சீட்டுக்காரி...

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

சீட்டுக்காரி...

Post by mubee » Sun Nov 24, 2013 2:41 pm

“இருள் பிரியக்குள்ள பாத்தும்மா வந்து ஏசிக்கு நிப்பாடா என்ட நல்ல பிள்ளயில்ல... இந்த காசக் கொஞ்சம் அவக்குட்ட நீட்டிட்டு வா மன... ஒனக்கு வேணுமெண்டா வாப்பா வரட்டும் பட்டம் கட்டி தரச் சொல்லுரான் இல்லாட்டி ஆர்ட்டண்டானே வாங்கித் தரச்சொல்லுரன் இப்ப கொஞ்சம் போயிட்டுவாடா” என்று தான் மாதாந்தம் வாய் வயிற்றை ஒறுத்து சேமிப்பாய் சீட்டுக்கட்டும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவரும்படி கெஞ்சிக் கொண்டிருந்தான் நkபா...

எனக்கேலா... போ நான் பட்டங்கட்டப்போறன் அண்டக்கி இப்படித்தான். சென்ன கடக்கிபோய் வாமன மிச்சக்காசி வரும் நீ எடு எண்டுட்டு ஒரு கும்பச் சாமான செல்லி கடசில எனக்கி ஒறுவாயும் கெடக்கெல்ல ஏலா, நான் போகமாட்டன்.ஒண்ட மகள அனுப்பு. வேல முடிஞ்சா ஆள உட்டுடுவா நான் போக மாட்டனென்டா போக மாட்டன்தான்... என்றவாறு பட்டம் கட்டும் தீவிர முயற்சியில் மூக்கையும் உறுஞ்சி உறுஞ்சி ஈர்க்குகளை சீவிக்கொண்டிருந்தான் ஆகீப்.

பாத்துக்க அவள் சின்னப் பிள்ளட்டாய காசக் குடுத்து அனுப்புற அவ்வளவு தூரத்துக்கு ஆரண்டான காசயும் பறிச்சிக்கி ஆளயும் தூக்கிட்டு பெய்த்துடுவான். இண்டக்கி தெகதி இருபத்தி ரெண்டுடா இருபதாம் தெகதி குடுக்குற காசி. மனிசி வந்தாளெண்டா அவ்வளவு கேள்வி கேட்பாள். என்ன சாதிப் பிள்ள நீ இத... எடுத்துக்கு நானா போற இன்னா இருக்கிறஎடத்துக்கு?... ம்ம்ம்’... நல்ல ஆளுகா இன்னா இருக்கிற எடமா அப்ப நீ போயிட்டு வா என்றவன் தான் கட்டும் பட்டத்தை நிறுத்தி சீட்டுக்காசை கொடுத்துவரப்போவது அவனுக்கு எரிச்சலாகப் பட்டது.

மகனின் வில்லங்கத்தையும் நச்சரிப்பையும் உணர்ந்த நkபா... வீட்டுக்குள் நுழைந்து ஐந்து ரூபாய் குற்றியுடன் வந்து”, இன்னா அண்டய காசி. இப்ப இத குடுத்துட்டு வா. வாப்பா வரட்டும் ஒன்ட கணக்குப் பாக்குறத்துக்கு என்றாள். நீண்ட நேரம் எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தவன், இல்ல எனக்கி பத்துரூபாத்தா பட்டங்கட்ற சருகத்தாள் வாங்கப்போறன் அப்பான் போவன் இல்லாட்டி ஆளஉடு என்று பேரம் பேசிக்கொண்டிருந்தான்.

முதுகிலே ஒரு குத்து குத்திவிட்டு சனியன் காசி காசி எண்டு எந்த நேரமும் சாகப்பாக்கான் பிள்ளயா இது பெசாசி... என்றவாறு வாயினால் முணுமுணுத்துக்கொண்டு தன் காரியம் எப்படியாயினும் நிறைவேறவேண்டும் என்பதால் தனது முந்தானையில் முடிந்து வைத்திருந்த பணமுடிச்சை அவிழ்ந்து பத்துரூபாய் தாள் ஒன்றினை கொடுத்துவிட சட்டென்று எழுந்து தான் உடுத்திருந்த சாரனோடு மேலிலே ஷேர்ட் ஒன்றினை போட்டுக்கொண்டு கன வேகமாக தனது பிறேக் இல்லாத துவிச்சக்கர வண்டியில் பறந்து சென்று கொண்டிருந்தான். ஆகீப்

சுனாமிக்குப் பின்னர் அரசாங்கம் அமைத்துக் கொடுத்து வீட்டுத் திட்டமொன்றில் சீவியம் நடத்துகின்ற நடுத்தர குடும்பங்களின் வரிசையில் முதலிடம் வகிப்பவள் அவள். மீன் வியாபாரியான றஸாக் தினமும் சம்பாதித்து வரும் உழைப்பாளி சொத்துவத்துக்களுக்கு சொந்தக்காரன் இல்லா விட்டாலும் கஷ்டநஷ்டமின்றி வாழ்க்கையினை ஓட்டுவிப்பதில் கொட்டிக்காரன். தன் பிள்ளைகளை உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கவேண்டும் என்பதில் குறியாய் இருப்பவன். அப்படிப்பட்ட எண்ணத்தை கொண்டவள்தான் நkபாவும்... அதனால்தான் கணவனது உழைப்பில் மீதப்படுத்தி இன்று கட்டிக்கொண்டிருக்கும் சீட்டுக்காசி.

