அழகிய தேவதை - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by udayakumar » Fri Mar 16, 2012 10:26 pm

காதல்ரசனை , குடும்ப ரசனை, கதைக்கேற்ற வில்லத்தனம் எல்லாமே சேர்ந்திருக்கிறது உங்களிடம்...ஒரு காதல் திருமணமாக இருக்குமோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Fri Mar 16, 2012 10:37 pm

udayakumar wrote:காதல்ரசனை , குடும்ப ரசனை, கதைக்கேற்ற வில்லத்தனம் எல்லாமே சேர்ந்திருக்கிறது உங்களிடம்...ஒரு காதல் திருமணமாக இருக்குமோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நான் காதல் திருமணம் தான். ஆனால் இதெல்லாம் ஒரு கற்பனை கதை தான்
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by udayakumar » Fri Mar 16, 2012 11:00 pm

ஓகோ அப்படியா!!! ஆதி கேட்டுக்கோங்க கற்பனையெல்லாம் எங்க இருந்து வருதுண்ணு..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Fri Mar 16, 2012 11:03 pm

udayakumar wrote:ஓகோ அப்படியா!!! ஆதி கேட்டுக்கோங்க கற்பனையெல்லாம் எங்க இருந்து வருதுண்ணு..
இதென்ன புதுக்கதை? கற்பனை எங்க இருந்து வரும்? எனக்கே தெரியலப்பா
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by udayakumar » Fri Mar 16, 2012 11:21 pm

கற்பனை உள்ளத்தில் உள்ள ஞாபகங்கள் ..இதுவரை கடந்து வந்த சூழ்நிலைகள்.. எதிர்காலக் கற்பனையே உங்களுக்குள்தான் இருக்கிறது..அப்படியிருக்க இது எங்கிருந்து வந்திருக்கும்..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Fri Mar 16, 2012 11:33 pm

ஆஹா அது வேறயா. அப்பிடி எல்லாம் இல்ல சும்மா தான் :thins: :thins:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 24

Post by Aruntha » Sat Mar 17, 2012 1:46 pm

என்னப்பா சிவா உன் நண்பன் செல்வன் குடும்பம் ரொம்ப அழகான குடும்பமடா பாக்கவே சந்தோசமா இருந்திச்சு என்றார் சிவாவின் அப்பா. ஆமா அப்பா எனக்கு கூட அவங்கட பாசத்தை பார்க்க சந்தோசமா இருக்கும். செல்வனும் செல்வியும் அடிபட்டு விளையாடுறத பாக்க எனக்கு ஒரு சகோதரம் இல்லையே என்று வருத்தமா இருக்கும் என்றான்.

அப்பிடி எல்லாம் சொல்ல கூடாது நீங்க எங்க வீட்டு இராஜகுமாரன் உனக்கு என்னடா குறை? கூட பிறந்தவங்க இருந்தால் தானா சந்தோசம் நம்ம கூட உனக்கு சந்தோசம் இல்லையா என்றார்.

ஐயோ அப்பா நான் அந்த அர்த்தத்தில சொல்லல. அவங்க இரண்டு பேர் கூடயும் இருக்கிறப்ப எனக்கு மனசெல்லாம் ரொம்ப சந்தோசமா இருக்கும். அவங்க அம்மாவோட பாசத்தை பார்க்க எனக்கே உடம்பு புல்லரிக்கும் அத சொன்னன்.

மற்றும் படி உங்க பாசத்தை யாருப்பா குறை சொன்னாங்க. உங்கள போல அப்பா அம்மா எனக்கு கிடைச்சது நான் செய்த பாக்கியம் என்றான். என்னப்பா நீ எங்க பையன் நீ மகனா கிடைக்க நாங்க தான் குடுத்து வைச்சிருக்கணும் என்றார் தந்தை.

இதென்ன ரொம்ப கதைக்கிறீங்க எல்லாரும். என் பையனுக்கு கூட பிறந்தவங்க இல்ல என்று வருத்தமா? என்ன பண்ணுறது இப்ப சொல்லுறாய் கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி சொல்லி இருந்தால் பாத்திருக்கலாம் என்றார் சிவாவின் அம்மா.

என்ன ரொம்ப ரொமான்ஸ் மூட்ல கதைக்கிறாய்? நமக்கு வயசுக்கு வந்த பையன் இருக்கான் மறந்திடாத என்று சிரித்தார் சிவாவின் தந்தை. சரி சரி விடுங்கப்பா என்று சொல்லி வெட்கத்துடன் உள்ளே சென்றாள். ஐயோ அப்பா அம்மாக்கு வெக்கமெல்லாம் வருது என்று சிரித்தபடி அவளின் பின்னே ஓடினான் சிவா.

