என் பள்ளிக்கால நினைவுகள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
துவாரகநாத்
Posts: 12
Joined: Tue May 12, 2015 9:09 pm
Cash on hand: Locked

என் பள்ளிக்கால நினைவுகள்

Post by துவாரகநாத் » Sun Jun 14, 2015 4:22 pm

அரசு உதவி பெரும் பள்ளியில் தமிழ் வழியில் படிப்பு. தமிழில் படித்ததால் பாடங்களை மனப்பாடம் செய்யாமல் வெகு சுலபமாக புரிந்து கொள்ள முடிந்தது. கண்டிப்புடன் பாடங்களை நடத்திய ஆசிரியர்களான நேசமணி, மரகதம், செல்லப்பன்,குமாரசாமி ஆகியவர்களை இன்று நினைத்து பார்க்கிறேன். குமாரசாமி வாத்தியாரிடம் அடி வாங்காத பிள்ளைகள் யாருமே கிடையாது. என்ன மனுஷன் அவ்வளவு ஸ்ட்ரிக்ட். நல்லா படிக்கிற பசங்களும் அடி வாங்குற நிலைமை வரும். அது எப்படி?. குமாரசாமி வாத்தியாரு சமூக அறிவியல் பாடம் எடுப்பாரு. அன்னைக்கு எடுத்த பாடத்தை அடுத்த நாள் வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக வகுப்பு முதல் பத்து இடங்கள் பிடிக்கும் மாணவர்களிடம் ஒப்புவிக்க வேண்டும். சிறந்த மாணவர்கள் இவர்களில் யார் யார் சரியாக ஒப்புவிக்கவில்லை இன்று குமாரசாமி வாத்தியாரிடம் சொல்வார்கள். அவர் அதற்கு தகுந்த தண்டனை அளிப்பார். இப்படி சரியாக ஒப்புவிக்காத மாணவர்கள் சிறந்த மாணவர்களுக்கு நல்ல நண்பர்களாக இருப்பார்கள். நட்புக்காக இவர்கள் நன்றாக ஒப்பிததாக வாத்தியாரிடம் சொல்லுவார்கள். சில சமயம் வாத்தியார் நேரடியாக சம்பந்தப்பட்ட மாணவனிடம் கேள்வி கேட்கும் பொழுது அவன் பதில் சொல்ல திணறுவான். இது போதாதா நம்ம வாத்தியாருக்கு உடனே ஒரு குச்சியை கையில் எடுத்து அந்த மாணவனை அடித்த கையோடு சிறந்த மாணவனையும் அடிப்பார். நண்பனுக்காக இவனும் அந்த அடியை வாங்கும் போது வகுப்பே சிரிக்கும். அந்த வாத்தியார் அன்று அடித்ததால் தான் அத்தனை மாணவ,மாணவியரும் சமூக அறிவியல் பாடத்தில் எழுபது சதவிதத்திற்கு மேல் பெற முடிந்தது. எல்லோரும் பள்ளி படிப்பை முடிக்கும் போது அந்த வாத்தியாரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அவர்களின் நன்றியை தெரிவித்தார்கள். இந்த சம்பவத்தை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்பளித்த படுகைக்கு என் நன்றி.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”