அழகிய தேவதை - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 18

Post by Aruntha » Thu Mar 08, 2012 2:06 pm

மறுநாள் காலை பொழுது பறவைகளின் கீச்சிடலுடனும் மலர்களின் நறுமணத்துடனும் மெல்ல மலர்ந்தது. தந்தையின் குரல் கேட்டு விழிக்கும் ரேவதி அன்று தானாகவே எழுந்து விட்டாள்.

காப்பியுடன் அவளை எழுப்ப வந்த நரேஷ் ரேவதியை கட்டிலில் காணவில்லை என தேடினார். ரேவா எங்கம்மா போய்ட்டாய் என்ற தந்தையின் குரல் கேட்டு டாடி நான் குளிச்சிட்டு இருக்கன் வாறன் என்றாள் குளியலறையில் இருந்தபடி.

என்ன இன்று அதிசயமா இருக்கே நான் எழுப்பினால் கூட எழும்பாத என் சோம்பேறி மஹாராணி இன்னிக்கு எழும்பி சீக்கிரமா ரெடியாகிட்டாளே! காலேஜ்ல ஏதாச்சும் ஸ்பெஷலா என்றார்.

இல்லப்பா இன்னிக்கு காலேஜ் லீவு தெரியாதா என்றாள். நான் உங்க கூட ஹாஸ்பிடல் வர போறன் என்றாள். என்னம்மா புதுக்கதை சொல்றாய் ஏன் ஹாஸ்பிடல் உடம்புக்கு ஒண்ணும் இல்லயே என்றார் சற்று பரபரப்பாய்.

என்ன டாடி நக்கல் பண்ணுறிங்களா உங்க பொண்ண பாத்தா உடம்புக்கு முடியாதவள் போலயா இருக்கு? சீக்கிரமா எழும்பி குளிச்சு வெளிக்கிட்ட என்ன பார்த்து கேக்கிற கேள்வியா என சிணுங்கினாள்.

ஆமா அதுவும் சரி தான் நான் தான் மக்கு புரியாம கேட்டிட்டன் என்றார். ஹை நீங்க மக்கு என்று ஒத்துக்கிட்டீங்களா அப்பாடா ரொம்ப சந்தோசம் இருந்தாலும் உங்கள நம்பி வாறவங்களை பத்திரமா வைத்தியம் பாருங்க என்றாள்.

மக்குக்கு பிறந்தவளே அப்ப நீ கூட மக்கு தான் சீக்கிரம் காப்பி குடி ஆற போது என்றார். சரி மகாராணி சீக்கிரம் எழுந்ததன் காரணத்தை தெரிஞ்சு கொள்ளலாமா என்றார்.

கண்டிப்பா சிஷ்யா நான் உங்க கூட வந்து அந்த செல்வன பாக்கணும் என்றாள். என்ன சொல்றாய் உனக்கென்னாச்சு அவன் என் பேஷன்ட் அவன பத்தி சொன்னன் நீ என்ன எண்டா அவன பாக்கணும் என்றாய் என்றார்.

இல்ல டாடி அவன் நட்ப பத்தி சொன்னீங்க அப்படி நட்ப மதிக்கிற ஒருத்தன பாக்கணும் அது தான். ஒரு ஆண் பொண்ணுக்கு இடைல இப்பிடி புரிந்துணர்வான நட்பு இருக்கிறது ஆச்சரியமா இருக்கு. அந்த பொண்ணு ரம்யாவ கூட பாக்கணும் போல இருக்கு. ப்ளீஸ் டாடி என்னையும் கூட்டி போங்க என்று கெஞ்சினாள்.

சரிம்மா கூட்டி போறன். ஆனால் அங்க வந்து டாடி உங்கள பத்தி சொன்னார் என்டெல்லாம் சொல்லிட்டு இருக்க கூடாது ஜஸ்ட் பாத்திட்டு ஒரு ஹாய் சொல்லிட்டு வந்திடணும் சரியா என்றார்.

அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சி. அவள் மனதில் செல்வன பத்தியும் ரம்யாவ பத்தியும் ஒரு கற்பனை படம் போட்டிருந்தாள். அவள் மனதில் பதிந்த அந்த நிழலின் நிஜத்தை பார்க்க போகும் மகிழ்வில் துள்ளிக் குதித்தாள்.

தாங்ஸ் டாடி என்று தந்தையை கட்டி முத்தமிட்டுச் சென்றாள். அவளின் முகத்தில் என்றும் இல்லாத மகிழ்ச்சியை பார்க்க நரேஷிற்கு மகிழ்வாக இருந்தது.

எத்தனை தான் மகிழ்வாக கதைத்தாலும் இத்தனை நாட்கள் ரேவதியின் மனதில் இருந்த அந்த சோகத்தை அவள் கண்களில் என்றுமே காண முடியும்.

ஆனால் அன்றைய அந்த நொடி ஏக்கமான சோகத்தை அவள் முகத்தில் காணவில்லை. கண்களில் அத்தனை பூரிப்பு என்றுமே இல்லா குதூகலம் அவனால் நம்ப முடியவில்லை.

இருந்தும் நீண்ட நாட்களின் பின் அவளின் இத்தனை குறும்பான பேச்சையும் கலகலப்பையும் பார்க்க மனதிற்கு மகிழ்வாக இருந்தது.

அவள் அம்மா அவள் கண் முன்னாடி கார் விபத்தில் இறந்ததிலிருந்து அவள் சந்தோசமாக இல்லை. எவ்வளவு தான் பாசத்தை தந்தையாக அவன் கொடுத்தாலும் தாயின் அன்புக்கு ஈடாகுமா?

காலையில் அவன் காப்பி கொடுக்கும் போது கலங்கும் அவள் கண்கள் மறு நொடி மகிழ்வானாலும் இரவு தூங்க செல்லும் போது மறுபடி எட்டி பார்க்கும். தாயின் சோகத்தை மறக்க வைக்க நரேஷ் தாயாக காட்டும் பாசம் அவளுக்கு தாயை நினைவு படுத்திய வண்ணம் இருந்தது.

குடும்பத்தின் செல்லப் பொண்ணு குலவிளக்காக மிளிர்ந்தவள் ரேவதி. பணம், பாசம் எதுவுமே குறைவில்லாமல் கொட்டிக் கிடந்த குடும்பம். அவள் முகம் வாடினாலே குடும்பத்தில் தாயும் தந்தையும் சோர்ந்து விடுவார்கள். அத்தனை பாசம் அவள் மேல்.

கண்ணீர், சோகம் என்பது என்ன என்றே அறியாது வளர்ந்தவள். பிரிவு, துயரம் என்றாலே அர்த்தம் தெரியாது இருந்தவள் தன் தாயின் திடீர் பிரிவினால் நிலைகுலைந்து விட்டாள்.

அவளை ஓரளவு சரிப்படுத்தி அவள் மனதை ஒரு நிலைப்படுத்த நரேஷ் படாதபாடு பட்டான். அவளை ஓரளவு தான் அவனால் மாற்ற முடிந்தது.

அவளின் அன்புக் கட்டளையால் அவனால் அந்த ஊரை விட்டு வேறு இடம் மாற்றம் எடுக்க முடியவில்லை. அம்மா தான் இல்ல அம்மா வாழ்ந்த வீட்டில வாழணும் என்று எங்கும் செல்ல மறுத்து விட்டாள்.

எங்கு சென்றாலும் அவளால் வீட்டை விட்டு இருக்க முடியாது. அந்த வீடு அவள் தாயின் பாசம் நிறைந்த கோவிலாக நினைத்தாள். அங்கு அவளின் மூச்சு காற்று சுற்றுவதாக திருப்பி கண்டாள்.

