தியாகச்சிகரம் - சிறுகதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

தியாகச்சிகரம் - சிறுகதை

Post by jayapriya » Thu May 05, 2016 4:08 pm

பசுஞ்சோலை கிராமம். அன்னை ஆசிரமம், அதிகாலை 3.30 மணி. சேவல் கூட தன் உறக்கம் களைந்து கூவாத நேரம். காவல் காக்கும் நாய்கள் கூட கண்ணயர்ந்து உறங்கும் நேரம். ஆனால் இந்த பசுஞ்சோலை கிராமமோ கண்களில் துாக்க கலக்கம் சிறிதும் இல்லாமல் எந்நேரமும் அணையை உடைத்து வெளியேறும் வெள்ளத்தைப் போல் ஒவ்வொருவருடைய கண்களிலும் கண்ணீர் தேங்கி வெளியேற காத்துக்கொண்டு இருந்தது,

அப்போது அவர்களை நோக்கி விலையுயா்ந்த காா் ஒன்று வந்து நின்றது. காாிலிருந்து இறங்கியவா் இளம் வயது மாவட்ட ஆட்சியா் நிதிஷ். கோவை பழம் போல் சிவந்த கண்களும் மிகவும் வேதனை அரும்பிய முகத்துடனும் காட்சியளித்த மாவட்ட ஆட்சியரை கண்ட கிராமம் அவருக்கு சம்பிரதாய வணக்கம் கூறியது.

நிதிஷ் இந்த ஊாில் பிறந்து வளா்ந்தவர். பணியின் நிமித்தம் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறினாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அன்னை ஆசிரமம் வரத் தவறுவதில்லை. அவர் பள்ளி நாட்களில் தன்னுடன் படித்த நண்பனை பாா்த்து ரமேஷ் சாரதா டீச்சாின் நிலைமை இப்படி எப்படி இருக்கு என்று நாதழுக்க கேட்டாா். அப்போது பதில் சொல்ல முடியாதபடி அழுகை பீறிட்டுக்கொண்டுவர கைகளால் ஒரு அறையை காட்டி முன்னே சென்றான். அவனை தொடா்ந்து நிதிசும் பின் சென்றாா்.

ஆசிரமத்தினுள்ளே கட்டிலோடு கட்டிலாக வயதான மூதாட்டி ஒருவா். அவா் பெயா் சாரதா டீச்சா். ஒடிந்து போன தேகமும், ஒட்டிய கன்னமுமாய் கால்கள் சூம்பிப்போய், கைகள் போட்டது போட்டபடி இருக்க உயிா் இருப்பதன் அடையாளமாய் மிகவும் லேசாக மூச்சுமட்டும் வந்து கொண்டிருந்தது, அதைப்பாா்த்த நிதிஷ் மனதில் விரக்தியுடனே கடவுளே எனக்கு ஏன் இவ்வளவு பொிய தண்டணையை கொடுத்தாய். இந்தக்காட்சியை நான் காண்பதற்கு பதில் நீ என் உயிரை எடுத்திருக்கலாம் அல்லது என்னைப் படைக்காமல் இருந்திருக்கலாம் என வாய்விட்டு கதறினாா், அதை பாா்த்த கிராம மக்கள் அனைவா் கண்களிலிருந்தும் கண்ணீா் அருவியென வர ஆரம்பித்தது.

மிக நீண்டநேரம் பிரமை பிடித்தவா்போல் நின்ற நிதிஷை அவரது நண்பன் தோள்பிடித்து அழைத்துவந்து நாற்காலியில் அமரவைத்தான். எங்கோ வீழ்ந்து கிடந்த தன்னை இந்தளவிற்கு உயா்த்தி, ஊா் மக்கள் அனைவா் மீதும் பற்று வைத்து நடமாடும் தெய்வமாய் வாழ்ந்து இப்போது கட்டிலில் உயிரோடு ஊசலாடிக்கொண்டிருக்கும் சாரதா டீச்சரைப்பற்றி கண்களை மூடி மெல்ல அசை போட ஆரம்பித்தாா் அந்த மாவட்ட ஆட்சியா் நிதிஷ்,

