கடந்த கால பள்ளி நினைவுகள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

கடந்த கால பள்ளி நினைவுகள்

Post by Oattakaran » Mon Mar 12, 2012 5:35 am

வணக்கம் நண்பர்களே

என்னடைய பள்ளி நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மணதிற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது

நான் பிறந்தது படித்தது எல்லாம் எங்கள் ஊரில்தான்
மிகவும் நல்ல அமைதியான ஊர் நான் படித்தது எல்லாம் அரசு பள்ளியில்தான் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தான் பயின்றேன். அந்த நாட்களில் நான் பள்ளிக்கு செல்லும் பொழுது எனது தந்தை வீட்டில் ஆரஞ்ச் மிட்டாய் வாங்கி வைத்துக்கொண்டு தினமும் 5மிட்டாய் தருவார்கள். அதை என்னால் மறக்கமுடியாத நினைவுக்ள். என்னை தினமும் பள்ளிக்கு எனது தந்தைதான் கொண்டு விடுவார். நீங்கள் கேட்கலாம் எல்லரையும் அவர்கள் தந்தைதான் விடுவார் என்று அதற்கான காரணம் இறுதியில் நானே சொல்கிறேன்

எனக்கு பாடம் எடுத்த முத்தையா சார் என்னால் மறக்க முடியாது நான் படிக்காவிட்டாலும் என்னை ஐந்தாம் வகுப்பு வரை பாஸ் ஆக்கிவிட்டவர்.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நான் குருசங்கர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தான் பயின்றேன்.

ஆறாம் வகுப்பில் எனக்கு கணிதம் பாடம் எடுத்த இராஜேஸ்வரி டீச்சர் மற்றும் ஆங்கிலம் பாடம் எடுத்த பர்வதவர்த்தினி டீச்சர் அகிய இருவரையும் மறக்க முடியாது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை என்னை என் தந்தைதான் தினமும் பள்ளிக்கு கொண்டு செல்வார்.
அதன்பிறகு என் தம்பி ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு உறுதுனையாக இருந்து என்னை பள்ளிக்கு தினமும் கொண்டு சென்றவர்.

நான் எட்டாம் வகுப்பு வரை நன்றாக படிக்க மாட்டேன். ஒன்பதாம் வகுப்பு வந்தபிறகு தான் நான் முதன் முதலில் படித்து வகுப்பில் 9 Rank எடுத்தேன் எனக்கு பாடம் எடுத்த பாலகிருஷ்ணன் சார் என்னால் மறக்க முடியாது என்னை நன்றாக படிக்கவைத்தது அவர்தான் அதுமட்டும் அல்ல அவர் எனது தந்தையின் நெருங்கிய நண்பரும் கூட.

நான் ஓவியம் நன்றாக வரைவேன் ஓவியத்தில் பல பரிசுகளும் வாங்கியுள்ளேன். பத்தாம் வகுப்பும் நன்றாக படித்து நல்ல் மதிப்பெண் வாங்கினேன்.

+1,+2 நான் பக்கத்து ஊருக்கு சென்றுதான் படித்தேன் அந்த இரண்டு வருடங்கள் மட்டும் நான் விடுதியில் தங்கிதான் படித்தேன்.

அதன்பிறகு கல்லூரி நாசரேத் மர்காசிஸ் கல்லூரியில்தான் வணிகவியல் துறையில் பட்டம் பெற்றேன். வகுப்பில் கடைசி பெஞ்சில் தான் இருப்பேன் அதிகமாக சேட்டைகளும் உண்டு ஒரு தடவை வகுப்பில் விசில் அடிதது மாட்டிககொண்டேன் ஒரு வாரம் என்னை கல்லூரியில் அனுமதிக்கவில்லை நான் மட்டும் அல்ல எனது அருகில் இருந்த முன்று பேரும் மாட்டடிக்கொண்டார்கள். இதைத்தான் உயிர்காப்பான் தோழன் என்று சொல்வார்கள். அந்த காலங்களில் நாங்கள் நன்றாக படம் பார்த்தோம் ஆனால் இது எங்கள் வீட்டிற்கு தொரியாது. ஒரு வழியாக கல்லூரி படிப்பையும் முடித்தேன்.

அதன்பிறகு நான் தேசிய திரைப்பட கல்லூரியில் படத்தொகுப்பு (EDITING) முடித்தேன் ஆனால் தற்பொழுது சினிமா துறையில் இல்லை ஆனால் கன்டிப்பாக ஒரு நான் சாதிப்பேன் என்று உறுதியாக இருக்கிறேன். அன்று முதல் இன்றுவரை கடந்த ஐநது வருடங்களாக சென்னை வாசியாகவே அகிவிட்டேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கடந்த கால பள்ளி நினைவுகள்

Post by ஆதித்தன் » Mon Mar 12, 2012 7:43 am

உங்கள் பள்ளிகால அனுபவம் அருமையாக இருக்கிறது.

விடியோ எடிட்டிங்க் விரும்பி படித்துத் தெரிந்த நீங்கள், உங்கள் திறமை மறைந்து போகாமல் இருக்க, அவ்வப் பொழுது எங்களுடனும் உங்கள் எடிட்டிங்க் திறமையை காட்டுங்கள்.

நாளைய காலம் நமக்கானது.

நன்றி.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: கடந்த கால பள்ளி நினைவுகள்

Post by Oattakaran » Mon Mar 12, 2012 7:59 am

ஆதித்தன் சார் அவர்களுக்கு காலை வணக்கம் கண்டிப்பாக நான் எனது திறமையை நான் கண்டிப்பாக படுகையில் பதிவிடுகிறேன்
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”