வெளியூர் மனைவி

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

வெளியூர் மனைவி

Post by rajathiraja » Thu Mar 08, 2012 5:19 am

சித்தப்பா! என் தங்கச்சி மாலினிக்கு 25ம் தேதி கல்யாணம் வச்சிருக்கோம். சித்தி, தம்பிகளை அழைச்சுட்டு இரண்டு நாளுக்கு முன்னாடியே வந்துடணும்’ என்றான் பார்த்திபன்.
‘என்னப்பா பள்ளிக்கூட நேரத்தில் கல்யணத்தை வச்சிருக்கீங்க? எங்களால் கலந்து கொள்ள முடியதே?’ என்றார் சித்தப்பா.
‘அதெல்லாம் பார்த்து தான் சித்தப்பா வச்சிருக்கோம். மூன்று நாள் ஸ்கூல் லீவு வருது!
‘அப்படியா? ரொம்ப சந்தோசம்! கண்டிப்பாக கலந்துக்கிறோம் என்றவர், மாப்பிள்ளை எந்த ஊரப்பா!’ என்றார்.
‘மாப்பிள்ளை பக்கத்து ஊருதான் சித்தப்பா! 2 கிலோ மீட்டர் தூரம் தான்’ என்றான்.
‘திருச்செந்தூரில் இருக்கிற நீ பக்கத்தில் இருக்கிற சொந்த பந்தங்களையெல்லாம் விட்டுட்டு பாண்டிச்சேரியில் போய் பொண்ணு கட்டினாயே? தங்கச்சிக்கு மட்டும் பக்கத்திலேயே பார்த்து விட்டாயே?’ என்றார்.
‘புது சொந்தத்தை உருவாக்கிக் கொள்ளலாம், வெளியூருக்கு அடிக்கடி போயிட்டு வரலாம் என்று தான் அங்கே முடித்தேன். ஆனால் அதுவே சிரமமாக போச்சு! அவளுக்கு ஆத்தா, அப்பாவை பார்க்க வேண்டுமென்றால் உடனே போக முடியவில்லை. அவளை வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டால் திரும்ப அழைக்க போக முடியலை. எத்தனையோ மாசங்கள் அப்படியே போயிடுது. அதனால தான் பக்கத்திலே இருந்தால் ரொம்ப வசதியாக இருக்கும் என்று பார்த்து முடித்து விட்டோம்’ என்றான்.
பத்திரிகை கொடுத்த இடங்களிலெல்லாம் இதே கேள்வியைத் தான் கேட்டார்கள். ‘வெளியூர் பொண்ணு தான் வேண்டுமென்று அடம் பிடித்தாயே? இப்போ உன் தங்கைக்கு மட்டும் உள்@ர் மாப்பிள்ளை வேண்டுமா?’ என்றார்கள். ஒவ்வொருவருக்கும் விளக்கமளித்தே அவன் ஓய்ந்து விட்டான்.
அடுத்ததாக தனது உயிர் நண்பனான ரமேஷின் வீட்டிற்கு சென்றான். உபசரிப்பிற்கு பிறகு மாப்பிள்ளையை பற்றி விசாரித்த ரமேஷ்,
‘ஏண்டா பார்த்தி! வெளியூர் மாப்பிள்ளையா பார்த்திருக்கலாமே?’
‘போடா! உன் பேச்சை கேட்டுத் தான் நான் வெளியூர் பொண்ணை கட்டிகிட்டேன். இப்போ காடாறு மாசம் நாடாறு மாசம் என்கிற கதையா போச்சு! அவ்வளவு தூரத்திற்கு அடிக்கடி போக முடியலை. அவளுக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல் போயிடுது. பக்கத்தில் இருந்து பார்க்க முடியலை. உள்@ரிலேயே பொண்ணு கட்டி இருந்தால் என்னோட அரவணைப்பிலும் அவ அம்மாவின் அன்பிலும் அவ சந்தோசமா இங்கேயே இருந்திருப்பா!
எனக்கு கிடைக்காத அந்த சந்தோசம் என் தங்கச்சிக்காவது கிடைக்கட்டுமேன்னு தான் இங்கேயே பார்த்துட்டேன்’ என்றான்.
‘எப்படியோப்பா! நீ என்ன சொன்னாலும் வெளியூரில் கட்டிக் கொடுக்கிறது தான் குடும்பத்துக்கு நல்லது. கணவன், மனைவிக்குள் ஒரு புரிந்துணர்வு எற்படும்’ என்றான் ரமேஷ்.
