பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Sat Dec 15, 2012 12:54 am

பேபால் அக்கவுண்ட்
PayPal.com Free Online Bank Account
இணையதள வேலைக்கு தயாராகிவிட்ட நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியதும், கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டியதுமான ஒன்று ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட். பல தளங்கள் ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் கொடுத்தாலும், பல வருடங்களாக, அதாவது 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு இன்று வரையிலும் சிறப்பாக நம்பகத்தன்மையுடன், பல வலைத் தளங்களிலும் பயன்படுத்தக் கூடிய PayPal.com என்ற தளத்தில் நமது இலவச ஆன்லைன் பேங்க் அக்கவுண்டைக் உருவாக்கிக் கொண்டால், எளிதாக நமக்கான ஆன்லைன் வேலை மூலம் வர வேண்டியப் பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
Pay and get paid
anywhere in the world.
Millions of customers around the world trust PayPal.
Create your Free PayPal Online Bank Account:

உங்களுக்கான ஆன்லைன் வங்கிக் கணக்கினைத் தொடங்க முதலில் www.paypal.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.

அடுத்து பக்கத்தின் நடுவில் இருக்கும் Sign up Now என்பதனைக் கிளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும் பக்கத்தில், நாடு இந்தியா (நீங்கள் இருக்கும் நாடு) என்பதனைத் தேர்வு செய்துவிட்டு, An account for individuals என்ற பக்கத்தில் இருக்கும் Get Started என இருக்கு இளம் ஆரஞ்சிச்சிவப்பு நிறக் பட்டனை கிளிக் செய்யுங்கள்.

[youtube]http://www.youtube.com/watch?v=AWMHeg0EfIE[/youtube]
PayPal online Free bank account tamil -online job payment gateway buy and sell.jpg
Get started என்று கிளிக் செய்ததும் திறக்கும் பக்கத்தில் வரும் வங்கி கணக்குக் தொடங்குவதற்காக விண்ணப்பப் படிவம் தான் மேலேக் கொடுக்கப்பட்டது.

Paypal Bnak Application Form:
1. மேல் உள்ள படத்தில் டிக் செய்துள்ள நம்பர் 1 மிக முக்கியம். அதில் கொடுக்கும் E-Mail address தான், உங்களுக்கான பேபால் ஐடி. இப்படிவத்தினை நிரப்பி, உங்களுக்கான ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ஒபன் செய்துவிட்டீர்கள் என்றால், யாராவது உங்களது பேபால்(PayPal ID) ஐடி என்ன எனக் கேட்டால் இந்த ஈ-மெயில் ஐடியைத்தான் கொடுக்க வேண்டும்.

அடுத்து பாஸ்வேர்டு கொடுத்து விட்டு, அப்படியே நினைவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

2 & 3 ஆகிய நம்பர் கொடுத்துள்ள இடம் மிக முக்கியம். வெளிநாட்டவர்கள் என்றால் first name, middle name, last name என பெயரை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால், நாம் பெயர் & அப்பா இனிசியல் ஆகிய இரண்டைத்தான் பெயராக பயன்படுத்துவோம், இல்லையா!. ஆகையால் 2- குறிப்பிட்டுள்ள இடத்தில் உங்களது முழுப் பெயர் (எ.கா : Selva Athithan) , அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம். 3 குறிப்பிட்டுள்ள கட்டத்தில், அதாவது last name -ஆக உங்களது இனிசியலைக் கொடுங்கள் (எ.கா: K ).

அதைவிட மிக முக்கியம், இப்பெயரில் உங்களுக்கு நம்மூரில் ஒர் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யார் பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ! அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். உங்களது தந்தைக்குத்தான் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அவரது பெயரிலேயே தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை பேபாலுடன் இணைக்கும் பொழுது, பேபாலில் கொடுத்துள்ள பெயரும் - நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால், பணத்தினைப் பெற முடியாது.


அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைக் கொடுங்கள்.

4 வதாக கேட்பது PAN கார்டு நம்பர். உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன், இல்லாவிடில் ஒர் 250 ரூபாய் செலவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குக்கிறீர்களோ, அவரது பெயரில் பேன் கார்டு இருக்க வேண்டும்.

அடுத்து, உங்களது வீட்டு முகவரி(வங்கியில் கொடுத்த அதே முகவரி) மற்றும் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & create a account என்றுள்ளப் பட்டனைக் கிளிக் செய்தால், உங்களுக்கான ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ரெடி.

