எனது பள்ளி கால மலரும் நினைவுகள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
N. Uma
Posts: 7
Joined: Mon Jan 06, 2014 1:24 pm
Cash on hand: Locked

எனது பள்ளி கால மலரும் நினைவுகள்

Post by N. Uma » Mon Jan 27, 2014 8:06 pm

என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷகமான தருணங்கள்!
நான் தூத்துகுடியில் இருந்து படித்து வந்த எனது பள்ளி நாட்கள் மட்டுமே.
நான் தூத்துகுடி 2ம் கேட் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 5 வரை படித்தேன். படித்த ஆசிரியர்களின் பெயர்கள்
ஞாபகம் இல்லை. ஆனால் நான் 3வது படிக்கும் போது எனது வகுப்பு ஆசிரியர் திரு. முருகன் அவர்களை மட்டும் நன்றாக நினைவு உள்ளது. அதற்கு காரணம் நான் 3வது படிக்கும் போது எனது வகுப்பு ஆசிரியர் திரு. முருகன் அவர்கள் நான் ப்ரேயரில் படிக்கும் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ்தாய் வாழ்த்து பாடல்களை கேட்டு எனது குரல் நன்றாக உள்ளது என்று என்னை ஒரு பாட்டு ஆசிரியரிடம் பாடல் கத்து கொடுக்க சொன்னார்கள். அவரிடம் பாடல் பயின்று தூத்துகுடி நகராட்சி அலுவலக்த்தில் வைத்து நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பாரதியின் காக்கை சிறகினிலே நந்தலாலா பாடலை பாடினேன். பாடலுக்கு எனக்கு முதல் பரிசு கிடைத்தது. எனது வகுப்பு ஆசிரியர் திரு. முருகன் அவர்கள் எனக்கு ஒரு பாக்கெட் சாக்லேட் வாங்கி தந்தார். இன்றும் என் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
அதன் பின்பு நான் விக்டோரியா மகளிர் மேல் நிலைப் பள்ளியில் 6 முதல் 10 வரை படித்தேன். அது வரை படிப்பை ஒரு விளையாட்டாக நினைத்த நான் அதன் பின்பு நன்றாக படிக்க ஆரம்பித்தேன். எனது 9ம் வகுப்பு ஆசிரியர் திருமதி. பத்மாவதி அவர்கள் எனக்கு அறிவியலையும், ஆங்கிலத்தையும் நன்கு கற்பித்தார். எனது பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை நீ முதல் வருடமா அல்லது இரண்டாவது வருடமா என்று கேட்பார். அந்த அளவிற்கு நான் படிப்பில் படு சுட்டியாக
இருந்தேன். 10ம் வகுப்பில் நான் 457 மார்க் வாங்கி நல்ல பெயர் எடுத்தேன்.
அதன் பின்பு எனது தந்தை கோவில்பட்டிக்கு மாற்றலாகிவிட்டார். நான் இங்கு வந்துவிட்டேன். இங்கு வந்த பிறகு எனது தந்தையாருக்கு பக்கவாதம் வந்து வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் நான் ஒரு டயர் கம்பெனியில் கணக்கு எழுதும் வேலைக்கு மாதம் ரூபாய் 250/-க்கு சென்றேன். வேலை பார்த்த இடத்தில் எனது முதலாளி திரு. செலஸ்டின் எனக்கு படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினை பார்த்து என்னை 11, மற்றும் 12ம் வகுப்பு டுட்டோரியலில் பார்ட் டைமாக படிக்க வைத்தார். 12ம் வகுப்பிலும் நான் நல்ல மதிப்பென் பெற்ரறேன். அதனால் என்னை மேலும் பி.காம் படிக்க வைத்தார். இப்படியாக எனது பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிவுற்றது.
எனக்கு பழைய நினைவுகளை ஞாபகபடுத்தியதற்கு மிக்க நன்றி !
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”