அழகிய தேவதை - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 11

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:24 pm

சிவாவிற்கு தன் பாடத்தில் கவனத்தை செலுத்த முடியவில்லை. செல்வியின் குழந்தை தனமான குறும்புகள், அவளின் பேச்சு, அவள் அம்மாவின் பாசம் எல்லாமே படம் போல் வந்து போனது.

நாடகத்தில் அவளுடனான நெருக்கம், அவள் தோள் சாய்ந்து பேசிய காதல் மொழிகள், அவள் கைப்பிடித்து நடந்த பூஞ்சோலை, இளவரசான தனக்கும் இளவசரியான அவளுக்கும் நடந்த திருமணம் எல்லாமே இப்பொழுது அவனிற்கு நினைத்து பார்க்க மகிழ்வாய் இருந்தது.

படித்து முடித்து விட்டு கட்டிலில் வீழ்ந்த செல்வியும் அதே சிந்தனையுடன் இருந்தாள். நாடகத்தில் அவன் அருகாமை மற்றும் அன்பான தழுவல்கள் அவளை முழுமையாக ஆக்கிரமிக்க அவன் நினைவுடனே சங்கமமானாள்.

தன்னையே மறந்து தலையணையுடன் கதை பேசிக் கொண்டிருந்தவளை பார்த்த செல்வன் என்னடி ஆச்சு சிவா நினைப்பா அது தலையணையடி சிவா இல்ல என்று கிண்டல் செய்தான்.

சீ போடா உனக்கும் காதல் என்று வந்தால் தான் தெரியும் இப்ப இப்பிடி தான் சொல்லுவாய் யாராச்சும் ஒருத்தி மனசில வந்திட்டாள் என்றால் நீயும் இப்பிடி தான் இருப்பாய் என்றாள்.

ஏய் நான் சிங்கம் எனக்கு இந்த காதல் கீதல் எல்லாம் வராது. நானும் தான் எத்தனை பொண்ணுங்கள பாக்கிறன் பழகிறன் எனக்கு அப்பிடி தோணல. தோணவும் மாட்டுது என்றான்.

அதையும் பாப்பம் மவனே உனக்கும் காதல் வரேக்க தெரியும் அப்ப நான் வந்து இவ்வளவும் உன்னட்ட கேப்பன் அப்ப சொல்லுவாய் பதில் என்றாள்.

டேய் செல்வா இந்த காதல் என்னடா ரொம்ப பாடாய் படுத்துது. நீ யோசிச்சு பாரு உனக்கு யாராயாச்சும் பிடிச்சிருக்கா யாராயாச்சும் பார்த்தப்ப இவள தான் கட்டணும் என்று தோணி இருக்கா என்றாள்.

அடியே என் செல்ல தங்கா உனக்கு காதல் வந்தால் காதலிச்சிட்டு போடி. என்னை ஏன்டி வம்பில மாட்டுறாய். நான் நல்லா இருக்கிறது பிடிக்கலயா? ஆள விடுடா சாமி நீ ஆச்சு உன் லவ் ஆச்சு என்னை விட்டிடு என்று கூறி சென்றான்.

சென்றவனால் அவள் சொல்லிய வார்த்தைகளை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. காதல் எனக்கும் வருமா என்று தன் உள் மனதையே கேள்வி கேட்டான். மனது சற்று குழம்பியது.

அனேகமாக அவர்கள் இருவரின் உணர்வும் ஒரே போன்று தான் அமையும். அவளுக்கும் அவனுக்கும் உடல்நலம் குறைவானால் கூட ஒரே சமயத்தில் தான் அமையும். அப்படி என்றால் காதல்……!

இரட்டையர்களாய் பிறந்தால் அவர்களின் உணர்வுகளும் ஒரே போன்றிருப்பதாக சொல்வார்கள். ஒருவருக்கு உடல்நலம் குறைந்தால் மற்றவருக்கும் உடல்நலம் குறையும் என்று. அது சில ஓமோன்களின் செயலாக கூட இருக்கலாம். அதே ஓமோன்கள் தான் காதல் என்ற வினாவாக செல்வனின் மனதையும் கலைக்கின்றனவோ என்று சிந்திக்க தோன்றுகிறது.

செல்விக்கு சிவா மேல் ஏற்பட்ட காதல் போல் செல்வனிற்கும் காதல் உணர்வு ஏற்படுமா? இரட்டையர் என்றால் ஒரே நேரத்தில் ஒரே உணர்வு உண்டாகுமா? இது இந்த விஞ்ஞானயுகத்தில் ஏற்க கூடிய விடயமா?

அப்படி என்றால் அவன் மனதை கலைக்க போகும் அந்த தேவதை யார்? அவன் சிந்தனைக்கு உடனடியாக விடை கிடைக்கவில்லை அப்படியே தூங்கி விட்டான்.

ரம்யாவிற்கு கூட அவர்களின் சகோதர பாசத்தை பார்க்க தனக்கு ஓர் உடன்பிறப்பு இல்லையே என்ற வலி மெல்ல ஆட்டி படைத்தது. அது வரை உடன் பிறப்பு என்ற சிந்தனை இல்லாமல் இருந்தவளிற்கு அவர்களின் பாசம் ஏக்கத்தை கொடுத்தது.

அவர்களின் பாசமான வார்த்தைகள், பரிவான அரவணைப்புக்கள், மௌனமான பார்வைகள், பார்வைகளின் பேச்சுக்கள் இப்படியே எல்லாவற்றையும் மெல்ல அசை போட்டவாறு கட்டிலில் புரண்டாள்.

அன்றைய இரவு அவர்கள் அனைவருக்கும் தூக்கம் தொலைந்த இரவாகவே அமைந்தது. ஒவ்வொருவர் மனதிலும் ஓராயிரம் எண்ணங்கள் கற்பனைகள் நினைவுகள் என ஒரு போராட்டமே நடந்தது.

மறுநாள் தேர்வு அதை பற்றிய சிந்தனை யார் மனதிலும் இருக்கவில்லை. மனப்போராட்டங்களுக்கு விடை காண முடியாமல் அவரவர் சிறிது நேரத்தில் தூக்கம் என்ற அன்னையிடம் சரணடைந்தார்கள்.

தூக்கம் தொலைந்த இரவுகள் தொடரும்……………….!
பாகம் 12
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 10:13 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 12

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:24 pm

மறுநாள் தேர்வுக்கு சீக்கிரமாகவே எழுந்து சென்றார்கள். முன்னைய நாள் இரவு அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டாலும் தேர்வினை ஐவரும் சிறப்பாக எழுதி இருந்தார்கள்.

தேர்வின் இடைவேளையின் போது அவர்கள் தம் சிற்றுண்டிச் சாலையில் ஒன்றாக கூடி இருந்தார்கள். தம் மதிய உணவை பங்கிட்டு ஆள் மாறி ஆள் உண்டார்கள்.

செல்வன் நடுவில் அமர்ந்திருக்க செல்வியும் ரம்யாவும் அவனிற்கு இரண்டு கரைகளிலும் அமர்ந்திருந்தார்கள். அவர்களிற்கு எதிர்ப்பக்கமாக சிவாவும் தனேஷூம் இருந்தார்கள்.

அந்த நேரம் சிவா செல்வியை தன் பார்வைகளால் ரசித்தபடி இருந்தான். ஏதேச்சையாக அவன் பக்கம் திரும்பிய செல்வி அவன் பார்வையை கண்டதும் நாணத்துடன் தலை குனிந்தாள்.

இதை பார்த்து கொண்டிருந்த ரம்யா மெல்ல செல்வனின் கைகளை பற்றினாள். அவன் என்ன என்று கண்களால் வினாவ அவர்களின் பார்வை பரிமாற்றத்தை தன் கண்களால் சைகை செய்து அவனுக்கு உணர்த்தினாள்.

சிவா மனதிலும் காதல் இருப்பதை அவனின் பார்வை அப்பட்டமாக உணர்த்தியது. வெளிப்படையாக பேச முடியாத ரம்யாவும் செல்வனும் தங்கள் மகிழ்ச்சியை பார்வைகளால் பரிமாறினார்கள்.

தன் செல்ல சகோதரியின் காதல் உணர்வு சிவா மனதிலும் இருப்பதை கண்ட செல்வனின் மகிழ்ச்சிக்கு அழவேயில்லை. ரம்யாவின் கைகளை பற்றி மெதுவாக அழுத்தினான். அந்த கைப்பிடியின் அழுத்தமே அவன் மனதில் இருந்த மகிழ்ச்சியை உணர்த்தியது.

மெதுவாக செல்வன் தோளில் சாய்ந்த ரம்யா கண்களால் என்ன மகிழ்ச்சியா என்று நக்கலாக பார்த்தாள். அவனும் பதிலுக்கு தன் புன்னகையை பதிலாக உதிர்த்தான்.