Activate PayPal account @ Mail:
ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ரெடி என்ற ஒர் வாசகத்துடன், நீங்கள் கொடுத்துள்ள இமெயில் ஐடிக்கு ஒர் மெயில் அனுப்பி இருப்பார்க்கள். ஆகையால் உடனே சென்று, அந்த இமெயிலைத் திறந்து, அதற்குள் இருக்கு அக்டிவேட் அக்கவுண்ட் டூ கிளிக் திஸ் ப்லோ லிங்க் என்றிருக்கும் லிங்கைக் கண்டு, கிளிக் செய்து கணக்கினை அக்டிவேட் செய்யுங்கள்.

ஒகே... வெற்றிகரமாக கணக்கினை அக்டிவேட் செய்துவிட்டீர்கள் என்றால் அடுத்தக்கட்டமாக நீங்கள் செய்ய வேண்டியது, Paypal.com -க்குள் லாக்கின் ஆவது தான். பேபால் அக்கவுண்ட்டுக்குள் லாக்கின் ஆகும் பொழுது நாம் சரியாக http://www.paypal.com என்ற முகவரியைத்தான் டைப் செய்திருக்கோமா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒகே, லாக்கின் ஆகிவிட்டீர். முதல் முதலில் லாக்கின் ஆகியதும், ஒர் அலர்ட் மெசேஜ் காணப்படும். அதில் நமது இந்தியச் சட்டப்படி பணப்பரிவர்த்தனை செய்வதற்கான ரூல்களான, பேன் கார்டு, வங்கி அக்கவுண்ட் & பிசினஸ் பர்போஸ் ஆகியவற்றினை நிரப்ப வேண்டும். ஆகையால், அந்த அலர்ட் மெசேஜ்-இல் கொடுத்துள்ள Complete Task என்ற லிங்கினைக் க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

முதலில் உங்களது பேன் கார்டு நம்பரினைக் கொடுத்துவிடுங்கள். (பேன் கார்டு நம்பரினை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சப்போர்ட் டிக்கெட் ஒபன் செய்து, ரிப்ளேயில் பேன் கார்டினை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தால் அவர்கள் இணைத்துவிடுவார்கள்)

அடுத்து உங்களது வங்கிக் கணக்கினை பேபால் ஆன்லைன் வங்கியுடன் இணைத்துவிடுங்கள். அவ்வாறு நீங்கள் இணைத்துவிட்டால், உங்களது பேபால் அக்கவுண்டுக்கு வரும் பணம் எல்லாம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் உங்களது வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும். எ.கா: நான் எனது SBI Bank account-ஐ பேபால் அக்கவுண்ட்டுடன் இணைத்துள்ளேன். நீங்கள் எந்த வங்கி எண்ணை வேண்டும் என்றாலும் கொடுத்து பணத்தினை வாங்கிக் கொள்ளலாம்.

பேபாலில் புதிய விதிப்படி, புதிய கணக்குகளுக்கு வரும் பணம் 21 நாட்களுக்குப் பின்னரே தங்களது கணக்கிற்கு வரும், அதுவரை காத்திருப்புப் பகுதியில் பணம் அப்படியே இருக்கும். 21 நாட்களுக்குப் பின் அன்றே அனுப்பிவிடுவார்கள்.
இது நமது இந்திய தலைமை வங்கியான Reserve Bank of India , நமது நாட்டுடன் பண பரிவர்த்தனை செய்யும் வெளிநாட்டு ஆன்லைன் வங்கியான பேபாலுக்கு இட்ட கட்டளை. அதைப் போல், PAN card அனைத்து உறுப்பினர்களிடமும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. சரி, நாம் நமது பேங்க் அக்கவுண்டை இணைப்பதினைப் பார்ப்போம்.
paypal add your bank account and get payment instantly like 24 hrs online job payment buy sell tamil.jpg
Adding Local Bank Account to PayPal:
உங்களது பேபால் அக்கவுண்டுக்குள் லாக்கின் ஆனதும் மேல் உள்ள ஸ்கிரின் தெரியும். அதில் Profile என்றொரு ஆப்சன் இருபதனைக் டிக் செய்துள்ளேன் பாருங்கள். அந்த Profile என்ற ஆப்சனில் மவுஸ் பாயிண்டைக் கொண்டு சென்றதும், மேலும் நான்கு ஆப்சன் வரும், அதில் Add/Edit Bank Account என்பதனைக் கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் பக்கத்தில், Add என்றொரு பட்டன் அடுத்தும் கீழாக வருவதனைப் பாருங்கள், பார்த்து கிளிக் செய்யுங்கள்.
Online Bank account add paypal to indian account tamil online job.jpg
இப்பொழுது திறக்கும் பக்கத்தில் ஆரம்பத்திலே உங்களுக்கான டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்.

