புதையல் இரகசியம்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
kannan77
Posts: 34
Joined: Thu Mar 06, 2014 4:00 pm
Cash on hand: Locked

புதையல் இரகசியம்

Post by kannan77 » Thu Mar 20, 2014 2:21 pm

சின்ன வயசுல கத படிக்குறதுன்னா ரெம்ப இஷ்டம் .எங்க ஊர்ல அரசு நூலகம் ஒன்னு இருந்துச்சு .நான் நாலாம் வகுப்பு படிக்கும்போது நூலகம் போனேன்

முதன் முதலா போகும்போது அந்த நூலகர் என்னை வெரட்டி விட்டுட்டார்.நீயெல்லாம் பெரிய பையனா ஆனப்புறம் இங்கவா ன்னு சொல்லிட்டாரு.ரெம்ப ஏமாற்றமா இருந்துச்சு.கவலையோட படி இறங்கி (நூலகம் மாடியில்)வரும்போது எங்க அண்ணன் கூட படிச்ச தங்கமாரி ன்னு ஒரு அண்ணன் என்னை பார்த்தாரு.
"தம்பி என்ன இங்க சுத்திட்டு இருக்க ? வீட்டுக்கு போடா போய் படி ன்னு சொன்னாரு.நான் அவர் கிட்ட "அண்ணே எனக்கு சிறுவர் கதைகள் படிக்க ஆசையா இருக்கு ஆனா அந்த சாரு உள்ள விட மாட்டுக்காரு என்னை எப்பிடியாச்சும் உள்ள கூட்டிட்டு போங்கண்ணே னு சொன்னேன்

அந்த அண்ணனும்" சரி கூட்டிட்டு போறேன் அதுக்காக இங்கேயே இருக்க கூடாது கொஞ்ச நேரம் படிச்சுட்டு கெளம்பிரனும் என்ன ? அர மனசோட சரின்னு தலையாட்டிட்டு அவர் கூட மறுபடியும் மாடிப்படி ஏறுனேன் .

நேரே நூலகர் ட்ட போய்" சார் இந்த பையன் என் கிளாஸ் மேட்டோட தம்பி. புக் படிக்கணும்னு ஆச படுறான்.(அவர் நூலக உறுப்பினர் னு அப்புறம்தான் தெரிஞ்சது)கொஞ்சம் கெல்ப் பண்ணுங்க சார் னு சொன்னாரு. நூலகரும்" சரி தம்பி அமைதியா படிக்கணும்.இதுல ஒன்னோட பேரும் ஸ்கூல் பேரும் எழுதி கொடு ன்னு ஒரு நோட்ட குடுத்தாரு .நான் தங்கமாரி அண்ணனுக்கு நன்றி சொல்லிட்டு படிக்க போனேன்.

சரி கதைக்கு வருவோம் .....

ஒரு ஊர்ல கந்தசாமி ன்னு ஒரு வெவசாயி இருந்தாரு .அவரோட வீட்டம்மா பேரு குணவதி .பேருக்கேத்த மாதிரியே நல்ல குணம் கொண்ட மகராசி .மகிழ்ச்சியான அவங்க குடும்ப வாழ்க்க இருக்குற ரெண்டு மரக்கா வெதப்பாடு வயக்காட்ட வெச்சு ஓடிக்கிட்டு இருந்துச்சு.

ஒருநாளும் அவங்க வேல செய்ய வருத்த பட்டதே இல்ல .சோறு போடுற பூமிய தெய்வமா வணங்குனாங்க .அந்த பூமி நாச்சியாளும் அவங்கள கை விடல ..ஒன்னு போட்டா ஒம்போதா திருப்பிகுடுத்தா.

கந்தசாமி குணவதி தம்பதியினர்க்கு ரெண்டு ஆம்பள பசங்க .ஒருத்தன் பேரு மாட சாமி இன்னொருத்தன் முருகன் .ரெண்டு பேரும் நல்லா படிச்சாங்க .பசங்க பெரியவங்களா ஆனப்புறம் அப்பா ரெண்டு பேரையும் கூப்ட்டு "யப்பா முன்ன மாதிரி அப்பாவால வயல்ல வேல செய்ய முடியல .நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ஒத்தாச பண்ணுங்க "அப்படின்னு கேட்டாரு .

மூத்தவன் மாடசாமி "அப்பா வயல்ல வேல பாத்து குடும்பம் ஒட்டுனது உங்களோட போகட்டும்.நாங்க பட்டணம் போய் படிக்க போறேன்னு சொன்னான்.

இளையவன் முருகனோ ஒரு படி மேலே போய் "அப்பா நெலத்தை நல்ல வெல கெடச்சா வித்துட்டு அந்த காசுல இப்ப உள்ள காலத்துக்கு தகுந்த தொழில் செய்யலாம்"னு அப்பாவுக்கு யோசனை சொன்னான்.

மகன்கள் ரெண்டு பேரும் தன்னோட நெலத்துல விவசாயம் பண்ண மாட்டோம் னு சொன்னது அத உயிரா நேசிச்ச கந்தசாமிக்கு பேரிடியா இருந்திச்சு .அந்த அதிர்ச்சியிலே படுத்த படுக்கையா ஆயிட்டாரு.

