சுய மதிப்பீடு

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

சுய மதிப்பீடு

Post by kavinayagam » Mon Sep 21, 2015 7:49 pm

நம் திறமையை அடுத்தவர் புகழ் பாட வேண்டும் அதுவே திறமை..!!
(சுயமதிப்பீடு)
ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று ஒரு நம்பருக்கு டயல் செய்தான்..!!
அந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த அந்த கடையின் முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு கொண்டிருந்தார்..!!
.
பையன்: "மேடம் உங்கள் தோட்டத்தை பராமரிக்கும் வேலையை எனக்கு கொடுக்க முடியுமா.."?
.
பெண்மணி: (எதிர் பக்கத்தில் பேசுபவர்)
"எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர் பராமரித்து வருகிறார்.."!!
.
பையன்: "மேடம் அவருக்கு கொடுக்கும்
சம்பளத்தில் பாதி சம்பளம்
கொடுத்தால் போதும். நான் உங்கள்
தோட்டத்தை பராமரித்து தருகிறேன்.."!!
.
பெண்மணி: "இல்லை இப்பொழுது
பராமரிப்பவரின், பராமரிப்பில் தோட்டம்
நன்றாக உள்ளது. நானும் அவர் வேலையில் மிகவும் திருப்தி அடைகிறேன்."!!
.
பையன்: (இன்னும் பணிவோடு) மேடம் நான் உங்கள் வீட்டை பெருக்கி துடைத்து கூட தருவேன்..!! அதற்காக தனியாக எனக்கு சம்பளம் தர வேண்டாம்.."!!
.
பெண்மணி: "வேண்டாம்..! நன்றி".!!
.
அந்த பையன் முகத்தில் சிரிப்போடு டெலிபோன் ரிசிவரை வைத்து விட்டு திரும்பினான்.!!
.
.அந்த கடை முதலாளி அவனிடம்.,
"எனக்கு உன்னுடைய அணுகுமுறையும்'
தோல்வியையும் சிரித்த முகத்தோடு எதிர்
கொள்ளும் விதமும் பிடித்து இருக்கிறது..
நான் உனக்கு வேலை தருகிறேன் வருவாயா.."? என்றார்.!
.
பையன்: "நன்றி..! எனக்கு வேலை வேண்டாம்"..!!
.
கடை முதலாளி: "இவ்வளவு நேரம் வேலைக்காக மன்றாடிக் கொண்டிருந்தாயே.."?
.
பையன்:
"இல்லை சார் நான் நன்றாக வேலை
செய்கிறேனா என்று தெரிந்து
கொள்ளத்தான் இப்படி செய்தேன்..!!
எதிர் முனையில் பேசியவரின் தோட்டத்தை பராமரிக்கும் தோட்டக்காரன் வேறு யாரும் இல்லை, அது நான் தான்.!!!
.
இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!!
.
நான் அப்படி செய்வேன்.. இப்படி
செய்வேன்.. என்று கூறுவது
தற்பெருமை..!!
நம் திறமையை அடுத்தவர் புகழ் பாட வேண்டும் அதுவே திறமை..!!
Show less · Translate
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”