அவளின் அந்த மனநிலையை குழப்ப விரும்பாத நரேஷ் எத்தனையே பதவி உயர்வுகள் மாற்றங்கள் கிடைத்தும் எங்குமே செல்லாமல் அங்கேயே இருந்தான்.

அவளின் ஆசைகளை கண்டிக்க முடியாதவனாய் தானும் அவளுடன் குழந்தையாக மாறி விட்டான். ரேவதிக்கு அவன் தந்தை மட்டுமல்ல தாய், நண்பர், உறவினர், நலன்விரும்பி எல்லாமாக இருந்தான்.

அதனால் இன்றைய அவளின் குதூகலம் அவனுக்கு மனதிற்கு மகிழ்வாக இருந்தது. கடவுளிடம் சென்று நன்றி சொன்னான். இன்று போல் ரேவதி என்றும் மகிழ்வாய் இருக்கணும் என்று வேண்டினான்.

ரேவதி என்ற தந்தையின் குரல் கேட்டு மாடிப்படிகளில் புள்ளிமானை போல் துள்ளிக் குதித்தபடி ஓடி வந்தாள். என்ன டாடி என்ற படி வந்தவளை ஒரு நொடி மெய்மறந்து பார்த்த படி நின்றார்.

ஹலோ டாக்டர் நான் உங்க பொண்ணு தான் என்ன அப்பிடி பாக்கிறீங்க என்றாள். இல்லடா மை டியர் இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்காய் பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா என்ற தந்தையின் குரல் கேட்டு சிரித்தவள் அப்படியா டாடி என்னாச்சு எனக்கு எனக்கே என்னை பார்க்க கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு என்றாள்.

அவங்க நட்பு என்னை உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது டாடி. பெத்தவங்கள விட யாருமே பாசம் காட்ட முடியாது என்று நினைச்ச எனக்கு நீங்க சொன்னது புதுசா இருந்திச்சு. இரவு பூரா திங் பண்ணிட்டே இருந்தன்.

என்னால எதையுமே ஏற்க முடியல. அது தான் அவங்கள பாக்கணும் என்று முடிவு எடுத்தன். முதல்ல நான் அந்த செல்வன பாக்கணும். அவன் நட்பு நிறைஞ்ச முகத்தை பாக்கணும். அவன் மனச கொள்ளை கொண்ட அந்த உயிர் நட்பு ரம்யாவ பாக்கணும். அவன் கூட பிறந்த செல்விய பாக்கணும்.

ஏய் நிறுத்து நிறுத்து என்ன எல்லார் பெயரையும் பட்டியல் போடுறாய் நான் எதேச்சையா சொன்னது உன் மனசில இவ்வளவு தூரம் பதிஞ்சிட்டா? அப்ப இதுவா என் செல்லத்தோட இன்றைய மகிழ்வுக்கும் மாற்றத்துக்கும் காரணம் என்றார்.

ஆமா டாடி அவங்கள பத்தி அவங்க நட்ப பத்தி நீங்க சொன்னதெல்லம் வச்சு நானே ஒரு கற்பனைல அவங்கள யோசிச்சு வைச்சிருக்கன். பாக்கல அவங்க கூட கதைக்கல என்றால் என் மண்டையே வெடிச்சிடும் என்றாள்.

அம்மா தாயே அப்புறமா உன் மண்டை வெடிச்சா அதுக்கு என்னால ட்ரீட்மெண்ட் பாக்க ஏலாது டிபன் ரெடி சாப்பிட வாம்மா சீக்கிரம் போகணும் என்றார். இருவரும் சாப்பிட்டு விட்டு ஹாஸ்பிடல் செல்ல ஆயத்தமானார்கள்.

சந்திப்பு தொடரும்……….!
பாகம் 19
Last edited by Aruntha on Fri Mar 09, 2012 3:10 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 19

Post by Aruntha » Fri Mar 09, 2012 3:09 pm

நரேஷின் கார் மெல்ல வீட்டு வாசலை விட்டு நகர ஆரம்பித்தது. காருக்குள் இருந்த ரேவதியின் நினைவுகளும் ஆசைகளும் வெகு வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.

டாடி கொஞ்சம் சீக்கிரமா ட்ரைவ் பண்ணுங்க இப்பிடி மெதுவா போய்டு இருந்தா எப்ப தான் ஹாஸ்பிடல் போய் சேருவீங்க. இத விட நான் நடந்தே போயிடலாம் என்றாள்.

என்னம்மா ரொம்ப தான் துடிக்கிறாய் அவங்கள பார்க்க. இரு இரு நான் சீக்கிரமா காரை ஓட்டுறன் என்று கூறி சற்று வேகமாக சென்றார். அவள் முகத்தில் மெல்லிய மகிழ்ச்சி இழையோட ஆரம்பித்தது.

காலையில் சீக்கிரமாகவே ஹாஸ்பிடல் வந்த குமார் குடும்பமும் பிரியா குடும்பமும் டாக்டரின் வரவிற்காய் காத்திருந்தார்கள். அதற்கிடையில் செல்வியும் ரம்யாவும் செல்வனை வீட்டிற்கு அழைத்து செல்ல தயார்ப்படுத்தி இருந்தார்கள்.

ஹாய் குட்மோனிங் என்றபடி உள்ளே நுழைந்தார் டாக்டர். அவரை மெதுவாக பின் தொடர்ந்து சென்றாள் ரேவதி. என்ன எல்லாருமே சீக்கிரம் வந்திட்டீங்களா என்ற டாக்டரின் கேள்விக்கு நேற்று இரவு இந்த மூன்று வாண்டுகளும் இல்ல வீடே அமைதியா சந்தோசமில்லாம இருந்திச்சு. யாருக்குமே தூக்கம் வரல. எப்படா விடியும் என்று பாத்திட்டு உடனயே வந்திட்டம் என்றனர்.

அப்பிடியா அப்ப இவங்க ரொம்ப அட்டகாசம் பண்ணுவாங்களா என்று கேட்டபடி செல்வனை சோதித்தார் டாக்டர். செல்வன் நீங்கள் ஓகே ஆகிட்டிங்க எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தாலும் ஒரு வாரத்தால சும்மா வந்து செக் பண்ணிட்டு போங்க என்றார்.

சரி டாக்டர் கண்டிப்பா இவன கூட்டிட்டு வாறம் என்றனர் செல்வியும் ரம்யாவும் ஒரே குரலில். பறவாயில்லயே செல்வன விட நீங்க உஷாரா இருக்கிறீங்க என்றார் டாக்டர்.

ஹாய் நீங்க ரேவதி தானே என்ற ரம்யாவின் குரல் கேட்டு நிமிர்ந்தவள் ஆமா நீங்க என்று குழப்பமான குரலில் தடுமாறியவளை பார்த்து நான் தான் ரம்யா என்னை நினைவில்லையா என்றாள்.

உங்கள எங்கயோ பார்த்த மாதிரி தான் இருக்கு ஆனால் எங்க என்று நினைவில்லை என்றாள். அப்பிடியா நல்லா திங் பண்ணி பாருங்க என்று கூறியபடி ஏய் செல்வி உனக்காச்சும் இவங்கள நினைவிருக்கா என்றாள்.

ஆமாடா பார்த்து பழகின போல தான் இருக்கு எங்க என்று தான் புரியல என்றாள். ஆஆஆஆஆ நீங்க போன தடவை நடந்த சுதந்திர தின விழாவில டான்ஸ் போட்டிக்கு வந்திங்க தானே அப்ப நாங்களும் வந்தம் நினைவிருக்கா என்றாள்.

ஆமா இப்ப தான் நினைவு வந்திச்சு உங்க டான்ஸ் தானே முதலாவதா வந்திச்சு நாங்க இரண்டாவது தானே! அப்புறமா நாங்க எல்லாம் ஒண்ணா டினர் சாப்பிட்டு டான்ஸ் ஆடினமே இப்ப தான் ஞாபகமே வருது. அது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்று சிரித்தாள்.

ஏய் செல்வா நாங்க சொன்னம் எங்க டான்ஸ்க்கு போட்டியா ஒருத்தி டான்ஸ் பண்ணினா அவங்க டான்ஸ் கூட நல்லா இருந்திச்சு யாருக்கு முதலாவது கிடைக்கும் என்று குழப்பத்தில இருந்தம் என்று. அவங்க தான் இந்த ரேவதி.

உங்கள பத்தி உங்க டான்ஸ் பத்தி நாங்க செல்வன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கம் என்று கூறி அவளை அவனுக்கு அறிமுகம் செய்தனர்.

என்னம்மா ரேவதி இவங்கள உனக்கு முன்னாடியே தெரியுமா என்ற டாடி குரலிற்கு செவி மடுத்தவளாய் ஆமா டாடி டான்ஸ் போட்டு வந்து சொன்னன் தானே இரண்டு பொண்ணுங்க அட்டகாசமா ஆடினாங்க நானே சொக்கி போய் பார்த்தன் என்று அவங்க தான் இவங்க என்றாள் மகிழ்வாக.

அப்ப அறிமுகமே தேவையில்லை. இவ தான் என் செல்ல பொண்ணு ரேவதி. இன்னிக்கு காலேஜ் இல்ல வீட்டில தனியா இருக்கன் என் கூட ஹாஸ்பிடல் கிளம்பி வந்திட்டா என்றார் டாக்டர் நரேஷ்.

ஓகே மிஸ்டர் குமார் நீங்க வாங்க நான் பில் தாறன் செற்றில் பண்ணிட்டு அப்பிடியே மெடிசின் எல்லாத்தையும் எடுத்திட்டு போங்க என்றார். சரி நான் மற்ற பேஷன்ஸ்ஸ பாத்திட்டு வாறன் என்று கூறி செல்ல ஆயத்தமாக நன்றி டாக்டர் நம்மட பையன காப்பாத்தினதுக்கு என்ற கமலியினதும் பிரியாவினதும் குரல் கேட்டு இதெல்லாம் கடவுள் சித்தம் விடுங்கம்மா என்று கூறினார்.

இல்ல டாக்டர் நீங்க அவனுக்கு குடுத்த மெடிசின் உடனடி சிகிச்சை தான் அவன காப்பாதிச்சு. ரமியா அவன் சுய நினைவ கொண்டு வந்தாளே தவிர அவன் உயிர காப்பாதினது நீங்க எப்பவும் நாங்க உங்களுக்கு நன்றி பட்டவங்கள் என்றனர்.

சரி டாக்டர் நீங்க கண்டிப்பா எங்க வீட்டுக்கு ஒருநாள் வரணும் என்ற குமாரின் வேண்டுகோளுக்கு ரேவதிக்கு கூட உங்க பசங்கள தெரிஞ்சிருக்கு அவள கூட்டிட்டு கண்டிப்பா வாறன் ஒரு நாள் என்று கூறினார்.

ரேவதி நீ வாறியாம்மா என்ற தந்தையின் குரலிற்கு டாடி நீங்க போங்க நான் இவங்க கூட பேசிட்டு உங்க றூமுக்கு வாறன் என்றாள். சரிம்மா என்று கூறி சென்றார் நரேஷ்.

ரொம்ப சப்றைஸ் ஆக இருக்கு தெரியுமா உங்கள எல்லாம் மறுபடி சந்திப்பன் என்று எதிர்பார்க்கவே இல்லை என்றாள் ரேவதி. ஆமா நாங்க கூட உங்கள பத்தி நிறைய சொல்லி இருந்தம் செல்வனுக்கு. உங்கள நேரல காட்ட முடியலயே என்ற வருத்தம் இருந்திச்சு இப்ப அதுவும் போயிடிச்சு என்று சிரித்தனர்.

சரி ஒரு நாளைக்கு கண்டிப்பா நம்மட வீட்டுக்கு வாங்க. அன்றைக்கு டான்ஸ் போட்டில தான் நாம மீற் பண்ணினம் அப்ப தான் நமக்குள்ள ஆளாளுக்கு போட்டி இருந்திச்சு இப்ப நாங்க நண்பர்கள் என்று கைகுலுக்கினாள் ரம்யா. செல்வியும் கைலுக்கினாள்.

ஹாய் நீங்க எதுவுமே கதைக்க மாட்டிங்களா என்று செல்வனை பார்த்து சிரித்தாள் ரேவதி. அப்பிடி இல்ல எனக்கும் சேர்த்து என் வாண்டுகள் இரண்டும் கதைக்கிறாங்களே அப்புறம் நான் என்ன கதைக்க என்றான்.

உங்கள ஒண்ணு கேக்கலாமா தப்பா நினைக்க கூடாது என்ற செல்வனின் வார்த்தைகளை கேட்டு ம்ம்ம்ம் தாராளமா கேளுங்க என்றாள். நான் கேக்கிறதுக்கு மாட்டன் என்று சொல்ல கூடாது கண்டிப்பா செய்வன் என்று எனக்கு புறமிஸ் பண்ணுவீங்களா என்று கைகளை நீட்டினான்.

அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. என்ன இது செல்வன் இப்பிடி கதைக்கிறான் என்று. சரி கண்டிப்பா செய்வன் சொல்லுங்க என்றாள். இல்ல நீங்க முதல்ல எனக்கு புறமிஸ் பண்ணுங்க அப்புறமா சொல்றன் என்றான்.

அவன் கைககள் மேல் தன் கைகளை வைத்து சத்தியமா நான் செய்வன் சொல்லுங்க என்றாள். அவன் கைகளை பற்றிய அந்த நொடி ரேவதி புதிதாக பிறந்தது போன்று உணர்ந்தாள். அவள் உணர்வுகள் யாவும் உள்ளுக்குள் குதூகலித்தது.

அவள் எதிர்பார்த்து வரவில்லை அவனுடன் கதைப்பன் என்று கூட. ஆனால் அவன் இத்தனை உரிமையாக அவளை கேட்டது அவளிடம் சத்தியம் பண்ணும் படி கூறியது எல்லாம் அவளிற்கு ஆச்சரியமாக இருந்தது.

அவன் கை மேல் அவள் கை இன்னும் அப்படியே இருந்தது. அவனை நினைத்து எத்தனை நாணங்களுக்குள் பொதிந்திருந்தவள் அவன் கை பற்றிய நொடி அத்தனையையும் மறந்து அவன் கைப்பிடிக்குள்ளே அடைக்கலமானாள். அவன் என்ன கேட்க போகிறான் என்ற ஏக்கத்துடன் அவன் கண்களையே உற்று பார்த்தபடி நின்றாள்.

பார்வைகள் பரிமாறும்…….!
பாகம் 20
Last edited by Aruntha on Sat Mar 10, 2012 3:32 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 20

Post by Aruntha » Sat Mar 10, 2012 3:31 pm

ஏய் ரேவதி அவரசப்பட்டு சத்தியம் பண்ணிட்டியே அவன் எங்கள கலாய்க்கிறதுக்கு உன்ன கைப்பொம்மை ஆக்கிறான் போல கிடக்கு என்றாள் ரம்யா.

என்ன சொல்றீங்க ரம்யா எனக்கு ஒண்ணுமே புரியல என்று கூறி அவன் கை மேல் இருந்து தன் கைகளை விலக்க முற்பட்டவளின் கைகளை பற்றி தன் இரு கைகளுக்குள்ளும் அடைக்கலமாக்கினான் செல்வன்.

