அழகிய தேவதை - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by muthulakshmi123 » Sun Mar 18, 2012 8:07 pm

நன்றாக கதை எழுதுகிறீர்கள் புத்தகமாக போட்டு விடுங்கள் வாழ்த்துக்கள்... :clab: :clab:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Sun Mar 18, 2012 8:08 pm

muthulakshmi123 wrote:நன்றாக கதை எழுதுகிறீர்கள் புத்தகமாக போட்டு விடுங்கள் வாழ்த்துக்கள்... :clab: :clab:
அதுக்கென்ன முடிய போட்டிட்டா போச்சு
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 26

Post by Aruntha » Mon Mar 19, 2012 10:12 am

நாட்களோ வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அவர்களை பிரிந்த வலி ரம்யாவை ரணமாக்கியபடி இருந்தது. அவர்களுக்கும் ரம்யாவுடன் பழகாத பொழுதுகள் கனமாகவே இருந்தன. ரம்யாவிற்கு மற்ற நண்பர்களால் அவள் எதிர்பார்த்த ஆறுதலையும் அரவணைப்பையும் கொடுக்க முடியவில்லை.

பிறந்தநாளிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தது. அவளின் 21 வது வயது என்பதால் பிரியாவும் ராஜனும் தங்கள் செல்ல பொண்ணின் பிறந்த நாளை கொண்டாட ஆயத்தங்கள் செய்தார்கள். அவர்களுக்கும் கமலி குடும்பம் இல்லாதது கவலையாகவே இருந்தது.

ரமி போன் செய்து அவர்களை பிறந்த நாளிற்கு வந்து விட்டு செல்லும் படி கேட்டாள். அவர்களின் சூழ்நிலை உடனடியாக புறப்பட கூடியது போன்று இருக்கவில்லை. அவளாலும் அவர்களின் நிலையை புரிந்து வற்புறுத்த முடியவில்லை.

கவலைகளை மனதில் பொதித்த வண்ணம் பெயருக்கு சிரித்து கதைத்தாள். அவளிற்கு சிவா மற்றும் தனேஷ் ஆறுதலாக இருந்தாலும் அவளால் அவர்களின் பிரிவை ஈடுசெய்ய முடியவில்லை.

அவளின் நிலையை அறிந்த செல்வன் தந்தையிடம் சென்று டாடி நாங்க நாளைக்கு நம்ம வீட்டுக்கு போய் ரம்யாவின் பிறந்த நாளை முடிச்சிட்டு மறுபடி உடனே திரும்புவமா என்று கேட்டான். செல்வியும் ஆமா டாடி அவளிட 21 வது பிறந்த நாள் பெருசா கொண்டாடுவதாக இருந்தம் நாங்க இங்க வந்ததால அவள் பாவம் என்றாள்.

நாங்க பழக ஆரம்பிச்சதில இருந்தே எந்த ஒரு விசேசம் அவளிட வீட்டிலயும் சரி எங்கட வீட்டிலயும் சரி இரண்டு குடும்பமும் இருப்பம் இப்ப மட்டும் இல்லாம இருக்க முடியல டாடி. தாத்தாக்கு கொஞ்சம் உடம்புக்கு ஓகே தானே போய்ட்டு உடன வருவமா என்றார்கள்.

குமாரும் யோசித்து விட்டு ஆமா எனக்கும் ஆபிஸில் லீவு பிறேக் செய்யணும் அப்பிடி என்றால் போட்டு உடன வருவம் என்றார். எதுக்கும் அம்மாகிட்ட ஒரு வார்த்தை கேப்பம் என்று கூறி கமலியிடம் கூறினான்.

கமலியும் அவர்களின் விருப்பத்திற்கு தடை சொல்ல விரும்பவில்லை. சரி அப்பாக்கும் ஆபிஸ் போகணும் தானே நீங்க அப்பா கூட போய்டு நாளைக்கு இரவு மறுபடி வெளிக்கிட்டு வாங்க என்றாள். அப்ப நீங்க வரலயா அம்மா என்ற செல்வியின் கேள்விக்கு இல்லம்மா நீங்க போய்ட்டு வாங்க நான் தாத்தா கூட நிக்கிறன் என்றாள்.

நான் இல்லாட்டி என்ன நீங்க போனாலே ரமி சந்தோச படுவாள். டாடி கூட வாறார் தானே பிறந்த நாளை முடிச்சிட்டு அன்றைக்கு இரவே வெளிக்கிட்டு இங்க வாங்க என்றாள்.