உண்மையான நட்பிற்கு வார்த்தைகள் தேவையில்லை. ஒற்றை பார்வையே ஓராயிரம் அர்த்தங்கள் கூறும். சோகத்தின் ஏக்கமான பார்வை முதல் மகிழ்ச்சியின் சிலிர்ப்பான பார்வை வரை வார்த்தையாகும். மௌனங்களே மொழியாகும்.

கை பற்றிடும் அழுத்தம் கூட ஆழ்மனதை அப்படியே கூறும். மகிழ்ச்சியின் பிடிப்பு முதல் சோகத்தின் அழுத்தம் வரை ஓர் தொடுகையே உணர்த்தி நிற்கும்.

தொலைவாக இருந்தாலும் பரிமாறிடும் குரல் தொனிகளே உள்ளத்தை கூறிடும். களிப்பு முதல் கவலை வரை குரலே காட்டி கொடுக்கும். உண்மை முதல் பொய் வரை மறைக்க நினைத்தாலும் முடியாது போகும். அது தான் உண்மையான புரிந்துணர்வான நட்பின் தனித்தன்மை.

அத்தனை புரிந்துணர்வும் செல்வன் ரம்யாவிற்கிடையில் மிளிர்ந்தது. செல்வனின் ஒவ்வொரு அசைவின் அர்த்தத்தையும் ரம்யா புரிந்திருந்தாள். சொல்ல போனால் அவனை செல்வி மற்றும் அவன் பெற்றவர்கள் புரிந்ததை விட ரம்யா அதிகமாகவே புரிந்திருந்தாள்.

செல்வி சிவாவை பார்த்து மிகவும் மகிழ்வாக இருந்த அவர்கள் இருவரின் மௌனத்தையும் தனேஷின் குரல் கலைத்தது. எப்பிடியடா எக்ஸ்சாம் எழுதினீங்களா எல்லாரும் என்று கேட்க அனைவரும் தங்கள் சுய உலகிற்கு வந்தார்கள்.

ஆமாடா இன்று எக்ஸ்சாம் பறவாயில்ல எழுத கூடியதா இருந்திச்சு என்று கூறிய செல்வன், நீ எப்பிடியடா தனேஷ் என்றான் ஏதோ முடிஞ்சத எழுதினன்டா என்றான்.

ஏய் ரமி ரொம்ப படிச்சியே எழுதினாயா என்று வம்புக்கு இழுத்தான் செல்வன். உன்ன போல எழுதி பாஸ் பண்ண நம்மளால முடியாதுப்பா ஏதோ என் சக்திக்கு இயன்றத எழுதினன் என்றாள்.

அப்புறம் நம்ம இளவரசனும் இளவரசியும் எப்பிடி ரொம்ப நல்லா எக்ஸ்சாம் எழுதினீங்களா? இல்ல ரொமான்ஸ் மூட்ல இருந்தீங்களா என்று நக்கலாய் சீண்டினாள் ரம்யா.

ரமி உன்ன கொல்லாம விட மாட்டன் என்று எழுந்து அவளை கலைத்து கலைத்து அடித்தாள் செல்வி. சிவா என்ன ரொம்ப கலாய்க்கிறாய் செல்வி விடாத அவளுக்கு நல்ல அடி குடு என்று செல்விக்கு சப்போட் பண்ணினான்.

இதை பார்த்த தனேஷிற்கு கோவம் வந்தது. என்ன ரம்யா உன் பகிடிக்கு ஒரு அளவில்லையா என்று அவளை சற்று கண்டிப்புடன் கடிந்தான். என்னடா சும்மா ஜோக் தானே இப்பிடி கோவிக்கிறாய் என்று அவனை சமாதானம் செய்தான் செல்வன்.

தனேஷால் செல்வியை சிவாவுடன் இணைத்து கதைப்பதை ஏற்று கொள்ள முடியாமல் இருந்தது. இருந்தும் தன் கோவத்தை வெளிக்காட்ட முடியாமல் அமைதியானான்.

என்ன தனேஷ் ஏன் இவ்வளவு கோவம் ரம்யா என்ன சும்மா தானே கதைக்கிறாள் நீ ஏண்டா கோவப்படுறாய். கூல்டா மை டியர் பிறன்ட் என்று அவனை மெல்ல தட்டிக்கொடுத்து சமாதானபடுத்தினாள் செல்வி.

இடைவேளை முடிய மீண்டும் தேர்விற்கு சென்றார்கள். விளையாட்டு புத்திகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு தேர்வை மிகவும் சிறப்பாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார்கள்.

தேர்வு முடிந்ததும் அப்பாடா தேர்வு முடிஞ்சுது. இனி நமக்கு நிம்மதி என்று பெரு மூச்சு விட்டார்கள். இரண்டு நாளைக்கு நல்ல றிலாக்சா நித்திர கொள்ளணுமடா என்றான் தனேஷ்.

டேய் சிவா தனேஷ் பிறந்த நாளுக்கு இன்னும் ஐந்து நாள் இருக்கு. நீ நாளை மறுநாள் காலைல போய் தனேஷை கூட்டிக்கொண்டு எங்க வீட்டிற்கு வா நாங்க வெளில போய் ஷொப்பிங் செய்வம் என்று கூறினான் செல்வன்.

அவனும் சரியென தலையாட்டியவன் சரிடா இனி எல்லாரும் நாளை மறுநாள் எங்க வீட்ட சந்திக்கலாம் என்று கூறி பிரிந்தார்கள். ஏதாச்சும் தேவை என்றா போன்ல தொடர்பு கொள்ளுங்கடா என்று கூறி சென்றார்கள்.

வீட்டிற்கு சென்ற சிவாவிற்கு இரண்டு நாட்களாக செல்வியை பார்க்க முடியாதே என்கின்ற ஏக்கம் மனதை வாட்டியது. தனேஷ் கூட தாங்கள் ஐவரும் சந்திக்க முடியாதே என்று கவலையடைந்தான்.

செல்வி, செல்வன், ரம்யா மூவரும் இருந்து கரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நாளைக்கு தனேஷ், சிவா வருவாங்க அவனுக்கு பிறந்தநாளுக்கு ஏதாச்சும் உடுப்பு வாங்கணும் எங்க போகலாம் என்று திட்டமிட்டார்கள்.

அவனிற்கு என்ன வாங்கலாம் எப்பிடி வாங்கலாம் என்று எல்லாம் திட்டமிட்ட பின் பல நாட்களாக நெடு நேரம் இருந்து படித்தமையால் அன்று நேரத்தோடு தூங்க சென்றார்கள்.

மறுநாள் காலை ரம்யா வெளிக்கிட்டபடி செல்வியிடம் வந்தாள். என்ன செல்வி நான் ரெடி நீ ரெடியாகிட்டாயா என்றாள். நானும் ரெடி அவன் செல்வன் சோம்பேறி தான் இன்னும் ரெடியாகல என்று கூறினாள்.

டேய் செல்வா நாங்க ரெடியாகிட்டம் என்னடா பண்ணுறாய் என்று ரம்யா வரவேற்பறையிலிருந்து கத்தினாள். ஏய் ரமி கத்தாத நான் வாறன் என்று பதிலுக்கு கத்தினான். சீக்கிரம் வாடா என்ற செல்வியின் குரலும் அவனை கடிந்தது.

நான் ரெடி என்றபடி மாடிப்படிகளில் இருந்து கையசைத்தவன் மெல்ல காலைத் தூக்கி படிகளில் வைக்க அவன் சப்பாத்து வழுக்கியது. அம்மா என்ற படி மாடிப்படிகளில் உருண்டவண்ணம் கீழே விழுந்தான்.

செல்வா என்னாச்சுடா என்ற வண்ணம் செல்வியும் ரம்யாவும் அவனை நோக்கி ஓடினார்கள். சத்தம் கேட்டு பரபரப்பாய் ஓடி வந்தனர் பிரியாவும் கமலியும்.

எதிர்பாராத அதிர்ச்சி தொடரும்…………..!
பாகம் 13
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 10:14 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 13

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:25 pm

மூச்சு பேச்சின்றி இருந்த செல்வனை கண்டதும் கமலி நிலை தடுமாறி நிலத்தில் அமர்ந்தாள். செல்வா என்னாச்சு எழும்புடா என்று அவனை மடியில் வைத்தபடி செல்வி. அவன் முகத்தில் தண்ணீரை தெளித்த படி பிரியா. ரம்யா சீக்கிரமா அம்புலன்ஸ்க்கு கோல் பண்ணியபடி…..!

