Page 1 of 1

பிட்காயின் கிரிப்டோ கரன்சி வீக்கெண்ட் ட்ரேடிங்

Posted: Sat Jun 29, 2019 11:05 am
by ஆதித்தன்
வாரத்தின் ஐந்து நாட்கள் பியாட் கரன்சி மார்க்கெட் 24 மணி நேரமும் வர்த்தகத்தில் இருந்தாலும் சனி ஞாயிறு ஆகிய இருநாட்களில் வர்த்தகத்திற்கு கிடைப்பது இல்லை. ஆனால் கிரிப்டோ கரன்சி எந்த நேரமும் வர்த்தகம் செய்து கொள்ளும் வகையில் மார்க்கெட்டில் இருக்கின்றன. ஆகையால் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் கிரிப்டோ கரன்சி மட்டும் ட்ரேடிங் ஆவதால் அதில் அதிகப்படியான வர்த்தகம் நடைபெறுகிறது. குறிப்பாக வீக்கெண்ட் என ஒய்வில் இருக்கும் பணிக்கு செல்லும் படித்த நபர்கள் பலரும் கிரிப்டோ டிரேடிங் செய்வதால், ஞாயிற்றுக் கிழமை மார்க்கெட் நல்ல விலை மாற்றம் ஆகுகிறது.

தற்பொழுது பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிக்குள் பெரிய முதலீட்டாளர்கள் களம் இறங்கிவிட்டதால், ஏற்றமும் இறக்கமும் என வேகமாக மார்க்கெட் ஒவ்வொருநாளும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஒர் பொருளை வாங்கியே வைத்திருப்பதனைக் காட்டிலும், குறைந்த விலையில் வாங்குவதும், கூடுதல் விலைக்கு விற்பதும், அதன் அந்த விற்ற விலையைக் காட்டிலும் குறைந்த விலையில் வாங்குவதும் பின் விற்பதும் என வாங்கி விற்று வாங்கி விற்று செயல்படுவதன் மூலம் மட்டுமே அதிகப்படியான இலாபத்தினை ஈட்ட முடியும்.

பியாட் கரன்சி ஒர் நிலையான இடைவெளியில் மார்க்கெட் விலை இருந்தாலும் அதில் விற்று வாங்கி, வாங்கி விற்று என இரண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்தியே இலாபம் அதிகம் ஈட்டப்படுகிறது. அதைப்போலவே கிரிப்டோ கரன்சியிலும்.

தினம் 2%... 3 %.. 5% என மார்க்கெட் விலை உயர்வினைப் பெற்றுக் கொண்டே இருக்கும்... ஒர் நாள் சட்டென 10 % .....20% என கீழே சரிந்துவிடும். இது குறைந்த விலையில் வாங்குவதன் மூலம் விலை ஏற்றமும், விலை ஏறியப்பின்னர் இலாபத்தினை ஈட்ட விற்பதனால் ஏற்படும் விலை சரிவினையும் ஏற்படுத்துகிறது.

நல்ல உயர்வான விலையிலேயே விற்றவர்கள், அடுத்து மார்க்கெட் கீழே சரிந்து குறைந்த விலையில் மீண்டும் வாங்கினால், மார்க்கெட் பெரிய உச்சநிலைக்கு செல்லும்.

ஒர் வருடத்திற்கு முன்னர், அவ்வாறே, வாங்குவதும் விற்பதும் வாங்குவதும் விற்பதுவும் என பிட்காயின் விலையை மிகப்பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த ஆண்டும் அதைப்போல் மிகப்பெரிய உச்ச நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு இருப்பதுபோல, மார்க்கெட் நிலை கொண்டு மீண்டும் 2%... 3% என உயர்வதனைப் பார்க்கும் பொழுது தெரிகிறது.

நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தி, வர்த்தகம் செய்பவர்கள் வீட்டிலிருந்தே பல ஆயிரத்தினை தினம் தினம் சம்பாதித்துவிடுகிறார்கள். அத்தகைய வாய்ப்புகளை வழங்கும் இணைய உலகம்... சிறந்த வளர்ச்சி.