பொங்கல் வாழ்த்துக்களுடன்... நுனி கரும்பு சுவை (பள்ளி நினைவுக

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Mutharasu
Posts: 10
Joined: Sat Sep 08, 2012 7:16 pm
Cash on hand: Locked

பொங்கல் வாழ்த்துக்களுடன்... நுனி கரும்பு சுவை (பள்ளி நினைவுக

Post by Mutharasu » Tue Jan 14, 2014 8:44 pm

அன்னாச்சி... பொங்கல் வாழ்த்துக்கள்..
யாருலே அது? அட முத்தரசா...? வாலே... வா... வாழ்த்துக்கல்லே...
என்ன பெரிய அண்ணாச்சி... ஏதோ சிந்தனைல இருக்குற மாதிரி இருக்கு..
அதுவாலே... இந்த மாதிரி பொங்கல் அன்னைக்கு நான் படிச்ச அந்த படுக்கபத்து ஸ்கூல் ஞாபகம் வந்துட்டு. அன்னைக்கு அந்த ஸ்கூல்ல நாங்க கொண்டாடுனத இப்ப நெனச்சாலும் சந்தோஷமா இருக்குலே..
அண்ணாச்சி... ஸ்கூல் லைப்னாளே அது தனி சுகம்தானே.. இப்போ நீங்க கடிக்கிற கரும்புள நுனி கரும்புதானே தனி ருசி. அது மாதிரிதான்னே. அந்த லைப்பும்... நீங்க சொன்ன மாதிரி எனக்கும் அந்த பழைய நினைவுகள் நெனப்பு வந்துட்டுன்னே...
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் துவக்க பள்ளில என் அரிச்சுவடி ஆரம்பமாச்சி... எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் அப்படிம்பான்கல்லா.. அதே மாதிரி முதல் வகுப்புல எனக்கு எழுத்தறிவிச்சது பத்மா டீச்சர்தான்... அந்த டீச்சர நான் இப்ப பாத்தாலும், எனக்குள்ள ஒரு மரியாத கலந்த பக்திதான் வரும்னே. நான் படிக்கிறப்ப எங்க ஊருல எல்.கே.ஜி., யு.கே.ஜி., அதெல்லாம் கிடையாதுன்னே.. தமிழ்தான் முதல் ஆரம்பம். அதனாலதான் தமிழ்ல நாம ஸ்ட்ராங்கா இருக்கோம்.
அப்புறம் 2வது வகுப்பு எடுத்தது.. ஈஸ்வரம் டீச்சர். பக்கத்துக்கு வீடுதான். அதனால என் மேல அவங்களுக்கு தனி பாசம் உண்டு. அப்பவே பள்ளி ஆண்டு விழா, பெற்றோர் ஆசிரியர் தின விழா இப்படி எந்த தினம்னாலும் முதல் வகுப்புல இருந்து 5வது படிக்கிற வரைக்கும் ஆடல், பாடல், நாடகம்னு என்னையும் என் தோழன் அருள் அப்படின்ற பையனயும் கண்டிப்பா எங்க வேணும்னாலும் கூட்டிட்டு போய்டுவாங்க. நாங்களும் அத சிறப்பா பண்ணிடுவோம். அதனால ஸ்கூல்ல நல்ல பேரு. 3வது லலிதா டீச்சர். ஆங்கில எழுதுக்கள அறிமுகம் செஞ்சி வச்சது அவங்கதான். கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி. நானும் ஜெகன்னு ஒரு ப்ரெண்டும் கிளாஸ் கட் அடிச்சி ஓடிப்போயிடுவோம். தப்பா நெனக்காதீங்க அண்ணாச்சி. கட் அடிச்சாலும் நாங்க பக்கத்துல இருக்குற வாசக சாலை போயி புத்தகங்கள தின பத்திரிக்கைகள இத படிச்சி நேரம் கடத்திட்டு வந்திடுவோம். அப்புறம் 4வதும், 5வதும் பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிஹர புத்திரன் சார்தான் எடுத்தாரு.
6வது, 7வது, 8வது பக்கத்துல இருந்த குமரகுருபரர் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளில ஆரம்பிச்சேன். அங்க ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு ஆசிரியர். வித்தியாசமா உணர ஆரம்பிச்சேன். ஒவ்வொருதர்கிட்டயும் நல்ல பேரு எடுக்குறது கஷ்டமா இருந்துச்சி. 2 பேருகிட்ட நல்ல பேரு. அடுத்த 2 பேருகிட்ட கேட்ட பேரு. இருந்தாலும் இதெல்லாம் கொஞ்ச நாள்தான். அறிவியல் வாத்தியார் தாமஸ் வாத்தியார்ட பேரு வாங்கினேன். அப்புறம் தினசரி செய்திகளோட முக்கிய நிகழ்வுகள பள்ளியில என்னிய மேடை யில படிக்க வச்சி என்னைய பள்ளி முழுவதும் வரலாற்று ஆசிரியர் முத்திரை பதிக்க வச்சாரு. மறக்கவே முடியாதுன்ன.. 6, 7, 8 மூனு வருஷமும் நான்தான் வகுப்பு முதல் மாணவன்.
இந்த சின்ன ஊருல சின்ன ஸ்கூல்ல இருந்து பேரு வாங்குறத விட பெரிய ஸ்கூல்ல பையன படிக்க வச்சா மிக சிறந்த மாணவனா பையன் வருவான்னு நெனச்சு எங்க அப்பா 9, 10, 11, 12 வகுப்புகள நாசரேத் மர்காஷியஸ் பள்ளில விடுதில தங்கி படிக்கிற மாதிரி அனுப்பிச்சிட்டார். ஆனா அது நேர் மாற ஆகிட்டுன்னெ.. விடுதில இருந்ததால படிக்கிறதுக்கு பதிலா பாசத்த தேட ஆரம்பிச்சிட்டேன். பாதை சுத்தமா மாறி போச்சி. 11, 12 படிக்கும் பொது தமிழ் வாத்தியார் மாமல்லன் அப்புறம் முருகன் சார். அது வரைக்கும் தமிழ ஒரு பாடம்னு நெனச்சிதான் படிச்சிட்டு இருந்தேன். ஆனா அது ஒரு அதிசயம், தமிழ் ஒரு பொக்கிஷம்... அப்படின்னு சொல்லி தமிழ் மேல காதல வர வச்சது அவங்கதான். பிறகு செய்துங்கநல்லூர்னு பக்கத்துல இருக்குற ஊர்ல டிப்ளமோ இன் மெக்கானிகல் எஞ்சினீரிங் படிச்சேன். ஆனா அந்த கல்லூரி நாள் சந்தோசத்த விட இந்த பள்ளிக்கூட நெனப்புதான்னே மறக்க முடியாத நினைவுகளா இருக்கு.

அண்ணே... நா ரொம்ப போர் அடிக்கிறேன் போல... உங்களுக்கு கொட்டாவி வருது. சாரிண்ணே. பள்ளிக்கூட நெனைவுகல ஞாபக படுத்திட்டீங்க.. நானும் கொட்டிட்டேன். ரொம்ப நாள் கழிச்சி, அந்தந்த வகுப்புக்குள்ள போயி உக்காந்துட்டு வந்த மாதிரி இருக்குது உங்ககிட்ட இப்ப பேசினது. சரிண்ணே.. நாளைக்கு பாப்போம். நம்ம நண்பர் எல்லாதுட்டயும் சொல்லிடுங்க. இரவு வணக்கம்னே.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”