அவர்களின் மகிழ்ச்சியை பார்த்து மனம் மகிழ்ந்த மாசிலாமணியையும் சில சோகங்கள் எட்டிப் பார்த்தது. அவரின் மனம் ஓர் இடத்தில் நிற்க தடுமாறியது. பல வருடங்கள் பின்னோக்கி செல்ல துடித்தது.

கண்களை மூடி கதிரையில் சாய்ந்தார். நெஞ்சோடு நிறைந்த நினைவுகள் இதயத்தை வாட்டியது. அவரை அறியாமலே விழிகளில் நீர்த்துளிகள் கசிந்தது. தான் வாழ் நாளில் தப்பு செய்து விட்டோமோ என அவர் மனசு உள்ளுக்குள் அழுதது. ஆயிரம் வினாக்களை தொடுத்தது. இருந்தும் அவர் மனைவி மற்றும் சிவாவின் மகிழ்ச்சியை பார்க்கையில் அவரின் மனசு சற்று ஆறுதல் அடைந்தது. அப்படியே கதிரையில் தூங்கி விட்டார்.

என்னப்பா இதிலயே தூங்கிட்டிங்க. உடம்புக்கு ஏதும் அசதியா இருக்கா என்று வந்த சிவாவை பின் தொடர்ந்து வந்தாள் அவன் தாய். என்னாச்சுப்பா தேத்தண்ணி ஏதாச்சும் ஊத்தி தரவா என்று கேட்டாள். இல்லப்பா நான் கொஞ்சம் வெளில போயிட்டு வாறன் என்று கூறி மெதுவாக எழுந்து வெளியே சென்றார்.

மறுநாள் தனேஷ் பிறந்த நாள். இருந்தும் அவர்கள் நினைத்தபடி கலகலப்பாய் இருக்கவில்லை. அவர்கள் போட்ட முன் ஆயத்தங்கள் எல்லாம் செல்வனின் திடீர் சுகவீனத்தால் இல்லால் போனதால் அவர்களால் மகிழ்வாக இருக்க முடியவில்லை.

தனேஷ் சொறிடா நாங்க நினைச்சது ஏதோ நடந்தது ஏதோ என்று சொல்லி பிறந்த நாளை மிகவும் சிறியளவில் கொண்டாடி முடித்தார்கள். அடேய் அதுக்கென்ன நம்ம ரம்யா பிறந்த நாள் இன்னும் ஒரு வாரத்தில வருது. அத சிறப்பா கொண்டாடி முடிக்கலாம் என்றான்.

ஆமா அதுவும் சரிதான். 21 வதுபிறந்த நாள் ரொம்ப பெருசா கொண்டாடணும் இப்பவே பிளான் பண்ணினால் தான் சரி. கடவுளே நம்ம பிளான்ல எந்த தடையும் வந்திடாமபாத்துக்கோ என்றான் செல்வன்.

சரிடா அதுக்கு ரொம்ப நாள் இருக்கு இப்ப ஏன் அத பத்திவிடுங்க என்றாள் ரம்யா. ரொம்ப நாள் இல்லம்மா இன்னும் 1 வாரம் அதாவது 7 நாள் தான் இருக்கு. அதயாச்சும் ரொம்ப பெருசா செலிபறேட் பண்ணணும் என்றாள் செல்வி.

ஆமாடா நாம பழக ஆரம்பிச்சதில இருந்து இத்தனை வருசமா ஒண்ணா இருந்து எவ்வளவு அட்டகாசம் பண்ணிட்டம். இந்த பிறந்த நாள் உனக்கு ரொம்ப முக்கியம் ஏன் தெரியுமா? உனக்கு 21 வயது. அதனால தான் பெருசா செய்யணும் என்றான்.

சரிங்கடா செய்திட்டா போச்சு அத நாங்க வீட்டில போய் பிளான் பண்ணிக்கலாம் இப்ப தனேஷ் பிறந்த நாள கவனிப்பம் என்றாள். அனைவரும் குதூகலமாய் அவன் பிறந்த நாளை களித்தார்கள்.

தனேஷ் பிறந்த நாளை முடித்து கொண்டு அனைவரும் வீடு சென்றார்கள். தனேஷிற்கு மகிழ்வாக இருந்தாலும் மனதுக்குள் சிறிதாக ஒரு கவலை. தன் காதலை இன்னமும் செல்வியிடம் சொல்லவில்லை என்று.

