமார். அவனுக்கு டாக்டர் கூறிய வார்த்தைகள் எதிரொலித்த வண்ணம் இருந்தது. இது பற்றிய உண்மையை அறிவதானால் ஊருக்கு போய் டாக்டரம்மாவ சந்திக்கணும் வீட்டுக்கு என்ன சொல்லி தான் ஊருக்கு போவது என சிந்தித்த வண்ணம் இருந்தான். அவன் எதுவாக இருந்தாலும் ராஜனுடன் தான் கலந்தாலோசிப்பான். இதை அவனுக்கு சொல்வதா வேண்டாமா என குழப்பத்தில் இருந்தான்.

என்னங்க அதுக்கிடைல சோபால தூங்கிட்டிங்களா? என்ன ரொம்ப களைப்பா இருக்கா? ஏனப்பா உங்களுக்கு உடம்புக்கு ஏதும் முடியலயா? என்னாச்சு உடம்பெல்லாம் ஒரே சோர்வா இருக்கு என்று பதறினாள் கமலி. ஒண்ணுமில்லடா கொஞ்சம் உடம்பு அசதியா இருந்திச்சு அது தான் என்றான். சரி காப்பிய குடிச்சிட்டு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க என்றாள்.

அவனும் காப்பியை குடித்து விட்டு போய் சற்று நேரம் கட்டிலில் படுத்தான். அவன் மனது ஒரு நிலையில் இருக்கவில்லை. அப்படி டாக்டர் சொல்லியது உண்மை என்றால் நமக்கு மூன்று குழந்தைகளா? அப்பிடி என்றால் மற்றயது ஆணா பொண்ணா? அந்த குழந்தை எங்க இருக்கு? வசதியா இருக்கா இல்ல எங்காச்சும் கஸ்ட படுதா? இல்ல இப்போ உயிரோட தான் இருக்கா? அவனுக்கு அவனது மனது கேட்கும் கேள்விகளுக்கு விடை தேட முடியவில்லை.

டாடி என்ற செல்வனின் குரலை கேட்டு சுய நினைவுக்கு வந்தவன் என்ன செல்வா சொல்லு என்றார். இல்ல டாடி நம்ம ஆபிஸில செய்த ஒரு வேலைல சின்ன சந்தேகம் அது தான் தனேஷ் கேட்டான் எனக்கும் புரியல சொல்லுறீங்களா டாடி என்றான். இல்லப்பா எனக்கு கொஞ்சம் தலை வலியா இருக்கு நான் அப்புறமா பாக்கிறன் இதில வச்சிட்டு போப்பா என்றார்.

என்ன டாடி உடம்புக்கு என்னாச்சு டாக்டர்கிட்ட போவமா என்று பதறினான். இல்லப்பா ரைம் ஆச்சு லேசா தலைவலி தான் மாத்திரை போட்டன் சரியாகிடும் என்றார். சரிப்பா நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க என்று கூறி சென்றான்.

செல்வி நேரமாச்சு போய் டாடியையும் செல்வனையும் சாப்பிட கூப்பிடு. நாளைக்கு டாடிக்கு ஆபிசில ஏதோ முக்கிய வேலை இருக்கு என்று சொன்னார். சீக்கிரமா சாப்பிட்டு தூங்கினால் தான் சரி என்றாள் கமலி. சரி மம்மி என்று கூறி போய் அவர்களை சாப்பிட அழைத்து வந்தாள். அவர்கள் முன்னிலையில் தான் அதிகமாக குழம்புவதை காட்டி கொடுக்க கூடாது என்பதற்காக அவர்களோடு இணைந்து இரவு சாப்பிட்டு விட்டு நேரத்துடன் தூங்க சென்றான் குமார்.