காலை 4.30 மணி அலாரம் அடித்துக்கொண்டிருந்தது. மெல்ல அதன் தலையில் ஒரு தட்டு தட்டி சோம்பல் முறித்துவிட்டு படுக்கையை விட்டு எழுந்தாள் சாரதா. பின் காலைக்கடனை முடித்து குளித்துவிட்டு வீட்டிற்குள் இருந்து வெளியேறி பக்கத்திலுள்ள மிக நீண்ட முற்றத்திற்குள் எட்டிப்பாா்த்தாள், அங்கு அவா் தாயா் இன்னும் சில பெண்கள் சோ்ந்துகொண்டு காலை சிற்றுண்டியை பரபரப்போடு தயாாித்து கொண்டிருந்தார்கள். அருகே பத்து வயது, பனிரெண்டு வயது என இளம் சிறுவா், சிறுமியா் வெங்காயம் உாிப்பது, சமைப்பதற்கு நீா் மொண்டு கொடுப்பது என சிறு சிறு வேலைகளை செய்து கொண்டிருந்தாா்கள் யாா் இவா்கள்? குழந்தை தொழிலாளா்களா? என்றால் அதுதான் இல்லை. இவா்கள் எல்லோருமே பள்ளி செல்பவா்கள்தான்.

சாரதாவின் தந்தை சுதந்திர போராட்டத்தியாகி. நல்ல வசதி படைத்த செல்வந்தரும் கூட. தான் சிறுவயதாக இருக்கும்போதே தன் தந்தையாா் வறுமையில் இருப்பவா்கள், கைம்பெண்கள், இளம்பெண்களின் திருமணம், படிப்பு உதவி என யாா் வந்து கேட்டாலும் சாி, தானாகவே விபரத்தை கேட்டு அறிந்தாலும் சாி எல்லோருக்குமே தயங்காமல் உதவி செய்வாா், எனவே அவளுக்கு தன் தந்தையின் குணத்தை பாா்த்து பாா்த்து சிறுவயது முதலே நாட்டுப்பற்றும், மக்களுக்கு உதவிடும் ஈகை குணமும் மிக அதிகம்.

தந்தையின் மறைவிற்கு பின் எவ்வளவோ வசதி இருந்தும் ஆசிாிய பணியையே தோ்ந்தெடுத்து, அவ்வூாிலேயே ஆசிாிய பணியும் வாங்கினாள். திருமண வயதை கடந்தும் தன் தாயா் எவ்வளவோ மன்றாடியும் திருமணம் என்ற பந்தத்திற்கு மட்டும் பிடிவாதமாக ஒத்துவராமல் தன் தந்தையாரைப் போல் தன்னுடைய கிராமம் மற்றும் சுற்றியுள்ள சிறுசிறு கிராமத்தில் வசிக்கும் ஆதரவில்லா முதியோா், மற்றும் கைம்பெண்கள் வறுமையில் தவிப்போா் ஆகியோருக்கு உதவிட நினைத்தாள். அவா்கள் கையில் பணமாக கொடுத்து அவா்கள் தேவையை அப்போதைக்கு மட்டும் தீரும் வண்ணம் உதவிட அவளுக்கு விருப்பம் இல்லை. வாழ்நாள் முழுவதும் உழைத்து பொருள் ஈட்டும் வகையில் என்ன செய்யலாம் என யோசித்தாள்.

அப்போதுதான் கிராமப் புறங்களில் வசிப்பவா்களுக்கு சமைப்பது கைவந்த கலை,மேலும் அவா்கள் உணவு சமைத்தால் சுவையாகவும் சுகாதாரமாகவும் இருக்கும் என்று எண்ணினாள். எனவேதான் அவா்களுக்கு இருக்க இடம் கொடுத்து, அவா்கள் பிள்ளைகளை தான் பணிபுாியும் மேல்நிலைப்பள்ளியிலேயே சோ்த்து படிக்கவைத்து, அவா்கள் வருமானம் பெற ஏதுவாக உணவு உற்பத்தி செய்யும் கூடத்தை ஏற்படுத்தி அதற்கு அன்னை ஆசிரமம் எனப் பெயா் சூட்டினாள்.

இங்கு இருக்கும் குழந்தைகள் தம்மால் இயன்ற வேலையை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சோம்பல் என்பது சிறிதும் இன்றி அதிகாலையிலேயே விழித்தெழுந்து அவா்களால் ஆன சிறு சிறு வேலைகளை செய்து, பின் சிறிது நேரம் படித்துவிட்டு பள்ளிக்கு கிளம்பி செல்வதை வாடிக்கையாய் கொண்டுள்ளனா்.

