என் பள்ளி என் நினைவுகள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

என் பள்ளி என் நினைவுகள்

Post by ரவிபாரதி » Tue Jun 03, 2014 6:54 pm

பள்ளிக்கூடம் போரதுனாலே சின்ன வயசுல எல்லோருக்கும் கொஞ்சம் கசக்கும், பயமா இருக்கும் ஆனால் புடுச்சு போச்சுனா அதுவே ஜாலி ஆயிடும் அப்படிதான் எனக்கும் ஆரம்பத்தில் இருந்துச்சு.


நான் மட்டும் இல்ல எல்லோருமே சின்ன வயசுல செமயா சேட்டை செஞ்சுருபிங்க.நானும் என்னொடய 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை சேட்டைக்கு பஞ்சமில்லை.

இதுல என் ஜாலியான நாட்களை மட்டும்தா சொல்வேன்.
என்னொடய கசப்பான கஷ்டமானத சொல்ல மாட்டன் ( வேறென்ன என்னொடய படிப்பு, எப்படி படுச்சனு எல்லாம் கேக்ககூடாது)

1-ஆம் வகுப்பு நான் படுச்சப்ப எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர் செல்வரானி டீச்சர்.
இவங்க ரொம்ப நல்ல நடத்துவங்க. அதோட நாங்க எங்க மதிய சாப்பாடை எங்க டீச்சரோட
உக்காந்து தான் சாப்புடுவோம்.
அப்புறமா நான் என் நண்பர்களோட விளையாட போய்ருவோம்.

2-ஆம் வகுப்பு படிக்கும் போது எங்க பள்ளிகூடத்துல சினிமாவுக்கு கூட்டிட்டு போனாங்க.
அப்பதா முதல் தடவை சினிமாவுக்கு போனேன்.அங்க செமயா என்ஞ்சாய் பன்னேன்.
இப்படியே 5ம் வகுப்பு வரை ஜாலியா போச்சு.

3ம்,4ம்,5ம் வகுப்பு வரை என் பக்கது ஊருல படுச்சன்.அப்ப என் ஊருல பள்ளிகூடம் எல்லாம் இல்லை.இப்போ கல்லூரி வரை எல்லாமே இருக்குது.
அப்ப இருந்ததுக்கு இப்ப எவ்வளவோ மாரிடுச்சு.

அடுத்ததா எங்க ஊருல ஆறாம் வகுப்பு சேர்ந்தேன்.அங்க எனக்கு புதுசா போரதுனால முதல் தடவை கொஞ்சம் பயம் இருந்துச்சு.
அப்புறம் போக போக பழகிபோச்சு.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது எங்க சார் எங்க ஊரு சந்தைக்கு
போய்ட்டு வந்து என் கிட்ட பையை உள்ள கொண்டு போய் வைக்க சொன்னாரு.
நான் அப்ப அந்த பயை உள்ள கொண்டு போய் வச்சுட்டு நானும் என் நண்பர்ளும்

எங்க சார் வெளிய போர வரை பாத்துகிட்டு\ இருந்தோம்

அவர் போனதுக்கு அப்புறம் நாங்க அவரு வாங்கி கிட்டு வந்த பழங்கள் எல்லாத்தையும் சாப்புடுகிட்டு இருந்தத பாதுகிட்டாரு.
அப்புறமா எங்களுக்கு விலுந்த அடி மரக்க முடியுமா? முடியவே முடியாது.

அப்புரமா எட்டாம் வகுப்பு கொஞ்சம் படிக்க ஆர்ம்பிச்சேன்.
அதுனலே அது எனக்கு அவ்வலோவா என்ஞ்சாய் பன்ன முடில.

அடுத்து நான் ஒன்பாதம் வகுப்பு விவேகானந்தா மேல் நிலை பள்ளில படிக்க வேண்டியதா போய்ருச்சு.
அந்த பள்ளி கூடத்துல எனக்கு படிக்கவே விருப்பம் இல்லை.எப்படியோ அடுச்சு புடுச்சு ஒரு வருசம் போயிருச்சு.
அதுக்கு அப்புறம் பத்தாம் வகுப்பு என்னோடைய பழைய பள்ளி கூடத்துக்கே வந்து சேந்தேன்.

என்னால் இந்த பத்தாம் வகுப்பை மறக்க முடியாத அளவுக்கு சந்தோசமா இருந்தோம்.
கடைசி இரண்டு மாசத்துல எல்லா ஆசிரியர்களும் பயிற்ச்சிக்காக வெளிய போய்ருந்தாங்க.அதுனலா படிக்காம எங்க குருப்
பாட்டு படுரது, பொனுங்களை கிண்டள் பன்ரதுனு ஜாலியா போயிருச்சு..

தேர்வும் வந்து முடுஞ்சுது.அதுக்கு அப்புரம் ஒரு மாசம் கழிச்சு 11 ம் வகுப்பு ஆரம்புச்சாங்க.11 ம் வகுப்புல நாங்கதான் முதல் செட் அதாவது அப்பதான் 11,12 ம் வகுப்பு ஆரம்புச்சாங்க.
11-ம் வகுப்பு 10-ம் வகுப்பை விட நல்லா போச்சு.
அடுத்த 12-ம் வகுப்புல எங்களுக்கு எல்லாம் பெரிய இழப்பு ஏற்ப்பட்டுச்சு.எங்களோட படுச்ச எங்கள் தோழி தமிழ்பிரியா வீட்டு சண்டைனால இரந்துட்டங்க.
அது எங்க எல்லோருக்கும் மறக்க முடியாத நினைவுகள் ஒன்று ஆகும்.
எங்க பள்ளி கூட வாழ்க்கையை சொல்லிகிட்டே போலாம்.

கடவுள் வரம் தரமாறி இருந்தா எனக்கு என் பள்ளி கூட வழ்க்கை ஒரு முறை வாழ வேண்டும் என்று கேட்பேன். :ros:

:great: :great:
இது உங்களுக்கு தான் இவ்ளோ நேரம் பொறுமயா இத படுசிங்கள அதுக்கு உங்கல பாராட்டியே ஆக வேண்டும். :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என் பள்ளி என் நினைவுகள்

Post by ஆதித்தன் » Tue Jun 03, 2014 7:03 pm

சிறப்பான நினைவு திறன், பொறுமையாக அதிக பத்திகள் எழுதும் திறன், கடைசியா வாசகர்க்கு நன்றி சொல்லும் பாங்கு,

நீங்க சீக்கிரம் கதையாசிரியர் கூட ஆகிவிடுவீர்கள் போலிருக்கு,

பாராட்டுகள்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”