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தூங்க சென்றாள் கமலி. குமார் தூக்கமே வராது புரண்டு கொண்டிருந்தான். அவன் அருகில் படுத்து கொண்ட கமலி என்னங்க உடம்புக்கு ரொம்ப முடியலயா? ரொம்பவே டல் ஆக இருக்கிறீங்க என்றாள். இல்லம்மா தலை லேசா வலிக்குது. இப்ப சரியாகிச்சு நீ தூங்கு என்றான்.

சற்று நேரம் எதுவுமே பேசாது படுத்திருந்த குமார் கமலிக்கு நெருக்கமாக சென்று படுத்தான். அவன் கைகள் அவனையே அறியாது அவளின் வயிற்றை பற்றியது. பெண்களுக்கு தான் எவ்வளவு கஷ்டம் பிரசவம் என்பது அவங்களுக்கு மறுபிறப்பு போன்றது என்றான். பிரசவ வலி என்றது எவ்வளவோ வேதனையானது என்று ரொம்பவே அனுதாபமா கதைத்தான். எவ்வளவு கஷ்டபட்டு பெத்தெடுக்கிற பிள்ளையள் ஒவ்வொரு பொண்ணுக்கும் அவங்க இதயத்துடிப்பு போல என்றான். என்னங்க திடீரென்று இப்பிடி எல்லாம் பேசுறீங்க எனக்கு ஒண்ணுமே புரியல என்றாள்.

அவனையே அறியாமல் பேசிய வார்த்தைகள் அவளின் கேள்வியால் தடைப்பட்டது. என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தான். ஒண்ணுமில்லடா இன்னிக்கு நெற்ல ஏதோ தேடிட்டு இருந்தப்ப பொண்ணுங்களோட பிரசவம், அதனோட வலி பற்றி பார்த்தன் அது தான் என்று சமாளித்தான். அப்பிடியா என்ன தான் பாத்திங்க இப்பிடி கவலை படுறீங்க என்றாள். அவனுக்கு என்றோ படித்த ஒரு வசனம் அந்த தருணத்தில் கைகொடுத்தது.

Do you know?
A human body can bear only upto 45 Del (unit) of pain. But at the time of giving birth, a woman feels upto 57 Del of Pain. This is similar to 20 bones getting fractured at a time!!!! LOVE UR MOM...

இது தான் அந்த வசனம். இதை படிச்சதும் பெண்ணுங்களோட கஷ்டங்கள் தெரிஞ்சிச்சு அது தான் என்றான். என்னங்க இப்பிடி சொல்றீங்க பொண்ணுங்க இதை ஒரு வலியாவே நினைக்கிறதில்ல இதெல்லாம் நினைச்சு நீங்க கவலை படக் கூடாது என்றாள்.

இவ்வளவு வலிகளை தாங்கி பெற்றெடுத்த அவளது ஒரு குழந்தை எங்கே என்று நினைக்க அவனையே அறியாது விழிகள் கலங்கியது. என்னங்க பேரப்பிள்ளைய பாக்கிற வயசில எப்பவோ நடந்த என் பிரசவத்தை நினைச்சு நீங்க இப்பிடி கவலை படுறீங்க உங்கட அன்பு இன்னுமே மாறல. நான் கல்யாணம் பண்ணின போது எப்பிடி இருந்திங்களோ அப்பிடியே இருக்கு உங்க அன்பு என்றாள்.

அவன் மனதின் ஏக்கங்கள் ஏதோவாக இருந்தாலும் அவளை அந்த நொடி அதிகமாக நேசிக்க வைத்தது. அவளின் தலையை கோதி தன் அன்பால் அவளை அடைக்கலபடுத்தினான். திருமணமாகி 20 வருடங்கள் கடந்த நிலையிலும் தன் கணவரின் பாசத்தை எண்ணி அவன் நெஞ்சோடு தலைவைத்து என்னங்க கடைசி வரை இப்பிடியே என் கூட அன்பா இருப்பீங்களா? என்றாள். ஏய் என்ன பைத்தியகாரி போல கதைக்கிறாய்? உன்னை தவிர நான் யார நேசிக்க போறன் என்றான்.