இருவருக்கும் ஒரே மகிழ்ச்சி. மறுநாள் ரம்யாவிடம் சொல்லாமல் சென்றுஇன்ப அதிர்ச்சி கொடுப்பதாய் திட்டமிட்டார்கள். அதன்படி அவளின் பிறந்த நாளிற்கு வரும்படி ரேவதிக்கும் போன் செய்து கூறினார்கள். சிவா, தனேஷ் க்கும் கூறினார்கள்.

அன்று இரவு 10 மணியளவில் அவர்களின் பயணம் ஆரம்பமாகியது. கிட்டதட்ட 8 மணித்தியாலங்களுக்கு மேல் பயணம் செய்தால் தான் அவர்களின் வீட்டிற்கு செல்ல முடியும்.

இரவு 12 மணிக்கு பயணத்தில் இருந்தே அவளிற்கு வாழ்த்து சொன்னார்கள். முதல் அழைப்பாக அவர்களின் வாழ்த்து அவளிற்கு கிடைத்தாலும் அவர்கள் அருகில் இல்லையே என்ற வருத்தத்தில் சோர்வாகவே இருந்தாள்.

தனக்கு அந்த பிறந்த நாளே பிடிக்கவில்லை என வருத்தமாக கூறினாள். தன் சந்தோசம் எல்லாமே நீங்கள் சென்ற போதே உங்களுடன் வந்து விட்டது என்று கலங்கினாள்.

அவளின் சோகமான வார்த்தைகளையும் உடைந்த மனதையும் தாங்க முடியாது அவளிற்காக தாங்கள் வருவதை செல்வன் கூறினான். உனக்கு சொல்லாமல் சப்ரைஸ் ஆக வர நினைத்தோம் ஆனால் உன் சோகமான வார்த்தைகளை கேட்க முடியாமல் சொல்லி விட்டோம் என்றான்.

அப்போ தான் அவளின் குரலில் ஒர் புத்துணர்ச்சி வந்தது. நீங்க இல்லாமல் ரொம்ப டல் ஆக இருக்கும் என்று கவலையுடன் இருந்தன் இப்ப சந்தோசம் என்று துள்ளிக் குதித்தாள். அவளின் மகிழ்ச்சியை பார்த்து செல்வனும் செல்வியும் மகிழ்ந்தார்கள்.

இத்தனை வருட காலத்தில் இந்த பிறந்த நாள் நீங்க இல்லாம போய்டுமா என்று எவ்வளவு வருத்தமா இருந்தன் தெரியுமா என்று கூறினாள். நாங்க சுத்தி திரிற இடங்கள், சேர்ந்து போகும் கோயில்கள் எல்லாமே போகாம மிஸ் பண்ணிடுவனோ என்று நினைச்சன் என்றாள்.

அவர்கள் வருகிறார்கள் என்ற மகிழ்வுடனே அவர்களுடன் பல மணி நேரமாய் தொலைபேசியில் உரையாடிபடி இருந்தாள். இத்தனை நாட்கள் கூட இருந்த போது அனுபவிக்காத மகிழ்வை அனுபவித்தாள். மற்ற நண்பர்களின் வாழ்த்தையும் நெஞ்சோடு வாங்கிய படி தூங்கினாள்.

மறுநாள் காலை ஆறுமணியளவில் அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள். அசந்து தூங்கியபடி இருந்தவளை ஹப்பி பேத் டே என்று கூறி இருவரும் எழுப்பினார்கள். என்றுமே தாமதமாக எழும்புபவளை அவர்கள் நேரத்துடன் எழுப்பி இருந்தார்கள்.

அதற்கு மேல் அவளை தூங்க விடாது செல்ல குறும்புகள் செய்து சிரித்தார்கள். ஊரிலயே இருந்திருக்கலாம் ஏனடா வந்தீங்கள் என்று கேட்குமளவிற்கு அவளை சீண்டி சிணுங்க வைத்தார்கள். அவர்கள் தொல்லை தாங்காமலே அவள் படுக்கையை விட்டு எழுந்தாள்.

பிரியா சூடாக தேனீர் கொண்டு வர செல்வியும் செல்வனும் குடித்தார்கள். அப்படியே தேனீரை குமாருக்கும் பரிமாறினாள். அவர்களின் மகிழ்ச்சியை பார்த்து அந்த வீட்டில் அனைவரும் மகிழ்ந்தார்கள்.