அவனை மனதின் உச்சத்தில் வைத்திருந்து அவனோடு பழக துடித்தவளிற்கு அவன் கைக்குள் அடைக்கலமான தன் கைகளின் பிடியை ரசிப்பதா விடுவதா என்ற சங்கடம் தலை தூக்கியது.

என்ன ரேவதி சத்தியம் பண்ணுறன் என்று கூறிவிட்டு இப்பிடி நழுவிறீங்க அவ்வளவு சீக்கிரம் விட்டிடுவனா என்று கூற சொல்லுங்க என்றாள் சற்று நாணத்துடன்.

இல்ல என் வீட்டில இரண்டு வாலு பசங்க இருக்கிறாங்க தினமும் டான்ஸ் எண்ட பெயரில ஏதோ குதிச்சு குதிச்சு எங்கள கொல்லுறாங்க. அவங்க கோமாளி ஆட்டமெல்லாம் பாத்து அலுத்து போயிற்று. நீங்க ஒருநாளைக்கு எங்க வீட்டுக்கு வந்து டான்ஸ் எண்டா என்ன என்று இவங்களுக்கு ஒருக்கா ஆடி காட்டுங்களன் என்றான்.

இப்ப புரிதா ரேவதி ரம்யா சொன்னது அவசர பட்டு சத்தியம் பண்ணிட்டீங்க என்று. அவங்க நம்ம வீட்டு மஹாராஜன் கேக்கிறார் நீங்க டான்ஸ் ஆடி காட்டுங்க என்றனர் ஒரே குரலில்.

ஐயோ என்னால முடியாதுப்பா என்ற ரேவதி அவன் கைகளை விடுவித்த படி நாணத்துடன் சென்று ரம்யாவின் தோள்களில் சாய்ந்தாள். ஹலோ என்ன இப்பிடி ஒழிஞ்சா விட்டிடுவமா நீங்க தானே சத்தியம் பண்ணிட்டீங்க கண்டிப்பா வீட்டுக்கு வந்து ஆடிடுங்க மெடம் என்றாள் செல்வி.

ரேவதி சத்தியம் பண்ணிட்டிங்க அப்புறம் அத பொய்யாக்க கூடாது சீக்கிரம் வந்து டான்ஸ் எண்டா என்ன என்று இவங்களுக்கு சொல்லுங்க என்றான் செல்வன்.

என்ன நீங்க நக்கல் பண்ணுறீங்களா என் கூட ஆடி அவங்க இரண்டு பேரும் தான் பெஸ்ட் என்று முதலாவது பரிசு வாங்கினாங்க. நீங்க இப்பிடி சொல்றீங்க என்றாள் செல்வனை பார்த்து சிணுங்கியபடி.

சரி சரி ஒரு நாளைக்கு வீட்டுக்கு வாங்க சாரிட ஆசைக்கு டான்ஸ் ஆடி காட்டலாம் என்று மறுபடி மறுபடி ரேவதியை சீண்டினார்கள் இருவரும். சந்தோசம், வெட்கம் இரண்டுக்குள்ளும் அடைக்கலமானாள் ரேவதி.

என்னப்பா வந்ததும் வராததுமா அந்த பொண்ண போட்டு இப்படி கலாட்டா பண்ணுறீங்க நீ வாம்மா என்று அவளை அணைத்தாள் கமலி. அவங்க இப்பிடி தான் எப்பவும் சண்டை போட்டு கலாட்டா பண்ணிட்டே இருப்பாங்க என்று பிரியாவும் வந்து அவளை அரவணைத்தாள்.

அவர்களின் கலாட்டா மற்றும் சந்தோசங்களை பார்க்க ரேவதிக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. தானும் அந்த குடும்பத்துடன் இணைந்து மகிழ்ந்திருக்க வேண்டும் என நினைத்தாள்.

என்னம்மா நீ இன்னும் இங்கயா நிக்கிறாய் நான் என் றூம்ல போய் பாத்தன் உன்ன காணல என்றபடி உள் நுழைந்த டாக்டர் மகளின் சந்தோசமான முகத்தை பார்த்து அசந்து போனார்.

வாங்க டாக்டர் இவங்க எல்லாம் சேர்ந்து உங்க பொண்ண ரொம்ப கலாட்டா பண்ணுறாங்க என்றாள் கமலி. அப்பிடி இல்ல டாக்டர் நாங்க சும்மா தான் பேசிட்டு இருந்தம் இல்லயா ரேவதி என்றான் செல்வன். அவளும் பதிலுக்கு ஆமா என தலையாட்டினாள்.

டாக்டர் நீங்க இங்கயா நிக்கிறீங்க நான் பில் செட்டில் பண்ணி மருந்தெல்லாம் எடுத்திட்டன் உங்கள தான் தேடிட்டு இருந்தன் என்றான் குமார். சரி எல்லாம் முடிஞ்சுது தானே கிளம்புவமா என்றான் ராஜன்.

செல்வி செல்வனை மெதுவாக கைகள் கொடுத்து எழுப்பி விட்டாள். ரம்யா அவனின் உடைகளை சரி செய்தாள். இருவரும் கோர்க்க செல்வன் வீடு செல்ல ஆயத்தமானான். இவர்களின் அன்பான உறவை வியப்பாய் பார்த்தபடி நின்றாள் ரேவதி.

அவர்களை பிரியபோகிறோமே என்கின்ற வலி அவளை லேசாக எட்டி பார்த்தது. அவளின் முகத்திலிருந்த சந்தோஷ ரேகைகள் சற்று குறைவதை நரேஷ் கவனிக்க தவறவில்லை. சரி ரேவதி கிளம்புவமா என்ற தந்தையின் குரலால் திரும்பியவள் ஓகே டாடி என்று அவர்களிடம் இருந்து விடை பெற்றாள்.

அவர்களை எப்படி சந்திப்பது எப்படி பேசுவது என்ற ஏக்கத்துடன் அடி எடுத்து வைத்தாள் ரேவதி. ஏய் ரேவதி உன் போன் நம்பர் குடுங்களேன் என்ற ரம்யாவின் கேள்வியால் மகிழ்ந்தவள் தன் போன் நம்பரை அவளிடம் கொடுத்தாள்.

எங்க நம்பரையும் நோட் பண்ணுங்க என்று தன்னுடைய நம்பரையும் செல்வன் மற்றும் செல்வி நம்பரையும் கொடுத்தாள். ரேவதியின் சந்தோசத்திற்கு அளவே இல்லை. தாங்ஸ் என்று கூற மெடம் எனக்கு பண்ணின சத்தியத்தை மறந்திடாதீங்க என்று மறுபடி அவளை வீட்டுக்கு வரணும் என்று மறைமுகமாய் ஞாபகப்படுத்தினான் செல்வன். மெல்லிய புன்னகை கலந்த நாணத்துடன் அவர்களிடமிருந்து விடைபெற்றாள் ரேவதி.

வீடு நோக்கி சென்று கொண்டிருக்கையில் என்ன செல்வன் சேர் ரொம்ப தான் கலாய்க்கிறீங்க புதுசா ஃபிரண்ட் பிடிச்ச தைரியமோ என்றாள் செல்வி. ஆமா செல்வி நல்லா கேள் ரேவதிக்கு முன்னாடி சண்டை போட கூடாது என்று தான் நானும்பேசாம இருந்தன்.

டேய் எங்கட டான்ஸ் உனக்கு அவ்வளவு கேவலமாடா? இரு இரு உன்ன அப்புறமா கவனிக்கிறம் என்று சண்டை செய்தார்கள். அம்மா பாருங்கம்மா இவங்க இரண்டு பேரையும் அந்த பொண்ணு பாவம் அம்மா நான் சும்மா தானே கேட்டன் என்றான்.