தன்னோட மனைவிய கூப்புட்டு "ஏண்டி நம்ம புள்ளைங்க இனி மனசு மாற மாட்டாங்க .அவங்கள எதாவது பண்ணி மனச மாத்தி நம்ம நெலத்துல திரும்பவும் விவசாயம் பண்ண வைக்கணும் .உனக்கு எதாவது தோணுனா சொல்லு "அப்பிடின்னு கேட்டாரு .

குணவதி அம்மா "என்னங்க இப்பிடி செஞ்சா என்ன ?"அப்பிடின்னு தன் வீட்டுக்காரர் காதுல ஏதோ கிசுகிசுத்தாள் .

சரி அப்பிடியே செஞ்சுருவோம்னு கந்தசாமி யும் தலையாட்டினாரு.பசங்க ரெண்டு பேரையும் கூப்புட்டு தன் மனைவி சொன்ன அந்த ரகசியத்தை சொன்னாரு.

மாடசாமியும் முருகனும் ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டு என்னடா பண்ணலாம்னு யோசனை பண்ணுனாங்க.

கொஞ்ச வருஷம் கழிஞ்சி தன்னோட பசங்களையும் நெலத்தையும் நெனச்சு ஏங்கியே உசுர விட்டுட்டாரு.கணவர் இறந்த துக்கம் தாளாம குணவதியும் கண்ண மூடிட்டா ..

பெற்றோர பறிகுடுதுபுட்டு வருத்தத்தில் இருந்த ரெண்டு பேரும் அப்பா சொன்னத இப்போ முயற்சி பண்ணி பாத்தா என்ன? னு முடிவு பண்ணிட்டு வயலுக்கு கெளம்பினாங்க ஆளுக்கொரு மம்பட்டியும் கையுமா .....

...............

............

...........

............

இப்போ ரெண்டு பேரும் முழு நேரமா அந்த வயல்காட்டில் வேல செஞ்சு கிடைச்ச வருமானத்த பெருக்கி கல்யாணம் ஆகி தன்னோட குழந்த குட்டிகளோடு சந்தோசமா இருக்குறாங்க.

........

......

உங்க கிட்ட ஒரு கேள்வி .............................................................................

குணவதி அம்மா தன் கணவர் காதில் கிசுகிசுத்தது என்ன?அதுதான் இருவரின் மன மாற்றத்துக்கும் காரணம் .....


உங்கள் பதிலுக்காய் ... காதிருப்புகளுடன் கண்ணன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: புதையல் இரகசியம்

Post by ஆதித்தன் » Thu Mar 20, 2014 2:57 pm

புதையல் என்ற வார்த்தை அவர்களை கவர்ந்திழுக்கும் என்று கருதுகிறேன், ஆனாலும் குணவதி அம்மா, என்ன ட்ரிக்ஸ் பயன்படுத்தியிருப்பாங்க என்று தெரியலையே!!!


பாக்கெட்டை சுத்தமாக்கி, கையில மண்வெட்டியினையும், மனதினில் விரும்பும்(புதையல்-நிறைய பணம்) நம்பிக்கையும் விதைச்சிட்டுப் போயிருப்பாங்களோ என்று தோனுது.
User avatar
kannan77
Posts: 34
Joined: Thu Mar 06, 2014 4:00 pm
Cash on hand: Locked

Re: புதையல் இரகசியம்

Post by kannan77 » Thu Mar 20, 2014 9:51 pm

ஆதி சார் நீங்க சொன்னது ஓரளவு சரிதான் .குணவதி தன் கணவரிடம் சொன்னது...

"என்னங்க நம்ம பையங்கள இப்ப இருக்குற நிலையில் மம்பட்டிய எடுங்கடா னு சொன்னா செய்ய மாட்டானுக.அந்த வயலோட ஏதோ ஒரு இடத்துல ஒரு விலைமதிக்கமுடியாத ஒரு புதையல அதிக ஆழமில்லாம புதைச்சு வெச்சுருக்கேன்னு சொல்லுங்க.அத தேடி பாக்குறதுக்காக வயல தோண்டியோ உழுதோ பாப்பாங்க .நம்ம அந்த மண்ணை நேசிச்சது உண்மையா இருந்தா உழுது போட்ட மண்ணுல நிச்சயம் எதாவது விவசாயம் பண்ணுறதுக்கு வாய்ப்பு இருக்கு "னு சொன்னா .

பசங்க ரெண்டு பேரும் அப்பா சொன்ன மாதிரி உழுது பாத்தாங்க.புதையல் கெடைக்கல .சரி வயல உழுதாச்சு ...கொஞ்சம் கீர வெதைய வெதப்போம் னு முடிவு பண்ணினாங்க .வெளைச்சலும் அமோகமாக இருந்துச்சு .நல்லா வியாபாரம் ஆச்சு .அப்புறம் தான் ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டாங்க அப்பா மூடி வெச்ச புதையல் அமோக வெளைச்சல் கொடுத்த மண் தான்னு....

பொன்னான பூமியாத்தா தன்னால தர மாட்டா

வேர்வ வெதச்சு வச்சா வெறுங்கையா விடமாட்டா ....

---கவிப்பேரரசு வைரமுத்து--------
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”