மேல் உள்ளப்படி செல்லலாம், அல்லது முன்பு சொன்னது போல, கம்ப்லிட் டாஸ்க் பகுதியில் வழியாகவும் எண்டர் நவ் என்ற பட்டனை க்ளிக் செய்தும் வங்கி விவரங்களை சரியாகக் கொடுக்கலாம்.

1. உங்களது வங்கிக் கணக்கு பெயரும், PAN கார்டில் இருக்கும் பெயரும் சரியாக உள்ளதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், வங்கிப் பெயரில் இருக்கும் PAN CARD proof நீங்கள் மீண்டும் சப்மிட் செய்து உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் ஆரம்பத்திலேயே இதனை சரியாகச் செய்திருப்பதால், எந்த கவலையும் வேண்டாம் விட்டுவிடுங்கள்.

2. வங்கியில் நாம் கொடுத்துள்ள பெயரினை சரியாக டைப் செய்யுங்கள்( Selva Athithan) . குறிப்பு கடைசிப் பெயர்/இனிசியலை மாற்ற முடியாது. அதனால் தான் கணக்கினைத் தொடங்கும் போதே சரியாக செய்யுங்கள் எனச் சொல்வது.

3. அடுத்து பேங்க் நேம் (State Bank of India/Indian Bank/ICICI or any)

4. NEFT IFSC : உங்களது வங்கியில் நம் வங்கியின் IFSC or IFScode என்ன எனக் கேட்டால் சொல்வார்கள், அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

5. Account Number - ( 6000008723*****உதாரணம்)

6. டிக் செய்யுங்கள். பணம் வந்தால் தானாகவே உங்களது வங்கிக்கு வந்துவிடும். வித்ட்ராவலோ, செக்காகவோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. டாலராக இருந்தாலும் இந்திய ரூபாயாக கணக்கீடு செய்து கொடுத்துவிடுவார்கள்.

அவ்ளதான் , continue என்பதனைக் கிளிக் செய்யுங்கள்.

Confirm your Bank account with Received Money:
இப்பொழுது மீண்டும், நீங்கள் கொடுத்த தகவல்கள் எல்லாம் சரிதானா எனக் கேட்பார்கள். (Review) ஆமாம் என்று உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், உங்களது வங்கிக் கணக்கிற்கு ஒர் சிறிய தொகையிலான பணம்(1 ரூபாயோ 2 ரூபாயோ) இரண்டு முறை அனுப்புவார்கள். இப்பணம், 3 நாட்களுக்குள் உங்களது வங்கிக்கு வந்துவிடும். அவ்வாறு வந்த பணத்தில் ஒர் கீ கோடு/description code வந்திருக்கும் அல்லது வந்தத் தொகை எவ்வளவு என்பதனை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
Log in to your PayPal account.
Click 'Profile' near the top of the page.
Click 'My money'.
பின்னர் பேபாலுக்குள் சென்று லாக்கின் ஆகி, ப்ரோபைல் அருகில் காத்திருக்கும் "மை மணி" என்ற பேங்க் அக்கவுண்ட் வெரிபை பட்டன் லிங்க் செய்து, வெரிபிகேஷன்க்கு அனுப்பிய தொகையையோ கேட்பதனைச் சரியாக கொடுத்தோம் என்றால், உங்களது வங்கி கணக்கு இணைக்கப்பட்டது உறுதிப்படுத்தப்படும். இது பற்றிய விவரத்தினை, தெளிவாக அவர்கள் ஆங்கிலத்தில் கொடுப்பார்கள். ஆகையால் படித்துக் கொள்ளுங்கள், அல்லது காப்பி பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். பணம் உங்களது வங்கி வருவதற்குள், மேலும் விவரமாக பேபால் அக்கவுண்டினை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விவரத்தினை கீழ் ஆங்கிலத்தில் இருக்கிறது படித்துக் கொள்ளுங்கள்.

ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று சொன்னால், இந்த முறைகளை 10 நாட்களுக்குள் சரியாகச் செய்து முடித்தால் தான் அக்கவுண்ட் வெரிபை ஆகும். பேபால் அக்கவுண்ட் வெரிபை ஆனால் தான் சரியாக பணத்தினை ஒவ்வொரு ஆன்லைன் ஜாப் தளத்திலிருந்தும் விரைவாகப் பெற முடியும்.

ஆகையால் சந்தேகம் எனில் ஒர்முறைக்கு இரண்டுமுறைப் படித்துவிட்டு கேட்டுச் செய்யுங்கள்.