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அம்புலன்ஸ் அவர்கள் வீட்டை வந்தடைந்தது. செல்வி, கமலி, ரம்யா மூவரும் அவனுடன் ஹாஸ்பிடல் சென்றார்கள். நீங்க போங்க நான் வீடெல்லாம் பூட்டிட்டு கார்ல வாறன் என அவர்களை வழியனுப்பினார் பிரியா.

அவர்களின் அம்புலன்ஸ் காற்றை கிழிக்கும் வேகத்துடன் வேகமாக சென்று கொண்டிருந்தது. செல்வன் உடலில் எந்த அசைவும் இல்லை.

உடனடியாக குமாரிற்கும் ராஜனிற்கும் போன் செய்து விடயத்தை கூறி விட்டு ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தாள் பிரியா.

செல்வன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அவனை சோதித்த வைத்தியர்கள் அவனுக்கு பலத்த அடி ஏதும் படவில்லை மேலிருந்து வீழ்ந்த அதிர்ச்சியில் ஹோமா நிலைக்கு சென்றுவிட்டதாக கூறினார்கள்.

அனைவரும் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்தார்கள். ஹோமா நிலையா என்ன சொல்றீங்க ஐயோ என்னாச்சு டாக்டர் அவனால பேச முடியாதா என்று கதறினாள் கமலி.

அம்மா பயப்பிடாதீங்க பயமேதும் இல்லை. ஆனால் மூன்று மணி நேரத்துக்குள்ள அவனுக்கு சுய நினைவு வரணும் நாங்க டீட்மென்ட் குடுக்கிறம். அப்பிடி வராவிட்டால் அவனுக்கு பழைய நினைவுகள் யாவும் மறந்து விடும் என்றார்.

சில சமயம் பெற்றவங்கள கூட யார் என்று அடையாளம் தெரியாம போய்டும். ஒரு ஊசி போட்டிருக்கிறன். நீங்க அவர் கூட பேசுங்க முடிஞ்சளவிற்கு பழைய நினைவு வர வையுங்க என்றார்.

அவனுக்கு நீங்க கதைக்கிறது கேக்காது. தொடுகைய மட்டும் தான் உணர முடியும். ஆனால் அவனால் தன் உணர்வுகளை வெளிக்காட்ட முடியாது. சீக்கிரமா முயற்சியுங்க ரைம் ஆகுது என்று கூறினார்.

அதற்குள் பிரியாவும் குமார் மற்றும் ராஜன் ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள். டாக்டர் சொல்லியதை கேட்டு அதிர்ச்சியடைந்தாலும் ஒருவாறு சுதாகரித்த வண்ணம் அவனை நெருங்கினாள் கமலி.

மெல்ல அவன் கரங்களை பற்றி தன் தாய் பாசத்தை உணா்த்தினாள் அவன் முகத்தில் முகம் புதைத்து அழுதாள் ஆனால் எந்த ஒரு மாற்றத்தையும் அவனிடம் கண்டுக்க முடியவில்லை.

அம்மா உங்களால் முடியும் தாயின் அன்பிற்கு ஈடிணை ஏது? தாய்ப்பாசத்தை விட எந்த பாசத்தாலும் ஒருவனுக்கு ஆறுதல் கிடைக்காது.

எந்த சோகமா இருந்தாலும் தாய் மடில ஒரு நொடி தலை சாய்த்து படுத்தா அடுத்த நிமிசமே மறைஞ்சிடும் என்றார் டாக்டர். அவர் சொல்லிய தைரியத்தில் தன் பாசத்தை முழுமையாக காட்டி அரவணைத்தாள். இருந்தும் எந்த மாற்றத்தையும் அவளால் காண முடியவில்லை.

சோர்வுற்ற அவள் கண்ணீருடன் குமாரின் மார்பில் அடைக்கலமானாள். விம்மலுடன் அவனை பார்த்து என்னப்பா நம்ம பிள்ளைய பாருங்க என்னாச்சு அவனுக்கு என்று அழுதாள். அவளை சமாதானம் செய்து விட்டு மெல்ல செல்வனை நோக்கி சென்றார் குமார்.

அவனை பாசத்தோடு உச்சி மோந்தார். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவன் என்பதால் தன் அரவணைப்புக்குள் அவனை அவனை முழுமைப் படுத்த விரும்பினார். இருந்தும் அவர் முயற்சி கூட தோல்வியிலே முடிந்தது.

நேரமே சற்று கூட இரக்கமின்றி மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. டாக்டர் கூறிய நேரத்திற்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் கூட இருக்கவில்லை. எல்லார் முகத்திலும் கலவரம் நிறைந்தது.

பெற்றவர்களின் பாசத்தை விட யாருமே அதிக பாசத்தை காட்ட முடியாதென்பதை உணர்ந்த அவரின் முகத்தில் சற்று குழப்பம் தெரிந்தது.

அவர்களின் இறுதி முயற்சி செல்வியாக இருந்தாள். கருவிலே இருந்து அவன் உணர்வுகளை புரிந்த அவள் அவனை மெல்ல நெருங்கினாள். மெதுவாக அவன் தலைகளை வருடி விட்டாள்.

அவன் நெஞ்சோடு தலை சாய்த்து அவன் கரங்களை பற்றினாள். அவர்களுக்குள் இருந்த உறவு உணர்வு பூர்வமாக சகோதர பாசமாக இருந்தாலும் அவன் உணர்வுகள் அனைத்தையும் அவளால் தன் கைப்பிடிக்குள் கொண்டு வர முடியவில்லை.

வார்த்தைகளால் என்றால் அவளால் அவனை தனக்குள் அடைக்கலப்படுத்தியிருக்க முடியும். ஆனால் இப்போ அவன் உணர்வுகளுடன் மட்டுமே பேசி அவனை சுய உலகிற்கு கொண்டு வர முடியாதிருந்தது.

அனைவரையுமே பயம் மெல்ல கவ்வியது. டாக்டர் கூறிய கால எல்லைக்கு இன்னும் 45 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. டாக்டரால் கூட என்ன செய்வது என்று புரியவில்லை.

அவனிற்கு கொடுக்க வேண்டிய அத்தனை தீவிர சிகிச்சைகளும் கொடுத்து விட்டார்கள். மெலிதான கரண்ட் ஷொக் கூட கொடுத்து பார்த்து விட்டார்கள் எதுவுமே பயனற்றதாகி விட்டது.

அவனிற்கு அடி எதுவுமே பலமாக படவில்லை. மனதளவிலான அதிர்ச்சியில் இப்படி ஆகி விட்டது. அவன் உணர்வுகளோடு பேசி முடிந்தால் சுயநினைவிற்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இனி தன் கையில் எதுவுமில்லை என்று கூறி கைவிரித்தார் டாக்டர்.

இத்தனை இரத்த உறவுகளின் பாசத்தை விடவும் அவன் உணர்வுகளை யார் புரிந்து கொள்வார்கள்? கடவுளே இது என்ன சோதனை என்று கமலி ஏக்கத்துடன் மயக்கமடைந்து வீழ்ந்தாள்.

உறவுகளின் பாசத்தையும் மீறி அவன் உணர்வுகளை உணர்ந்து உள்ளத்துடன் பேச கூடிய சக்தி யாருக்கு தான் இருக்கு கடவுளே இது என்ன சோதனை என டாக்டரும் குழப்பமடைந்தார்.

பற்பல வெளிநாட்டு வைத்திய நிபுணர்களை எல்லாம் தொடர்பு கொண்டார்கள். நாகரீக வளர்ச்சியால் பற்பல நாடுகளில் இருந்து பலவிதமான சிகிச்சைகளை வெப் கமரா மூலம் செய்தார்கள். எதுவுமே பலனளிக்கவில்லை.

இன்னும் 30 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் தன் உண்மையான பாசத்தையும் அவன் உணர்வுகளையும் புரிந்த நம்பிக்கையுடன் அவள் மெல்ல அடி எடுத்து வைத்தாள்.

முயற்சி போராட்டம் தொடரும்………!
பாகம் 14
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 10:15 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 14

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:25 pm

ரம்யா என்ன இது என்ற பிரியாவின் குரல் கேட்டு ஒரு நிமிடம் நின்றவள் பெத்தவங்கள் கூட பிறந்தவங்க யாராலுமே முடியல கூட பழகின உன்னால முடியுமா என்று சந்தேகமாக கேட்டாள்.

அம்மா நான் அவன் மேல வச்சிருக்குற களங்கமில்லாத பாசத்தில நம்பிக்கை இருக்கு என்னால அவன் கூட பேசி அவன சுய நினைவுக்கு கொண்டு வர முடியும் என்று திடமாக கூறினாள்.