அவன் தன் சோகங்கள் மகிழ்வுகளை மெல்ல வரைந்தான் தன்னுடைய நாட்குறிப்பில். பாவம் அந்த நாட்குறிப்பும் இவன் மகிழ்ச்சிகளை விட ஏக்கங்களை தான் அதிகமாக தாங்கி இருந்தது. ஏதோ தன் மனக் குமுறல்களை கொட்டித் தீர்த்த திருப்தியில் தூங்க சென்றான்.

வீட்டிற்கு சென்ற செல்வனும் செல்வியும் ரமி பிறந்த நாள் பத்தி முன் ஆயத்தங்கள் செய்தார்கள். எப்படி அவளுக்கு கிப்ட் குடுப்பது எப்படி அவள் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது என்றெல்லாம் திட்டங்கள் போட்டார்கள்.

அதன் படி ரேவதியையும் ரமி பிறந்த நாளுக்கு கூப்பிட திட்டமிட்டார்கள். அவள் நம்பருக்கு போன் டயல் செய்ய செல்வி போனை எடுக்க அவளின் தொலை பேசி சிணுங்கியது.

யாரென பார்க்கும் ஆவலுடன் தொலை பேசியை தூக்கியவள் ஹலோ செல்வியா என்ற பதற்றமான குரலிற்கு ஆமா நான் செல்வி தான் சொல்லுங்க என்றாள்.

உரையாடல் தொடரும்…………!
பாகம் 25
Last edited by Aruntha on Sun Mar 18, 2012 1:43 pm, edited 1 time in total.
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by thamilselvi » Sat Mar 17, 2012 3:42 pm

நேரமின்மையால் அழகிய தேவதை - தொடர்கதை நான்கு பாகம் மட்டுமே படிக்க முடிந்தது. இயற்கையை பற்றி நீங்கள் விமர்சித்த விதம் நன்றாக இருந்தது. முதலிரவிற்கு பிந்தைய நாள் காட்சிகளை நீங்கள் எழுதிய விதம் ரசிக்கும்படியாக இருந்தது...................மற்றவையை பிறகு படித்துவிட்டு சொல்கிறேன்.... தொடருங்கள் உங்கள் கதையை அழகிய தேவதையே
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Sat Mar 17, 2012 4:05 pm

thamilselvi wrote:நேரமின்மையால் அழகிய தேவதை - தொடர்கதை நான்கு பாகம் மட்டுமே படிக்க முடிந்தது. இயற்கையை பற்றி நீங்கள் விமர்சித்த விதம் நன்றாக இருந்தது. முதலிரவிற்கு பிந்தைய நாள் காட்சிகளை நீங்கள் எழுதிய விதம் ரசிக்கும்படியாக இருந்தது...................மற்றவையை பிறகு படித்துவிட்டு சொல்கிறேன்.... தொடருங்கள் உங்கள் கதையை அழகிய தேவதையே
நன்றி தமிழ்ச்செல்வி அக்கா. உங்க கதை கூட ரொம்ப அழகா போய்ட்டு இருக்கு. நிறையவே பயனுள்ள விடயங்கள் சொல்றீங்க தொடருங்க
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 25

Post by Aruntha » Sun Mar 18, 2012 1:42 pm

நான் ஊரில இருந்து டாக்டரம்மா பேசுறன் கமலி இருக்காளா என்றார். ஆமா அம்மா இருக்காங்க ஏன் நீங்க பதற்றமா இருக்கிறீங்க ஏதாச்சும் பிரச்சினையா என்றாள். ஆமாடா உங்க தாத்தாக்கு உடம்பு சரியில்லை. ரொம்ப மோசமா இருக்கு அது தான் அம்மா கூட கதைக்கணும் என்றார்.

இருங்கம்மா அம்மாவிடம் போன் குடுக்கிறன் என்று விரைந்தவள் அம்மா டாக்டரம்மா போன் என கூறி கொடுத்தாள்.

ஹலோ சொல்லுங்கம்மா என்னாச்சு என்றாள் பதற்றமாக. இல்லம்மா உன் அப்பாக்கு நாடி எல்லாம் குறைஞ்சிடிச்சு. உடம்புக்கு முடியல. வேண்டியவங்களுக்கு சொன்னா நல்லா இருக்கும் என்று தான் உனக்கு எடுத்தன் என்றார்.