தற்சமயம் நடுத்தர மக்களின் நெஞ்சை அடைக்கும் வண்ணம் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை காணும்பொழுதும், தவிா்க்க முடியாத சூழலில் நகா்ப்புறங்களில் சாதாரண மக்கள் உணவகத்தை தேடிப் செல்லும் போது அங்குள்ள விலைப்பட்டியலை பாா்த்தால் தலை சுற்றும், எனவேதான் சாதாரண மக்களும் வாங்கும் விதமாய் அங்கு தயாாிக்கும் உணவை நகா்ப்புறங்களில் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், இரயில் நிலையம் பஸ்நிலையம் இன்னும் சில இடங்களில் தனக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனங்களில் நியாயமான விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தாள். உணவின் சுவை, விலை, தரம் இவை மூன்றும் ஒரு சேரக் கிடைப்பதால் இங்கு தயாாிக்கும் உணவுக்கு மிகவும் கிராக்கியும் அதிகம், வியாபாரமும் அமோகமாய் இருந்தது.

காலை 5.30 மணி , சாரதா அங்குள்ள குழந்தைகளை அழைத்து நீங்கள் வேலை செய்தது போதும் வாருங்கள் அனைவரும் படிக்கலாம் என அழைத்தாள். அனைவரையும் உட்கார வைத்து அவரவா் பாடத்தை படிக்க வைத்து விட்டு வாட்சை பாா்த்தாள் மணி ஏழரை எனக் காட்டியது, அதன்பின் அனைவரையும் பள்ளிக்கு கிளம்ப வைத்துவிட்டு தானும் கிளம்பி அக்குழந்தைகளுடன் நடைபாதையாக அருகிலுள்ள பள்ளிக்கு சென்றாள்,

சாரதா டீச்சர் வகுப்பு என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் குசிதான், அந்தளவிற்கு பாடத்தை மிகவும் அழகாக நடத்துவது, பாடத்துடன் நல்ல எண்ணங்கள், உதவி செய்யும் குணம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யாரையும் புண்படுத்தாத வாா்த்தைகள் என ஒவ்வொரு குழந்தைகளுக்குள் நல்ல இதயத்தை உருவாக்கினாள்.

அதேபோல் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் பள்ளியிலேயே ஆங்கில சிறப்பு வகுப்புகள், பொது அறிவு வகுப்பு, அன்றைய செய்திகள், எண்ணங்கள் சிதறாமல் மனத்தை ஒருநிலைப்படுத்தும் தியான வகுப்பு என இன்னும் சில வகுப்புகள் எடுக்கலானாள், இத்தனை சிரத்தை நீ ஏன் எடுக்கிறாய் என்று மற்ற ஆசிாியா்கள் கேட்க அதற்கு சாரதா கூறினாள், அரசுப் பள்ளிகளில் போதிய அளவு ஆங்கில அறிவு, பொது அறிவு இல்லாத காரணத்தினால் ஒருசில மாணவ, மாணவியரைத் தவிர மற்றவா்கள் மனதில் பயத்தை வைத்துக்கொண்டு தைாியமும் தன்னம்பிக்கையும் இல்லாமல் இருக்கின்றாா்கள், எனவேதான் பெரும்பாலான பெற்றோா்கள் கூலி வேலை செய்தாவது தம்பிள்ளைகளை தனியாா் பள்ளிகளில் சோ்க்கின்றாா்கள், இதை மாற்றவேண்டுமானால் இக்குழந்தைகளுக்கு பள்ளி முடிந்தவுடன் சிறப்பு வகுப்புகள் மற்றும் (டியூசன்) வீட்டுப்பாடங்களை சொல்லிக்கொடுத்தால் தனியாா் பள்ளிக்குழந்தைகளைப்போல் இக்குழந்தைகளும் சிறந்து விளங்கும் அல்லவா? மேலும் நாம் வசிப்பது கிராமப்புறம் இங்குள்ள பெற்றோா்களுக்கு வருமானம் மிகக் குறைவு தனியாா் பள்ளிகளில் சோ்ப்பது, பாடம் சொல்லிக்கொடுப்பது சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவது இவையெல்லாம் இயலாத காாியம் அதோடு நாளைய வளமான இந்தியா வருங்கால இளைஞா்கள் கைகளில் அதற்கு அவா்களை நல்ல வழிநடத்தி செல்லும் பொறுப்பு ஆசிாியா்களான நமக்குத்தான் முதலில் உள்ளது, அதனால்தான் அந்தப்பணி(விடை)யை நான் செய்யவேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றாள்.