பிரியாஆன்டி அவள தடுக்காதீங்க நான் அவன்லயும் அவன் என்லயும் வச்சிருக்கிறது உடன் பிறந்த உறவால வந்த பாசம். ஆனால் இவங்க இரண்டு பேரும் வச்சிருக்கிறது உயிருக்குயிரான பாசம் என்றாள்.

ஆமா ஆன்டி ரமியால அவன் கூட வார்த்தைகளால மட்டுமல்ல அவன் உணர்வுகளோடயும் பேச முடியும். அவங்களுக்குள்ள இருக்கிற அந்த பாசம் வெளில இருந்து பார்த்தா தெரியாது. நான் அவங்க கூட இருந்து அனுபவிச்சிருக்கன் தடுக்காதீங்க என்றாள்.

செல்வியின் வார்த்தைகளை கேட்ட பிரியாவும் ராஜனும் ஒரு நொடி ஆச்சரியமடைந்து நின்றார்கள். அவளின் உறுதியான வார்த்தைகளை கேட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். சரி ரமி நீ போய் அவன் கூட பேசு என்றார்கள்.

அவனை நெருங்கிய ரம்யாவை எக்ஸ்சியூஸ்மி என்ற டாக்டரின் வார்த்தைகள் தடுத்தது. நான் ஒண்ணு தெரிஞ்சுக்கலாமா என்றார். சொல்லுங்க டாக்டர் என்றாள் ரம்யா .

இல்ல உங்க இரண்டு பேருக்குள்ளயும் என்ன றிலேஷன்ஷிப் என்று சொல்ல முடியுமா என்றார். ஃபிறன்ஸ் என்று ஒற்றை வார்த்தையில் கூறினாள்.

ஃபிறன்ஸ் என்றால் கேள் ஃபிறன்டா ஐ மீன் நீங்க அவன் லவ்வரா என்றார். ரம்யாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இல்ல டாக்டர் சின்ன வயசு முதலே அவன் கூட பழகிறன். அவன் மனசு எனக்கு நல்லா தெரியும். எல்லா விடயமும் மனம் விட்டு பேசுவம் சொல்ல போனா இந்த வயசு வரைக்கும் நான் செல்வன் செல்வி மூணு பேருமே ஒண்ணா ஒரு றூமில ஒரு பெட்ல கூட தூங்குவம். அந்தளவுக்கு நெருக்கமா பழகுவம் ஆனால் மனசில பாசம் நட்பு என்ற உறவ தவிர வேற எதுவும் இல்லை என்றாள்.

எங்களுக்குள்ள இருக்கிறது புனிதமான ஆழமான உறவு. அதுக்கு நாங்க வச்சிருக்கிற பெயர் நட்பு மட்டும் தான் என்றாள்.

அவள் பேச்சிலிருந்த தெளிவு பாசத்தில் இருந்த உறுதி அனைவரையும் ஒரு நொடி சிந்திக்க வைத்தது. சரிம்மா நீ போய் அவன் கூட பேசு என்றார். நேரம் 15 நிமிடங்களை நெருங்கிக் கொண்டிருந்தது.

மெல்ல அவனருக்கில் சென்ற ரம்யா அவன் கைகளை பற்றி தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்தாள். ஏக்கமான உணர்வுடன் அவன் கைகளை மெல்ல அழுத்தினாள்.

அவள் கண்ணீர்த்துளிகள் அவன் கைகளில் கோலமிட்டது. அவளின் சோகம் மனதின் ஏக்கம் யாவும் அவளின் ஒவ்வொரு அழுத்தமான கைப்பிடியிலும் தெளிவாக செல்வனின் உணர்வுகளுக்குள் சென்றது.

அவனால் அவளின் மௌனமான மொழியை புரிந்து கொள்ள முடிந்தது. அவளின் ஏக்கம், சோகம் யாவற்றையும் புரிந்தவனால் பதில் கூற முடியவில்லையே தவிர அவளின் உணர்வுகளின் பேச்சை உணர ஆரம்பித்தான்.

தொடர்ந்து அவளின் அழுத்தமான ஏக்கமான கைப்பிடியின் உணர்வுகள் கலந்த கேள்விகளுக்கு பதில் கூற அவனின் உணர்வும் தயாராகியது.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதை போல் அவளின் உணர்வு பூர்மான மௌன மொழிகள் அவனை மெதுவாக அவளுடன் பேச வைத்தது. அவள் கைகளை மெல்ல பற்றினான்.

அவள் என்னாச்சு என்று கைகளை பற்றியபடி தொடுகை மூலமே அவனைக் கேட்டாள். அவனும் பதிலுக்கு எதுவுமில்லை என அவள் கைகளை அழுத்தி கூறினான்.

டாக்டர் அவன் என் கூட பேசுறான். அவனுக்கு எதுவுமே ஆகல ஆனால் மனசில ஏதோ அழுத்தம் இருக்கு என்று ரமி கூறினாள். அவளின் வார்த்தைகளை கேட்ட டாக்டரால் நம்பவே முடியவில்லை.

அவனை சோதித்து பார்த்ததில் அவனில் அசைவு தெரிந்தது. அவன் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. அவனால் பேசவோ பார்க்கவோ கேட்கவோ முடியில்லை. இருந்தும் தொடுகையின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.

டாக்டர் ரம்யாவை நோக்கி அவன் உடல் நிலையில முன்னேற்றம் தெரிது ஆனால் என்ன நடக்குது என்று புரியல என்றார். அவன் மன அழுத்தத்தில இருக்கான் அவன் மனசில பயம் இருக்கு டாக்டர் என்றாள்.

எப்பிடி சொல்றாய் என்ற டாக்டரின் கேள்விக்கு அவனும் நானும் வார்த்தையால பேசுறது குறைவு. அவன் சந்தோசம், துக்கம், பயம், கோவம் எதுவா இருந்தாலும் என் கைய பிடித்தே சொல்லுவான்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்களோட கைபிடி அழுத்தம் வித்தியாசமா இருக்கும். எனக்கு அவன் மனநிலைய அவன் என் கைய பிடிக்கிற அந்த தொடுகைய வச்சே சொல்ல முடியும் என்றாள்.

அவர்களின் புரிந்துணர்வு கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வித்தியாசமாக இருந்தது. இருந்தும் அவள் கூறிய அத்தனை வார்த்தைகளிலும் உண்மை இருந்தது. அதை அவனை சோதிக்கும் போது டாக்டரால் உணர முடிந்தது.

அவள் அவன் தலையை தன் விரல்களால் கோதி விட்டாள். மெதுவாக அவன் நெற்றியை வருடி விட்டாள். அவன் கண்களில் சிறு அசைவு உண்டானது.

மெல்ல விழிகளை திறந்த அவன் பார்வை ரம்யாவை நேருக்கு நேர் பார்த்தது. என்னாச்சு என்று அவள் கண்களால் கேட்டாள். எதுவுமே இல்லை என அந்த நிலையிலும் அவன் பார்வை அவளிற்கு ஆறுதல் கூறியது.

அவள் விழிகளில் வடிந்த நீரை பார்த்த அவன் விழிகள் கலவரம் அடைந்தது. தன்னை சுதாகரித்தவளாய் கண்ணீரை துடைத்தாள். அப்போ அவன் பார்வையில் ஓர் மகிழ்வு தென்பட்டது.

அவன் அருகில் வந்த செல்வி கலங்கிய கண்களுடன் அவனை முத்தமிட்டாள். ஏக்கமாக அவனை பார்த்தபடி நின்றாள். அவன் பார்வைகளாலே அவளை சமாதானம் செய்து புன்முறுவல் பூர்த்தான்.

எல்லோர் விழிகளிலும் ஆனந்தகண்ணீர் தொட்டது. அவன் சுயநினைவு வந்ததே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவனுக்கும் ரம்யாக்கும் இடையிலிருந்த புரிந்துணர்வுமிக்க உணர்பூர்வமான பாசத்தை பார்க்கையில் பிரமிப்பாய் இருந்தது.

அவனை சோத்தித்த டாக்டர் இப்ப அவன் ஓகே ஆகிட்டான். உடனடியா அவனால பேச முடியா. ஆனால் நீங்க பேசுறத புரிஞ்சுக்க முடியும். அவன் கூட பேசிட்டிருங்க. நான் அரரை மணி நேரத்தில வாறன் என்றார்.

ரொம்ப நன்றி டாக்டர் என்று அவரின் கைகளை பிடித்த குமாரிற்கு நன்றி எனக்கில்லை அவங்க நட்புக்கு சொல்லுங்க என்று கூறினார்.

எல்லாரும் சொல்லுவாங்க நட்புக்குள்ள எல்லாத்தையும் பகிரலாம். பாசம் வைக்கலாம் என்று. ஆனால் ஒரு தாய், தந்தை, உடன் பிறப்பால புரிய முடியாத உணர்வுகளை ஒரு நட்பு புரிஞ்சு வச்சிருக்கிறது ஆச்சரியமா இருக்கு.