என்னடா அந்த பொண்ணு பாவமா? ரொம்ப தெரிஞ்சவன் போல பேசுறாய்? அவளை எங்களுக்கு தான் முன்னாடி தெரியும். அறிமுகப்படுத்தின எங்களுக்கே ஆப்பு வைக்கிறியா என்றார்கள்.

ஆன்டி உங்க பையன் ரொம்ப மோசம் கண்டிச்சு வையுங்க என்றாள் ரம்யா. ஆமா மம்மி அவன் ரொம்ப ரொம்ப மோசம் சும்மா செல்லம் குடுக்காம அடி போட்டு வளக்கணும் என்றாள் செல்வி.

நம்ம பையனுக்கு இப்ப தட்டு தடுமாறுற வயசு இல்லயா செல்வி. அது தான் கொஞ்சம் அழகா கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பொண்ண பார்த்ததும் சப்போட் பண்ணுறார் இல்லயா நாம தான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் என்றாள்.

அடியேய் உங்கள இப்பிடியே விட்டால் ரொம்ப தப்பு என்று அவர்கள் இருவரின் காதையும் பிடித்து திருகினான். ஆமா அவள் கண்ணுக்கு லச்சணமா தான் இருக்கிறாள் யாரு இல்லை எண்டா என்று அவர்களுடன் சண்டைக்கு போனான்.

அட இவங்க சண்டை ஒரு பக்கம் நேற்று நம்மள எல்லாம் எப்பிடி வெருட்டி போட்டு இப்ப சிரிக்கிறத பாரு என்றாள் பிரியா. ஆமா எல்லாரும் எவ்வளவு பயந்திட்டம் தெரியுமா இப்பிடி சிரிச்சு மறுபடி சந்தோசம் இவ்வளவு சீக்கிரம் வருமெண்டே எதிர் பாக்கல என்றாள் கமலி.

சரி எல்லாம் நல்லா முடிஞ்சுது தானே பிறகு என்னத்துக்கு பழசையெல்லாம் ஞாபகப்படுத்தி மனசை கவலப்படுத்துவான் என்றான் ராஜன். ராஜா நீ சொல்றதும் சரி தான் என்று சிரித்தான் குமார்.

நேரமாச்சு இனி போய் சமைச்சிட்டு இருக்க போறீங்களா இப்பிடியே போய் ஹோட்டல்ல சாப்பிட்டு போவமா என்ற குமாரின் கேள்விக்கு யெஸ் டாட் வாங்க போவம் என்றான் செல்வன். அப்புறம் என்ன எல்லாரும் ஹோட்டல் சென்று சாப்பிட தீர்மானித்தார்கள்.

அங்கு செல்ல சிவாவும் தனேஷூம் இருந்தார்கள். ஏய் செல்வன் நாங்க உன்னட்ட தான் ஹாஸ்பிடல் வந்திட்டு இருந்தம். இவன் பசிக்குது சாப்பிட்டு போவம் எண்டான் அது தான் இங்க வந்தம் என்றான்.

அப்பிடியா பறவாயில்ல நாங்களும் வந்திட்டம் தானே இப்ப தான் டிஸ்சார்ஜ் பண்ணினாங்க அப்பிடியே சாப்பிட்டு போகலாம் என்று வந்தம் என்றனர். அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு செல்வனுடன் வீட்டுக்கு சென்றார்கள்.

சிவா, தனேஷ் உங்கள் இரண்டு பேருக்கும் ஒரு விசயம் சொல்லணும் என்றாள் ரம்யா. என்னது யாரை பத்தி என்ற சிவாவின் கேள்விக்கு எல்லாம் உங்கட ஃபிரண்ட் செல்வன பத்தி தான் என்று சிரித்தாள் செல்வி.

என்ன சொல்லணும் சொல்லுங்க சொல்லுங்க சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார்கள். அதுவா சாருக்கு நம்மள எல்லாம் பாத்து போர் அடிச்சிடிச்சாம். அதனால புதுசா கேள் ஃபிரண்ட் தேவையாம் என்றாள் ரம்யா.

ரமி என்னட்ட அடி வாங்காத செல்வி நீயாச்சும் அவள என்ன என்று கேள் என்றான். நான் ஏன் கேக்கணும் உண்மைய சொல்றாள் விடு என்றாள்.

நண்பின் கலாட்டா தொடரும்……!
பாகம் 21
Last edited by Aruntha on Sun Mar 11, 2012 12:28 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 21

Post by Aruntha » Sun Mar 11, 2012 12:27 pm

என்னடி நடக்குது இங்க சொல்லு என்ற சிவாவின் குரலிற்கு பதில் கூற வந்த ரம்யாவின் வாயை கைகளால் பொத்தினான் செல்வன். நீங்க ஒண்ணுமே சொல்ல வேணாம் நானே சொல்றன் என்றான்.

காலைல ஹாஸ்பிடலுக்கு டாக்டர் தன் பொண்ண கூட்டி வந்தார்டா. அவங்கள இந்த இரண்டு லூசுகளுக்கும் முன்னாடியே தெரியுமாம் டான்ஸ் கம்பரிஷன்ல பாத்திருக்காங்க. அவள் கூட நான் கதைச்சத வச்சு நக்கல் பண்ணுறாங்க என்றான்.

அட பாவி அவள கண்டதும் உனக்கு நாங்க இரண்டு பேரும் லூசா தெரிறமா? டேய் வேணாம் உனக்கு இது நல்லதுக்கில்ல என்று வம்பு பண்ணினாங்க இருவரும்.

இருடா நாங்க இப்ப தான் வந்தம் ஒரு 15 நிமிசம் வெயிற் பண்ணுங்க குளிச்சிட்டு வாறம் என்றான் செல்வன். ஆமாடா நாங்களும் குளிச்சிட்டு வாறம் வெயிற் பண்ணுங்க என்று ரம்யாவும் தன் வீட்டிற்கு சென்றாள். செல்வியும் தன் றூமுக்கு சென்றாள்.

தம்பி கொஞ்சம் வெயிற் பண்ணுங்கடா ஹாஸ்பிடல் வீடு என்று திரிஞ்சதில எல்லாம் போட்ட படி இருக்கு முடிச்சிட்டு வாறன் என்று பிரியாவும் கமலியும் சென்றார்கள்.

தனேஷூம் சிவாவும் ஓகே ஆன்டி நாங்க நீச்சல் தடாகத்தடில கதைச்சிட்டு இருக்கம் அவங்க குளிச்சிட்டு வரட்டும் என்று கூறி இருவரும் வெளியில் சென்று அமர்ந்தார்கள்.

என்னடா தனேஷ் நீ ரொம்பவே டல் ஆக இருக்காய் ஏதாச்சும் பிரச்சினையா? வீட்டில அப்பா எப்படி உடம்புக்கு எல்லாம் நலமா என்று கேட்டான் சிவா.

அவர் நல்லா இருக்கார்டா இப்ப பிரச்சினை இல்லை என்றான். சரி உன் காதலை செல்விகிட்ட சொல்லிட்டியா என்ற தனேஷின் கேள்வியால் சற்று தடுமாறிய சிவா இல்லடா எனக்கும் அவளுக்கும் இருக்கிற பாசத்துக்கு பெயர் காதல் இல்லடா என்றான்.

என்னடா சொல்றாய் என்ற தனேஷிற்கு எனக்கு அவள் மேல அளவு கடந்த பாசம் இருக்கு அத காதல் என்ற பெயரில எடுக்க காரணமா இருந்தது அவளோட அந்த நாடகத்தில காதல் பண்ணின நடிப்பு வந்ததால தான். அதோட மற்றவங்களும் சேர்ந்து இளவரசே இளவரசி என்னவாம் என்று நக்கல் வேற. இது தான் அப்பிடி சிந்திக்க வச்சது என்றான்.