சரி எல்லாரும் குளித்து விட்டு வாங்க நான் சாப்பாடு சூடா எடுத்து வைக்கிறன் என்றாள் பிரியா. அதன்படி செல்வனும் செல்வியும் குமாரும் அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள். ரம்யாவும் எழுந்து குளியலறை சென்றாள்.

எல்லாரும் சீக்கிரம் ரெடி ஆகி வந்து பிரியா வீட்டில் காலை உணவு உண்டார்கள். சரி நொன் ஆபிஸிக்கு போய்ட்டு வாறன் நீங்க எங்கயாச்சும் வெளில போறதெண்டா மற்ற கார எடுத்திட்டு போங்க என்று கூறி செல்வனிடம் கார் திறப்பை கொடுத்தார்.

குமார் ஆபிஸ் செல்ல இவர்கள் மூவரும் வெளியில் செல்ல தீர்மானித்தார்கள். அவர்களின் ஆலோசனைப்படி ஏற்கனவே ரெடி ஆகி நின்ற சிவாவும் தனேஷூம் ரம்யா வீட்டிற்கு வந்தார்கள். என்ன செல்வி ஏற்கனவே எல்லாம் பிளான் பண்ணினீங்களா என்று செல்லமாய் சிணுங்கினாள் ரம்யா.

சரி கிளம்பலாமா என்ற சிவாவின் குரலிற்கு இருங்க இன்னுமொரு விஐபி வரணும் என்றாள் செல்வி. விஐபி யா அது யாருப்பா என்று ரம்யா இழுக்க அவங்க உங்களுக்கு விஐபி இல்லப்பா நம்ம செல்வனுக்கு தான் விஐபி என்றாள் செல்வி. அட நம்ம ரேவதியா என்றாள் ரமி. பாத்தியா கரெக்டா கண்டு பிடிச்சிட்டாய் அவளே தான் என்றாள் செல்வி.

என்னடி வம்பு பண்ணுறீங்களா உங்கள என்று அடிக்க சென்றவனின் பிடிக்குள் சிக்காமல் இருவரும் ஓடினார்கள். அவனும் அவர்களை துரத்திய வண்ணம் பின்னால் ஓடினான். அந்த நொடி ரேவதி கார் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தது.

அவர்களின் காரை பார்த்ததும் செல்வன் அவர்களை துரத்துவதை விட்டு அமைதியானான். என்ன சார் ரேவதி மெடத்தை பார்த்ததும் எங்கள அடிக்கணும் என்ற எண்ணத்தை விட்டிட்டிங்களா? இல்ல அவங்கள அடிக்க போறீங்களா என்றாள் செல்வி.

ஏய் செல்வி சார் எங்கள தான் துரத்தி துரத்தி அடிப்பார். அவங்கள சைற் மட்டும் தான் அடிப்பார் இல்லையா சார் என்று வம்புக்கிழுத்தாள் ரமி. பிறந்த நாள் அன்னிக்கு என்னட்ட உதை வாங்காம இருக்க மாட்டியா என்று அவள் காதை பிடித்து திருகினான்.

என்னப்பா எல்லாரும் சேர்ந்து செல்வன கலாய்க்கிறீங்க போல என்னாச்சு செல்வன் என்றாள் ரேவதி. அட கடவுளே இங்க பாருடா நாங்க செல்வன் சார கலாய்க்க ரேவதி மெடம் கேள்வி கேக்கிறாங்க. சரிங்க மெடம் நாங்க சார ஒண்ணுமே சொல்லல என்று கூறினார்கள் செல்வியும் ரமியும் ஒரே குரலில்.

ரேவதியின் முகம் வெட்கத்தில் சிவந்தது. நாணத்தோடு தலையை குனிந்தாள். சரி சரி இதுக்கெல்லாம் போய் வெக்க படலாமா கூல் டியர் என்றாள் ரமி.

சரி இவங்க நம்ம ஃபிரன்ஸ் சிவா, தனேஷ் என அவர்களை அறிமுகப் படுத்தினார்கள். இவங்க தான் நம்ம செல்வன் சார் சொன்ன அந்த நாட்டிய சிகாமணி மிஸ் ரேவதி என்றாள். என்னப்பா எதையுமே விட்டு வைக்காமல் சொல்லிட்டிங்களா என்று சிணுங்கினாள் ரேவதி.