மருத்துவ உலகத்திற்கே இது அதிசயம் தெரியுமா. இவங்க நட்பு சாதாரணமான உறவு இல்ல. உணர்வுகளை தாண்டிய உன்னத உறவு என்று கூறி சென்றார்.

உணர்வு பூர்வமான நட்பு நடை பயிலும்………….!
பாகம் 15
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 10:16 pm, edited 1 time in total.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 15

Post by Aruntha » Tue Mar 06, 2012 12:26 pm

செல்வனால் இன்னும் கதைக்க முடியவில்லை. இருந்தும் ஓரளவு சுயநினைவுக்கு வந்தமையால் மற்றவர்கள் கதைப்பதை புரிந்து கொண்டான்.

செல்வன் வீட்டிற்கு சென்ற சிவாவும் தனேஷூம் நீண்ட நேரமாய் கைத்தொலைபேசி மற்றும் வீட்டு தொலைபேசியில் தொடர்பு கிடைக்காதமையால் குழப்பமடைந்தார்கள்.

ரம்யா தொலைபேசியிலும் கூட தொடர் கொள்ள முடியவில்லை. ஆம் அனைவரது தொலைபேசியும் வீட்டில் இருந்தது. அவர்களின் நிலையை புரிந்து அவர்களால் முடியவில்லை.

என்னாச்சு என்று தவித்து கொண்டிருந்த போது தான் ரம்யாவின் அப்பா அங்கு வந்தார். அங்கிள் என்ன ஒருத்தரையும் காணல போன் கூட யாருமே ஆன்சர் பண்ணல என்றார்கள்.

உங்களுக்கு விசயம் தெரியாதா? செல்வன் மாடில இருந்து தவறி விழுந்திட்டான். சுயநினைவே இல்லாம இருந்தான். இப்ப தான் கொஞ்சம் நினைவு வந்திச்சு இன்னும் அவன் யார் கூடவும் கதைக்கல என்றார்.

அவரின் வார்த்தையை கேட்டு இடிந்து போனார்கள் சிவாவும் தனேஷூம். அங்கிள் எந்த ஹாஸ்பிடல் என்றான் பதற்றத்துடன் சிவா. சென்றல் நர்சிங் ஹோம் தான் என்றார்.

சரி அங்கிள் நாங்க சீக்கிரம் போய் பாக்கிறம் என்றபடி மோட்டார் வண்டியை ஸ்ராட் செய்தான் சிவா. தனேஷ் சீக்கிரம் ஏறுடா என்றபடி அவர்கள் மோட்டார் வண்டி ஹாஸ்பிடலை நோக்கி விரைந்தது.

ஹாஸ்பிடல் சென்றதும் செல்வன் பெயர் சொல்லி விசாரித்து அவர்கள் அவன் அட்மிட் பண்ணி இருக்கிற அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றார்கள்.

அங்கே செல்வியும் ரம்யாவும் அவனருகில் நின்று அழுது கொண்டிருந்தார்கள். செல்வனின் அம்மா அப்பா மற்றும் ரம்யா அம்மா ஆகியோரும் அருகில் நின்று அழுது கொண்டிருந்தார்கள்.

சிவாவை வந்து செல்வனை பார்த்தான். அப்போது அவனிற்கு ஊசிமருந்து கொடுத்து தூங்க வைத்திருந்தார்கள். அழுது கொண்டிருந்த செல்வியின் தோளில் மெதுவாக கைகளை வைத்தான் சிவா.

அவனை கண்டதும் அதுவரை விம்மலாக இருந்த செல்வியின் அழுகை அதிகமானது. அவனது மார்போடு தலை சாய்த்து அழ ஆரம்பித்தாள். அவனும் அவளை அணைத்து ஆறுதல் கூறினான்.

அவர்களிடம் இருந்த நேசம் ஒருவருக்கொருவர் பகிரப்படாவிட்டாலும் இருவர் மனதும் ஒன்றாக இருந்தது. அந்த நொடி அவனின் அரவணைப்பும் ஆறுதலான வார்த்தைகளும் செல்விக்கு தேவையாக இருந்தது.

அவளிற்கு அவள் பெற்றவர்களோ தனேஷோ நிற்பது மறந்தே போனது. செல்வன பாரடா என்று கூறி அழுதபடி அவனிடம் அடைக்கலமானாள்.

இதை பார்த்த தனேஷ் சற்று கலவரமடைந்தான். அவன் மனதில் அவள் மேல் இருந்த காதல் அவளின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.

சிவா என்னாச்சு என்று அவன் தோள்களை பற்றவும் ரம்யா மெல்ல செல்வியின் கைகளை பற்றினாள். என்னாச்சு என்று விழிகளாலே வினா தொடுத்தாள்.

அப்போது தான் சுய உலகிற்கு வந்த செல்வி சிவாவை விட்டு விலகினாள். அவள் முகத்தில் சிறிய கலவரம் தெரிந்தது.

செல்விக்கு என்னாச்சு என்று கமலி, குமரன், பிரியா மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அவள் நடந்து கொண்ட விதம் புதுமையாக இருந்தது. இருந்தும் எதையும் கண்டுக்காதவர்கள் போல் இருந்து விட்டார்கள்.

இருந்தும் தனேஷ்க்கு சற்று குழப்பமாகவே இருந்தது. இவர்கள் இருவருக்குள்ளும் என்ன உறவு. நானும் அவள் நண்பன் தான் அப்புறம் சிவா கூட மட்டும் ஏன் அப்படி நடந்து கொண்டாள். அப்படி என்றால் சிவாவும் அவளும்……… அவன் மனதில் ஆயிரம் கேள்விகள்.

சற்று நேரத்தில் செல்வன் கண் முழித்தான். அப்போது அவன் பூரணமாக குணமாகியிருந்தான். அவனை பரிசோதித்த டாக்டர் இப்ப எல்லாம் ஓகே இது மருத்துவ உலகத்துக்கே ஒரு சவாலான பிரமிப்பூட்டும் விடயம். ஒரு நண்பால் ஒருவனை சுய உலகிற்கு மீட்டது என்று அவர்களின் நட்பை பாராட்டி சென்றார்.

அங்கு வந்த வேறு டாக்டர்கள் மற்றும் நர்ஸ் இவர்கள் நட்பை பாராட்டி சென்றார்கள். அதை பார்க்க அவர்கள் பெற்றவர்களுக்கு பெருமையாகவும் மகிழ்வாகவும் இருந்தது.

என்னப்பா எல்லாரும் இவ்வளவு சந்தோசமா சொல்லிட்டு போறாங்க உங்க ரெண்டு பேர் முகத்திலயும் சந்தோசத்தை காணல என்றாள் செல்வி.

இல்லடா செல்வி எல்லாரும் எங்கள பத்தி பெருமையா சொல்றதில எங்களுக்கு சந்தோசமே இல்ல தெரியுமா என்றாள் ரம்யா. ஆமடா எனக்கும் தான் என்றான் செல்வன்.

என்ன சொல்றீங்க என்னாச்சு என்று கேட்ட செல்வியை பார்த்து இது வரைல எங்கள் நட்புக்கு ஒரு தனித்தன்மை இருந்திச்சு எங்களுக்குள்ள வார்த்தை தேவை இல்லை. எதையுமே கதைப்பம்.

ஆனால் இனி அப்பிடி இல்ல எல்லாரும் எங்கள பார்ப்பாங்க. எங்களுக்கென்று இருந்த தனித்தன்மை போய்ட்டு. எங்களுக்குள்ள இருந்த எங்கட நட்பு இப்ப எல்லாரும் கதைக்கிற ஒரு பொருளா போய்ட்டு என்று வருந்தினார்கள்.

ஓஹோ நீங்க அப்பிடி சொல்றீங்களா அதுவும் சரி தான். சரிப்பா அதையெல்லாம் நினைச்சு வருத்தப்பட கூடாது. உங்க பாசம் உண்மையானது. அதை யார் கதைச்சும் தனித்தன்மை இழக்க வைக்க முடியாது என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

ஏய் தனேஷ் என்ன மன்னிச்சுக்கடா உன்னை ஷொப்பிங் கூட்டிப் போக முடியல என்றான் செல்வன். என்னடா இந்த நிலைமைலயும் ஷொப்பிங் பத்தி கதைக்கிறாய். முதலில உன்உடம்ப கவனி என்றான்.

சரிடா உடம்ப பத்திரமா பாத்துக்கோ நாங்க கிளம்பிறம் நாளைக்கு வாறம் என்று கூறி விடை பெற்றார்கள் சிவாவும் தனேஷூம்.