திருமணம் நடந்து இரண்டு மாதங்களுக்க பிறகு…
அழுது கொண்டே வந்தாள் பாத்திபனின் தங்கை. பதறிப்போனவன், ‘ஏம்மா என்னாச்சு’ என்றான்.
‘அவரு என்னை சந்தோசமாவே வச்சுக்கலை. நான் இனி அங்கே போக மாட்டேன்’ என்றாள்.
ஏதோ தாம்பத்திய பிரச்சனையாக இருக்குமோ? தங்கையிடம் எப்படி கேட்பது என ஆலோசித்த பார்த்தி, அவளை சமாதானப்படுத்தி விட்டு வெளியே வந்தான்.
போணை கையிலெடுத்து ‘அத்தான்… என்னாச்சு அத்தான்.. என்ன பிரச்சனை என்றான். எங்கேப்பா பிரச்சனை!, ஒண்ணும் புரியலையே தெளிவாக சொல்லுங்க என்றான்.
‘மாலினி அழுதுகிட்டே வந்திருக்கிறா! உங்களோட சண்டை போட்டதா சொன்னாளே!’
மாலினி அங்கே வந்திருக்கிறாளா? நான் சண்டை எதுவும் போடலையே? என்றவன் சற்று யேசித்தவனாக, இன்னிக்கு சாயங்காலம் வெளியே அழைச்சுட்டு போறதா சொல்லி இருந்தேன். ஆபிஸில் இன்னிக்கு ரெய்டு வந்துட்டதால் வெளியே வர முடியலை. வேலை அதிகமா போச்சு! அதனால் நாளைக்கு போகலாம் என்று சொன்னேன். அவ்வளவு தானே அதற்காக அங்கே வந்துட்டாளா? சரி! நான் உடனே வருகிறேன்’ என்று கூறி சொன்னமாதிரியே அரைமணி நேரத்தில் வந்து விட்டான். பிறகு அவளை சமாதானப்படுத்தி அழைத்து சென்றான்.
கணவனை அங்கு வரவழைத்து தன்னை அழைத்து சென்றதில் அவளுக்கு கர்வம் ஏற்பட்டது. அன்று தொடங்கிய அந்த செயல் வாடிக்கையானது. எடுத்ததெற்கெல்லாம் கோபப்பட்டு வீட்டுக்கு வருவதும் கணவன் வந்து அழைத்து செல்வதும் தொடர்கதையானது.
அன்றொரு நாள்,
தனக்கு பிரமோசனுடன் பக்கத்து ஊருக்கு மாற்றல் கிடைத்திருப்பதை சந்தோசத்துடன் மனைவிக்கு சொல்ல போணை செய்த போது மறுமுனையில் பதிலில்லை.
பக்கத்து வீட்டுக்கு போண் செய்து மாலினியிடம் கொடுக்க சொல்லி, ‘எவ்வளவு நேரமாக போண் பண்ணிட்டு இருக்கிறேன்? போணை எடுத்தாலென்ன? ஏதாவது வேலையாக இருந்தால் என்ன சேதின்னாவது கேட்கலாமில்லே!’ என்றான் சற்று கோபமாக, அவளுக்கு வந்ததே கோபம்! வீட்டைக் கூட பூட்டாமல் விறுவிறுவென தனது வீட்டை நோக்கி நடந்தாள்.
கால் காசு பெறாத சாதாரண சண்டையாகத்தானிருக்கும் என எண்ணிய பார்த்திபன் அன்று எதுவும் கேட்காமல் இருந்துவிட்டான். இதே வழக்கமாகி போய்விட்டதே என எண்ணிய கணவன் இந்த முறை அங்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விட்டான். ஒருநாள் கூட கணவனை பிரிந்து இருந்திடாத மாலினி அன்று பரிதவித்தாள். ஆனால் வைராக்கியத்துடன் இருந்தாள். இரண்டு நாட்களாகியும் அத்தான் வரவில்லையே? பெரிய பிரச்சனையாக இருக்குமோ! என பயந்த பார்த்தி, அத்தானுக்கு போண் செய்தான்.
அவனோ ‘மாப்பிளை! உங்க தங்கச்சிக்கு இதே வேலையா போச்சு! அவளுக்கு எப்போ வரணும்னு தோணுகிறதோ அப்போ வரட்டும். நான் அங்கு வந்த கூப்பிடுவதாக இல்லை’ என்று கூறிவிட்டான்.
விஷயம் விபரீதமாவதை உணர்ந்த பார்த்திக்கு தனது நண்பன் ரமேஷ் சொன்னது காதில் ஒலித்தது.

