குரங்கும் முதலையும்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
A.Ganesan
Posts: 7
Joined: Wed Feb 12, 2014 6:08 pm
Cash on hand: Locked

குரங்கும் முதலையும்

Post by A.Ganesan » Tue Feb 18, 2014 2:53 pm

ஒரு நாள் காட்டில் குரங்கு நாவல் மரத்தில் இருந்து பழங்களை சாப்பிட்டு கொண்டிருந்தது. அந்த மரத்தின் கீழே ஒரு முதலை பசியால் சோர்வாக இருந்ததை பார்த்தது. உடனே மரத்தில் இருந்து ஒரு சில பழங்களை பறித்து முதலையின் அருகில் போட்டது. முதலை சப்தம் கேட்டதும் எழும்பி பார்த்தது. பழங்கள் அருகில் கிடப்பதை பார்த்து பழங்களை உண்டு மகிழ்ந்து பசியை போக்கிக் கொண்டது . இதுபோல் ஒருசில நாட்கள் நடந்தது. இருவரும் நல்ல நண்பர்களாக மாறினார்கள். ஒரு நாள் முதலை குரங்கிடம் எனது மனைவிக்கும் சிறிது பழங்களை பறித்து போடு என்றது. உடனே குரங்கும் பழங்களை பறித்து போட்டது. அந்த பழங்களை எடுத்துக்கொண்டு தன் மனைவியிடம் கொண்டு கொடுத்தது. முதலையின் மனைவி அந்த பழங்களை சாப்பிட்டுவிட்டு இதை யார் கொடுத்தது என்று கேட்டது. அதற்கு எனது நண்பர் கொடுத்தார் என்றது. பழங்கள் மிகவும் சுவையாக இருகிறதே இந்த பழங்களை தினமும் சாப்பிடும் உங்கள் நண்பரின் ஈரல் எவ்வளவு சுவையாக இருக்கும் என்றது. இதைக் கேட்ட முதலை நண்பரான குரங்கை தனது வீட்டில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறோம் எனது மனைவி உன்னை அழைத்து வரும்படி சொன்னாள் என்று குரங்கை அழைத்தது. குரங்கும் தனது நண்பன்தானே என்று ஒத்துக்கொண்டது. மறு நாள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர் வழியில் ஒரு பெரிய ஆறு ஒடிகொண்டிருந்ததை கண்ட குரங்கு என்னால் இந்த தண்ணீரில் நீந்த முடியாது எனக்கு நீச்சல் தெரியாது என்றது. உடனே முதலை நண்பா நான் இருக்க உனக்கு என்ன பயம் என் முதுகில் ஏற்றி நான் உன்னை கொண்டு செல்கிறேன் என்று சொன்னது முதலை சரி என்றது குரங்கு. இரண்டு பேரும் ஆற்றின் நடு பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது முதலை தன் மனைவி தன்னிடம் சொன்னதை குரங்கிடம் சொன்னது. நண்பா உனது ஈரலை எனது மனைவி சாப்பிடுவதற்கு மிகவும் ஆவலாக காத்துகொண்டிருக்கிறாள் என்றது முதலை. இதைக்கேட்ட குரங்கு மிகவும் அதிர்ச்சி அடைந்தது இருந்தாலும் அதை வெளிபடுததாமல் நண்பா எனது ஈரலை மிகவும் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று நாவல் மரத்தில் வைத்து விட்டு வந்துவிட்டேன். வா இருவரும் போய் எடுத்துவந்து உனது மனைவிக்கு கொடுப்போம் என்றது குரங்கு. அதை கேட்ட முதலை வா ஈரலை எடுத்து வருவோம் என்று குரங்கை கரைக்கு கொண்டு வந்தது. உடனே குரங்கு மரத்தில் ஏறி முதலையை பார்த்து அட முட்டாள் நண்பா யாராவது ஈரலை மரத்தில் வைத்து விட்டு உயிர் வாழ முடியுமா. எனது உயிரை பறிக்க நினைத்த நீயெல்லாம் ஒரு நண்பனா என்று முதலையை திட்டியது. குரங்கு தனது அறிவை சரியான நேரத்தில் பயன்படுத்தி உயிர் பிழைத்தது. இந்த சிறுகதையில் இருந்து நண்பர்களை தேர்வு செய்யும் போது நல்லவர்களாய் பார்த்து பழகவேண்டும். நன்மையை செய்யவேண்டும். நன்றி
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”