எனது பள்ளிகால நினவுகள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

எனது பள்ளிகால நினவுகள்

Post by சாந்திவி » Thu May 21, 2015 9:23 pm

நான் படித்தது 5ம் வகுப்புவரை ஒரு ஊரிலும் பிறகு வேரு ஊரிலும் . பெண்கள் மட்டும் படிக்கும்
பள்ளியில்தான் நான் படித்தேன் எந்தவித கவலைகளும் , பொறுப்புகளும் இல்லாத மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த பருவம்,. எங்கள் வீட்டில் படீப்பதற்கு ரொம்ப கட்டுபாடெல்லாம் இல்லை.
எங்கள் விருப்பதிக்கு படிப்போம், ஆனால் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிடுவோம்.
எங்கள் ஊரில் அடிக்கடி மழைபெய்யும். ஒரு சில நாட்களில் பள்ளி விடுமுறை விட்டு விடுவார்கள்
அப்பொழுது மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு ஓடிவருவோம். அம்மா திட்டினாலும்
கேட்பதிலை.
பள்ளிக்கு செல்ல மிகவும் பிடிக்கும். மாலையில் பள்ளிவிட்டவுடன் சிறிது நேரம் தோழிகளுடன்
விளையடிவிட்டுதான் வீட்டிற்க்கு வருவோம்.

பள்ளியில் சுற்றுலா சென்றதெல்லாம் நினைவிருக்கிறது. ஒரு தடவை பெங்களுர், மைசூர்
சென்றோம் . பிறகு பத்தாம் வகுப்பு படிக்கும்பொழுது திருச்சி, நாகபட்டினம் வேளாங்க்ன்னி
போனோம். அங்கு கடலில் விளையாடிய அனுபவம் மறக்கமுடியதாது.

கால சக்கரம் மூலம் மீண்டும் அந்த காலத்திற்கு சென்று வாழ ஆசையாக இருக்கிற்து.













ர்
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”