நானும் நல்லா சிந்திச்சு பார்த்தன் எங்களுக்குள்ள காதல் இல்லடா. அது ஒரு அவக்ஷன் அத காதல் என்று தப்பா புரிஞ்சிட்டன். அவள் கூட அப்பிடி தான். எங்களுக்குள்ள இருக்கிறது நட்பா இல்ல ஒரு வகையான சகோதர பாசமா தெரியலடா ஆனால் காதல் மட்டும் இல்லடா என்றான்.

காதல் எண்டா என்ன சொல்லுடா இவள பிடிச்சிருக்கு என்று மனசளவில நினைச்சாலே அவள் கூட வாழுறதா அவள் கூட பழகிறதா கனவு வருமடா. கற்பனை உலகத்திலயே மனசு மிதக்குமடா அப்பிடி எதுவுமே தோணலடா. சொல்ல போனால் அவள என் தங்கை என்று சொல்லி நெஞ்சோட அணைக்கணும் என்று தான் மனசு சொல்லுது என்றான்.

சிவா சொல்வதை கேட்க கேட்க தனேஷிற்கு மகிழ்வாக இருந்தது. இருந்தும் மனதிற்குள் ஏதோ ஒரு நெருடல் இருந்தது. சரிடா மச்சி எதுக்கும் செல்வி மனசில என்ன இருக்கெண்டு தெரிஞ்சா நல்லா இருக்குமல்லா என்றான். அதுவும் சரி தான் பாக்கலாம் என்றான் சிவா.

என்ன இரண்டு போரும் வெளில இருக்கிறீங்க அவங்க இன்னும் வரலயா என்ற படி வந்தாள் ரம்யா. இல்லடா சும்மா வெளில இருந்து கதைப்பம் என்று தான் என்றான் சிவா.

செல்வனுக்கும் உனக்கும் இருக்கிற உணர்வு பூர்வமான நட்ப பாக்க எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? நாங்க எல்லாம் நண்பர்கள் என்று சொல்லவே பெருமையா இருக்கு என்றான் தனேஷ்.
ஓஓஓ அப்பிடியா என்று சிரித்த ரம்யாவை பார்த்து செல்வி என்னவாம் என பேச்சுக் கொடுத்தான் சிவா. அவளா அவள் ஒரு குழந்தை தனமானவளடா. அவளோட கதைச்சிட்டு இருந்தா சிரிப்பாவும் இருக்கும் சந்தோசமாவும் இருக்கும் என்றாள்.

ஏன் அப்பிடி சொல்றாய் என்னவாம் அவள் என்று தனேஷ் குறுக்கிட்டான். இல்லடா அது வந்து என்று சொல்ல வாய் எடுத்தவளை ஹாய் என்ன எல்லாரும் இங்க மகாநாடு கூடிட்டிங்களா என்ற செல்வன் செல்வியின் குரல் தடுத்தது.

அப்படியே அவர்களின் பேச்சு வேறு திசை திரும்பியது. செல்வி ரம்யா எனக்கொரு உதவி செய்வீங்களா என்றான் செல்வன். ரொம்ப நாளாச்சு உங்க டான்ஸ் பாத்து ஒருக்கா ஆடுவீங்களா என கேட்டான்.

அட பாவி நம்ம டான்ஸ் தேவையா உனக்கெல்லாம் ஆடிக் காட்ட முடியா தேவை எண்டா ரேவதிக்கு போன் போட்டு கேள் என்றாள் ரமி. ஆமா நாம ஆடினா அது பேயாட்டம். அவளாடினால் தான் அது மோஹினி ஆட்டம் நீ அவளையே கேள் நம்மகிட்ட வேண்டாம் என்றாள் செல்வி.

செல்வி அவனுக்காக வேணாம் நம்மளுக்காக ஆடேன் பிளீஸ் என்று கெஞ்சினான் சிவா. ஆமா ரமி நீயும் கூட ஆடு வேணுமெண்டா செல்வன் பாக்காம அவன் கண்ணை நான் கட்டி விடுறன் என்றான் தனேஷ்.

நம்மளால முடியாதுப்பா என்று ஓடிய செல்வியை பார்த்து சிவா செல்விக்குட்டி பிளீஸ் எனக்காக ஆடு என்றான். செல்வி கண்ணா இளவரசன் கேக்கிறார் ஆடி தான் காட்டேன் என்றான் செல்வன்.

டேய் செல்வா இனி இளவரசன் இளவரசி எண்டு சொன்னா கொன்னுடுவன் உன்னை. அது நாடகத்தோட முடிஞ்சு போச்சு நீ எப்பிடியோ அப்பிடி தான் அவனும் எனக்கு யாக்கிரதை என்று கடிந்தாள் செல்வி. அம்மா தாயே பத்திரகாளி ஆகாதடி நான் இனி சொல்லல என்றான்.

தனேஷூம் சிவாவும் எதிர்பார்த்த வினாவிற்கான விடை கிடைத்து விட்டது. சிவாவிற்கும் ரொம்பவே சந்தோசம் இருந்தும் சிறு நெருடல் தமக்குள் இருந்த பாசமான உறவை காதல் என்று நினைத்து ஒரு நொடி கலவரப்பட்டு விட்டோமே என்று. அவன் மனதை புரிந்த தனேஷ் பார்வைகளால் சமாதான படுத்தினான்.

சரி சரி நாங்க ஆடுறம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று கூறி உள்ளே சென்ற ரம்யா செல்வனோடு வம்பு பண்ணுவதற்காகவே கையில் அதை எடுத்தாள்.

வம்புச்சண்டைகள் தொடரும்…………!

பாகம் 22
Last edited by Aruntha on Mon Mar 12, 2012 12:30 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by ஆதித்தன் » Sun Mar 11, 2012 7:42 pm

21 பாகங்களை கடந்து சென்று கொண்டிருக்கும் அழகிய தேவதைக்கு என் வாழ்த்துகள். கதையின் ஒர் பாகத்தை மட்டுமே, இன்று படிக்க முடிந்தது. கதை சிறப்பான செல்கிறது...

தொடரட்டும்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Sun Mar 11, 2012 8:01 pm

அப்பிடியா ரொம்ப நல்லது. நட்பு, காதல், குடும்பம் எக்பவற்றை இணைத்து செல்கிறேன் பார்ப்போம்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 22

Post by Aruntha » Mon Mar 12, 2012 12:26 pm

ரம்யாவை தொடர்ந்து சென்ற செல்வி என்ன எடுக்க வந்தாய் என்றாள். இரு இந்த லப்டொப்ப நீ எடு நான் வாறன் என்றாள். சரி என இவள் லப்டொப்பை தூக்க அவள் கையில் சீடி உடன் வந்தாள். இதென்ன சீடி என்ற செல்வியின் வினாவிற்கு இது நம்மட டான்ஸ் போட்டில எடுத்த வீடியோ ரேவதி டான்ஸ் இருக்கு தானே அத போட்டு காட்டுவம் என்றாள்.

நல்ல ஐடியா தான். இவன வழிக்கு கொண்டு வர இது தான் சரியான வழி. நம்மட டான்ஸ் இனி பாப்பாரா இதயே போட்டு பாரடா என்று குடுக்கணும் என்றாள்.

என்னடி டான்ஸ் ஆடுறன் எண்டு சொல்லிட்டு உள்ளுக்கு போனாய். ஓஹோ பாட்டு போட லப்டொப் எடுக்க போனாயா சரி சரி சீக்கிரம் போட்டிட்டு ஆடுங்க என்றான் செல்வன்.

அவசரபடாதடா கொஞ்சம் வெயிற் பண்ணு என்று கூறி வீடியோவை போட்டாள். எல்லாம் பொவாட் செய்து ரேவதி நடனத்தில் கொண்டு வந்து விட்டாள்.

