தாம்பத்தியம் இல்லா வாழ்க்கை!!!

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

தாம்பத்தியம் இல்லா வாழ்க்கை!!!

Post by மன்சூர்அலி » Tue Nov 19, 2013 2:16 pm

தாம்பத்தியம் இல்லா வாழ்க்கை!!!

புது மாப்பிள்ளை ஆனந். ஆனந்தம் தாண்டவம் ஆட வேண்டிய முகத்தில் சோகம் தான் தாண்டவம் ஆடி கொண்டு இருக்கிறது..
கல்யாணமே வேண்டாம் என்று சொல்லி கொண்டு இருந்தவன் தான் ஆனந்..ஆனால் வீட்டில் யாரும் கேட்பதாக இல்லை.காலா காலத்துல ஒரு கால் கட்ட போட்டு விட்டா பெதவங்க கடமை முடுஞ்சு போச்சு...இனி மேலும் கால தாமதம் பண்ண முடியாது...இந்த பொண்ண பார்த்து முடிச்சுட்டோம் பேரு சுதா வயசு 25 முதுகலை பாட்டதாரி ஒரு ஏழை பட்ட குடும்பம் எனக்கு புடிச்சிருக்கு..என்று அவன் முன்பில் அந்த போட்டோவை வைத்து விட்டால் தாய் சுந்தரி...
அந்த சமயம் என்னடா ஆனந் மீட்டிங்கு நேரம் ஆச்சு இன்னும் உட்காந்துட்டு இருக்கே என்று குரல்கொடுத்தவாறு ஆனத்தின் நண்பன் மகேஷ் உள்ளே வர..

இதோ பாருப்பா...மகேஷ்...இது வர குறைந்தது பத்து பெண்ணோட போட்டோவையாவது இவன் கிட்ட காட்டியாச்சு...எல்லாத்தையும் பிடிக்கல,இப்ப வேண்டாமுன்னு சொல்லி தடுத்து நிறுத்தி விடுகிறான்..நீயாவது சொல்லி கல்யாணத்திற்கு சம்பாதிக்க வைக்க கூடாதா? உனக்கும் அவனுக்கும் ஒரு வயசு தானே.. நீ கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ளைய பெத்துட்டே..எங்களுக்கும் வயசாகிட்டே போகுது முன்ன மாறி என்னாலையும் குனிந்து நிமித்து வேலை பார்க்க முடியல...

இடையில் குறுக்கிட்டு அம்மா உன்னால வேலை செய்ய முடியலன்ன ஒரு வேலைகாரிய வச்சுக்கோ...என்றான் ஆனந்..

கடைசி வர வேலைகாரிய வச்சுகர்த்துக்குதான் உன்ன பெத்து வளர்த்தோமா? சும்மா லூசு மாறி பேசாத...என்று கூறிகொண்டே....மகேஷ் இடம் பேச்சை தொடர்ந்தாள் சுந்தரி...
இப்படிதா மகேஷ் ஒரு நல்ல இடம் கூடி வரும் போது ஏதாவது சொல்லி தடுத்து நிறுத்தி விடுகிறான்...
அம்மா நான் ஆனந்துட்ட சொல்லி எப்படியாவது சம்மதிக்க வைக்கிறேன்.. அது வர கொஞ்சம் நீங்க பொறுமையா இருங்கம்மா... என்றான் மகேஷ்...
பொறுமையா இருக்க முடியாது மகேஷ் இன்னும் ரெண்டு நாளையில நான் பெண்வீட்டாருக்கு பதில் சொல்லி ஆகணும்..
இன்னும் ரெண்டு நாள்தானே நாளைக்கே உங்களுக்கு நான் பதில் சொல்லிரேன் போதுமா?...
சரி வாட ஆனந்... போய்ட்டு அந்த மீட்டிங்க முடிச்சுட்டு வந்துடலாம்..என்று இருவரும் மகேஷின் டூ வீலரில் பறந்து விட்டனர்...

சாப்ட்வேர் இன்சினியர் மீட்டிங்...ஒரு தனியார் வங்கியில் இருவரும் இஞ்சினியராக இருப்பதால்.. அங்கு எல்லா இஞ்சினியரும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது...ஒவ்வொருவராக அறிமுக படுத்தி கொண்டவர்கள்...

...என்ன ஆனந் எப்பதான் கல்யாண சாப்பாடு போடலாம்முன்னு இருகீங்க... நம்ம பேச்சுல இஞ்சினியர் முடித்த எல்லோருக்கும் கல்யாணம் முடிஞ்சு போச்சு...என்று ஆனந்துக்கு தெரிந்த நாலு பேர் அந்த மீட்டிங் சந்திப்பில் கேட்க்க....அவனால் பதில் சொல்ல முடியாமல் தவித்தான்...

