~~~கடைசி நாளின் கண்ணீர்த்துளி~~~

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
rrifan47
Posts: 4
Joined: Tue Mar 20, 2012 7:05 pm
Cash on hand: Locked

~~~கடைசி நாளின் கண்ணீர்த்துளி~~~

Post by rrifan47 » Tue Mar 20, 2012 7:26 pm

~~~கடைசி நாளின் கண்ணீர்த்துளி~~~

பள்ளிப் பருவக் காலத்தில்
பழகித்திருந்த நேரங்கள்
சிந்தை வானில்
சிற‌கு விரித்த பொழுதுகள்,
கண்களின் ஊஞ்சல்
உயிரை உரசிய காலங்கள்
மாறூமா..? மனதை விட்டு அகலுமா.?

என்னைப் பார்த்து நீயும்
உன்னைப் பார்த்து நானும்
பேசிய மௌன வார்த்தைகள்
மௌன ராகமாய் ஒலிக்கின்றது.
கனவு நேரத்திலும்
நித்திரையைக் கலைக்கின்றது.

கடைசி நாளின் காலை வேளையில்
மாலை நேர மல்லிகையாய்
வாடிய முகத்துடன் நீ............

மாலை மயங்கும் சமயம்
மனங்கள் இரண்டினதும் இணையம்
கண்களின் கலக்கம்
உள்ளங்களின் ஏக்கம்
குவிந்த முத்தங்களின் சத்தம் ,
கரையாத கண்ணீரானது.

மடியோ தலையாணையாய்
முகமிரண்டும் கண்ணாடியாய்
தலைவாரிய கைகள்
நிலையின்றிப் போனாலும்,
நெற்றியில் விழுந்த கண்ணீர்த்துளி
நிலையானது.

பிரிய முடியாது
வடிந்த கண்ணீர்
பிரிவுகளைச் சொன்னது .
விடை கூறிய கைகள் விலகமறுத்தது
வார்த்தைகள் நாக்கில் முடங்கியது,
உணர்வுகள் உடனே இறந்து
இதயம் மட்டும் ஈரத்தில் நனைந்தது...

விட்டுச் சென்ற நாள் மீண்டும் வருமா..?
கேள்விகளோடு கடைசி நாளின் கண்ணீர்த்துளி....

:thanks:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ~~~கடைசி நாளின் கண்ணீர்த்துளி~~~

Post by muthulakshmi123 » Tue Mar 20, 2012 7:46 pm

rrifan47 wrote:~~~கடைசி நாளின் கண்ணீர்த்துளி~~~

பள்ளிப் பருவக் காலத்தில்
பழகித்திருந்த நேரங்கள்
சிந்தை வானில்
சிற‌கு விரித்த பொழுதுகள்,
கண்களின் ஊஞ்சல்
உயிரை உரசிய காலங்கள்
மாறூமா..? மனதை விட்டு அகலுமா.?

என்னைப் பார்த்து நீயும்
உன்னைப் பார்த்து நானும்
பேசிய மௌன வார்த்தைகள்
மௌன ராகமாய் ஒலிக்கின்றது.
கனவு நேரத்திலும்
நித்திரையைக் கலைக்கின்றது.

கடைசி நாளின் காலை வேளையில்
மாலை நேர மல்லிகையாய்
வாடிய முகத்துடன் நீ............

மாலை மயங்கும் சமயம்
மனங்கள் இரண்டினதும் இணையம்
கண்களின் கலக்கம்
உள்ளங்களின் ஏக்கம்
குவிந்த முத்தங்களின் சத்தம் ,
கரையாத கண்ணீரானது.

மடியோ தலையாணையாய்
முகமிரண்டும் கண்ணாடியாய்
தலைவாரிய கைகள்
நிலையின்றிப் போனாலும்,
நெற்றியில் விழுந்த கண்ணீர்த்துளி
நிலையானது.

பிரிய முடியாது
வடிந்த கண்ணீர்
பிரிவுகளைச் சொன்னது .
விடை கூறிய கைகள் விலகமறுத்தது
வார்த்தைகள் நாக்கில் முடங்கியது,
உணர்வுகள் உடனே இறந்து
இதயம் மட்டும் ஈரத்தில் நனைந்தது...

விட்டுச் சென்ற நாள் மீண்டும் வருமா..?
கேள்விகளோடு கடைசி நாளின் கண்ணீர்த்துளி....

:thanks:
ரொம்ப உருக்கம் உங்கள் கவிதை அனுபவக் கவிதையோ
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ~~~கடைசி நாளின் கண்ணீர்த்துளி~~~

Post by ஆதித்தன் » Tue Mar 20, 2012 8:27 pm

ஒர் நாளையே இத்தனை அருமையாக கவிதை வடித்த நீங்கள், உங்கள் பள்ளி அனுபவத்தை எத்தனை அருமையாக பட்டை தீட்டி வைத்திருப்பீர்கள்???

காட்டுங்கள் உங்கள் திறமையை, வாழ்த்த நாங்கள் காத்திருக்கிறோம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ~~~கடைசி நாளின் கண்ணீர்த்துளி~~~

Post by umajana1950 » Tue Mar 20, 2012 9:25 pm

உணர்வுகள் உடனே இறந்து
இதயம் மட்டும் ஈரத்தில் நனைந்தது...
அற்புதமான வரிகள். அருமை! அருமை!!
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”