செல்வன் சார் இந்த டான்ஸ் பாருங்க நல்ல மோஹினி ஆட்டம் உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். நம்மட டான்ஸ் எல்லாம் உங்களுக்கு வேணாம் என்று கூறி அவள் டான்ஸ்ஸை காட்டினாள்.

டேய் இவளா ரேவதி ரொம்ப நல்ல பிகருடா மச்சி என்றான் சிவா. ஆமா நல்லா தான் இருக்கு அவ லுக்கு என்றான் தனேஷ். டேய் அடங்குங்கடா அவள் அடக்கமான பொண்ணு சும்மா கலாய்க்காதீங்க என்றான் செல்வன்.

அட பாருடா சாருக்கு கோவம் எல்லாம் வருது. ஏய் நீங்க சொன்னது சரிதான்டி மச்சி ரொம்ப இன்ரஸ்ட் ஆக தான் இருக்கார் அவங்க மேல என்று வம்பு பண்ணினாங்க.

ஏய் உங்கள தானே டான்ஸ் ஆட கேட்டன் இப்ப என்னத்துக்கு இந்த சீடி போட்டிங்க என்றான் செல்வன். என்ன இந்த சீடி நீங்க தனியா இருந்து பாக்கணுமோ அப்ப சரி நாங்க குழப்பல நீங்க பாருங்க சார் நாங்க போறம் என்றாள் ரமி.

ஆமா வாங்கடா நாங்க போவம் என்றாள் செல்வி. அவங்களும் என்ன மச்சி நாங்க போகவா என்று இழுக்க என்ன தான் வேணும் உங்களுக்கு ஏன்டா இப்பிடி என்ன போட்டு வதைக்கிறீங்க என்றான் செல்ல கோவத்துடன் செல்வன்.

சிவாவின் தொலைபேசி சிணுங்கியது. ஹலோ அப்பா சொல்லுங்க என்றான். நாங்க செல்வன பாக்க போவம் என்று சொல்லியிருந்தன் அது தான் இன்னிக்கு பின்னேரம் போவமா என்றார். ஆமா நான் இப்ப அவன் கூட தான் நிக்கிறன் பின்னேரம் வருவம் என்றான்.

யாரடா அப்பாவா என்றான் செல்வன். ஆமாடா உன்ன பாக்கணும் என்று அவர் சொன்னார் அது தான் பின்னேரம் போவமா என்று கேட்டார்.

ஏனடா அவருக்கு வீண் சிரமம் எனக்கு தான் ஓகே ஆகிட்டே என்றான். இல்லடா உங்க வீட்டுக்கு கூட ஒருநாளும் வந்ததில்ல இந்த சாட்டோடயாவது வரட்டுமே என்றான்.

அதுவும் சரி தான் அப்ப பின்னேரம் கூட்டிட்டு வா அம்மாவையும் அப்பாவையும் என்றான். அப்படியே சற்று நேரம் இருந்து அரட்டை அடித்தபின் அனைவரும் வீட்டிற்கு சென்றார்கள்.

கமலி சீக்கிரம் புறப்படு நேரமாச்சு என்ற குமாரின் குரலிற்கு நான் ரெடி என்றாள். என்ன மம்மி எங்க ஆயத்தம் என்றாள் செல்வி. இன்டைக்கு அப்பாட ஆபிஸில போட் மீற்றிங். அதால பங்கு என்னோட பெயரிலும் இருக்கிறதால போகணும் என்றாள்.

பின்னேரம் சிவா அவன் அம்மா அப்பா கூட வாறன் எண்டு சொன்னான் நாங்க உங்களுக்கு சொல்ல மறந்திட்டம் என்றான் செல்வன். சரி பறவாயில்லை பிரியா நிக்கிறாள் தானே எல்லாம் பாத்துக்குவா நாங்க கிளம்பிறம் என்று சொல்லி புறப்பட்டாள்.

இந்த பூவை தலைல வச்சிட்டு போங்க கமலி என்று ஒரு ரோஜாவை கொண்டு வந்து அவளின் தலையில் வைத்தார் பிரியா. பிரியா நாங்க கிளம்பிறம் சிவாட குடும்பத்தில இருந்து அம்மாவும் அப்பாவும் வாறாங்களாம் செல்வன பாக்க. ஒருக்கா அவங்கள கவனிச்சுக்கோடா என்றாள்.

சரி சரி நீங்க கிளம்புங்க நான் எல்லாம் பாக்கிறன் என்று அவர்களை வழியனுப்பி வைத்தாள் பிரியா. அவர்களின் கார் வெளியில் செல்லவும் சிவா குடும்பம் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

வாங்க அங்கிள் என்று அன்போடு வரவேற்றாள் உட்கார வைத்தாள் செல்வி. எப்பிடியப்பா இப்ப உடம்புக்கு என்று செல்வனை வினாவ இப்ப எல்லாம் ஒகே அங்கிள் என்றான்.

அங்கிள் நீங்க ஒரு நிமிசம் முன்னாடி வந்திருந்தா எங்கட அம்மா அப்பாவ மீற் பண்ணி இருக்கலாம் அவங்க ஆபிஸில மீற்றிங் என்று போய்டாங்க என்றான். சரிப்பா பறவாயில்லை என்றார்.

இது என்னோட சிஸ்டர் செல்வி, இது என்னோட நண்பி ரம்யா, இவங்க ரம்யாவோட அம்மா. நாங்களும் ரம்யா குடும்பமும் சின்ன வயசில இருந்து குடும்ப நண்பர்கள் என்று எல்லோரையும் அறிமுகப்படுத்தினான்.

எல்லாரை பத்தியும் தெரியும் சிவா சொல்லியிருக்கான். இன்றைக்கு தான் நேரில பாக்கிறம் என்றார் மகிழ்வுடன்.

என்னங்க செல்வன பாக்க நம்ம சிவா போலயே இருக்கில்லா என்றாள் சிவாவின் தாய். ஆமா அது தான் சொல்லுவாங்களே உலகத்தில ஏழு பேர் ஒரே போல இருப்பாங்க என்று.

அப்ப இரண்டு பேர் இங்க இருக்கிறம் மீதி ஐந்து பேரும் எங்க அப்பா என்றான் சிவா. உனக்கு எப்பவும் விளையாட்டு தான் என்று கூறி சிரித்தார் அவனின் தந்தை.

சற்று நேரம் அனைவரும் பல விடயங்கள் கதைத்தார்கள். நேரமாகியதால் சரிப்பா நாங்க கிளம்பிறம். உங்க அம்மா அப்பாவ தான் பாக்கல இன்னொரு நாளைக்கு வந்து பாத்திட்டா போச்சு என்று கூறி விடைபெற்றனர்.

அவர்கள் வீட்டை நோக்கி அவள் ரொம்பவே களைப்புடன் வந்து கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டு வாசலை அவள் நெருங்கவும் சிவா குடும்பம் சென்று காருக்குள் ஏறவும் சரியாக இருந்தது.

வாங்க டாக்டரம்மா என்ன கனநாளைக்கு பிறகு என்ற செல்வியின் குரலுக்கு ஆமா பிள்ளை நான் ஊரில இருந்து இங்க ஒரு வேலையா வந்தன் நம்ம செல்வனுக்கு ஏலாது என்றாங்க அது தான் நாம தூக்கி வளர்த்த பிள்ளையல்லா பாத்திட்டு போவம் என்று வந்தன் என்றார்.

கமலியும் குமாரும் ஆபிஸ் போயிருக்காங்க இப்ப வந்திடுவாங்க இருங்கம்மா நான் காப்பி கொண்டு வாறன் என உள்ளே போனாள் பிரியா. இப்பவந்திட்டு போனவங்க யாரும்மா என்ற டாக்டரம்மாவின் வார்த்தையில் நின்ற பிரியா அதுவா அது நம்ம செல்வி ஆக்களோட படிக்கிற பையன் சிவாட குடும்பம் செல்வன பாக்க வந்தாங்க என்றாள்.