அப்பாக்கு என்னம்மா ஆச்சு உடம்புக்கு ரொம்ப முடியலயா என்றாள். அவருக்கும் வயசாயிற்று தானே ஒருக்கா நீயும் பசங்களும் வந்தா அவருக்கும் ஆறுதலா இருக்கும் என்றார்.

சரியம்மா நாங்க ராத்திரிக்கே கிளம்பிறம் என்று கூறி போனை வைத்தாள் கமலி.

என்னம்மா கமலி ஏன் பதற்றமா இருக்காய் என்ற குமாரின் வார்த்தைக்கு பதில் கூற முடியாதவளாய் அவன் மார்போடு சாய்ந்து அழ ஆரம்பித்தாள். என்னம்மா என்னாச்சு ஏன் அழுறாய் யாரு போனில கதைச்சாங்க என்றான்.

செல்வி மெதுவாக தாத்தாக்கு உடம்புக்கு ரொம்ப முடியலயாம் அது தான் டாக்டரம்மா வந்து பாக்க சொன்னாங்க என்றாள். இதென்னம்மா சின்ன பிள்ளை போல அப்பாக்கு எதுவும் ஆகாது நாங்க இப்பவே கிளம்பி ஊருக்கு போவம் என்றான் குமார்.

கமலியின் அழுகைக் குரல் கேட்டு வீட்டிற்கு விரைந்து வந்தார்கள் பிரியாவும் ரம்யாவும். என்ன கமலி என்னாச்சு என்று வினவ அவள் அழுகை மேலும் பலமாக வெடித்தது.

ஆன்டி தாத்தாக்கு உடம்புக்கு முடியலயாம். ஊரில இருந்து போன் பண்ணினாங்க எங்கள உடன வரட்டாம் என்றாள். ஏய் கமலி இதென்ன சும்மா உடம்புக்கு முடியலதானே வயசான இதெல்லாம் சகஜம் சரி நீங்க போய் பாத்திட்டு வாங்க என்று ஆறுதல் கூறினாள்.

இரவே அவர்கள் ஊருக்கு கிளம்ப ஆயத்தமானார்கள். செல்வி உனக்கும் செல்வனுக்கும் ஒரு வாரத்துக்கு தேவையாக உடுப்புகளை எடுத்து வை என்றார் கமலி. ரம்யா அவர்களுக்கு ஒத்தாசையாக இருந்தாள்.

ஓர் மணி நேரத்துக்குள் அவர்கள் புறப்பட தயாரானார்கள். ராஸன் எப்பிடியும் நாங்கள் வர ஒரு வாரமாகும் எனக்கு ஆபிஸில் லீவு சொல்லி விடு என்றான் குமார்.

ஒரு வாரம் என்ற சொல்லை கேட்டதும் ரம்யா கண்கள் நிறைந்தது. இத்தனை வருடங்களாக பழகியதிலிருந்து இன்று வரை அவர்கள் பிறந்த நாளில் பிரிந்தது இல்லை. செல்வி, செல்வன் இருக்க மாட்டார்கள் என்பதை அவளால் ஏற்க முடியவில்லை.

இது வரையில் வெளியூர் சரி சுற்றுலா சரி செல்வதாக இருந்தாலும் எல்லாரும் சேர்ந்தே செல்வார்கள். ஊருக்கு போவதாக இருந்தால் கூட எல்லாரும் சேர்ந்து சென்று மகிழ்ந்திருப்பது தான் வழமை.

ஆனால் இன்று அவசரமாக செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டதால் எல்லாரும் சேர்ந்து செல்ல முடியவில்லை. வார்த்தைகள் பரிமாற மனமின்றி மௌனமான விழிகள் நிறைந்த கண்ணீர் பார்வைகளுடன் செல்வன், செல்வி, ரமி மூவரும் விடை பெற்றார்கள்.

போனதும் போன் பண்ணுங்கடா என்றாள் ரமி. கண்டிப்பா நாம பாக்காம பேசாம இருந்ததே இல்ல போனதும் போன் பண்ணுறம் என்றனர். அவர்களை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தனர் பிரியாவும் ராஜனும்.

அவர்கள் கார் கேற்றை கடந்து சென்றதும் விம்மலுடன் இருந்த ரம்யா அப்படியே கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தாள். அவர்கள் ஒன்றாக வளர்ந்தமையால் இந்த பிரிவு அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அந்த இரவுப் பொழுதில் ஒன்றாய் இருந்து சண்டை செய்வதும் சிரித்து மகிழ்வதும் அவள் கண் முன்னே படமாய் வந்தது. அவர்கள் இருவரும் இல்லாத அந்த நொடிகளை நினைத்து வருந்திய படி கட்டிலிலே புரண்டாள்.