ஆமாங்க நீங்க என்னை உயிரா நேசிக்கிறீங்க ஆனால் நான் உங்களை இந்த அளவுக்கு நேசிக்கிறனா தெரியல. என் பாசம் பிள்ளைங்க மேல அதிகமா இருக்கிறதால உங்க மேல நீங்க காட்டுற அளவுக்கு இருக்கா என்று எனக்கே சந்தேகமா இருக்கு என்றாள். ஏய் என்னம்மா என் கமலி எப்பவுமே என்னை நேசிக்கிறாள் அதில எனக்கு எந்த சந்தேகமும் இல்ல சரிம்மா நீ தூங்கு நேரமாச்சு என்று கூறி அவளை அணைத்தபடி அவனும் தூங்கினான்.

மறுநாள் அவனுக்கு ஆபிசில் ஏதோ முக்கிய கலந்துரையாடல்கள் இருந்தது. அவனால் எதிலுமே மனசு நிலையாக தொழிற்பட முடியவில்லை. ஆபிசில் அவனை அவதானித்த ராஜன் என்ன குமார் ரொம்பவே குழப்பமா இருக்காய் ஏதாச்சும் பிரச்சினையா? கமலி கூட ஏதாச்சும் மனக்கசப்பா? இல்ல பசங்க ஏதாச்சும் பண்ணிட்டாங்களா என்றான். அவனால் எதுவும் கூற முடியவில்லை. இருந்தும் அவனுக்கு அந்த நொடி மனதிற்கு யாருடைய ஆறுதலாவது தேவையாக இருந்தது. அவனது குடும்ப நண்பன் என்ற முறையிலும் எதுவாக இருந்தாலும் அவனோடு கலந்துரையாடுவதாலும் நடந்தவற்றையெல்லாம் ராஜனுக்கு கூறினான் குமார்.

என்ன குமார் சொல்றாய் இது உண்மையா என்று அதிர்ச்சியடைந்தான் ராஜன். ஆமாடா என்னால இத நம்பவும் முடியல. நம்மபாம இருக்கவும் முடியல. அந்த டாக்டர நான் இருபது வருடத்துக்கு முன்னாடி பார்த்தது உண்மை. அவர் சொல்றதெல்லாம் சரியா தான் இருக்கு. ஆனால் இத மட்டும் என்னால ……………. அவனால் அதற்கு மேல் எதுவுமே பேச முடியவில்லை.

சரி குமார் எதுக்கும் யோசிக்காத. இப்பிடி குழப்பம் மனசில இருக்கிறப்ப நம்மளால எதுவுமே பண்ண முடியாது. நாம உடனடியா ஊருக்கு போய் டாக்டரம்மாவ பாக்கலாம். அவங்ககிட்ட கேட்டால் எல்லா குழப்பத்துக்கும் விடை கிடைக்கும் என்றான். சரிப்பா ராஜன் ஊருக்கு போறது சரி வீட்டில என்ன சொல்லிட்டு கிளம்புறது என்றான். பொய் சொல்லிட்டும் போக ஏலாது ஊரில யாராச்சும் எங்கள பாத்தா பிரச்சினையாகிடும். அதே நேரம் வீட்டில உள்ளவங்களையும் கூட்டி போக ஏலாது என்றான்.

சரி நாம நம்மட கம்பனில ஒரு புதுத்திட்டம் பத்தி கலந்தாலோசிக்க உன் ஊருக்கு பக்கத்து ஊருக்கு போறதா சொல்லிட்டு கிளம்புவம். அப்புறமா வாற வழில ஊருக்கு போனதா சொல்லி சமாளிப்பம் என்றான் ராஜன். ஆமா நீ சொல்றதும் சரி தான் அப்ப நாளைக்கு காலைல நேரத்தோட கிளம்புவமா என்றான். ஆமா காலைல ஒரு நாலு மணி போல வெளிக்கிட்டா எப்பிடியும் பத்து மணிக்குள்ள போயிடலாம். போய் டாக்டரம்மாவ பாத்திட்டு மதியமா வெளிக்கிட்டா இங்க இராத்திரிக்கு வந்திடலாம் என்றான் குமார்.