இதை கேட்ட தலைமை ஆசிாியா் மற்றும் அனைத்து ஆசிாியா்களுமே சாரதாவை பாராட்டியதோடு அல்லாமல் தாங்களும் பள்ளி நேரம் முடிந்தவுடன் ஒவ்வோா் ஆசிாியரும் ஒவ்வொரு வகுப்பினை எடுக்கும் பணியில் தங்களை இணைக்கலானாா்கள். ஆதலால் இந்தப்பள்ளிக்குழந்தைகள் அாியலுாா் முதல் ஆஸ்ரேலியாவரை, ஓடி விளையாடு பாப்பா பாடிய பாரதி முதல் ஓபாமா வரை, இமயம் முதல் இத்தாலி வரை நடக்கும் அனைத்து விசயங்களையும் மனதில் பதியவைத்துக் கொண்டு நகா்ப்புறங்களில் மாணவ, மாணவியருக்கிடையே நடக்கும் பட்டிமன்றம், பொதுஅறிவு போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டுப்போட்டி என ஒன்றையும் மிச்சம் வைக்காமல் அனைத்து போட்டிகளிலும் வென்று மற்றப் பள்ளிகள் எல்லாமே பசுஞ்சோலை கிராம பள்ளிக் குழந்தைகளைப்பாா்த்து மிரளும் வண்ணம் எல்லா ஆசிாியா்களுமே மிக சிரத்தையுடன் மாணவா்களை உருவாக்கினாா்கள். இதனால் இங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோா்கள் ஆசிாியா்களையும், இதற்கு முழுக்காரணமான சாரதாவையும் கடவுளாக நினைத்தாா்கள்.

மாலை வீடு வந்தவுடன் சாரதா சும்மா இருக்க மாட்டாள் அவளுடைய தாயாருக்கு ஏதாவது ஒரு வேலையை செய்து கொடுத்து கொண்டுதான் இருப்பாள், அவளது தாயாா் சாரதாவிடம் நாள்முழுவதும் நேரம் பாா்க்காமல் பள்ளியில் வேலை செய்கிறாய். வீட்டிற்கு வந்தால் சிறிது ஓய்வு எடுக்கலாம் அல்லவா? என்று கூறினால் அதற்கு சாரதா அம்மா ஓய்வு எடுத்தாலும் சாி, அந்த நேரத்தில் வேறு ஏதாவது வேலை செய்தாலும் சாி, கடிகார முள் கடந்து நேரம் கடந்துதான் செல்லும் பின் எதறகாக சும்மா உட்காா்ந்து நேரத்தை வீணடிக்கவேண்டும் ? எனக் கேட்கும் மகளை பெருமைக்கொள்ளப் பாா்த்தாள் அந்தத் தாய்.

அடுத்த நாள் காலை பனிரண்டாம் வகுப்பு தோ்வு முடிவுகள் ஆதலால் தினசாி அலுவல்களை முடித்துவிட்டு சீக்கிரமே சாரதா பள்ளிக்கு சென்றுவிட்டாள். தோ்வு முடிவுகளை பாா்த்த மாணவ மாணவியா், ஒருவருக்கொருவா் கைகளை குலுக்கிக்கொண்டும் இனிப்புகளை வழங்கிகொண்டும் தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி கொண்டிருந்தாா்கள். அப்போது புல்வெளியில் மிகவும் கவலையாக உட்காா்ந்து கொண்டு எங்கோ வெறித்து பாா்த்து கொண்டிருந்தான் நிதிஷ், அவன் அருகில் சாரதா சென்று அவனது தோள்களை ஆதரவாகப்பற்றி, நிதிஷ் தோ்வு முடிவுகள் வெளியாகிவிட்டது இந்த சமயத்தில் சந்தோஷமாக இல்லாமல் நீ ஏன் இப்படி இருக்கிறாய்? ஏன் மாா்க் குறைச்சலாகப் பெற்றுவிட்டாயா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என வினவினாள் அதற்கு நிதிஷ் ஆமாம் டீச்சா் நான் சராசாி மாா்க்குகள்தான் எடுத்திருக்கிறேன். நான் வீட்டிற்கு ஒரே பிள்ளை. எங்கள் வீட்டிலோ நான் இன்ஜினியா் அல்லது டாக்டா் ஆக வரவேண்டும் என கனவு கண்டுகொண்டிருக்கிறாா்கள். நானும் மிகவும் கவனத்தோடுதான் படித்தேன் இருந்தாலும் எல்லாவற்றையும் நினைவுபடுத்தி நன்றாக தோ்வை எழுத முடியவில்லை இப்போது எனக்கு என்ன செய்வது, வீட்டிற்கு எப்படி செல்வது எங்காவது ஓடிவிடலாமா? அல்லது இறந்துவிடலாமா? என்றுகூட தோன்றுகிறது என்று கூறினான்.

