பள்ளி வாழ்கை... ஒவ்வொருவரின் வழ்க்கையிலும் வந்து போகும் வசந்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
vijijo2003
Posts: 3
Joined: Fri Oct 04, 2013 7:54 pm
Cash on hand: Locked

பள்ளி வாழ்கை... ஒவ்வொருவரின் வழ்க்கையிலும் வந்து போகும் வசந்

Post by vijijo2003 » Sat Nov 30, 2013 12:32 am

பள்ளி வாழ்கை... ஒவ்வொருவரின் வழ்க்கையிலும் வந்து போகும் வசந்த கால நினைவுகள்...

என் பள்ளி...
கம்பம் நகராட்சி ஆரம்பப்பள்ளி ( புதுப்பள்ளி வாசல்) 1973...
எனது முதல் வகுப்பு ஆசிரியை திருமதி விஜயா டீச்சர்... வாழ்கையில் நான் எப்பொழுதும் மறக்க முடியாத ஒருவர்... வீட்டில் கஷ்டமான சூழல்.. கலை சாப்பிட உணவில்லாமல் பள்ளிக்கு செல்லும் எனக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவந்து கொடுத்தவர்.. மேலும் பள்ளியில் தரும் மதிய உணவை எனக்கு தனியாக எடுத்து வந்து தருவார்....( இவரை மறந்தால் நான் மனிதனே அல்ல) அடுத்து மூன்றாம் வகுப்பு ஜெயராம் வாத்தியார், நான்காம் வகுப்பு மரியதாஸ் வாத்தியார்.. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களில் அதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை....

நடுநிலைப்பள்ளி ... ஆறாம் வகுப்பு பாலையா வாத்தியார்... இவரது அடிக்கு பயந்து ஆங்கிலம் A,B.C.D படித்தோம்.. எனது தமிழாசிரியை திருமதி ஜெயலட்சுமி... ( எனக்கு தமிழ் மேல் இவ்வளவு பற்று வர காரணமாய் இருந்தவர் உதாரணம்.. பிளஸ்டுவில் தமிழில் நான் ஸ்கூல் பஸ்ட் ஆனா மேக்ஸ்ல பெயிலு ) பிறகு தலைமை ஆசிரியர் சுந்தரேசன். இங்க ஆறாவது படிக்கிரப்பத்தான் நானும் என் நண்பன் முபாரக்கும் குடையை வைத்து ஓர் அராய்ச்சி செய்தோம்...
வேறு ஒன்றும் இல்லை... பாரசூட்டில் குதிப்பது போல் 12 அடி உயரத்தில் இருந்து குடையை பிடித்துக்கொண்டு நாங்கள் இருவரும் கீழே குதித்தோம்.. நான் அவன் மேல் விழுந்ததால் என் நண்பனுக்கு கால் ஒடிந்தது...இதனால் என்னை பள்ளியில் காலை முதல் மாலை வரை நிற்கவைத்து எல்லா வாத்தியாரும் வறுத்து எடுத்தார்கள்... இன்னொரு நண்பன் செல்லப்பா... அருமையாக பாடுவான். அனால் பள்ளிக்கு வரமாட்டான்.. அவனை பிடித்து பள்ளிக்குகொண்டுவரச்சொல்லி வாத்தியர் எங்களை அனுப்புவார். அவனோ எங்களுக்கு அவர்களது கடையிலிருந்து கடலை முட்டாய் தந்து திருப்பி அனுப்புவான்.( அப்பொழுதே லஞ்சம்) நாங்களும் வாத்தியாரிடம் அவனை காணவில்லை என்று சொல்லுவோம்..
ஒரு வழியாக எட்டாம் வகுப்பு முடித்து முத்தையா பிள்ளை உயர்நிலைப் பள்ளிக்கு வந்தேன்..மிகவும் கண்டிப்பான பள்ளி. நல் ஒழுக்கம் இல்லாதவர்கள் சாத்தனின் பிள்ளைகள் எனச்சொல்லும் தலைமை ஆசிரியர் திரு மரியதாஸ் அவர்கள் ( எப்பொழுதும் கையில் விசில் வைத்த சாட்டையுடன் இருப்பார்) இவரை கண்டாலே பயம்கலந்த மரியாதை. (வறுமையின் நிறம் சிகப்பு படம் பார்க்க பள்ளியை கட்டடித்து போய் இவரிடம் மாட்டி சட்டை அடி வாங்கிய அனுபவம் எனக்கு உண்டு ) லூசுக்கழுத எனத்திட்டும் கணக்கு வாத்தியார் மைக்கேல் சாமி, வீட்டில் சண்டை போட்டு வந்தால் அனைவரயும் அடித்து நொறுக்கும் அறிவியல் வாத்தியார் சம்பத், டோப்பா வைத்துக்கொண்டு எம்ஜியார் போல் வகுப்புக்கு வரும் சொட்டத்தலை ஹிஸ்டரி வாத்தியார் ராமதாஸ், தமிழ் அய்யா மரகதவேல், பி.டி வாத்தியர் கிரிஷ்ணகுமார் ..... அனால் ஒரே ஒரு ஏக்கம்... கோஎட் இல்லையே என்று...
அப்பொழுதெல்லாம் ஏல வவசயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டு வில் மட்டும் தான்.. கோஎட்... மாணவிகளுடன் சேர்ந்து படிக்கப்போகிறோம் என்ற சந்தோஷக்கனவுகளுடன் பிளஸ் ஒன் சேர்ந்த எங்களுக்கு பேரிடி... அந்த ஆண்டு முதல் கம்பம் பெண்கள் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம்உயர்த்தப்பட்டது... வாழ்கையை வெறித்து போய் படித்தோம்.. பிசிக்ஸ் வாத்தியார் முத்துக்கோனேறி, பாட்டணி வாத்தியர் பாலசுப்ரமணி (இப்பொழுது அவர் அஹமது சலீம்), ஹெமிஸ்ட்ரி வாத்தியார் சமது, கணக்கு வாத்தியார் முருகேசன் ( இவரது திருமண நாள் 9.9.1983) இவரது திருமண நாளில் கவிதை எழுதிக்கொடுத்து பராட்டு பெற்றேன் ) ஆங்கில வைத்தியர் தொங்கர் என்ற தியாகராஜன், தமிழ் வாத்தியார் அல்லவா என்ற ஞானசுந்தரம் ( எது நடத்தினாலும் நான் நேற்றே சொன்னேன் அல்லவே என்பதால் இவருக்கு அல்லவா என்பது பட்டப்பெயர்) இன்னும் இவர்களை எல்லாம் நான் என் வழ்க்கையிலும் வந்து போகும் வசந்த கால நினைவுகளில் மறப்பதில்லை....ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று இவர்களுக்கு நன்றி குறி பேஸ்புக்கில் வெளியிடுகிறேன்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பள்ளி வாழ்கை... ஒவ்வொருவரின் வழ்க்கையிலும் வந்து போகும்

Post by ஆதித்தன் » Sat Nov 30, 2013 10:19 am

தங்களது கடந்த கால வசந்தத்தோடு, எங்களையும் இணைத்துக் கொண்டதில் மகிழ்ச்சி....
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”