என் பள்ளி காலம்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Lathamnm
Posts: 7
Joined: Fri Jan 24, 2014 10:46 am
Cash on hand: Locked

என் பள்ளி காலம்

Post by Lathamnm » Mon Jan 27, 2014 3:30 pm

நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சென்னையில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி பள்ளிக்கூடத்தில் தங்கி படித்தேன்.மானாமதுரைக்கும் சென்னைக்கும் நீண்ட தூரம் என்பதால் என் பெற்றோரால் அடிக்கடி வந்து பார்க்க முடியாது. :nabi: இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை எனது பள்ளி வாழ்க்கை சந்தோஷமாக செல்லவில்லை.ஆனால் 6 முதல் 12 வரை எனது ஊரில்,எனது பெற்றோருடன் இருந்ததால் பள்ளி படிப்பு மிகவும் சந்தோஷமாக சென்றது.
6 முதல் 12 வரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன்.வீட்டில் இருந்து ரிச்சாவில் தான் பள்ளிக்கூடத்திற்கு செல்வேன்.வகுப்பறையில் எனக்கு மட்டும் தனி நாற்காலி போடுவார்கள், மற்ற மாணவிகள் அனைவரும் கீழே அமருவார்கள்.நான் நன்றாக படித்ததால் ஆசிரியர்கள் அனைவரும் என்னிடம் அன்பாக பழகுவார்கள்.

என் வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவிகளும் நண்பர்கள் தான்.என்னால் ஓடி ஆடி விளையாட முடியாது என்பதால் ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம்.இதனால் பள்ளியில் நடைபெறும் ஓவியப் போட்டியில் கலந்து பரிசுகள் நிறைய வாங்கியுள்ளேன்.

வீட்டில் இருந்து பள்ளிகூடத்திற்கு ரிச்சாவில் செல்லும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆனால் சீக்கிரம் இந்த பள்ளி வாழ்க்கை முடிந்துவிடுகிறது.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”