நட்பின் சீண்டல்கள் தொடரும்……….!
பாகம் 27
Last edited by Aruntha on Tue Mar 20, 2012 11:18 am, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by ஆதித்தன் » Mon Mar 19, 2012 8:37 pm

இடையில் சென்று வந்த பயணத்தையும் நேக்கா கதைக்குள் புகுத்துவிட்டீர்களா????


நன்றாக இருக்கிறது, தொடரட்டும்....
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Mon Mar 19, 2012 8:39 pm

Athithan wrote:இடையில் சென்று வந்த பயணத்தையும் நேக்கா கதைக்குள் புகுத்துவிட்டீர்களா????


நன்றாக இருக்கிறது, தொடரட்டும்....
இதெல்லாம் எப்பிடி உங்களால மட்டும் முடிது?
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by muthulakshmi123 » Mon Mar 19, 2012 10:19 pm

Aruntha wrote:
Athithan wrote:இடையில் சென்று வந்த பயணத்தையும் நேக்கா கதைக்குள் புகுத்துவிட்டீர்களா????


நன்றாக இருக்கிறது, தொடரட்டும்....
இதெல்லாம் எப்பிடி உங்களால மட்டும் முடிது?
ஆமா எப்படி முடியுது..நானும் கதை படித்தேன்
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Mon Mar 19, 2012 10:21 pm

இவங்க யாருப்பா கேள்வி கேட்டு கேட்டே என்ன இவ்வளவு தூரம் இளைக்க வச்சிட்டாங்க
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 27

Post by Aruntha » Tue Mar 20, 2012 11:17 am

உங்களோட வந்ததும் சண்டை போட்டதில ரம்யாக்கு விஷ் பண்ண மறந்திட்டன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரம்யா என்றாள் ரேவதி. நன்றி ரேவதி உங்களுக்கு இவங்க எப்ப சொன்னாங்க என் பிறந்த நாள் பத்தி எல்லாம் என்றாள். நேற்று தான் சொன்னாங்க காலைல சீக்கிரம் வந்திடுங்க என்று.

சரி எங்க கிளம்பலாம் என்றான் சிவா. நாம் எல்லாரும் ரெஸ்டோறன்ட் க்கு போவம் அங்க சின்னதா பார்ட்டி வச்சிட்டு அப்பிடியே சும்மா இருந்து கொஞ்ச நேரம் பேசிட்டு வருவம். ஆன்டி மத்தியானம் வீட்டுக்கு சாப்பிட வர சொன்னாங்க அதனால எப்பிடியும் வரணும் என்றாள் செல்வி.

சரிப்பா நாம கிளம்புவம் என்று அம்மாவிடம் கூறி விட்டு வருகிறேன் என்று சென்றாள் ரம்யா. பிரியா வெளியில் வர சரி ஆன்டி நாங்க கிளம்புறம் என்று கூறி அனைவரும் காரில் ஏறினார்கள். அவர்கள் கார் நகரின் பிரபல ஹோட்டல் நோக்கி விரைந்தது.

அனைவரும் ஹோட்டலை அடைந்ததும் சரி உங்களுக்கு என்ன என்ன வேணும் என்று ஓடர் பண்ணுங்க என்றான் செல்வன். நீயே ஓடர் பண்ணு எங்களுக்கு எது என்றாலும் ஓகே என்றாள் ரமி. பேர்த்டே பேபி நீ தான் நீயே ஓடர் செய் என்றாள் செல்வி.

அட இவளெல்லாம் பேபியா? பேர்த்டே கிழவி என்று சொல் என்றான் செல்வன். ஏனப்பா பேர்த்டே அன்றாவது நீங்க அவள கலாய்க்காம விட மாட்டிங்களா பாவம் அவள் என்றாள் ரேவதி.

அப்பாடா இப்பவாச்சும் ரேவதி எனக்கு சப்போட் பண்ணுறீங்களே ரொம்ப நன்றிப்பா என்றாள். சரி என்ன சிவா நீயும் தனேஷூம் எமுவுமே பேசாம இருக்கிறீங்க கதையுங்களன் என்றாள்.

இல்லடி நீ தான் அவங்க இரண்டு பேரும் இல்லை என்றதால ரொம்ப அப்செற் ஆக இருந்தாய் அது தான் ஒரு வாரமா கதைக்காததை எல்லாம் கதைக்கட்டும் என்று விட்டிட்டு பாத்திட்டு இருக்கம் என்றான் சிவா. ஆமா ரம்யா அது தான் என்றான் தனேஷூம். நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா விடுங்கடா என்றாள் ரமி.

