Page 1 of 1

உலக மக்கள் தலைவர்களை உருவாக்கும் படித்த புத்திசாலிகள்

Posted: Sat Nov 12, 2016 3:05 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=uKqW3EkT2bE[/youtube]

இன்றைய உலகம் ஒற்றைக்குழு ஆதிக்கத்தின் கீழ் சென்று கொண்டிருக்கிறது, அதற்கு உறுதுணையாக மேல் மட்ட படித்த புத்திசாலி ஊழியர்கள் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். தற்போதைய காலத்தில் உலகின் அரசியல் தலைவர்களை அவர்களே நிர்ணயம் செய்கிறார்கள் என்பதனை சமீபத்தில் நடந்து முடிந்த, அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றி மற்றும் அதற்கு முன் மோடி தேர்தல் பார்முலா, அதற்கும் முந்தைய ஒபாமா பார்முலா என அனைத்திலும் உலக அரசியல் எவ்வாறு டிஜிட்டல் யூகத்தில் சென்றுவிட்டது என்தனை அறிந்து கொள்ள முடிவதோடு, அதன் நோக்கம் ஐக்கியம் என்ற ஒற்றக்குழு ஆளுமைக்காக உருவாக்கப்பட்டது என்பதனையும் புரிந்து கொள்ளலாம். #அதிபுதிதிசாலி #யார்

டொனால் ட்ரம்ப் என்பவர் இயற்கையாகவே கோப சுபாவம் கொண்டவர் அல்லது உணர்ச்சி வயப்படுவர் என்பது அவரது மேடைப்பேச்சின் வழியாக நன்றாகத் தெரிகிறது. இவரைக் கொண்டு, எளிதாக உலக நாடுகளிக்கிடைய நிகழும் சின்னச் சின்னப் பிரச்சனைகளை காரணம்காட்டி இராணுவத்தினை செயல்படுத்த முடியும் என்பது புத்திசாலிகளின் திட்டமா என்பது புரியவில்லை, இருந்தாலும் வரலாறு உண்மை கூறும் என நம்புவோம்.