புதுக்குடியிருப்பில் சீட்டுக்காரி பாத்தும்மா என்றால் தெரியாதவர்கள் எவருமே இருக்க முடியாது. சிறியவர்முதல் பெரியவர் வரைக்கும் தங்கம்மாவின் உடை நடை பாவனையும் குணமும் கொள்கையும் தெரிந்ததே சீட்டுக்குபெயர்போன நாமம் மட்டுமன்றி சீட்டின்றி உயிர் வாழ முடியாத பேர்வழி சொன்ன திகதியில் சொன்ன நேரத்திற்கு சீட்டுப்பணத்தை கொண்டுவரும் வாய்மையுள்ள சீட்டுக்காரி. பணம் தாமதிக்குமாக இருந்தால் வயிற்றிலுள்ள குழந்தை வழுவி விழும் அளவிற்கு பொடிந்து தள்ளக்கூடிய பொல்லாத நாக்குடையவள். மற்றும்படி சாதுவான உருவம். நபருக்கு நபர் தன் தொனியை மாற்றி நளினமாகப் பேசும் தன்மை பாத்துமாவின் பரம்பரைப் பாக்கியம்.

சம்பளக்காரர்களிடம் சீட்டுப்பணம் வாங்கும் போது கூனிக்குறுகி மரியாதையுடன் பவ்வியமாகப் பேசும் இவள் மற்றவர்களிடம் வரும்போது அவசர அவசரமாக வெண்கலக்குரலில் வெடுவெடுத்து விதண்டா வாதம் செய்து... வெட்டி வெட்டிப்பேசுவாள்... ஊருக்குள் இந்த மனிசி செத்துப்போனால் பேய் வரும் என்று பேசிய சந்தர்ப்பங்களும் உண்டு. பாத்தும்மா ஒரு வண்டியை விட வேகமான முறையில் நடைபோடும் இவளுடன் போட்டிக்கு யாரேனும் வந்துவிட்டால் அதோ கதிதான்.

மின்னல் வேகத்தில் மிடுக்க நடை நடந்து காறிக் கனைத்து வரும்போதே அவளிடம் சீட்டுக்கட்டும் பெண்களின் அடிவயிறு கலங்கும். அதிலும் சீட்டுக்காசி இல்லையென்றால் அல்லது தாமதிக்குமாக இருந்தால் எதிர் கொண்டு பதிலுரை வழங்குவது சங்கடத்தை கொடுக்கும் அதற்கெல்லாம் பயந்துதான் நkபா மகனிடம் சீட்டுப் பணத்தை கொடுத்து வரும்படி மன்றாடிக் கிடந்தாள்...

விடுமுறை காலங்கள் வந்து விட்டால் பிள்ளைகளுக்கு அதைவிட இன்பகரமான பொழுதுகள் இல்லையென்றே சொல்லலாம். கற்றலுக்கு முழுக்குப்போட்டுவிட்டு விளையாட்டுக்களிலும் வீண் வேலைகளிலும் தம்மை ஈடுபடுத்தி மகிழ்ச்சிகரமாக காலத்தை கடத்திக் கொண்டிருப்பார்கள்... அவ்வாறான ஒரு செயற்பாட்டில்தான் ஆக்கீப்பின் நேரமும் கரைந்து கொண்டிருந்தது... அதிலும் பட்டம் கட்டி பறக்கவிடுவதென்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான் கட்டும் பட்டத்தில் கொஞ்சம் பிசகு இருக்குமாயினும் அப்பட்டம் வானத்தை நோக்கி ஏறாமல் வயிற்றெரிச்சலை கொட்டி ஏமாற்றத்தை அளிக்கும்.

ஒருவர் பட்டத்தை கட்டி பறக்கவிட்டாராயின் ஒருவர் பின் ஒருவராக போட்டி போட்டுக்கொண்டு பட்டங்கள் வானத்தை நோக்கி படையெடுக்கும்... ஆமப்பட்டம், பொட்டிப்பட்டம், பாம்புப் பட்டம், ஆலாப்பட்டம், வெளவால் பட்டம் என்று விதம் விதமான பட்டங்கள் பல வர்ணங்களில் ஒய்யாரமாய் வானில் உலாவரும்.