மீட்டிங் முடிந்து வரும் வழியில் ஒரு பார்க்கில் வண்டியை ஓரம் காட்டினான் மகேஷ்..

என்னடா மகேஷ் வண்டிய இங்கே நிறுத்துற...என்றான் ஆனந்த..

உங்கிட்ட ஒன்னு பேசனும்...

என்னடா நினச்சுட்டு இருக்கே. ஆனந்..

வீட்டுல அம்மா கல்யாணம் பன்னனும்ன்னு சொன்ன...

ஏண்டா நீ கூட என்ன புருச்சுகிற மாட்டுகிரே...

எனக்கு பெண்கள கண்டாலே அலர்ஜின்னு தெரியும் இல்ல..எனக்கு ஒரு பெண்ண திருப்பதி படுத்த கூடிய அளவுக்கு என்னிடிடத்துல ஆண்மை தன்மை இல்லடா...

இத ஏன் யாருமே புருச்சுக்கிற மாட்டிகிறிங்கே... இத வெளில சொல்லவும் எனக்கு அச்சிங்கமா இருக்கு.. நான் இப்படி பிறந்தது எங் குற்றமா?...இல்ல என்ன பெத்தவங்க குற்றமா?....இல்ல அந்த கடவுள் குற்றமா?.....எனக்குள்ள குறை எனக்கு தான் தெரியும்...

உனக்கு ஆண்மை தன்மை இல்லைன்னு நீயே முடிவு பண்ணிட்டா எப்படி?..
வா நல்ல டாக்டரிடம் போய் பார்கலாம்...

எனக்கு அதுலை எல்லாம் இஸ்டமில்ல...என்னை கேவல படுத்தாதே...எனக்கு நீ இருக்கும் வர நீயே போதும்.உன்னிடத்துல எனக்கு செக்ஸ் வச்சுகிறது எனக்கு திருப்தியா இருக்கு..எனக்கு அதுவே போதும்..
ஆனா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு மட்டும் சொல்லாதே...என்று விடாபிடியாக சொல்லிவிட்டான் ஆனந்...

இதோ பாரு ஆனந்...எனக்கும் கல்யாணம் ஆகி நான் ரண்டு பிள்ளைக்கு தகப்பன்....என்னோட எத்தனை நாளைக்குதான் செக்ஸ் வச்சுபே...இது உனக்கும் எனக்கும் நல்லதா?... எதோ ஒரு வயசுல அப்படி நடத்துட்டோம்...இனி மேலாவது அதிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து பொண்டாட்டி பிள்ள குடும்பம்ன்னு வாழணும்டா....

உனக்கு கல்யாணம் ஆகலையேன்னு அம்மா எத்தனை கஷ்ட படுறாங்க பாக்குற இல்ல...உன்னால ஒரு பெண்ண திருப்தி படுத்த முடியும்..நீயாக குழம்பி எல்லாத்தையும் குழப்பி விடுரே....நீ கல்யாணம் பண்ணிகிரேன்னு சொன்னா நம்ம நட்பு தொடரும் இல்லாட்ட நான் இதோடு உன்ன விட்டு ஒதிங்கிரேன்...என்று ஆணி அடித்தார் போல் சொல்லிவிட்டான் மகேஷ்...

சரி ....சரி ...வண்டில ஏறு என்று மகேஷ் டூ வீலரை ஸ்டார்ட் செய்தான்.. ஆனந்தை அவன் வீட்டில் இறக்கி விட்டு விட்டு ஆனந்தின் அம்மாவிடம் ஏதோ சொல்லி விட்டு அவனின் வீடு நோக்கி சென்றான் மகேஷ்.

இப்படியாக நாட்கள் வாரங்களாகி மாதத்தையும் தொட்டது... ஆனந் போன் செய்தால் கூட பதில் கொடுப்பது கிடையாது...அலுவலகத்தில் கூட பேசுவது கிடையாது...

ஆனந்தால் அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை...வாரம் ஒரு முறையாவது அவனுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்வான்...ஆனால் இந்த நாலு வாராம் ஆகியும் அவனின் சுண்டி விரல் கூட அவன் மீது படவில்லை....

ஆனந்துக்கு ஏக்கமும், தாகமும்.. தாங்கி கொள்ள முடியவில்லை...

ஆனந்தின் கை பேசியில்லிருந்து கல்யாணம் செய்து கொள்வதாக ஒரு குறும் தகவல் அனுப்பி இருந்தான்... ஆனந்....

