Page 1 of 1

பிட்காயின் விலை 13000 டாலர், இல்ல 11000 - இலாபம் ஈட்டும் பெரிய கை

Posted: Thu Jun 27, 2019 11:59 pm
by ஆதித்தன்
சட்டென விலை சரிவு.

காலையில் தான் 13000 டாலர் பிட்காயின் விலை என வேகமாக ஒவ்வொருநாளும் மேலேறி வந்தது. அதில் 2000 டாலர் விலை குறைவு ஒரே நாளில் நடந்துவிட்டது.

22% விலை சரிவு ஒரே நாளில் நடந்துள்ளது.

5% - 10% என மார்க்கெட் ஏறிக் கொண்டிருந்தது. இன்றே ஒரே நாளில் 22%+ விலைச் சரிவு என்பது, கீழ்பக்கமாக விற்பனை செய்தவர்களுக்கு பெரிய இலாபமாக 22% -ஐ ஒரே நாளில் கொடுத்துள்ளது.

விலை ஏற ஏற, அதன் உச்சத்தின் சார்ட் ஸ்டிக் எவ்வாறு வேகமாக ஏறுகிறதோ, அதனைக் காட்டிலும் வேகமாக டக்கென விலை சரிவு நடக்கும் என்பதனால், விலை 3 மடங்குக்கும் மேலாக ஏறிவிட்டப்பின் மார்க்கெட்டுக்குள் இறங்குவதில் கவனம் தேவை என்று சொல்லப்படுவது.

தற்போதைய நிலவரம், பெரிய கைகள் அவ்வப்பொழுது விற்று இலாபத்தினை ஈட்டிக் கொண்டே மீண்டும் மீண்டும் வாங்குவதால், அடுத்தடுத்து விலை ஏற வாய்ப்பிருக்கிறது. பொதுச் செய்திகளும் பிட்காயினுக்கு ஆதரவாகவே உள்ளது.

இன்றைய நாள் அனைத்து கிரிப்டோ கரன்சிக்கும் கரடியே வலுவாக அமைந்து, விலை சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.

வர்த்தக வாய்ப்புகளை சரியான தருணத்தில் பயன்படுத்திக் கொள்வது நல்லது.