ஹோட்டலில் ரமியின் பிறந்த நாள் பார்ட்டி ரொம்ப மகிழ்வாக இருந்தது. நண்பர்கள் ஒவ்வொருவரும் படங்கள் எடுத்து மகிழ்ந்திருந்தார்கள். அன்று தான் ரேவதிக்கும் அவர்களின் நட்பு பாசங்களை பார்த்திட வாய்ப்பு கிடைத்தது.

என்ன ரேவதி ரொம்ப சைலன்ஸ் ஆக இருக்காய் இவங்க எல்லாம் இப்பிடி தான் ரொம்ப அட்டகாசம் பண்ணுவாங்க. உனக்கு எங்க நட்பு புதுசு தானே அது தான் நம்ம கூட சேர்ந்திடு அப்ப உனக்கும் இந்த சந்தோசம் பழகிடும் என்றான்.

அதுவரை தனிமையாக கதிரையில் அமர்ந்திருந்த ரேவதி செல்வனுக்கு அருகில் சென்று அமர்ந்தாள். அவளின் மனதில் தன் வாழ்க்கை துணையாகவே நினைத்து வாழ்ந்து வரும் செல்வனுக்கு அருகில் அமர்ந்திருப்பது மகிழ்வாக இருந்தது.

இருந்தும் அவளால் அவன் கூட இயல்பாக இருக்க முடியவில்லை. அவள் மனதில் அவனை தன் வாழ்க்கையாக நினைத்து இருப்பவளால் மற்ற நண்பர்களை போல் நட்பாக பகிடியாக பழக முடியவில்லை. மனதில் சிறு தயக்கம் இருந்தது.

என்ன ரேவதி ரொம்ப அமைதியா இருக்காய். இங்க பாரு நாங்க எவ்வளவு கூல் ஆக இருக்கம் என்ன செல்வன் இருக்கார் என்று வெக்கப்படுறியா என சீண்டினாள் ரமி.

ரேவதி இங்க வா என அவளை அருகில் அழைத்து அவள் காதுக்குள் ஏதோ கூறினான் செல்வன். அவளும் சிரித்துவிட்டு அவனை நாணத்தோடு நோக்கினாள்.

ஏய் என்ன நாங்க இவ்வளவு பேர் இருக்கிறம் அவளோட மட்டும் இரகசியம் என்ன நடக்குது ஒண்ணுமே புரியலயே என்றாள் செல்வி. டேய் மச்சி என்னடா ரேவதிய கண்டதும் எங்கள மறந்திட்டியா என்று சீண்டினார்கள் சிவாவும் தனேஷூம்.

ஆமா எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் அதெல்லாம் பர்சனல் உங்களுக்கு சொல்ல முடியாது இல்லையா ரேவதி என்றான் செல்வன். ஆமா ஆமா அதெல்லாம் உங்களுக்கு சொல்ல முடியா செல்வன் இப்ப வேணாம் நாங்க அப்புறமா தனிமையா கதைப்பம் என்றாள் ரேவதி.

அட பார்டா இவ்வளவு நேரமும் அமைதியா இருந்த நம்ம ரேவதியா இப்பிடி கதைக்கிறாள். சரி சரி செல்வன் ஏதோ சொல்லிட்டான் என்ன என்று தான் தெரியல என்றான் சிவா. இல்லடா சிவா எங்கள பதிலுக்கு கதைச்சா தான் வெல்லலாம் என்று சார் அட்வைஸ் பண்ணி இருப்பார் என்றாள் ரமி.

சரி கதைச்சது காணும் முதல்ல எங்க கேள்விக்கு பதில் சொல்லுங்க என்று கூறி ரேதியின் தோளில் கைகளை போட்டு அவளை அணைத்த படி ஜோடிப் பொருத்தம் எப்பிடி ஓகே யா என்றான் செல்வன்.

அவனிற்கு ரமியுடன் நட்பாய் நெருக்கமாய் பழகியதில் ரேவதியுடன் அப்படி பழகுவதில் தப்பெதுவும் தெரியவில்லை. இருந்தும் ரேவதி சற்று கூச்சத்துடன் அவளை பார்த்தாள்.

