என் வாழ்க்கை என் பள்ளி.............

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
sabura
Posts: 6
Joined: Wed Feb 26, 2014 9:33 pm
Cash on hand: Locked

என் வாழ்க்கை என் பள்ளி.............

Post by sabura » Sun Mar 02, 2014 11:32 pm

என் பள்ளி வாழ்க்கையை சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.... அவ்வளவு இனிமையான நினைவுகளை கொண்டது. நான் படித்தது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தஞ்சையில் தான். என் பள்ளி முழுவதும் பெண்களை கொண்ட பெண்கள் பள்ளி. அனைவரும் சமமாக மகிழ்சியாக படிக்கும் திறமையை வளர்க்கும் இடமாக என் பள்ளி இருந்ததது.

அனைவரும் சமம் என்ற நோக்கத்தோடு அனைவரும் தோழிகளாக சகோதர சகோதரிகளாக பழகி வாழ்ந்தோம். என்னுடைய ஆசிரியர்கள் அனைவரும் நல்ல பொறுப்புடன் தாரமான கல்வியை கற்றுக் கொடுத்தனர்.

பள்ளியை பொறுத்தவரை நான் நன்றாக படிக்கும் நல்ல பிள்ளை என்பதால் அங்கு உள்ள அனைவரிடமும் நல்ல மதிப்பு எனக்கு உண்டு. என் பள்ளியில் அனைவரும் பெண்கள் என்பதால் அதிகமான அரட்டை அதிகமான பேச்சு அதிக வால்தனங்கள் எல்லமே உண்டு.

ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டே இருக்கும் போதே நாங்கள் திருட்டுத் தனமாக வகுப்பின் பின் பக்கம் அமர்ந்து புளிமாங்காய் இழந்தை பழம் சாப்பிட்ட கதையெல்லாம் உண்டு. அதனால் மறுபடியும் பள்ளி வாழ்க்கை கிடைக்க உங்க எல்லோர் மாதிரியும் நானும் எங்குகிரேன்.

அதற்கு அப்புறம் மேற்படிப்பு படித்தது சென்னையில் தான். அங்கும் விளையாட்டு தனதிற்க்கும் படிபிற்க்கும் எந்த குறைசலும் இல்லை. புது பள்ளி புது வாழ்கை புது நன்பர்கள் எல்லாமே புதுசு, நான் மிகவும் மகிழ்சியாக இருந்த பள்ளி நாட்களை மறக்க முடியாது,

பள்ளி நாட்கள் எல்லோருக்கும் அருமையாக கிடைகாது. அதே சமயம் பள்ளி நாட்கள் போனால் மீண்டும் கிடைக்காது. :great: :ro:

அந்த பள்ளி நாட்கள் மீண்டும் கிடைத்தால் நாம் அனைவரும் கண்டிப்பாக பூச்செண்டு கொடுத்து வரவேற்போம் அல்லவா? :ros: :azh: நிச்சயமாக...................
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”