Page 1 of 1

பாரக்ஸ் கரன்சி ட்ரேடிங் திங்கள் கிழமை நிலவரம்

Posted: Tue Jun 18, 2019 8:41 am
by ஆதித்தன்
வாரத்தின் முதல் நாளில், டாலர் யென் கரன்சி இணை பெரிதாக நேற்றைய நாளில் வர்த்தகம் கொண்டிருக்கவில்லை. 200 பாயிண்ட் அளவிலேயே மார்க்கெட் இடைவெளியினை கொண்டிருந்தது.

பிரிட்டன் டாலர் கரன்சி இணை நேற்றைய நாளில் வர்த்தக இலாபத்தினை கொடுத்துள்ளது. மார்க்கெட் ஆரம்பித்திலிருந்தே டாலர்க்கு சாதகமாக சரிய ஆரம்பித்தது 600 பாயிண்ட் கீழே சரிந்து நிலையான இலாபத்தினை பிரிட்டன் டாலர் கரன்சி வழங்கியுள்ளது.

இரோ டாலர் கரன்சி பெரிய அளவில் மார்க்கெட் இடைவெளியினை உருவாக்கவில்லை. 350 பாயிண்ட் மட்டுமே வர்த்தக நேரத்தில் இடைவெளியினை மேல் பக்கத்தில் அமைத்து, பின்னர் பாதி ரிவர்சலில் இறங்கியுள்ளது.

பெரிய அளவில் இரோ டாலர் இலாபத்திற்கான மார்க்கெட் இடைவெளியினை கொண்டிருக்காவிட்டாலும், ஆரம்ப நிலை வர்த்தகம் ஆர்டர் போடுவதற்கான வாய்ப்பினை கொண்டிருந்திருக்கிறது.