என்ன கேள்வி கேட்டன் பதிலயே காணம் ரொம்ப கதைத்தீங்க இப்ப பதில சொல்ல யோசிக்கிறீங்க என்று அவர்களை வம்புக்கு இழுத்தான் செல்வன். அவனது அணைப்பில் தன்னை மறந்தவளாய் அவன் குறும்புக் கேள்வியில் சிலிர்த்தவளாய் அவன் கைகளை மெதுவாக பற்றி அணைத்தாள்.

என்னடா செல்வா எங்களுக்கும் மேலால நீ கதைச்சா நாங்க உன் வழிக்கு வந்து அமைதியாகிடுவம் என்று நினைச்சியா அதெல்லாம் முடியாதப்பா ஜோடிப் பொருத்தம் சூப்பர் என்றாள் ரமி.

இருந்தும் ஒரே ஒரு குறைதான் என்று இழுத்தாள் செல்வி. என்ன என்று சந்தேகமா பார்த்தவனை நோக்கி அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா நீ ரொம்ப கதைக்கிறாய் ஆனால் ரேவதி தான் எதையுமே கதைக்காமல் ஓவரா வெக்க படுறாள் என்றாள்.

செல்வி அடி வாங்க போறீங்க ரொம்ப தான் கடிக்கிறீங்கப்பா என்றாள் ரேவதி. செல்வன் நீங்களாச்சும் சொல்லுங்க நான் பாவமில்லா என்று சிணுங்கிய படி அவன் தோளில் சாய்ந்தாள்.

என்ன என் ரேவதிய எல்லாரும் சேர்ந்து கலாய்க்கிறீங்க நான் இருக்கிறனம்மா நீ வொறி பண்ணாத என்று கூறி அவளின் மேல் அவனும் சாய்ந்தான்.

இந்த போஸ் கூட நல்லா இருக்கே ஸ்மைல் பிளீஸ் என கூறி சிவா போட்டோ எடுத்தான். ஜோடி நம்பர் வன் என்று சொல்லி நாளைக்கு பேப்பரில போடுவம் என்றான் தனேஷ். நல்ல ஐடியா தலைப்பு செய்தியா போட சொல்லுவம் என்றாள் செல்வி. எல்லா பத்திரிகைக்கும் தவறாம குடுக்கணும் என்றாள் ரமி.

அவர்களின் குறும்பு, செல்வனின் நெருக்கம் ரேவதிக்கு மகிழ்வாக இருந்தது. இரண்டாவது நாள் சந்திப்பிலேயே தான் செல்வன் கூட இத்தனை உரிமையாக நெருங்கி பழகுவதை நினைக்க அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

டேய் செல்வா இந்த முறை என்னோட பிறந்த நாள்என்வாழ்க்கைல மறக்கவே முடியாது. வித்தியாசமான அனுபவம் இனம் புரியாத மகிழ்ச்சி என்று கூறினாள் ரமி. நீங்க வராமல் போயிருந்தால் இந்த மகிழ்ச்சியே இருந்திருக்காது என்றாள்.

சிறுவயது முதல் பழகிய ரம்யாவுடன் பழகுவதற்கு எப்படி தயக்கமில்லையோ அதே போல் ரேவதியுடன் பழகவும் செல்வனுக்கு தயக்கம் இருக்கவில்லை. இருந்தும் அவனுக்கும் புரியவில்லை தான்எப்படி பழகிய சில நாட்களுக்குள் ரேவதியுடன் இத்தனை தூரம் நெருக்கமானேன் என்பது.

ஏய் செல்வா என்னடா யோசிக்கிறாய் என்ற தனேஷின் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தவன் ஒண்ணுமில்லடா என்றான். அவனிற்கும் அன்றய நாள் புதிய அனுபவமாகவும் வேவதியின் நட்பு மனதுக்கு பிடித்தமாயும் இருந்தது.

பிறந்த நாள் கொண்டாட்டம் தொடரும்……………….!
பாகம் 28
Last edited by Aruntha on Wed Mar 21, 2012 9:22 am, edited 1 time in total.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by udayakumar » Wed Mar 21, 2012 1:57 am

ம்.... தொடரட்டும் தொடரட்டும் என்று முடிகிறமு என்று பார்க்கலாம் முடிந்த பின் சொல்லுங்கள் படித்துப் பார்க்கிறேன் ok வா...!!!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Wed Mar 21, 2012 7:59 am

அப்ப படிக்காமலா அண்ணா இத்தனை பின்னூட்டங்கள் கொடுத்திங்க. :aah: :aah: :aah: :aah: :aah:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”