என் பள்ளி நினைவுகள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

என் பள்ளி நினைவுகள்

Post by kselva » Wed Jun 11, 2014 11:23 am

எம் பள்ளி நினைவுகள் அவ்வப்போது மனதில் வந்து போகும். நினைத்து பார்ப்பதில் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி இளைந்தோடும் .இடைஇடையே ஆசிரியர் சொல்லிகொடுப்பதை வீட்டில் படிக்காமல் பள்ளி சென்று திட்டு வாங்கியதும் நினைவில் வந்து நிற்க்கும் .
எழுத்தில் வடிக்கும் பொழுது எதை விடுவது எதை எழுதுவது என்ற மயக்கம்,தயக்கம் மனதில் தோன்றி மறைகிறது .

1. முதல் வகுப்பு- கிருத்துவர்கள் ஆலயத்தில் தான் அப்பள்ளி இயங்கியது. ஆசிரியர் எனக்கு ஒன்றுவிட்ட தாத்தா முறை.வகுப்பறையில் ஒரே குறும்பு தான் , பள்ளிக்கும் வீட்டிற்க்கும் இருபது அடி தூரம் தான் , பெரும்பாலும் வீடு பள்ளி என்றே பள்ளி நேரத்தில் கூட இருப்பேன்.இரண்டாம் வகுப்பும் இதே போலத் தான் கழிந்தன.

2. மூன்றாம் வகுப்பு-சும்மா பள்ளி சென்று வருவேன் என்ன படித்தேன் என்று கூட ஞாபகம் இல்லை .பொழுது சாய்ந்தால் போதும் கண்ணாமூஞ்சி விளையாட்டு தான் :)

3. நான்காம் வகுப்பு- நல்ல ஆசிரியர் ; சொல்லிக்கொடுப்பதில் அப்படி ஓர் ஆர்வம் , நிறைய சொல்லி கொடுப்பார். கண்டிப்பானவர். அவர் சொல்லிக்கொடுப்பதை அடுத்த நாள் வீட்டில் படித்து வர வேண்டும் இல்லை என்றால் அடுத்த நாள் பெஞ்ச் மீது ஏறி நிற்க்க வேண்டி வரும். சில சமயம் அடிக்க கூட செய்வார். மிக அன்பாக பேசுவார். சிவந்த நிறமுடையவர். அழகானவரும் கூட.ஐந்தாம் வகுப்புக்கும் அவர் தான் . ஆங்கிலம் மிக அழகாக சொல்லி கொடுத்தார்.

4. ஆறாம்வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு- கணக்கு என்று வந்தால் இந்த வகுப்பு ஆசிரியர் தான் முதன் முதலில் ஞாபகத்திற்க்கு வருவார் . முகம் மங்களாக வந்து போகும் . கணக்கின் அடிப்படையே இவர் சொல்லி கொடுத்து தான் நான் அறிந்து கொண்டேன். நான் கணக்கில் சிறந்து விளங்க இவரே காரணம். அறிவியல் ஆசிரியையும் ஞாபகத்திற்க்கு வருபவர்.

5. எட்டாம் வகுப்பு- மிக அதிக நண்பகர்கள் ஏற்பட்டார்கள். காமிக்ஸ் அதிகம் படித்ததினால் உருவானார்கள். என்னிடம் ஓசி வாங்கிச் செல்வர். சனி மற்றும் ஞாயிற்று கிழைமைகளில் . எல்லா நண்பர்களும் என் வீட்டிற்க்கு வருவார்கள். பள்ளிக்குச் சென்று கபடி விளையடுவோம். குஷ்தி கூட விளையாடச் சென்றேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.அதனால் தான் என்னவோ பிற் காலத்தில் விளையாட்டு துறையில் (sports) ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்ததோ ?!. ஞாபகத்திற்க்கு வருபவர் கணக்கு ஆசிரியர் தான். மிக மகிழ்ச்சியான தருணம்.

6. ஒன்பது- வேறு பள்ளி அப்படி ஒன்றும் சொல்லிக்க ஏதும் இல்லை.

7. பத்து-பதினோன்று-பனிரெண்டு- நான் தமிழில் எழுதும் போது எழுத்துப்பிழை நிறைந்து காணப்படும் தமிழ் ஆசிரியையை மறக்க முடியாது. என் எதிர் வீட்டு நண்பர் கூட ஆசிரியர் தான் அவரும் எழுத்துப்பிழை நீங்க பயிற்சி அளித்தார்.

8. நான் பெற்ற கல்விக்கு ஆசிரியர்களின் உழைப்பு தான் காரணம் . வழிகாட்டியும் கூட. எப்போதும் ஞாபகத்திற்க்கு வருகின்றனர்.

9. I well come a commend from Mr ஆதி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என் பள்ளி நினைவுகள்

Post by ஆதித்தன் » Wed Jun 11, 2014 12:22 pm

நிறுத்தி நிதானமாக முழு விவரத்தினையும் எழுத ஆரம்பித்துவிட்டாலே இணையத்தில் வெற்றி என்பது எளிதுதான், அந்த வகையில் நீங்கள் மிக பிரமாதமாக செய்திருக்கிறீர்கள்.
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: என் பள்ளி நினைவுகள்

Post by kselva » Thu Jun 12, 2014 9:33 pm

Thanks Mr ஆதி . சிறு வயதிலும் இந்த வயதிலும், எனக்கு கடினமான ஒன்று கதைகள் எழுதுவது கதைகள் சொல்வது . " இது எனக்கு கடினமான பணி தான். " :amen:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”