நீங்காத நினைவுகள்!!!

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
PONN.SIVA
Posts: 12
Joined: Fri Jan 03, 2014 2:02 pm
Cash on hand: Locked

நீங்காத நினைவுகள்!!!

Post by PONN.SIVA » Sat Jan 25, 2014 8:29 pm

கல்விக்கூடம் !!!
எமக்கு கலை கற்றுத் தந்த பள்ளிக்கூடம்!!!
மழலைப் பருவம் முடிந்த பின்னர்
மடிமேல் எம்மை சுமந்த கூடம் !!
அது ஆலங்கோட்டை பள்ளிக்கூடம்!!!
அன்பின் அடையாளம் அறிவியல் ஆசிரியை
அவர்தம் பெயர்தான் புஷ்பம் ஆசிரியை !!!
அறிவின் அடையாளம் ஆங்கிலம் ஆசிரியர்
அவர்தம் பெயர்தான் ஜோசப் பெர்ணான்டஸ்
மீசை முறுக்கும் வரலாறு ஆசிரியர்
அவர்தம் பெயர்தான் சிவதாணு
கண்டிப்புக்கு கரை கண்ட கணித ஆசிரியை
அவர்தம் பெயர்தான் மூக்கம்மாள்
தன்மைக்கு உதாரணம் தமிழ் ஆசிரியை
அவர்தம் பெயர்தான் ஜான்சிபாய்.
நல்லாசிரியர்கள் நீங்கள் அன்றோ
நினைவால் உம்மை தொழுகின்றேன்.
எங்கள் பள்ளி வாழ்வதனில்
எல்லாம் உண்டு !! எதுதான் இல்லை?
போட்டிகள் உண்டு - பொறாமைகள் இல்லை
நண்பர்கள் உண்டு - பகைவர்கள் இல்லை
கண்ணியம் உண்டு - கவலைகள் இல்லை
பந்தயங்கள் உண்டு - பரிதாபம் இல்லை
இதுவே எங்கள் தொடக்கப்பள்ளி-
என்றும் நினைவுகள் தொடரும் பள்ளி!!!
.....என்றும் உங்கள் "கல்வை சிவா".....
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”