தேசிய பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் தரத்தில் கல்வி பயிலும் ஆக்கீப் நkபாவுக்கு மூத்த பிள்ளை. இரண்டாவது பெண்பிள்ளை. மூன்றாம் வகுப்பில் கல்வி கற்கிறாள். ஆகீப்பை பெற்றெடுத்து ஆறு வருடங்களின் பின்னர்தான் aனா பிறந்தாள். இருவரும் அழகிற்கு அபூர்வ படைப்புக்கள்... மட்டுமன்றி கல்வியிலும் சளைத்தவர்கள் அல்லர் இருவரையும் இவ்விருவரும் அப்படித்தான வளர்க்கிறார்கள்.

நேரம் ஒன்பது மணி கடந்திருந்தது. நேற்று மீனுக்குச் சென்று வீடு திரும்பிய கணவன் வாங்கிவந்த குமிட்டிக்கீரையை தட்டில்... கொட்டிவந்து திண்ணைக்குள் வைத்து துப்புரவாக்கி இலைகளை நோண்டிக்கொண்டி ருந்தாள். கேற்றிலே யாரோ தட்டுகின்ற சத்தத்திற்கு கேற்று பூட்டயில்ல கொழுக்கிய திறந்திட்டு வாங்க என்று குரல் கொடுக்க பக்கத்து வீட்டு சுகறா மாமி என்னகா புள்ள செய்கிறாய்? என்றவாறு வீட்டுக்குள் நுழைந்தார். வாங்க மாமி குமிட்டி கெடந்து வாடுது. நேத்து வாங்கி வந்த கீர இது. குளிக்கிறத்துக்கு மொதல்ல கந்தப்பாத்து வெப்பம் எண்டுதான் இதுல குந்திட்டன். அதுவும் ஒழியுதுமில்ல என்று பதிலுரைத்தாள்.

குந்திய இடத்திலிருந்து தட்டை இழுத்து வந்த குற்றத்துக்காய் இலைகளை நோண்டிக் கொண்டிருக்க இருவரும் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தார்கள். பொடியண்ட சீட்டுக்காசிய குடுத்து அனுப்பினன். இன்னும் காணல மாமி. எங்க பெய்த்தானோ தெரியா என்ற மாத்திரத்தில்.. முகத்தை நீளவாட்டில் தொங்கப்போட்டு நாவு காய்ந்து வரண்டுபோன முகத்துடன் பயந்து பயந்து துவிச்சக்கர வண்டியை உள்ளே செலுத்திக்கொண்டிருந்தான். ஆக்கீப்

அவனைக் கண்டதும் என்னடா மகன் பாத்தும்மா ராத்தா இருந்தாவா? காச குடுத்துட்டியா? என்று கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவனாய் வீட்டின் பின்புறமாய் நழுவிக்கொண்டான். மகனின் திருப்தியற்ற அலட்சிய போக்கை உணர்ந்து கொண்டவளான நkபா கொஞ்சம் இருங்க மாமி வாறன் என்று சொல்லி விட்டு ஆகீப்... ஆகீப் என்று குரல்கொடுக்க பதிலில்லாமலே சுவரோடு சாய்ந்து அழுது கொண்டிருந்தான்...

பட்டம் கட்டும் முயற்சியில் கன வேகமாக தனது துவிச்சக்கர வண்டியில் பறந்து சென்று கொண்டிருந்தவன், தாய் கொடுத்த பணத்தை தனது சட்டைப் பையினுள் புகுத்திக்கொண்டுதான் சென்றான்.

ஆனால், சட்டைப்பையில் ஒன்றரை இஞ்சி அளவில் கீழ்ப்புறமாகக் கிழிந்திருந்ததை நோக்கவில்லை. அதிலும் வேப்பையடிச் சந்தியில் யாரோ குறவன் பாம்பாட்டிக்கொண்டி ருந்ததை பார்த்து இரசித்து விட்டுத்தான் சென்றான்.

ஏதோ ஓரிடத்தில் பணம் நழுவிக்கொண்டது. பாத்துமாவின் வீட்டிற்குச் சென்று பணத்தை கொடுப்பதற்காக பையினுள் கைவைத்த போதுதான் தெரிந்தது பணம் தன்னை விட்டு தூரமாகிப்போன செய்தி. அவ்விடத்தி லேயே பாத்தும்மா “பாவி மகனே காச காணத்துப் போட்டயாடா? என்ன பேயண்டா நீ... ஓன்ன வித்தென்டான சரிதான் எனக்கு காசி இப்ப வேணும். எங்கடா அவள் ம்மா... தட்டுவாணி தேதி இருபத்திரெண்டாகுது காச தராம வெச்சிக்கிட்டு படுத்திருக்காள்... என்ற நாலு வார்த்தைகளை பாத்தும்மா தூபமிட பயமும் நடுக்கமும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது.