சரிப்பா ஒண்ணுக்கும் யோசிக்காத எல்லாம் நல்லா நடக்கும். காலைல புறப்படுவம் இப்ப நேரமாச்சு வா வீட்டுக்கு கிளம்புவம் என்று அவனை அழைத்தான் ராஜன். இருவரும் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். உன்கிட்ட சொன்னது என் மனசுக்கு ஏதோ ஆறுதலா இருக்கடா கொஞ்சம் தெம்பாவும் இருக்கு என்றான் குமார். எல்லாம் நல்ல படி நடக்கணுமடா நல்லா நடந்தா அப்புறமா நாம சந்தர்ப்பம் பார்த்து வீட்டுக்கு சொல்லலாம். இல்லாட்டி இப்பிடியே நம்மளோட இந்த விசயத்தை புதைச்சிடலாம் என்றான் ராஜன்.

ஆமாடா நீ சொல்றதும் சரி. அவசரபட்டு சொல்லி வீட்டில உள்ளவங்களையும் கஷ்ட படுத்த கூடாது பாக்கலாம் என்று கூறிய படி வீட்டை அடைந்தார்கள்.

பயணம் தொடரும்………………….!
பாகம் 49
Last edited by Aruntha on Wed May 09, 2012 10:29 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 49

Post by Aruntha » Wed May 09, 2012 10:27 pm

பிரியா இன்னிக்கு இராத்திரிக்கு நீங்க எதுவும் சமையல் பண்ண வேண்டாம். நானே எல்லாருக்கும் சேர்த்து பண்றன் என்றாள் கமலி. என்னன கமலி ரொம்ப சந்தோசமா இருக்காய் ஏதாச்சும் விசேசமா என்ற பிரியாவின் வினாவிற்கு ஆமா இன்னிக்கு தான் நரேஷ் போன் பண்ணினார் இன்னும் ஒரு வாரத்தில செல்வன் ரேவதி நிச்சயதார்த்தத்தை வச்சுக்கலாம் என்று அது தான் சந்தோசம். வீட்டில நடக்க போற முதல் விசேஷம் அது தான் என்றாள்.

ஓ அப்பிடியா ரொம்ப சந்தோசம் சரி நானும் வாறன் உன் சமையலுக்கு உதவி பண்ண என்ற படி பிரியாவும் அவள் சமையலறை நோக்கி விரைந்தாள். அவர்கள் விரைவாக சமையலை முடித்ததும் அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தார்கள்.

ஆன்டி எனக்கு என்ன ஸ்பெஷல் பண்ணி வச்சிருக்கிறீங்க என்று கேட்ட படி அமர்ந்தாள் ரம்யா. என்னம்மா ரமி இப்பிடி கேட்டிட்டாய் எனக்கு இரண்டு பசங்களா இல்லையே மூணு பசங்க என்றாள் கமலி. அவளின் வார்த்தைகளை கேட்டு திடுக்குற்ற குமாரும் ராஜனும் அதிர்ச்சியாய் கமலியையே பார்த்தபடி இருந்தார்கள். என்ன அப்பிடி பாக்கிறீங்க நான் எப்பவும் ரம்யாவ என்னோட பொண்ணா தான் நினைக்கிறன். பிரியா கூட செல்வன் செல்விய தன்னோட பசங்களா தான் நினைக்கிறாள் என்றாள்.