போகும் வழியில் தனேஷ் சிவாவிடம் என்னடா உன் கூட செல்வி இப்பிடி நடந்துக்கிறா அவங்க அம்மா அப்பா என்ன நினைப்பாங்க என்றான்.

என்ன நினைப்பாங்க அவள எனக்கு பிடிச்சிருக்கு அவளுக்கும் என்ன பிடிக்கும். எங்க இரண்டு பேருக்குள்ளயும் காதல் இருக்கு ஆனால் அதை இன்னும் நாங்க சொல்லிக்கல அவ்வளவு தான்.

தனேஷிற்கு இடி விழுந்ததை போல் ஆனது. தன் மனதில் கட்டி வைத்த காதல் கோட்டை தகர்ந்ததை உணர்ந்தான். எதுவுமே பேசாமல் மௌனமாகினான்.

என்னடா பதிலே சொல்றாய் இல்ல எங்க ஜோடி பொருத்தம் எப்பிடியடா என்றான்சிவா. அவனிற்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது. இருந்தும் சுதாகரித்தவனாய் நல்லா இருக்கடா உங்களுக்கென்ன சூப்பர் பொருத்தம் என்றான் தன் கலங்கிய கண்களை மறைத்த வண்ணம்.

காதல் போராட்டம் தொடரும்………….!
பாகம் 16
Last edited by Aruntha on Tue Mar 06, 2012 10:41 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by ஆதித்தன் » Tue Mar 06, 2012 6:56 pm

கதையை அப்படியே இங்கு கொண்டு வந்துவிட்டீர்களா! நல்லது.

இங்கேயே தொடருங்கள்... அடுத்த வாரம் முதல் நானும் படிக்க ஆரம்பிக்கிறேன்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Tue Mar 06, 2012 9:21 pm

ஆதி றிப்லேக்கு ஈமெயில் நோடிவிகேஷன் வரல. என்னாச்சு?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 16

Post by Aruntha » Tue Mar 06, 2012 10:41 pm

வீட்டிற்கு சென்ற தனேஷால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவன் மனதில் கட்டி வைத்த காதல் கோட்டை தகர்ந்து விட்டது. அப்படியே தன் அறையில் படுத்து தூங்கி விட்டான்.

சிவா செல்வியின் மனதிலும் காதல் இருப்பதை எண்ணி மகிழ்ந்தான். இருந்தும் அவன் மனதில் ஓர் எண்ணம் தம் இருவருக்குள்ளும் இருப்பது காதல் தானா அல்லது சாதாரண நட்பையும் மீறிய பாசமா என்று!

அவர்களுக்குள் இருந்த அளவுகடந்த பாசம் அந்த நாடகத்தில் காதலர்களாக நடித்ததில் வெளியானது. அதன் காரணமாக அவர்கள் உறவிற்கு அவன் எடுத்து கொண்ட எடுகோள் காதல். இது சரியா தவறா என்பது அவனாலே தீர்மானிக்க முடியாதிருந்தது.

ஹாஸ்பிடலில் செல்வன் உடல் நிலை சரியாகியதால் மறுநாள் டிஸ்சாஜ் செய்வதாக கூறியிருந்தார்கள். நேரம் இரவை எட்டியதால் யாராவது ஒருவர் அவன் கூட நிக்க மற்றவர்கள் வீடு செல்ல தீர்மானித்தார்கள்.

செல்வன் உடல்நிலை தேறியதால் அவனை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து விசேட அறைக்கு மாற்றினார்கள். அதனால் அவன் தந்தை குமார் தான் செல்வன் கூட நிப்பதாகவும் மற்றவர்களை வீட்டிற்கு செல்லுமாறும் கூறினார்.

செல்வியோ அப்பா எனக்கு நினைவு தெரிந்த நாளில இருந்து நான் செல்வன பிரிஞ்சு இருந்ததில்ல. நான் அவன் கூட நிக்கிறன். நீங்க போங்க என்றாள். அவளின் பிடிவாதமான பேச்சால் சரி என்று அவர்களும் அவளை விட்டு செல்ல தீர்மானித்தார்கள்.

அம்மா நானும் செல்வி கூட நிக்கிறன் அம்மா அவளும் இங்க தனிய. நானும் வீட்டுக்கு போனால் தனிய தானே. இங்ககேயே நிக்கிறன் இவங்க கூட என்றாள் ரம்யா.

சரி என பிரியாவும் அவளை அங்கு விட்டுவிட்டு சென்றார்கள். செல்லும் வழியில் அவர்கள் மூவரின் பாசத்தை பற்றியே கதைத்தபடி சென்றார்கள்.

என்னங்க நான் உங்கள ஒண்ணு கேக்கலாமா என்றாள் கமலி. என்ன சொல்லு என்ற குமாரின் வார்த்தைக்கு பின் மௌமனமானாள் கமலி. என்னம்மா சொல்லு என்னாச்சு என்றான்.

இல்ல அது வந்து நம்ம செல்வி என்று நிறுத்தினாள். தொடர்ந்த பிரியா என்ன அவள் சிவா கூட பழகினத சொல்றியா என்றாள். ஆமா பிரியா அவள் அவ்வளவு உரிமையா அவன் கூட பழகுறது அவன் அவள ஆறுதல் படுத்திறது இதெல்லாம் நட்பு மட்டும் தானா என்றாள்.

ஏன் அப்பிடி சொல்றாய் நம்ம ரம்யா கூட தான் செல்வன் கூட பழகுறாள் அத நாங்க தப்பா பாக்கிறமா இல்லையே செல்விய போய் ஏன் அப்பிடி நினைக்கிறாய் என்றாள் பிரியா.

இல்ல பிரியா செல்வி அந்த நாடகத்தில சிவா கூட நடிச்சதில இருந்து டிஸ்டேப் ஆக தான் இருக்காள். நானும் பாத்திட்டு தான் இருக்கன் அத பத்தி எதுவும் கண்டுக்கல ஆனால் இன்னிக்கு நடந்தத பார்த்தா எனக்கும் ஒரு மாதிரி தான் இருக்கென்றான் குமார்.

சரி எதுவா இருந்தாலும் விடுங்க இப்ப வேணாம். சும்மா கேட்டு அவங்க மனச கூட குழப்ப வேணாம். ரம்யா செல்வன் போல நல்லநட்பு இருந்தால் நாங்க கேக்கிறதால அவங்க மனசு கஷ்ட படும். கொஞ்ச நாள் போகட்டும் பாப்பம் என்றாள் கமலி.

சரி அப்பிடி இருந்தால் கூட பறவாயில்லை சிவா நம்ம குடும்பத்துக்கு ஏத்தவன் தானே அவங்களுக்கு பிடிச்சா நாங்க ஏன் தடுக்கணும் என்றாள் பிரியா.

நீ சொல்றது சரி தான் இப்ப படிக்கிற வயசில சும்மா மனச அலைபாய விட்டு குழம்ப கூடாது. எது என்றாலும் அப்புறமா பாக்கலாம் என்றாள் கமலி.

ஆமா செல்விட விருப்பத்துக்கு நாங்க யாருமே எதிர்ப்பில்ல. அவளுக்கு யார பிடிச்சாலும் நாங்க சம்மதிப்பம். பணக்காரன், ஏழை எதுவுமே தேவையில்லை. குணமிருந்தா சரி என்றான் குமார்.

சரி இத பத்தி இப்போதைக்கு எதுவுமே கதைக்க வேணாம். அப்புறமா பாக்கலாம் என்று கூற காரும் வீட்டை நெருங்கியது. அனைவரும் சென்று குளித்து விட்டு சாப்பிட்டார்கள்.

ஏய் செல்வா இப்ப எப்பிடி இருக்கு உடம்பு எல்லாம் ஓகே ஆகிட்டா என்று அவன் தலை கோதினாள் ரம்யா. அது தானே உன்போல ஒரு நண்பி பக்கதில இருக்கும் போது அவனுக்கு என்னடி வருத்தம் என்றாள் செல்வி.

என்ன நீயும் ஆரம்பிச்சிட்டியா உன்ன என்ன பண்ணுறன் பாரு என்று அடிக்க கை ஓங்கினாள். ரமி இரு நான் அவள எப்பிடி வழிக்கு கொண்டு வாறன் பார் என்று செல்வன் கூறிவிட்டு என்ன இளவரசி இளவரசனை பார்த்ததும் ரொம்ப தான் பாச மழை பொழிஞ்சிங்க என்றான்.

ஏய் செல்வா அடங்குடா ஏதாச்சும் கதைச்சா மவனே உன்ன கொன்னுடுவன் என்றாள். ஏய் இப்ப தான்டி அவன் மரணத்திட பிடில இருந்து வந்திருக்கான் நீ கொல்ல போறியா என்றாள் ரமி.