அதை பார்த்த மகேஷ் சந்தோசத்தில் குளித்தது போல் இருந்தது....

அன்று அலுவகத்தில் ஆனந்தை பார்த்து... வாழ்த்துகள் ஆனந்... இந்த முடிவ முன்னாடியே சொல்லிருந்த இத்தன நாள் நாம ஏண்டா பிரிஞ்சு இருக்கணும்...நம்ம நட்பு பத்தாங் கீளாசுல தொடங்கியது...இது வர பிரியாத நாம இப்ப பிரிஞ்சு இருந்தது எனக்கு வருத்தமா இருந்தது.சாரி டா.
ஆனந்...மகேஷ் சொல்ல...

எங்கே என்ன விட்டு போய்யிடுவியோன்னு தான்.கல்யாணத்துக்கு சம்மதித்தேன்.இத்தன நாளா பட்டினி போட்ட என்னை இன்னைக்குயாவது தருவாயா டா?. என்று மெல்ல மகேசின் தோள்பட்டையை பிடித்தான் ஆனந்...

ஆபீஸ்டா....வேலைய பாரு...அப்புறம் பார்க்கலாம்..

வழக்கம் போல் அலுவலக பணி முடிந்ததும்...இருவரும் சந்தித்து கொண்டனர்..

சரி....வீட்டுல சுமதி பிள்ளைகளை அழைத்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய் இருக்கா..வா வீட்டுக்கு போகலாம்..அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிடு என்றான் மகேஷ்...
அதன் படி ஆனந் அம்மாவிடம் சொல்லி வீட்டு...மகேஷிடம் போனை கொடுத்தான்...
ஹலோ... அம்மா.... ஆனந் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான் இல்ல...

ஆமாம்... இரண்டு நாளைக்கு முன்புதான் அவன் முடிவ சொன்னாப்பா.... அந்த பிரம்மனுக்கும் உனக்கும்தான் நன்றி சொல்லணும்...உன் பிளான் படி நீ இந்த ஒரு மாசம் அவன விட்டு பிரிஞ்சதுனாலா அவ எடுத்த முடிவு இப்பதான் நிம்மதியா இருக்கு..
சீக்கிரமா தேதியை குறித்து முடிசுடுங்கம்மா...நானும், ஆனந்தும் வெளியே போயிட்டு...கொஞ்சம் லேட்டா ஆனந் வீட்டுக்கு வருவான்ம்மா...
சரிப்பா..என்று போனை கட் செய்து வைத்தாள் சுந்தரி..
இருவரும் மகேஷ் விட்டை அடைந்தவர்கள். கொஞ்சம் தேனிர் அருந்தி விட்டு...
இத்தனை நாள் என்ன ஏங்க வச்சுட்டியடா.... உன்ன விட்டா எனக்கு என் செக்ஸ் வெறிய போக்க யார் இருக்க சொல்லு என்று மெல்ல மகேஷின் தொடை மேல் கையை வைத்தான்...பதிலுக்கு மகேஷ் அவனை தடவி கொடுக்க உதடுகள் ஒன்று சேர இருவர் உடலும் ஒன்று சேர அவர்களின் காமாம் தீரும் வரை கட்டி புரண்ட இருவரும்...காமம் எல்லையை விட்டு தாண்டியதும்..ஒருவரை ஒருவர் பிரிந்தனர்....
இப்ப கூட சொல்லுறேன் மகேஷ் நீ என்ன வீட்டு போய்ட கூடாதேன்னு தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்...ஆனா எனக்கு கல்யாணம் ஆனாலும் நீ எனக்கு வேணும் என்று செல்லமாக அவனின் கன்னத்தில் கிள்ளினான் ஆனந்...
எல்லாம் போக போக சரியாகிவிடும்..போடா அம்மா காத்திருங்காக....என்று ஆனந்தை அனுப்பி வைத்தான் மகேஷ்...
எல்லாம் திட்ட மிட்ட படி திருமணம் நடந்தேரியது ஆனந்துக்கு...
அன்று இரவே முதல் இரவுக்கான ஏற்பாடுகள் செய்து
முதல் இரவு அறையில் இதயம் படபடக்க ஆனந் அலங்கரிக்க பட்ட கட்டிலில் அமர்த்திருந்த்தான்..
சில நிமிட்ங்களில் மண பெண் சுதா பால் டம்ளருடன் அந்த அறையினுள் வர... ஆனந்துக்கு இன்னும் படபடப்பு அதிகமாகி கொண்டு இருந்தது... பாலை வாங்கி ஏதோ யோசித்தவாறு குடித்தவன்...அந்த கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்தும் கொண்டான்...
விளக்கை அனைத்து விட்டு விடி விளக்கை போட்டு விட்டு..சுதாவும் அருகில் படுத்து கொண்டாள்... செய்வது அறியாமல் திகைப்புடன் இருந்தான் ஆனந்...