ரமி உனக்கு பிடிச்ச கத்தரிக்கா வறுவல் பண்ணி வச்சிருக்கனம்மா சாப்பிடு என்றாள் கமலி. தாங்ஸ் ஆன்டி. எனக்கு தெரியாதா உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று சும்மா தான் கேட்டன் என்றாள். எனக்காக பசங்கள குடுக்கிறதில அந்த கடவுளுக்கே ஒரு தனி பிரியம் என்றாள் கமலி. இன்னும் கொஞ்ச காலத்தில உங்க மூணு பேரோட சேர்த்து எனக்கு இன்னுமெரு பிள்ளையும் வந்திடும். அப்புறம் நான் எனக்கு நாலு பசங்க என்று உரிமையா சொல்லுவன் என்றாள் கமலி.

என்ன கமலி சொல்றாய் நாலு பசங்களா? அது யாரு எனக்கு தெரியாம புதுசா எங்கயாச்சும் பெத்து குடுத்து வச்சிருக்கிறியா என்றாள் பிரியா விளையாட்டாக. அவர்களின் குறும்பான பேச்சை ரசிக்கும் மன நிலையில் குமாரும் ராஜனும் இருக்கவில்லை. கமலி இப்படி கூறியதை கேட்டு குழப்பத்தில் இருந்தார்கள். என்னம்மா சொல்றாய் நாலு பசங்களா யாரது என்றான் குமார்.

என்ன டாடி நீங்க இப்பிடி ரியூப் லைட்டா இருக்கிறீங்க அம்மா சொல்றது ரேவதிய தான் இது கூட தெரியலயா என்றான் செல்வன். ஆமாடா அவள் இன்னும் கொஞ்ச காலத்தில நம்மட வீட்டுக்கு வாழ வந்திடுவாள். அப்புறமா அவளும் என் பொண்ணு தானே அவள நான் ஏன் மருமகளா பாக்கணும் எம் பொண்ணு செல்விய போல தான் அவளும் எனக்கு என்றாள்.

அந்த நேரம் பார்த்து மறுநாள் ஊருக்கு போவதை பற்றி கூற நினைத்தான் ராஜன். அவன் குமாரைப் பார்த்து கண்களால் சைகை செய்தான் ஆரம்பிப்போமா என்று. அவனும் சம்மதம் சொல்ல ராஜனே ஆரம்பித்தான். நாளைக்கு நாம இரண்டு பேரும் கம்பனி திட்டம் ஒண்ணு பத்தி கொஞ்சம் விபரம் எடுக்க வெளியூருக்கு போக வேண்டி இருக்கு என்றான்.

வெளியூருக்கா என்ன திடீரென்று? என்றாள் பிரியா. அது சரி எந்த ஊருக்கு போறீங்க என்றாள் கமலி. உங்க ஊருக்கு பக்கத்து ஊருக்கு தான் போறம். திடீரென்று தான் வேற கம்பனில இருந்து விபரம் கேட்டாங்க அது தான் போய் பாத்து சரி வந்தா அந்த திட்டத்தை தொடரலாம் என்றான் குமார். காலைல சீக்கிரமா புறப்படணும் என்றான் ராஜன்.

அப்பிடியா நல்லது. நீங்க போற காரியம் நல்லா அமையணும் என்று காலைல சாமிகிட்ட வேண்டிகிறம் என்றாள் கமலி. சரி அப்ப சீக்கிரமா சாப்பிட்டு போய் தூங்குங்க அப்ப தான் காலைல சீக்கிரம் எழும்பலாம் என்றாள் பிரியா.

அம்மா நீங்க டாடி கூட போங்க நான் செல்வன் செல்வி கூட கொஞ்சம் இருந்திட்டு வாறன் என்றாள் ரம்யா. சரி ரமி என்ற படி பிரியாவும் ராஜனும் சென்றார்கள். டாடி சீக்கிரம் எழும்பணும் நாங்களும் தூங்க போறம் நீங்க தூங்க போறப்ப கதவ வடிவா பூட்டிட்டு போங்க என்று கூறி கமலியும் தூங்க சென்றாள்.

