நாளைய நடப்பது நாளைக்கே நடக்கட்டும்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

நாளைய நடப்பது நாளைக்கே நடக்கட்டும்

Post by nadhi » Fri Mar 16, 2012 8:46 pm

ஒரு முறை ஒரு மனிதருக்கு அவர் செய்யாத குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை அவரை துக்கில் போட வேண்டும் என்று அரசர் உத்தரவிட்டார். இப்படி ஒரு தீர்ப்பு சொன்னவுடன் அவர் எனக்கு ஒரு வருடம் அவகாசம் தாருங்கள் உங்கள் குதிரையை பறக்க வைப்பேன் என்றார். இதைக் கேட்ட அரசர் சரி ஆனால் குதிரை பறக்காவிட்டால் உன் தலையை யானையின் காலுக்கு கீழே வைத்து நசுக்கிவிடுவேன் என்று எச்சரித்தார். அவனுக்கு ஒர் வருடம் காலக்கெடு கொடுத்து அனுப்பினார் . அரசரின் குதிரையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த அம்மனிதரை பார்த்த அவன் மனைவி என்ன இப்படி செய்து விட்டீர்கள் ? குதிரைக்கு எப்படி பறக்க கற்று கொடுப்பீர்கள்? எங்காவது. குதிரை பறக்க முடிறுமா? என்று சோகமாக கேட்டார். அதற்கு அந்த மனிதர் எனக்கு ஒரு வருடம் அவகாசம் இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில் என்ன வேண்டுமாகாலும் நடக்கலாம். அதில் அரசர் இறக்கலாம். அல்லது நானோ கூட இயற்கை மரணம் அடையலாம். இல்லை குதிரை இறக்கலாம். பற்க்க கூட கற்றுக்கோடுக்கலாம். யாருக்கு தெரியும்.

நாளை என்ன நடக்கபோகிறது. என்பதை தற்போதைய சூழ்நிலைகளை வைத்து தீர்மானிக்க முடியாது. நாளை நடக்கப் போவதற்கும் இப்போதிரருக்கும் சூழ்நிலைகள் ஒரு வழிகாட்டியாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர அவையே ஒரு தீர்மானமாக இறுதி முடிவாக இருக்கத் தெவையில்லை இன்றைய சூழ்நிலைகள் நாளைய எதிர்காலமாக மக்கள் கற்பனை செய்து கொள்வதால் தான் அவர்களுக்கு துயரங்கள் மன அழுத்தமும் ஏற்படுகிறது.

(நாளைய என்பது கண்டிப்பாக தேவை அதில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.)
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: நாளைய நடப்பது நாளைக்கே நடக்கட்டும்

Post by muthulakshmi123 » Fri Mar 16, 2012 9:09 pm

இன்றைய சூழ்நிலைகள் நாளைய எதிர்காலமாக மக்கள் கற்பனை செய்து கொள்வதால் தான் அவர்களுக்கு துயரங்கள் மன அழுத்தமும் ஏற்படுகிறது.

நன்றாக சொன்னீர்கள் ..தவறான எண்ணங்களை கைவிடவேண்டும்...
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: நாளைய நடப்பது நாளைக்கே நடக்கட்டும்

Post by nadhi » Fri Mar 16, 2012 9:13 pm

உங்களைத்தான் காணும் பார்த்து கொண்டு இருந்தேன் இன்று லேட்டுகளாம்மா.என் கதைக்கு பதில் கொடுத்ததுக்கு நன்றி. :wav: :wav: :wav:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நாளைய நடப்பது நாளைக்கே நடக்கட்டும்

Post by ஆதித்தன் » Fri Mar 16, 2012 9:31 pm

அதுவும் சரிதான்.

நாளைக்கு நடப்பவை நாளைக்கு எப்படி நடக்கணுமோ, அப்படியே நடக்கட்டும்.

நான் இன்று முதல் இதனை கடைபிடித்து, தற்பொழுதைய சூழலை மட்டும் கவனமாக பார்க்கிறேன்.

ஒகே.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: நாளைய நடப்பது நாளைக்கே நடக்கட்டும்

Post by umajana1950 » Fri Mar 16, 2012 10:13 pm

நாளை நடக்கப் போவதற்கும் இப்போதிரருக்கும் சூழ்நிலைகள் ஒரு வழிகாட்டியாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர அவையே ஒரு தீர்மானமாக இறுதி முடிவாக இருக்கத் தெவையில்லை
இதைத் தான்
ஒன்றே செய்!
நன்றே செய்!! அதுவும்
இன்றே செய்!!!

என்று சொன்னார்களோ....
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: நாளைய நடப்பது நாளைக்கே நடக்கட்டும்

Post by rajathiraja » Mon Mar 19, 2012 5:27 am

கதை நல்லாத்தான் இருக்கு.ஆனால் எல்.ஐ.சி ஏஜன்டுகளுக்கு இந்த கதை பிடிக்காதே?
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: நாளைய நடப்பது நாளைக்கே நடக்கட்டும்

Post by nadhi » Mon Mar 19, 2012 6:47 pm

ராஜா சார்
எல்.ஐ.சி ஏஜன்டுகளுக்கு இந்த கதை பிடிக்காதே?
மட்டும் இல்ல கடன் கொடுக்கறவங்களுக்கு பிடிக்காது.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: நாளைய நடப்பது நாளைக்கே நடக்கட்டும்

Post by muthulakshmi123 » Mon Mar 19, 2012 10:22 pm

nadhi wrote:ராஜா சார்
எல்.ஐ.சி ஏஜன்டுகளுக்கு இந்த கதை பிடிக்காதே?
மட்டும் இல்ல கடன் கொடுக்கறவங்களுக்கு பிடிக்காது.
யாருக்கு பிடித்தால் என்ன எல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டிய கருத்துள்ள கதை
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”