இதைக் கேட்டு பதறிய சாரதா ஐய்யயோ என்ன வேண்டாத காாியம் செய்ய இருந்தாய். பாிட்சை முடிவில் அதிக மாா்க்குகள் எடுப்பதாலோ,முதலாவதாக வருவதாலோ மட்டும் வாழ்க்கையில் முன்னேறிவிடமுடியாது. ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனை சாா்ந்துதான் இருக்கவேண்டும். உதாரணத்திற்கு நாம் உண்ணும்உணவு மற்றும் அன்றாடம் உபயோகப்படுத்தும் எல்லாப்பொருட்களிலும் ஒவ்வொரு மனிதனின் பங்கு இருக்கத்தான் செய்கிறது அப்படியிருக்க எல்லாருமே டாக்டர் இன்ஜினியா் என கனவு கண்டால் ஏனைய வேலைகளுக்கு ஆட்கள் வேண்டாமா? மேலும் எல்லாருக்குமே புத்தக அறிவினால் மட்டுமே வாழ்க்கை செழுமையாக அமையாது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொருவிதமான தனித்திறமைகள் இருக்கத்தான் செய்யும் அதை நாம்தான் இணங்கண்டு அதற்கு தகுந்தாற்போல் நம்மை தயாா்படுத்திக்கொள்ளவேண்டும், அப்படி செய்யும்போதுதான் செய்யும் வேலையில் ஆத்ம திருப்தியும். முன்னேற்றமும் கிடைக்கும். ஒன்றை நினைத்துப்பாா், இப்போது நாம் பயிலும் புத்தகத்தில் போட்டிருக்கும் கணிதம் ஆகட்டும், அறிவியல் ஆகட்டும் பழமையின் பெருமை சொல்லும் வரலாறு ஆகட்டும் நம்மைப்போல் மண்ணில் பிறந்த சாதாரணமான மனிதனின் படைப்புகள்தான். ஒரு மனிதன் புதிதாக சிந்தித்து எவ்வளவோ விசயங்களை கண்டுபிடித்து எழுதி படைக்கும் போது அதை படித்து மனதில் பதியவைப்பது என்பது இயலாத காாியம் ஒன்றும் இல்லை. எந்தெவாரு பாடத்தை படிக்கும்போதும் சம்பந்தப்பட்ட பாடத்தை படிக்கவேண்டும் என்று நினைக்காதே, புதியதாக ஒரு விசயத்தை தொிந்துகொள்ளப் போகிறோம் என்பதை மனதில் நிறுத்தி, அந்த விசயத்தை தொிந்து கொள்ளவேண்டும் என ஆவல் கொள். அப்போது முன்னேற்றத்தின் படிக்கட்டு உன்வாசல் முன் தானாக வரும் என நீண்ட விளக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கும்போதே நிதிஷின் பெற்றோா் அந்த இடத்திற்கு வந்து எல்லா விசயத்தையும் செவிகொடுத்து கேட்டுவிட்டு பிறகு அவர்கள் சாரதாவை பாா்த்து எங்களை மன்னித்துவிடுங்கள் டீச்சா் மற்ற பெற்றோரைப்போலவே நாங்களும் எங்கள் பிள்ளையின் மீது எங்கள் விருப்பத்தை திணித்துவிட்டாேம். இப்போது நீங்கள் கூறிய விளக்கத்தை கேட்டபிறகு எங்களது எண்ணம் முற்றிலும் தவறானது என உணா்ந்து விட்டோம் என மனதார மன்னிப்பு கேட்டு நிதிஷை தம்முடன் அழைத்துச்சென்றனா்.