செல்வன், செல்வி, ரமி மூவரும் ஹாலில் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். டேய் செல்வா உனக்கு ரேவதி ஓகே ஆகிட்டாள் நீயும் அவள ஆசைப்பட்டாய் உனக்கு அந்த வாழ்க்கை கிடைச்சிட்டு அதனால நம்மள விட்டு கல்யாணத்துக்கப்புறம் ரேவதி பிரிஞ்சிடுவா என்ற கவலை இனி நமக்கில்லடா என்றாள். ஆமா ரமி நாங்க எல்லாருமே கடைசி வரைக்கும் இப்பிடியே ஒண்ணா இருக்கணும் அது தான் என்னோட ஆசையும் என்றான் செல்வன்.

செல்வா இப்போ சிவா நம்ம கூட பெருசா பழகிறதில்லடா அவன் வீட்டில ஏதோ பிரச்சினை போல இருக்கு அவனும் எதையும் மனசு விட்டு கதைக்கிறான் இல்ல என்றாள் செல்வி. ஆமா அவன் வீட்டில இருக்கிற நேரத்தில போன் பேசுறது கூட இல்ல வெளில போற வாற நேரத்தில தான் கதைக்கிறான் அவன கூப்பிட்டு என்ன ஏது என்று விசாரிக்கணும் என்றான்.

எனக்கு அவன் அப்பிடி இருக்கிறதுக்கு காரணம் அவங்க அம்மா அப்பா என்று தான் தோணுது. அவங்களுக்கு சிவா நம்ம கூட பழகிறதில பெருசா இஷ்டம் இல்ல. சிவா என்னை அல்லது செல்விய லவ் பண்ணுறானோ என்று அவங்க வீட்டில சந்தேக படறாங்க போல இருக்கடா அது தான் அவன நம்ம கூட பழக விடாம அவங்க தடுக்கிறாங்க. அவன் தனேஷ் கூட பழகிறதுக்கு எந்த தடையும் அவங்க சொல்லல. இது பத்தி தனேஷூம் சொல்லி இருந்தான். இது தான் காரணமா இருக்குமோ என்று அவனும் சந்தேகபடுறான் என்றாள் ரம்யா.

என்ன ரமி சொல்றாய் நாம எல்லாம் நட்பா பழகிறம் அதுக்கும் மேல அவங்க அம்மா அப்பா கூட எல்லாம் சகஜமா பழகிறம் அவங்க எதுக்கு இப்பிடி சந்தேகபடுறாங்க. நட்பை மதிக்க தெரியாதவங்களா இருக்கிறாங்களே என்று சினந்தாள் செல்வி. ஆமா செல்வி நாம எப்பிடி எல்லாம் பழகிறம் சின்ன வயசில இருந்து ஒண்ணா வளர்ந்தாலும் வளந்ததுக்கு அப்புறமும் நான் செல்வன் எல்லாம் எவ்வளவு நெருக்கமா அடிபடுறம் நம்மட அம்மா அப்பா எல்லாம் எவ்வளவு புரிந்துணர்வா நடக்கிறாங்க என்றாள் ரமி.

ஆமாடா நான் கூட சிவா, தனேஷ் கூட எல்லாம் பழகிறன் யாருமே எங்க வீட்டில தப்பா நினைக்கிறதில்ல. பாவம் சிவா அவன் அம்மா அப்பா ஏன் தான் இப்பிடி இருக்கிறாங்களோ தெரியல. அவங்களுக்கு நம்மட நட்பை எப்பிடியும் புரிய வைக்கணும். நாம எல்லாம் பழைய படி நல்லா பழகணும் என்றாள் செல்வி. ஆமாடா நானும் அதுக்கான சந்தர்ப்பத்தை தான் பாத்திட்டு இருக்கன் அவசர படக் கூடாது. அது தான் கொஞ்சம் பொறுமையா இருக்கன் என்றான்.

ஏக்கங்கள் தொடரும்………!
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”