எதுவுமே பேசாதவனாய்... அங்கிருந்து வெளியேறி தான் வந்துகொண்ட வழியினால் மீளவும் பணத்தை தேடிக்கொண்டு வந்தான். கிட்டவில்லை. வீட்டுக்கு போவதா இல்லையா என்று ஒருகணம் சிந்தித்தவன் எப்படியும் சொல்லித்தான் ஆகவேண்டும் இல்லாவிட்டால் பாத்தும்மா வீட்டுக்கு வந்தவுடன் எல்லாமே தெரிந்துவிடும்.

என்றெண்ணி விழுகின்ற அடியினை கற்பனை செய்து கொண்டு மனதையும் திடப்படுத்திக் கொண்டுதான் நுழைந்தான். ஆனால், உடல் வலிமைகுன்றி, சக்தியிழந்து கொண்டிருந்தது.

மீளவும் நkபாவின் குரல் ஆக்கீப் ஆக்கீப் இப்பான் வந்தான் அதுக்குள்ள எங்க போயிட்டான் இவன்... என்று முணுமுணுத்து கொல்லைப்பக்கமாக தலை நீட்டினாள்.

வானத்தை நோக்கிய பார்வையுடன் பிதுங்கிக்கொண்டிருந்தான். டேய் இஞ்ச என்ன செய்றாய் என்ற குரல் அவனை திடுக்கிடச் செய்தது. அழுதுகொண்டு நடந்த விடயங்களை கூறத் தொடங்கினான். இடை நடுவே அவனது காதையும் ஷேட்டையும் பிடித்து இழுத்து வந்தவள் இஞ்சப்பாருங்க மாமி. இந்த நாய் செஞ்சிரிக்கிர வேலய காச காணத்துப்போட்டானாம். திடீர் மZர் தடார் என்று அவளது கைகள் முதுகினை பதம் பார்த்துக்கொள்ள ஒனக்கு வெளயாட்டு கூடிட்டுடா ஹறபாபோனவனே... என்று பேச்சும் அடியுமாக சரளமாகப் பொழிந்தன... இடையிலே குறுக்கிட்ட சுகறா காணும்.... காணும் அவன அடியாதபுள்ள நடந்தது நடந்திட்டு அதுக்கு என்ன செய்றது என்று அவனை விலக்கிவிட மின்மினிப் பூச்சியாய் மறைந்தான்.

இல்ல மாமி இப்ப பாத்தும்மா ஒன்னப்புடி என்னப்புடி எண்டுக்கு பெசாசிபோல வருவாள். எப்படி நான்காச குடுக்கிற எவ்வளவு கேள்விய கேக்கப்போறாள். அவளுக்கு என்னசெல்றது... இண்டக்கி ஊரயே கூட்டுவாள் என்று கூறிய கணமே... அதே வெண்கலக்குரல் எல்லாரும் அவளுகளா... வந்து காசத்தருவாளுகள் றசாக்கு பொண்டி மட்டும் பெரிய அடக்கத்துப்பொம்பல... சின்னப்பொடியண்ட காச குடுத்து அனுப்பினாளாம் அவன் காணத்தானாம்.

நkயா தொறடி கதவ... தாமதமில்லாமல் தானாகவே கதவினைத் தள்ளி வாசலுக்கு வந்தவளை எதிர்கொண்டாள் நkபா. இண்டக்கி எத்துன்டி தெகதி? நானும் வருவாய் வருவாய் எண்டு பாக்க பாக்க ஆள காணல்ல. நீ காசி தராம நான் எப்புர்a அவளுக்கு காசி குடுக்கிற.

தட்டுவாணி என்னவளிப்பட்டும் காசி இப்ப தரனும். அப்பான் வெடத்த விட்டுப்போவன். கெதியா எர்a காச சீட்டுக்கட்ட ஏலாத ஒனக்கு என்னத்துக்குடி சீட்டு? நாவு கூசாமல் வசை பாடத் தொடங்கினாள்...

இல்ல மாமி கொஞ்சம் பொறுங்க அவரு வரட்டும் காச காணத்துட்டான். இல்லடி எனக்கி சொணங்க ஏலா கொண்டா கொண்டா காச. எனக்கி நெறய அலுவல் கெடக்கு என்றபோது சொகறா மாமியின் முந்தானையில் முடிந்து வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் பணம் நkகாவிடம் கைமாறியது. அவரு வந்தபொறகு எனக்கி தாகா புள்ள. அவள அனுப்பு என்றாள் சுகறா. தாமதமின்றி பணத்தை பெற்ற பாத்தும்மா மின்னல் வேகத்தில் றோட்டுப்படி தாண்டி விரைந்து கொண்டிருந்தாள்...
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”