அக்பர் பீர்பால் கதைகள் – பீர்பாலின் புத்திசாலித்தனம்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
NRMkrishna
Posts: 34
Joined: Wed Jan 15, 2014 2:23 pm
Cash on hand: Locked

அக்பர் பீர்பால் கதைகள் – பீர்பாலின் புத்திசாலித்தனம்

Post by NRMkrishna » Thu Jan 16, 2014 5:56 pm

பீர்பாலின் புத்திசாலித்தனம்
பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்துவிடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின்அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது.
அதனால ஒரு கடிதத்துல, “மேன்மைதாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள்பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒருகுடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு“, தூதன் மூலமா அக்பருக்கு அனுப்பினாருகாபூல் அரசர்.
கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, அரண்மனையை சுற்றி வளம் வந்தார். அக்பர் முகம் குழப்பத்தில் இருப்பதை பீர்பால் கண்டார். பீர்பால் அக்பரிடம் சென்று இதுபற்றி வினவினார்.

அக்பர் கடிதத்தை பீர்பாலிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை படித்தார் பீர்பால்.

பீர்பால் நீண்ட சிந்தனைக்கு பிறகு, அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம்அனுப்புவதாக பதில் எழுதுமாறு சொன்னார்.

அப்புறம் அக்பர், பீர்பாலிடம், ஒருகுடம் அதிசயம் எப்படி அனுபுவிர்? என்று விசாரிச்சாரு.

அதுக்கு பீர்பால், மூன்று மாதம் கழித்துஅந்த அதிசயத்தைப் பாருங்களேன்.

பீர்பால் யோசித்துக்கொண்டே அவர் வீட்டிற்க்கு புறப்பட்டார்.

பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தைஎடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்தபூசணிப்பிஞ்சு ஒண்ணை கொடியோட மண்குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினாரு.
நாளாக நாளாக பூசணிப் பிஞ்சுகுடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும்கத்தரித்து விட்டார் பீர்பால்.

இப்போ அந்தக்குடத்தை அக்பரிடம்காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும்பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள்இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தாய்?
பீர்பால்அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தைஅப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம்னு அனுப்ப சொன்னார்
அக்பர் தூதன் மூலமாக ஒரு கடிதத்தையும் அந்த குடத்தையும் அனுப்பினார்.
கடிதத்தை காபூல் அரசன் பிரித்து படித்தார். அதில் “நீங்கள் கேட்டது போலவே ஒரு குடம் அதிசயத்தை அனுபிருக்கேன்.” என எழுதிருந்தார்..
குடத்தின் மேல் இருந்த உரையை பிரித்தார் காபூல் அரசன்! அவரால் அதை நம்ப முடியவில்லை. காரணம் குடத்தின் வாயோ சிறியது. அதற்குள் எப்படி பெரிய பூசணிக்காய் வைத்தார் என்று அவருக்கு புரியவில்லை. அன்று இரவு முழுவதும் இதையே நினைத்துக்கொண்டு இருந்தார்.
அடுத்த நாள் காபூல் அரசன் விஜய நகரம் புறப்பட்டார்.
காபூல் அரசன் இரண்டு நாட்களுக்கு பின்னர் விஜய நகரத்தை அடைந்தார். அவர் அக்பரிடம் சென்று விசாரித்தார். அதற்க்கு அக்பர் இதை நான் சொல்வதை விட பீர்பால் சொன்னால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். வேலையாட்களிடம் பீர்பால்பற்றி வினவினார் அக்பர். அதற்கு அவர்கள் பீர்பால் பயிற்சி குடத்தில் இருப்தாக கூறினர்.
சிறிது நேரத்திற்கு பிறகு அக்பர் மற்றும் காபூல் அரசன் இருவரும் பயிற்சி குடத்திற்கு சென்றனர். அங்கே பீர்பாலை சந்தித்தனர். பீர்பாலும் அதை எவ்வாறு செய்தான் என்று விளக்கினார்.
அதைக் கேட்ட காபூல் அரசன் பீர்பாலோட புத்திக்கூர்மையை எண்ணி வியந்தாராம்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”