Page 1 of 1

பேஸ்புக் Libra Coin பயன் உள்ளதா? பிட்காயினுக்கு இது போட்டியா?

Posted: Wed Jun 26, 2019 7:14 pm
by ஆதித்தன்
பேஸ்புக் புதியதாக லிப்ரா என்ற பெயரில் டிஜிட்டல் காயின் கரன்சியினை வெளியிட இருப்பதாக தகவல் ஏற்கனவே இணையத்தில் பரவ ஆரம்பித்துவிட்டன. ஆரம்பத்தில் லிப்ரா காயின் பிட்காயினுக்கு நெருக்கடியினை கொடுக்கும் போட்டி காயின் என்றும், இன்வஸ்ட்மெண்ட்க்கு ஏற்றது என்றும் தகவல் பரவின.

ஆனால், பேஸ்புக் லிப்ரா காயின் வெளியிட சுவிஸ்லாந்து நாட்டிடம் கொடுத்துள்ள டாக்குமெண்டினை பார்க்கும் பொழுது, அது எதுவுமே சரியான தகவல் இல்லை என்பது வெளியாகி வருகிறது.

பேஸ்புக் தனது உறுப்பினர் பயன்பாட்டிற்கு வரும் பணத்தினை காயினாக மாற்றம் செய்து பயன்பாட்டில் வைத்துக் கொள்ள அனுமதி பெறும் திட்டமாகவே இருக்கலாம்.

பெரும்பாலும் இது பேஸ்புக் நிறுவனத்திற்கு இலாபம் கொடுக்கக் கூடிய ஒர் திட்டமே தவிர, அதனை பயன்படுத்தும் உறுப்பினர்க்கு எந்தவொரு இலாபமும் இல்லை என்ற தெளிவான தகவல் வந்துவிட்டது. ஆகையால் பிட்காயின் இந்த புதிய லிப்ரா காயின் மூலம் எந்தவொரு இழப்பினையும் சந்திக்கப் போவது இல்லை.

அதே நேரத்தில் பிட்காயின் 3500 டாலர் என்ற விலையில் நீண்ட நாட்கள் பாட்டம் லைனைகாக கொண்டிருந்தது என்பது பலருக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன். அந்த நிலையிலிருந்துதான் இன்று 13000 டாலர் என்ற மூன்று மடங்கு விலை உயர்வினைப் பெற்றிருக்கிறது.

பாட்டம் லைனிலிருந்து ஒர் மத்திய நிலைக்கு மார்க்கெட் விலை நிலவரம் வந்துவிட்டதால், அடுத்தக்கட்ட உச்சத்தில் சட்டென விலைச் சரிவு ஏற்படலாம்.

ஆரம்பக்கட்டத்திலேயே வாங்கியவர்கள், அப்படியே வைத்திருந்து அடுத்தக்கட்ட உச்சத்தில் விற்பனை செய்து இலாபத்தினை எடுத்துக் கொள்ளலாம்.

தற்போதைய நிலையில் வாங்க இருப்பவர்களுக்கும் இலாபம் கொடுக்கும் வகையிலேயே தகவல்கள் நேர்மறையாக பரவுகின்றன. ஆகையால் சிந்தித்து செயல்படுங்கள்.

இடோரா என்ற கம்பெனி, ரிப்பிள் என்ற கிரிப்டோ காயினுக்கு சாதகமான பாசிட்டிவ் தகவலை கொடுத்து வருவது, அடுத்தக்கட்ட நிலை விலை உயர்வு ரிப்பிள் கரன்சியில் இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது ரிப்பிள் பாட்டம் விலையில் இருப்பதால், அதனை வாங்குவதும் இலாபம் கொடுக்கும் வகையில் அமையும்.

சரியான தருணத்தில் செய்யும் முதலீடுகள் பெரிய இலாபத்தில் கொடுக்கும் என்பது உறுதி. சிந்தித்து செயல்படுங்கள்.