Page 1 of 1

என் பள்ளி நாட்களில்

Posted: Thu Mar 10, 2016 1:26 am
by ArunStephy
அது ஒரு பிரிட்டிஷ் காலத்து கட்டிடம் (கிறித்தவ ஆலயம்). அங்குதான் எங்களது ஆரம்ப பள்ளி செயல் பட்டது. முகப்பில் ஒரு உயர்ந்த கோபுரம் அதை தொடர்ந்து ஓடால் வேயப்பட்ட கட்டிடம். சுற்றி compund. மழை நேரத்தில் எங்கள் பள்ளி ஒரு சுற்றுலா தலம் போல மாறி விடும். ஆம் மழை நீர் குழம் போல தேங்கி கிடக்கும். அப்புறம் என்ன ஒரே குஷிதான். உள் நீச்சல் வெளி நீச்சல் எல்லாம் நடை பெரும். :great:

அடுத்து,,,,..... வேட்டி கட்டி கொண்டும் வாயில் வெத்தலை பாக்கு போட்டு கொண்டும் நான்கு அடி பிரம்பை காட்டி மிரட்டியும் பாடம் நடத்தும் ஆசிரியர்களை கடைசியாக எங்கள் ஊரில்தான் பார்த்திருக்க முடியும் என்று நம்புகிறேன். :grain:

ஒன்பதாவது வகுப்பு முதல் புது பில்டிங்கில் போனதும் பழைய நினைவுகளை கொஞ்சம் மறந்துதான் போனேன். :mudi:

சில நக்கல் நையாண்டி வேலைகளை செய்திருந்தாலும் ஆசிரியர்களின் படிப்பு தொல்லைகளை அனுபவிக்கவே நேர்ந்தது. :wae:

Studigalil எதனை வகைகள்? :nea:

1. Lunch Study
2. Evening Study
3. Sunday Overtime Study
4. Night Study. ext... :ays:

ஆசிரியர்கள் மேல் கோவம் இருந்தாலும் பரீட்சை பயம் இன்னொரு பக்கம் இருந்ததால் படிப்பில் கவனம் செய்தேன். பலன் கிடைக்கவே செய்தது. அப்போது கசந்த ஆசிரியர்கள் இன்னிக்கு இனிப்பாக தெரிகிறார்கள். நன்றி ஆசிரியர்களே. :ros:

இப்படியாக இனிதே நிறைவுற்றது எனது கல்வி பயணம். மேலும் எழுதுவேன். காத்திருங்கள், :ro: