பட்டை தீட்டிய பட்டறை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
kannan77
Posts: 34
Joined: Thu Mar 06, 2014 4:00 pm
Cash on hand: Locked

பட்டை தீட்டிய பட்டறை

Post by kannan77 » Wed Mar 19, 2014 1:11 pm

ஸ்ரீ உலகா நடுநிலைப்பள்ளி கடையநல்லூர்

ஒட்டுமொத்த சேட்டைகளின் உருவமாய் சுற்றி திரிந்த நான் திடீரென்று ஒருனாள் நாடு கடத்தப்பட்டேன் பள்ளி என்னும் சிறைக்கு.பின்னாளில் அதுதான் என்னை பட்டை தீட்ட போகும் பயிற்சி களம் என்று தெரியாது அப்போது.

இடது கை பழக்கம் கொண்டவர் என் முதல் தமிழாசான் திரு ராமசாமி .முதல் வகுப்பில் பயத்தோடு அமர்ந்த என்னை இனம் புரியா பாசத்தோடு அரவணைத்த அன்னை அவர்.

ஆனா ....ஆனா....ஆனா......

ஆவன்னா...... ஆவன்னா...ஆவன்னா என ராகத்தோடு அவர் கற்று கொடுத்த போது வந்தது தமிழ் மீது முதல் காதல்.

சிறைகூடத்தில் சிறகு விரிந்தது..சுமையாய் இருந்த பை சுகமானது...அம்மா ...ஆடு...இலை தினமும் கனவில் வந்து களிப்பூட்டியது

இருண்ட கரும்பலகையில் தெரிந்தது முதல் வெளிச்சம்.கல் சிலேட்டில் வலது ஓரத்தில் தொடங்கி இடது கீழ்ப்புறம் முடிந்தது முதல் அ

இரண்டாம் வகுப்பில் சங்கரலிங்கம் சார் ..சாப்டியலிங்....எழுதுநியாலிங்...என ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் லிங்க் வைப்பார் சுருக்கமா அவர் பேரு ஏலிங் சார்.

மூன்றாம் வகுப்பில் தான் ஆங்கிலமும் கணக்கும் அறிமுகம்..பெரியசாமி சாரின் பிரம்பும் கனத்த உருவமும் கட்டை குரலும் பயத்தை ஏற்படுத்தியது மட்டும் நிஜம்.

அறிவியல் ஆங்கிலம் இரண்டுக்கும் ராமகிருஷ்ணன் சார்.மிக எளிமையால் எல்லா பாடங்களும் மனதில் உடனே பதியும்.

படிப்பில் ஆரம்பம் முதலே படு சுட்டி .நான்காம் வகுப்பில் தேடி வந்தது மாணவர் தலைவன் பதவி.அதாங்க லீடர் .யூனிபார்ம் அப்போ தான் ஆரம்பம்.வெள்ளை சட்டையும் காக்கி டவுசரும் தான்.மானம் காத்த எம் ஜி யாருக்கு நன்றி.(இலவச சீருடை தந்ததால்)

அப்புறம் ஐந்தில் சுப்பையா சார் .என் கையெழுத்தை அழகாக்கிய மந்திரவாதி அவர் தான் .இரட்டை கோடு நோட்டில் தமிழுக்கு பயிற்சியும் நான்கு கோடு நோட்டில் ஆங்கில எழுத்து பயிற்சியும்.இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் என்னை பட்டை தீட்டியது அந்தப் பயிற்சி களம் .

மாணவர் தனித்திறமை வளர்க்க வெள்ளிக்கிழமை கடைசி பீரியட் மாணவர் மன்றமாய் மாறியது.என்னை அதன் செயலாளராய் ஆக்கி அழகு பார்த்தார் என் தமிழாசான் திரு இராஜகோபால் சார்.ஒவ்வொரு வார தலைப்புகள் அவரிடம் இருந்தே வரும் (நான் விரும்பும் தலைவர் .ஆறு தன் வரலாறு கூறல்,நான் முதலமைச்சரானால் இப்படி நீளும் அந்தப் பட்டியல்)முதன்முதலாக அத்தனை மாணவர் முன்பும் நின்று பேசியபோது நடுக்கத்தில் கை கால் உதறல் எடுத்தது தனிக்கதை.

நினைவு கூற தக்கவர்கள் இன்னும் நிறையப்பேர் கல்யாணி டீச்சர்,நீதி நெறி போதித்த சுசீலா டீச்சர் ..கைத்தொழில் சுப்பையா சார்

பேச்சு திறமைகளை வளர்த்து கொண்டதால் ஏழாம் வகுப்பு படிக்கும்போது நெல்லை வானொலியில் சிறுவர் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றேன் .பின்னாளில் ஹெட் மாஸ்டர் சுந்தர் சாரோடு தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி ஒரு உரை சித்திரம் நிகழ்ச்சியிலும் பங்கேற்றேன்;

எட்டாம் வகுப்பில் வைத்து ஒரு சம்பவம் . மணி என்னும் ஒரு சார் (புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்தார்) ஒரு பையனிடம்" போய் பெரிய வகுப்பு பையன் யாரிடமாவது ரெட் கலர் பேனா வாங்கிட்டு வா " என அனுப்ப அவன் நேராக என்னிடம் வந்து கேட்டான் குறும்பின் உச்சமாய் நான் அந்தப் பையனிடம் சார வெரல அறுத்து எழுத சொல்லு என விளையாட்டாய் சொல்ல பையனும் அட்சரம் பிசகாமல் அப்படியே சொல்லிட்டான் .நேரே என்னிடம் வந்து சார் என் காதை திருகி ஹெட் மாஸ்டர் ரூமுக்கு கூட்டிட்டு போய் நாள் முழுக்க முட்டி போடா வைத்துவிட்டார் .ஒரு வெள்ளை பேப்பரில் இருநூற்று ஐம்பது முறை இனிமேல் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்று இம்போசிசனும் எழுதி கொடுத்தேன்.


பின்னொரு சந்தர்ப்பத்தில் மீதி சம்பவங்கள் சொல்ல முயற்சிக்கிறேன் ..
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”