அவளால் தன் மனதின் சோகங்களை தாங்க முடியவில்லை. சிறிய பிரிவாக இருந்தாலும் பழகிய நினைவுகள் அவளை கொல்லாமல் கொல்ல ஆரம்பித்தது. அவளால் இயல்பு நிலைக்கு செல்ல முடியவில்லை.

செல்வனாலும் செல்வியாலும் ரமியாவின் நிலையை உணர முடிந்தது. தாம் இருவரும் இருப்பதால் பிரிவு பெரிதாக தெரியாதிருந்தாலும் அவளை அது வெகுவாக பாதிக்கும் என்பதை உணர்ந்தனர். அந்த நொடி அவளை தொலைபேசியில் அழைத்து மேலும் கவலைப்படுத்த மனமின்றி சிவாவிற்கும் தனேஷிற்கும் போன் செய்தார்கள்.

தாங்கள் அவசரமாக ஊருக்கு போக வேண்டி வந்ததையும் ரமி தனியாக இருப்பதையும் கூறினார்கள். அவளுக்கு போன் பண்ணி ஆறுதலாக கதைக்கும் படி சொன்னார்கள். முடிந்தளவு தாங்கள் வரும் வரை அதிகமான நேரத்தை அவளுடன் சென்று களிக்கும் படியும் கேட்டார்கள்.

அவர்களும் சம்மதித்து இருவருக்கும் ஆறுதல் கூறினார்கள். நாங்க ரமியாவ பாக்கிறம் நீங்க கவலை படாம போங்க முதல் போய் தாத்தாட உடல் நிலைய கவனியுங்க என்றனர்.

கட்டிலில் புரண்டு படுத்தவள் போன் அழைப்பை கேட்டு போனை எடுத்தாள். ஹலோ சிவா என்ன இந்த நேரத்தில என்றாள். இல்ல என்ன செய்யுறாய் சும்மா தான் எடுத்தன் என்றான். அவன் தன்னை ஆறுதல் படுத்த தான் அழைப்பெடுத்தான் என தெரிந்தும் அவளால் அவன் உடன் கதைக்க முடியவில்லை.

என்னம்மா ரம்யா கதையன் என்ற சிவாவின் குரலிற்கு விம்ம ஆரம்பித்தவளின் குரல் அழுகையாய் மாறியது. ஏய் ரம்யா என்ன இது சின்ன பிள்ளை போல அவங்க தாத்தாக்கு சரியாகிட்டா நாளைக்கே திரும்பிடுவாங்க நீ ஏன் கவலை படுறாய் நாங்க இல்லையா என்று ஆறுதல் படுத்தினான்.

அவனது ஆறுதல் வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருந்தாலும் அவளை பிரிவின் வலிகள் உள்ளுக்குள் ரணமாக்கியபடி இருந்தது. அவர்களின் சில நாள் பிரிவை கூட எண்ணி மனதை தயார்ப்படுத்த முடியாத அளவிற்கு ஏற்பட்ட திடீர் பயணம் அவளை சங்கட படுத்தியது.

சிவாவின் ஆறுதல் வார்த்தைகளில் சற்று ஆறுதல் அடைந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். சிவாவும் அவளின் நிலையை உணர்ந்து மேலும் அவளை குழப்ப மனமின்றி போனை துண்டித்தான்.

பலமணி நேர பயணத்தின் பின் கமலி குடும்பம் ஊரை அடைந்தார்கள். ஓடிச் சென்று தந்தை பார்த்த கமலி அழ ஆரம்பித்தாள். அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. அவளை பார்த்ததும் அம்மா கமலி வந்திட்டியா எப்பிடி இருக்காய் என்றார். நான் நல்லா இருக்கன் அப்பா நீங்க தான் உடம்ப பாக்கணும் என்றாள்.

தாத்தா என்ற பேரக்குழந்தைகள் இருவரின் குரலைக் கேட்டு அவர்கள் பக்கம் பார்வையை திருப்பியவர் மெதுவாக கட்டிலில் எழுந்து அமர முயற்சித்தார். செல்வன் கைத்தாங்கலாக அவரை கட்டிலில் அமர்த்தினான்.