‘எப்படியோப்பா! நீ என்ன சொன்னாலும் வெளியூரில் கட்டிக் கொடுக்கிறது தான் குடும்பத்துக்கு நல்லது. கணவன், மனைவிக்குள் ஒரு புரிந்துணர்வு எற்படும்’.


--படுகைக்காக ராஜா
Last edited by rajathiraja on Sat Mar 24, 2012 6:01 pm, edited 1 time in total.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வெளியூர் மனைவி

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 11:19 pm

‘எப்படியோப்பா! நீ என்ன சொன்னாலும் வெளியூரில் கட்டிக் கொடுக்கிறது தான் குடும்பத்துக்கு நல்லது. கணவன், மனைவிக்குள் ஒரு புரிந்துணர்வு எற்படும்’.

--படுகைக்காக ராஜா


அதற்காக வெளிநாட்டில் வசிப்போருக்கெல்லாம் கட்டிக் கொடுக்க கூடாது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வெளியூர் மனைவி

Post by ஆதித்தன் » Fri Mar 09, 2012 11:27 pm

கதை நன்றாக இருக்கிறது.

கோபத்தில் திடீரென தவறு செய்வதனை தடுக்க, கால சூழலை ஏதுவாய் அமைக்கலாம் என கதை உணர்த்துகிறது
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: வெளியூர் மனைவி

Post by rajathiraja » Mon Mar 12, 2012 7:33 am

எல்லோரும் கதை எழுதுறாங்களே நாமும் எழுதிப் பார்ப்போமேன்னு முயற்சி பண்ணினேன். எனக்கே அது பிடிக்கலை.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: வெளியூர் மனைவி

Post by Oattakaran » Mon Mar 12, 2012 8:14 am

”எப்படியோப்பா! நீ என்ன சொன்னாலும் வெளியூரில் கட்டிக் கொடுக்கிறது தான் குடும்பத்துக்கு நல்லது”
இந்த கதையில் இன்னும் ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது பக்கத்தில் இருந்தால் சிறு கஷ்டம் வந்தாலும் அது பொரியதாக தோன்றும் தூரத்தில் இருந்தால் அது தெரிவதில்லை
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வெளியூர் மனைவி

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 10:47 am

Oattakaran wrote:
”எப்படியோப்பா! நீ என்ன சொன்னாலும் வெளியூரில் கட்டிக் கொடுக்கிறது தான் குடும்பத்துக்கு நல்லது”
இந்த கதையில் இன்னும் ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது பக்கத்தில் இருந்தால் சிறு கஷ்டம் வந்தாலும் அது பொரியதாக தோன்றும் தூரத்தில் இருந்தால் அது தெரிவதில்லை

பக்கத்தில் இருந்தால் உதவுகிறோம் என நாம் நினைத்து செய்யும் சில காரியங்கள் உபவத்திரமாக போய்விடும்..தூரத்தில் இருந்தால் அவரவர் காரியத்தை அவரவர்களே பார்த்துக் கொள்வார்கள்...
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”