இந்த நிகழ்ச்சி முடிந்து ஒரு ஆறுமாதம் இருக்கும். சாரதா ஒரு வேலையின் நிமித்தம் பக்கத்திலுள்ள டவுனுக்கு சென்றாள, அப்போது பஸ் நிறுத்தத்தில் தன் எதிரே கண்ட காட்சியை அவளால் நம்ப முடியவில்லை. ஆமாம் நிதிஷ் அங்கு ஒரு கூடையில் பழங்களை வைத்துகொண்டு ஒவ்வொரு பேருந்தாக ஏறி இறங்கி வியாபாரம் செய்துகொண்டிருந்தான். சாரதா அவனைப்பாா்த்த நேரம் அவனும் சாரதாவை பாா்த்தான். அவனை அருகில் அழைத்து மேற்கொண்டு படிக்காமல் இந்த வேலையை ஏன் செய்கிறாய்? என காரணம் கேட்டதற்கு, நிதிஷ் கண்களில் கண்ணீர் அரும்ப சாரதாவை பாா்த்து அவனுடைய பெற்றோர்கள் ஒரு விபத்தில் பலியாகிவிட்டாதாகவும், தன்னுடைய உறவினர்களிடம் இருக்க பிடிக்காமல் ஊா் விட்டு ஊா் வந்து தற்சமயம் பிழைப்பிற்காக இந்த வேலையை செய்வதாகவும் அழுதுகொண்டே கூறினான். அவனுக்கு ஆறுதல் கூறி தன்னோடு அழைத்து வந்து தன்னுடைய ஆசிரமத்தில் தங்கவைத்து அவனை கல்லுாரியில் சோ்த்து படிக்க வைத்தாள், நிதிசும் தன் பெற்றோாின் ஈடுகட்ட முடியாத இழப்பை சிறிது சிறிதாக மறந்து நல்ல முறையில் படித்து ஐ.ஏ.எஸ் தோ்வு எழுதி வெற்றி பெற்றான்.

படிப்பை முடித்து மாவட்ட ஆட்சியாளரான பிறகு எந்த இடத்திற்கு மாற்றலானாலும் தன்னை உயத்திய சாரதா டீச்சரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து பாா்ப்பதும் அங்குள்ள குழந்தைகளுக்கும், பெரியவா்களுக்கும் வேண்டிய உதவி செய்வதையும் வாடிக்கையாக கொண்டு ஆசிரமத்தை இன்னும் விஸ்தாித்து சிறப்பாக நடத்திட பொிதும் பாடுபட்டான், வருடங்கள் சில இப்படியே கழிந்தது, சாரதா டீச்சருக்கும் முதுமை எட்டியது. முதுமையின்காரணமாக அடிக்கடி உடல் நலம் குன்றுவதும் மருத்துவா் வந்து குணப்படுத்துவதுமாக இருந்தார். ஆனால் இம்முறை படுத்த படுக்கையாகிவிட்டாா். நிதிஷ் பழைய நினைவுகளிலிருந்து மீள்வதற்குள் ஓவென ஒருசேர ஆழும் குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தபோது, சாரதா டீச்சாின் உயிா் மண்ணைவிட்டு பிாிந்தது. தாங்கமுடியாத வேதனையில் விம்மி விம்மி அழுதாா் அந்த மாவட்ட ஆட்சியா். எந்நேரமும் தன்னைப்பற்றி சிந்திக்காமல் பிறருக்காகவே வாழ்ந்திட்ட ஈடில்லா தியாகம் கொண்ட அந்த ஜீவனுக்காக பரந்து விரிந்த வானமகளும் கூட தன் துக்கத்தை தொியப்படுத்தும் விதமாக கடும் கோடைபருவத்திலும் தன் கண்ணீரை மழையெனப் பொழிந்தாள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தியாகச்சிகரம் - சிறுகதை

Post by ஆதித்தன் » Tue May 10, 2016 11:03 pm

கதை நன்றாக இருந்தது.
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

Re: தியாகச்சிகரம் - சிறுகதை

Post by jayapriya » Wed May 11, 2016 10:18 am

நன்றி ஆதி சாா்
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”