என்ன ரமி நீயும் அவன் கூட கூட்டு சேர்ந்திட்டியா. நான் தான் தனிச்சிட்டன் என்றாள். ஏன் நீ வேணும் என்றா சிவாக்கு போன் போட்டு கூப்பிடு என்றாள் ரமி.

ஐயோ நான் இவங்க இரண்டு பேர்கிட்டயும் மாட்டிட்டு முழிக்கிறன் காப்பாத்த மாட்டியா என்றாள். நீ சிவபெருமான்கிட்ட முறையிடு கண்டிப்பா சிவா வடிவில வந்து காப்பாத்துவார் என்று செல்வன் கூறினான்.

இல்லடா செல்வா எனக்கு அவன் மேல் இருக்கிறது காதலா என்றே தெரியலடா. அவன பிடிச்சிருக்கு. நாடகத்தில அவன் கூட நெருங்கி பழகினதால அவன ரொம்ப பிடிச்சிச்சு. அத நினைச்சிருந்தப்ப நீங்க என்ன சீண்டி கலாச்சிங்க. அதால அந்த உறவுக்கு நான் வச்ச பெயர் தான் காதல்.

மற்றும் படி அவன் மெல எனக்கு காதலா என்று சொல்ல முடியலடா செல்வா. அவன பிடிச்சிருக்கு. அவன் என்பக்கத்தில இருந்தா ஏதோ நீயே என் கூட இருக்கிற போல இருக்கு.

அவன பாத்ததும் ஏதோ என்னையே அறியாமல் அவன் நெஞ்சில சாய்ஞ்சு அழுதன். அவனும் ஆறுதல் படுத்தினான். ஆனால் அவன் ஆறுதலிலயோ அணைப்பிலயோ காதல் தெரியலடா பாசம் மட்டும் தான் தெரிஞ்சுது.

ஆனால் அவன் என் கூட இருக்கணும் அவன் கூட பேசிட்டு இருக்கணும் அவன் பாசத்துக்குள்ள அடைக்கலமாகணும் என்று மனசு ஏங்குதடா. ஆனால் அதில காதல் இருக்கா என்று புரியலடா என்றாள்.

என்னடி பிடிச்சிருக்கு அவன் வேணும் ஆனால் காதல் இல்லை என்றாய். என்னாச்சு உனக்கு நீ அவன லவ் பண்ணுறியா இல்லையா இப்ப தெளிவா சொல்லுடா என்றான்.

தெரியலடா ஒரே குழப்பமா இருக்கு. நீயே சொல்லுடா நான்அவன லவ் பண்ணுறனா என்றால் குழந்தைய போல செல்வன பார்த்து.

சரியா போச்சு அவன பத்தி நினைக்கிறது நீ, அவன் எப்பவும் வேணும் என்று சொல்றது நீ, உனக்கு காதல் இருக்கா இல்லையா என்று சொல்றது மட்டும் செல்வனா என்னடி உறளுறாய் என்றாள் ரமி.

ஏய் ரமி விளையாடாத நானே குழப்பத்தில இருக்கன் நீ வேற சீரியஸ தெரியாமல் பகிடி விடுறாய் என்று அவளை கடிந்தாள் செல்வி.

ஏய் செல்வி இப்ப ஏன் கோவிக்கிறாய் அவள் அப்பிடி என்ன தப்பா கேட்டிட்டாள் உனக்கு அவன பிடிச்சிருக்கு அவன் கூட கதைக்கணும் பழகணும் என்று சொல்றாய் அப்புறமா காதலா என்று கேக்கிறாய் இது உனக்கே சரியா இருக்கா என்றான் செல்வன்.

உன்னோடயும் தான் பழகுறன் பாசமா இருக்கன் எப்பவும் நீ என் கூட இருக்கணும் என்று யோசிக்கிறன். உன் மடில தூங்கினா உன் அணைப்பு ஆறுதல் எல்லாமே எனக்கு பிடிக்குது. அதே போல தான் அவனும் என்றாள்.

அடியே லூசு நான் உன் கூட பிறந்தவன்டி. என்மேல இருக்கிற பாசம் இயற்கையா வாறது. அதுவும் நாம இரட்டை பிள்ளையள் என்றதால அதிகமாவே பாசம் இருக்கு. நம்மட உறவோட சிவாவ ஒப்பிடலாமா? நீ கதைக்கிறது உனக்கே சின்னப்பிள்ளை தனமா இல்லையா என்றான்.

இல்லடா எனக்கு புரியல அவனுக்கும் எனக்கும் என்ன உறவு இருக்கென்று. ரமி கூட உன்னோட பழகுறாள் நம்ம மூன்று பேருக்குள்ளயும் இருக்கிறது நட்பு தானே. அப்புறம் நான் சிவா மேல காட்டுறது மட்டும் எப்பிடி காதலாகும்? என்றாள்.

செல்வி நாங்க எங்களுக்கு புத்தி தெரிஞ்ச சின்ன வயசில இருந்து ஒண்ணா பழகுறம். நம்மளுக்குள்ள உறவு கிட்டதட்ட பத்து பதினைந்து வருசத்துக்கு மேல.

அதுக்கும் மேல நாம சின்ன வயசில இருந்து ஒண்ணா சாப்பிட்டு ஒண்ணாதூங்கி இருக்கம். நம்மளுக்குள்ள இருக்கிறது சகோதர பாசமா நட்பா இல்லை அதையெல்லாம் தாண்டிய உன்னதமான உறவா என்று தெரியல.

எங்களுக்குள்ள காதல் என்ற உணர்வு வராம போகலாம். அதுக்கு காரணம் நாங்க சின்ன வயசில இருந்து ஒண்ணா வளர்ந்திருக்கம். அடிபட்டு இருக்கம், ஆறுதல் சொல்லி இருக்கம்.

இப்ப எங்களுக்குள்ள உள்ள உறவுக்கு நாங்க வச்சிருக்கிற பெயர் நட்பு. அந்த நட்பை நாங்க கடைசி வரைக்கும் தொடருறதும் தொடராம போறதும் எங்கள பொறுத்தது.

சில சமயம் நாங்க திருமணம் என்ற நிலைல பிரிய வேண்டிய சூழ்நிலை வரும் போது நம்ம நட்பு கூட தடுமாறலாம். ஒண்ணா இருக்கணும் பிரிய கூடாது என்று நினைக்கலாம். அந்த நினைப்பு சில சமயம் எங்களுக்குள்ள இருக்கிற நட்பு என்ற உறவ மாத்தலாம் என்றாள்.

ஆமா செல்வி ரமி சொல்றது உண்மை தான். நாங்க நட்பாவோ இல்ல உடன் பிறப்பாவோ வாழுறம். நம்மட திருமணத்துக்கு பிறகு நாம எப்பிடி இருப்பம் என்று தெரியல. அந்த நேரத்தில எங்கட மனசெல்லாம் எப்பிடி இருக்கும் என்று சொல்ல முடியா.

அதுக்காக நான் தப்பா எதுவும் சொல்ல. யாதார்த்தத்த சொன்னன் என்றான். நீ சிவா கூட பழகி இப்ப தான் ஒரு வருஷம் கூட ஆகல. உன்மனசில தோணுற எண்ணம் வேற எங்க மனசுல தோணுற எண்ணம் வேறடா என்றான்.

நீ உன்மனசையே தொட்டு யோசிச்சு பார் உனக்கு அவன் மேல இருக்கிறது காதலா நட்பா இல்ல ஒரு வகையான சகோத பாசமா என்று புரியும் என்றான்.

செல்விக்கு தன் மனதை புரியவே முடியவில்லை. இருந்தும் ரமியும் செல்வாவும் சொன்னத வச்சு சற்று சிந்தித்தாள். அவள் மனதின் குழப்பம் அவள் முகத்தில் தெட்ட தெளிவாக தெரிந்தது. பார்க்க ஒரு குழந்தையை போல இருந்தாள்.

சிவாவும் தனக்கும் செல்விக்கும் இடையான உறவு என்ன என்பதில் குழப்பத்துடன் இருந்தான். சர்வ சாதாரணமாய தனேஷிடம் காதல் என்று சொல்லி விட்டு வந்தவனால் தமக்குள் இருப்பது காதலா என்று புரிய முடியாமல் இருந்தது.

குழப்பமான உறவு தொடரும்
பாகம் 17
Last edited by Aruntha on Thu Mar 08, 2012 12:09 am, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by ஆதித்தன் » Wed Mar 07, 2012 7:01 am

Aruntha wrote:ஆதி றிப்லேக்கு ஈமெயில் நோடிவிகேஷன் வரல. என்னாச்சு?
பதிவு செய்யும் பொழுது, பதிவு கட்டத்திற்கு கீழ் இருக்கும் ஆப்சன் பகுதில்

Notify me when a reply is posted

என்ற பாக்ஸில் ஒர் டிக் போட்டால், நோட்டிபிகேஷன் மெயில் வரும்.