தன் பேரக்குழந்தைகளை கட்டியணைத்து முத்தமிட்டவர் எனக்கும் வயசாயிடிச்சு உங்கட கல்யாணம் காட்சிய பாத்திட்டு சாகலாம் என்று பாத்தா இப்ப இப்பிடி ஏலாம போச்சு என்ன பண்ணுறது வயசானால் இதெல்லாம் சாறது தானே என்றார்.

ஏனப்பா அப்பிடி சொல்றீங்க நீங்க கண்டிப்பா என் பிள்ளையளோட கல்யாணத்தை பாத்து அவங்க பிள்ளையளையும் தூக்கி விளையாடுவீங்க. சும்மா எல்லாம் யோசிக்காதீங்க என்றாள் கமலி. அது தான் நாங்க எல்லாம் வந்திட்டம் அப்புறம் என்ன மாமா வருத்தம் உங்களுக்கு என்றான் குமார்.

வயசான காலம் இங்க இருந்து தனிமைய அனுபவிக்காம எங்களோட வந்து உங்க பிள்ளை பேரப்பிள்ளையளோட சந்தோச இருக்கலாமே என்றான். ஏன் அத்தை நீங்களாவது மாமாக்கு சொல்ல கூடாதா என்றான்.

கமலி இப்ப உங்கள பாத்ததே அப்பாக்கு பாதி வருத்தம் சுகமாயிற்று எவ்வளவு உசாராகிட்டார் பாத்தியா என்றாள் டாக்டரம்மா.

சரியம்மா நீங்க தூர பிரயாணம் செய்திட்டு வந்தீங்க போய் குளிச்சு உடுப்பு மாத்திட்டு வாங்க. நான் காப்பி போடுறன் என்றாள் கமலியின் அம்மா.

அறைக்குள் சென்ற செல்வன் ரம்யாவிற்கு போன் செய்தான். ஹலோ ரமி என்ன செய்யுறாய் எழும்பிட்டாயா என்றான். இல்லடா இன்னுமே எழும்பல எழும்பவே போர் அடிக்குதடா. எழும்பினா உங்க ஞாபகமாவே இருக்கு அது தான் இன்னுமே தூங்கிட்டு இருக்கன் என்றாள்.

என்னம்மா எழும்பு போய் குளிச்சு பிறஷ் ஆகு என்றான் செல்வன். ம்ம் சரிடா உங்க தாத்தாக்கு உடம்பு எப்பிடி என்றாள். கொஞ்சம் பறவாயில்லை எங்கள கண்ட சந்தோசத்தில இருக்கார். இருந்தாலும் ரொம்ப வீக் ஆக இருக்கார் என்றான்.

சரி இந்தா செல்வி கூட கதை என்றுசெல்வியிடம் போன் குடுத்தான். ஹலோ ரமி என்ன செய்யுறாய் இன்னுமே எழும்பலயா என்றாள். இல்லடா உங்க நினைவாவே இருக்கு நாங்க இதுவரை பிரிஞ்சதே இல்ல அதுவும் திடீர் என்று வெளிக்கிட்டு போனது வெறுமையா இருக்கடா என்றாள்.

நாங்க மட்டும் என்னவாம் உன்ன பத்தியே கதைச்சிட்டு இருந்தம்.உன்ன ரொம்ப மிஸ் பண்ணுறமடா என்றாள். நீ கவலபடாதடா நாங்க சீக்கிரம் வந்திடுவம்என்றாள்.

என்பிறந்த நாளுக்குவருவீங்களா என்ற ரமியின் குரலில் தடுமாறியவள் தெரியலப்பா இங்க என்ன நிலைமை என்று தெரியல. பாத்து சொல்றன் என்றாள்.

நாம பழக ஆரம்பிச்சதில நீங்க இல்லாத பிறந்த நாள என்னால நினைச்சு கூட பாக்கமுடியலடா. அதுவும் 21 வது பிறந்த நாள் ரொம்ப பெருசா செய்ய திட்டம் போட்டம் என்று அழ ஆரம்பித்தாள்.

ஏய் கவலபடாதடா எல்லாம் சரியாகிடும் முதல் நீ போய் குளிச்சு பிறஷ் ஆகுநாங்களும் குளிச்சிட்டு வாறம் என்று அவளை ஆறுதல் படுத்தினாள் செல்வி. சரிடா நான் குளிச்சிட்டு வாறன் என்று சோகமாகவே போனை துண்டித்தாள் ரமியா.

பிரிவுத்துயர் தொடரும்……..!
பாகம் 26
Last edited by Aruntha on Mon Mar 19, 2012 10:13 am, edited 1 time in total.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”