அந்த இரவே சுதாவிடம் ...
இதோ பாரு சுதா எனக்கு பெண்களை கண்டாலே அலர்ஜி. என் வாழ்கையில் கல்யாணமே வேண்டாம் என்று தான் இருந்தேன் ஏதோ விதி விளையாடி விட்டது...நீயும் நானும் ஊர் உலகத்து மட்டுமே புருஷன் பொண்டாட்டி..தனி அறையில் இருக்கும் போது நீயே யாரோ...நான் யாரோ...என்னால இல்லற வாழ்கையில் ஈடு படுத்த முடியாது...எனக்குள் ஆண்மை தன்மை குறைந்து பெண்மை தன்மைதான் அதிகம் என்னால் உணரமுடிகிறது தயவு செய்து என் குடும்ப கவுரவத்தை நீ தான் காப்பத்தனும்..என்று அவளிடம் கெஞ்சி கேட்க..

அவன் சொல்வதை கேட்டு கொண்டிருந்த சுதாவின் கண்கள் நிறைந்து வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டவளாய்....

சுதா..தன் குடும்ப கவர்வமும், தன்மானமும், தன் குடும்ப கஷ்டத்தையும் நினைத்து வாழ்க்கை கெட்டு விட கூடாதே என்று.. அவள் அவளை தன்னை தானே தைரிய படுத்தி கொண்டு ஆனந்துடன் வாழ தயாராகிறாள்..

ஆண்டு ஒன்றும் போய்... வயது ஒன்றும் போய் கொண்டு இருக்கிறது..

ஒரு நாள் ஆனந்திடம் சுதா கேட்கிறாள்.....

ஆனந் நமக்கு கல்யாணம் ஆகி இத்தன வருசம் ஆகுது நான் இன்னும் கன்னி கழியாமலே இருக்கேன்னு உங்களுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்..
நான் உங்கள அசிங்க படுத்தவோ,கேவல படுத்தவோ விரும்பல...உங்களுக்கு இல்லற வாழ்க்கையில் இஸ்டம் இல்லன்னு தெரிந்ததும்.. உங்கள ஒரு நாளும் நான் நெருங்க முயற்சி கூட செய்யல...ஆனா இப்ப உங்ககிட்ட ஒன்னு கேக்கிரேன் தரேன்னு சொன்னா சொல்லுறேன்..என்றால் சுதா..

சொல்லு...சுதா...என்னால எது முடியுமோ... அத உனக்குக்கு தராமே யாருக்கு தர போறான்...எனக்காக உன் வாழ்கையவே துலச்சிட்டு இருக்கியே...என்று அவளை ஏறிட்டு ஒரு முறை பார்த்தான்...

ம்....ம்... எனக்கு உங்க விந்து வேணும்...நான் ஒரு டாக்டரிடம் விவரம் கேட்டேன்...கணவர் இல்லற வாழ்க்கைக்கு ஒத்து வராவிட்டா அவரிடம் விந்து அணுக்கள் தரமானதா இருந்தா...

அவர் விந்துவை எடுத்து என் கரு முட்டையுடன் சேர்த்த நமக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்..ம்...ன்னு...

இதை கேட்டு கொண்டிருந்த ஆந்த....
ஆழ்ந்த் யோசனைக்கு பின் சரி என்று ஒப்பு கொண்டான்...

சுதாவின் திட்டப்படி அவள் தாய்மையும் அடைந்தாள்...இப்படி தான் இரண்டு பிள்ளை பெற்று எடுத்தாள் சுதா....

இப்படிதான் நாற்பது ஆண்டுகள் தாம்பத்தியம் இல்லா வாழ்க்கை ஓடி கொண்டு இருக்கிறது இவர்களின் வாழ்கையில்....

இப்படியாக எத்தனை பேர் இன்னும் இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார்கள்.. இதற்க்கு என்னதான் வழி....இதற்கு மருத்துவத்திலும் வழி இல்லையா?இதற்கு முற்று புள்ளி வைப்பது தான் யார்???... என்பது தான் என் கேள்வி..தாம்த்தியம் இல்லா வாழ்க்கை இனிக்குமா???என்று என் மனது மீண்டும் ஒரு கேள்வி எழுப்பி கொண்டுருகிறது.....
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”