அல்லது User Control Panel பக்கம் போய், செட்டிங்க்ஸ்-ல் மொத்தமாக அனைத்து பதிவுக்கும் எனவும் தேர்வு செய்து கொள்ளலாம்.

:ymhug:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை பாகம் 17

Post by Aruntha » Thu Mar 08, 2012 12:07 am

என்னடா சிவா ஒரு மாதிரி இருக்காய் என்னாச்சு என்று சிவாவின் தந்தையின் குரல் கேட்டு நிமிர்ந்தான் சிவா. என்னடா ரொம்ப குழப்பமா இருக்கு உன் முகம் என்னாச்சு என்றார் சிவாவின் அப்பா.

ஒண்ணுமில்லப்பா என் நண்பன் செல்வன் இருக்கானல்லா அவன் இன்னிக்கு மாடில இருந்து விழுந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணினது. அத தான் யோசிச்சிட்டு இருக்கன் என்றான்.

என்னடா அவன் உடல் நிலை இப்ப எப்பிடி என்று பதை பதைத்தார். இல்லப்பா இப்ப எல்லாம் ஓகே ஆகிடிச்சு. நாளைக்கு வீட்டுக்கு வந்திடுவான் என்றான். சரிப்பா நாளைக்கு நாங்க அவன் வீட்டுக்கு போய் பாப்பம். நாங்களும் ஒரு நாளும் அவங்கள சந்திச்சதே இல்ல என்றார்.

சிவாக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சரிப்பா நாளைக்கு நாங்க போய் பாத்திட்டு வருவம் என்றார். அவனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாகவும் சற்று படபடப்பாகவும் இருந்தது.

சரிப்பா நீ ரெஸ்ட் எடு நாங்க நாளைக்கு பாப்பம் என்றார் சிவாவின் அப்பா. அவனும் தன்னுடைய மடிக்கணணியுடன் சிறிது நேரம் இணையத்தை உலவ ஆரம்பித்தான்.

கட்டிலில் புரண்டபடி இருந்த தனேஷிற்கு தூக்கம் இல்லாது போனது. அவனுக்கு தான் கட்டிய கற்பனை கோட்டை அழிந்த சோகம் மனதை வாட்டியது.

இந்த காதல் என்பது ரொம்ப பொல்லாதது. ஒருவரை தன் மனதார காதலிப்பாதாக நினைத்தாலே போதும் தம் வாழ்க்கை பற்றி கனவுகள் காண ஆரம்பித்து விடும்.

கற்பனையிலே தனக்கு பிடித்தவர் கூட காதல் வாழக்கையை மட்டுமல்ல திருமணம் முடித்து மகிழ்வாக வாழ்ந்து குதூகலிப்பதாய் கற்பனை செய்யும்.

தம் வாழ்க்கை இப்படி இப்படி இருக்கும் தம் திருமணம் இப்படி நடக்கும் என ஓர் கனவு உலகத்தில் மிதக்கும்.

சொல்ல போனால் தன் மனதில் உள்ள ஆசைகளை எல்லாம் கற்பனையிம் கனவிலும் வாழ்ந்து முடித்திருக்கும். இது தான் காதல் மனதின் உண்மையான நிலை.

இதற்கு தனேஷ் மட்டும் விதிவிலக்கா என்ன? காதல் என்பது அவன் மனதில் அரும்ப ஆரம்பித்ததிலிருந்தே கனவுலகில் வாழ ஆரம்பித்து விட்டான்.

இன்று அவன் கனவு தகர்ந்து போனதை எப்படி ஏற்க முடியும். அவனும் சராசரி மனிதன் தானே! ஒருதலைக் காதலோ அல்லது இருபக்க காதலோ காதலின் சோகம் கண்ணீரையும் மீறிய வலி.

அந்த நொடி மனது சமாதானமாகி விட்டாலும் ஒவ்வொரு நொடியும் வேறொரு வாழ்க்கையில் சென்றால் கூட ரணமாக கொல்லும். மனதில் தோன்றும் காதலுக்கு மட்டும் தான் இப்படி சக்தி ஏன் என்பது மட்டும் புரியாத புதிராக இருந்தது,

அவன் காத்திருந்த காதல் கண்ணிமைக்கும் நேரத்தில் கானலாகி போனதால் கலைந்த அவன் கனவுகளும் இறந்து போன இதயமும் கல்லறை நோக்கி தன் இறுதிப் பயணத்தை மெல்ல தொடங்கியது.

மெல்ல கட்டிலில் புரண்டவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தினம் தினம் அவளுடன் அவன் கற்பனையில் வாழ்ந்த வாழ்க்கை அவனை கொன்றபடி இருந்தது.

தன் மனதில் உள்ளவற்றை யாரிடமாவது கொட்டித் தீர்த்து விட மனசு துடித்தது. இருந்தும் முடியவில்லை. தன்னை சோகங்களை தன்வசப்படுத்தி அவனுக்கு சுகத்தை அளிக்கும் தன் தினக்குறிப்பு (டயறி) யை எடுத்து நெஞ்சோடு அணைத்தான்.

விம்மலுடன் தன் மனதிலே இருந்து கலைந்து போன கற்பனைகளை கொட்டி தீர்த்தான். அவன் மனதில் ஏதோ அமைதி வந்தது போன்று உணர்ந்தான்.

மனது லேசாக தூக்கம் அவன் கண்களை மெல்ல தழுவியது. அப்படியே டயறியை அணைத்தபடி தூங்கி விட்டான்.

வீட்டிற்கு சென்ற டாக்டரிற்கு வைத்தியசாலையில் நடந்த நிகழ்ச்சிகள் யாவும் படம் போல் கண் முன்னே ஓடியபடி இருந்தது. அவரால் அவர்களின் நட்பின் பாசத்தையும் சக்தியையும் நினைக்க பிரமிப்பாக இருந்தது.

என்னப்பா ஹாஸ்பிடல்ல இருந்து எப்ப வந்தும் அதே யோசனையா என்ற மகள் ரேவதியின் குரலை கேட்டு சுய நினைவுக்கு வந்தார் டாக்டர். இல்லடா ரேவா இன்னிக்கு ஹாஸ்பிடல்ல ஒரு கேஸ் கேட்டா உனக்கே ஷாக் ஆக இருக்கும் என்றார்.

என்னப்பா என்று கூறி அவர் அருகில் அமர்ந்த தன் மகள் ரேவதிக்கு டாக்டர் ஹாஸ்பிடலில் நடந்தவற்றை கூறிக் கொண்டிருந்தார். என்னப்பா சொல்றீங்க எனக்கு கூட நட்பென்றால் ரொம்ப பிடிக்கும். நண்பர்கள மதிக்கிறன். ஆனா பெத்தவங்கள விட பாசம் புரிந்துணர்வு எல்லாம் நட்பில இருக்குமா? என்றாள் ஆச்சரியமாக.

அதுவும் இரட்டைப் பிள்ளையள். அவங்க கூட நண்பர்கள் போல பழகிறார்கள். அதையும் மீறி வெளில இருக்கும் ஒரு நட்பின் பாசம் ஒருத்தன்ட உயிர காப்பாத்தியிருக்கா நம்பவே முடியலப்பா என்றாள்.

உனக்கென்னம்மா ஆச்சரியம் வைத்திய உலகத்துக்கே இது ஆச்சரியமா இருக்கு. வெளி நாட்டில இருந்து கூட எவ்வளவோ ட்றீட்மெண்ட் ரை பண்ணினாங்க யாராலும் முடியல. அவள்ட பாசம் மாத்திச்சு தெரியுமா என்றார்.

தந்தை கதை சொல்ல சொல்ல அவளுக்கு அந்த செல்வனை பார்க்க மனது துடித்தது. நட்பை மதிப்பவன் பாசத்துக்கு கட்டுப்பட்டவன் அத்தனை தூரம் புரிந்துணர்வானவனா கண்டிப்பாக ஒரு வித்தியாசமான கரெக்டர் தான் அவன் என்று நினைத்தாள்.

அவளை அறியாமலேயே அவள் செல்வன் பத்தி சிந்திக்கலானான். செல்வன் ரேவதியின் மனதில் ஒரு ஹீரோ ஆக உயர்ந்த நிலையில் உருவெடுத்துக் கொண்டிருந்தான்.


உறவுகள் தொடரும்…….
பாகம் 18
Last edited by Aruntha on Thu Mar 08, 2012 2:07 pm, edited 1 time in total.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”