ஏன் கேக்கிறீங்க அவங்க கூட பெரிய பண்ணைக்காரங்கள். சோலையூர் கிராமத்தில மாசிலாமணி என்றால் அவரை தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது என்றாள்.

சோலையூர் கிராமம் மாசிலாமணி என்ற பெயரை கேட்டு அதிர்ந்த டாக்டரம்மா அப்படிகே சோபாவில் சாய்ந்தாள்.

உறவுகள் தொடரும்……….!
பாகம் 23
Last edited by Aruntha on Tue Mar 13, 2012 4:33 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 23

Post by Aruntha » Tue Mar 13, 2012 4:31 pm

என்னாச்சு டாக்டரம்மா என்று ஓடி வந்தாள் செல்வி. ரமி தண்ணி எடுத்திட்டு வா டாக்டரம்மா மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க என்று கத்தினாள். முகத்தில் தண்ணீர் தெளிக்க மெல்ல கண்களை திறந்தார் டாக்டரம்மா.

என்னாச்சும்மா என்ற பிரியாவின் கேள்விக்கு விடை சொல்ல முடியாதவளாய் ஒண்ணுமில்ல ரொம்ப தூரம் பிரயாணம் பண்ணினது அது தான் களைப்பில மயக்கம் வந்திச்சு என்றாள்.

சரி இந்த காப்பிய குடியுங்க என்று குடுத்தாள். அதை குடித்து சற்று கண்களை மூடி உட்கார்ந்திருந்தாள். இருந்தும் அவளிற்கு சோலையூர் கிராமம் மாசிலாமணி என்று அவள் கூறிய பெயர் எதிரொலித்த வண்ணம் இருந்தது.

வாங்க டாக்டரம்மா எப்ப வந்தீங்க என்ற கமலி குரல் கேட்டு கண்களை திறந்தவள் இப்ப தான் வந்தன் செல்வனுக்கு ஏலாதெண்டாய் பாத்திட்டு போவம் எண்டு என்றாள்.

என்னை பாக்க வந்து அவங்களுக்கு தான் ஏலாம போய்ட்டு. ரொம்ப களைச்சு போனதால மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க என்றான் செல்வன்.

அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா எப்பிடி நீங்க எல்லாம் இருக்கிறீங்க என்று கதையை வேறு திசைக்கு திருப்பினார் டாக்டரம்மா. நான் பிரசவம் பார்த்த பிள்ளையள் இப்ப எப்பிடி வளர்ந்திட்டாங்க என்று கூறி சிரித்தார்.

நீங்க கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்க கூடாதா? அம்மா இப்ப தான் சிவா அப்பா அம்மா போனாங்க நீங்க மிஸ் பண்ணிட்டீங்க என்றான்.

சரிப்பா விடு இன்னொரு நாளைக்கு பாக்கலாம் என்றார் குமார். அதுவும் சரி தான் தம்பி இன்னிக்கு பாக்கணும் என்று உனக்கு விதி இல்லப்பா நீ ஆறுதலா அவர பாரு என்றார் டாக்டரம்மா.

அது தானே நினைக்கிறதெல்லாம் நடந்தா வாழ்க்கைல சுவாரசியமே இருக்காது விடுங்க இதெல்லாம் சகஜம் தானே என்றான் குமார். சரியம்மா நீங்க இராத்திரிக்கு இங்க தங்கிட்டு காலைல போங்க என்றாள் கமலி. டாக்டரம்மாவும் சம்மதித்தார்.

இரவு செல்வி செல்வன் ரம்யாவினுடைய கல்லூரி விழா படங்கள் எல்லாம் பார்த்து மகிழ்ந்தார் டாக்டரம்மா. ஏய் செல்வி உன் கலைவிழா நாடக சீடிய போடு உன் நடிப்ப பாக்கட்டும் என்றாள் ரம்யா. அவளும் சீடியை கொண்டு வந்து போட்டாள்.

டாக்டரம்மா இந்த நாடகத்தில நான் இளவரசி. செல்வன் இளவரசனா வாறான். ரமி ஒரு தீர்க்கதரிசி பாகம் செய்யுறாள். இப்ப வந்து போனானே சிவா இளவரசனா வாறான் வந்து என்ன திருமணம் செய்யுறான். அப்புறம் மற்றதெல்லாம் என் காலேஜ் ஃபிரன்ஸ் என்று சொல்லி முடித்தாள்.

செல்வி கதை சொல்ல சொல்ல டாக்டரம்மா மனதிற்குள் புயலடிக்க ஆரம்பித்தது. சிவாவை டிவியில் பார்த்த வண்ணம் இருந்தாள். அவனின் ஒவ்வொரு நடிப்பையும் ரசித்தபடி இருந்தாள். இருந்தாலும் அவனுடைய காதல் காட்சிகள் அவளை ஏதோ செய்த வண்ணம் இருந்தது.

அவளை அறியாமலே அந்த ஏசி நிறைந்த குளுகுளு அறையிலே வியர்த்து கொட்டியது. நெஞ்செல்லாம் படபடப்பாய் இருந்தது.

என்ன டாக்டரம்மா என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க? ஏன் இப்பிடி வியர்க்குது? உடம்புக்கு முடியலயா டாக்டருக்கு போன் பண்ணவா என்றாள் கமலி. இல்லம்மா அதெல்லாம் ஒண்ணுமில்ல வயசாயிட்டில்லா அது தான் என்றாள்.

செல்வி சூடாக காப்பி போட்டு குடுத்தாள். இத குடியுங்கம்மா போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சரியாகிடும் என்று கூற டாக்டரம்மாவும் குடிச்சுவிட்டு போய் ரெஸ்ட் எடுத்தார்.

பெயரிற்கு தான் வந்து கட்டிலில் சாய்தாரே தவிர அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. விதி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எப்படி விளையாடுகிறது என்று நினைத்தாள்.

அவளுக்கு பண்ணையார் முகம் கண் முன்னே வந்து போனது. பல வருடங்களுக்கு முன்பான நினைவுகள் நெஞ்சை அடைத்தது. அதற்கும் மேல் அவன் செல்வியினுடன் நடித்த காதல் காட்சிகள் மனதை நெருடியது.

அவளின் மனதின் பாரத்தை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். சில உண்மைகள் இரகசியங்கள் மனதை நெருடினாலும் அதை வெளியில் சொல்வதால் பலருடைய சந்தோசம் பறிபோகும் என்ற போது அதை சொல்லாமலே மறைப்பது சிறந்தது என்று நினைத்தாள்.

கண்கள் கலங்க இதயம் கனக்க அவளின் நிலை பரிதாபமாக இருந்தது. அதற்கும் மேல் அவளின் பொறுமையை சோதிக்க மனமின்றி நித்திரை அவள் கண்களை தழுவியது.

மன போராட்டம் தொடரும்….!
பாகம் 24
Last edited by Aruntha on Sat Mar 17, 2012 1:47 pm, edited 1 time in total.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by udayakumar » Wed Mar 14, 2012 12:39 am

உங்கள் மனதில் இப்படியெல்லாம் கற்பனைகள் இருப்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது.. தொடரட்டும் உங்கள் தொடர்கதை...............................
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Fri Mar 16, 2012 10:22 am

udayakumar wrote:உங்கள் மனதில் இப்படியெல்லாம் கற்பனைகள் இருப்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது.. தொடரட்டும் உங்கள் தொடர்கதை...............................
என்ன அண்ணா அப்பிடி என்ன கற்பனை? கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்கவன்
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”