அடுத்து மூன்றாவது, அக்கவுண்ட் பர்போஸ் என்றப் பகுதியில் "Advertising & *******" என்று வரும் ஆபசனைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பேபால் அக்கவுண்ட் ஓகே!!! :great:

பேபால் அக்கவுண்ட் வெரிபை என்று வந்ததும், ஒர் சிறிய தொகையினை ஏதேனும் ஆன்லைன் ஜாப் மூலம் வாங்கி உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கு நமது டீக்காசு ஆன்லைன் ஜாப் தளத்தில் எளிமையான டேட்டா என்றி ஜாப் செய்தீர்கள் என்றால் ஒரே நாளில் ரூ.30 கணக்கில் சேர்த்துக் கொள்ள முடிவதோடு, அதனை நமது பேபால் அக்கவுண்டிற்குள் வாங்கிக் கொள்ளலாம். ஆகையால் பேபால் அக்கவுண்ட் வெரிபை ஆனதும், இந்தத் தளத்தில் வேலை செய்து பணம் வாங்கி கன்பார்ம் செய்து கொள்ளுங்கள். ஜாப் சைட் லிங்க் >

குறிப்பு: பேபாலில் டெபிட் கார்டு/கிரிடிட் கார்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் பேபால் கம்பெனி மிகவும் நம்பகமானது என்பதால் தைரியமாக நமது வங்கி, கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றின் எண்களை கொடுத்து அக்டிவேட் செய்து கொள்ளலாம். இதனால், பிற தளங்களில் ஏதேனும் வாங்கும் பொழுதோ, அல்லது பணத்தினைப் பெறும் பொழுதோ, நேரடியாக நாம் நமது கிரிடிட் கார்டு, பேங்க் அக்கவுண்ட், டெபிட் கார்டு நம்பர்களைக் கொடுக்காமல், பேபால் வழியாக செய்து கொள்ளலாம். நாம் செய்ய இருக்கும் பல ஆன்லைன் ஜாப் தளங்களும் பேபால் வழியாகவே நமக்கு பணம் வழங்க இருக்கின்றன என்பதும் மிக முக்கியம்.

உங்களது ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ரெடி ஆகிவிட்டது அல்லவா! அடுத்து நாம் ஆன்லைன் வேலை செய்ய ஆரம்பிப்போம்

மீண்டும் வாருங்கள் > பணம் சம்பாதிக்க ! Paid Works topic

:thanks:
PayPal.com Customer care no : 18002123852 (mr .Mannish)
Here you will get clear telephonic conversation to rectify the what ever issue regarding the paypal account
We can talk in simple english
We have noticed that people tend to confuse their bank account number with their debit card number. Debit card numbers will not be accepted when adding or editing your bank details. To help you as quickly as possible, here is information we believe will most likely meet your needs.

A.What are the Reserve Bank of India requirements for PayPal customers in India?
B.How do I add my bank account in India to my PayPal account?
C.How do I confirm my bank account in India?
D.How do I remove a bank account from my PayPal account?
E.Can I alter the frequency of, or stop the auto-withdrawals from my PayPal balance?

If these options do not help you, please reply to this email with detailed information about your situation and we'll do our best to get back to you promptly.
Sincerely,
PayPal

A. What are the Reserve Bank of India (RBI) guidelines for PayPal customers in India?

The RBI guidelines went into effect on 26 August 2011. They require you to:

- Add a bank account in India to your PayPal account
- Update your PayPal account with your Purpose Code
- Add your PAN (Permanent Account Number) to your PayPal account

Please note that you may not be able to receive or withdraw money until your account includes this information. If you've not added your bank account in India, your PAN, and a Purpose Code to your PayPal account, please do so now. Here's how:

Log in to your PayPal account.
Find the reminder near the top of your Account Overview.
Follow the steps to add the required information.
B. How do I add my bank account in India to my PayPal account?

Here's how to add your bank account:

Log in to your PayPal account.
Click 'Profile' near the top of the page.
Click 'My money'.
Click 'Update' beside 'Bank accounts' and then click 'Add'.
Enter the requested information and then click 'Add Bank Account'.
C. How do I confirm my bank account?

For security purposes or as part of our verification process, we may ask you to add a bank account to your PayPal account and confirm you own this bank account.

To initiate confirming your bank account:

Log in to your PayPal account.
Click 'Profile' near the top of the page.
Click 'My money'.
In the Bank accounts section click 'Update'.
Click 'Confirm' next to the bank account you want to confirm.
Click the 'Set up Direct Debit' button.
The next page will display your bank details. Enter the full address of your bank account, then click 'Submit'.
Once you've clicked 'Submit', we will send two random deposits (both between 1.00 INR and 1.99 INR) to your bank account. These deposits are at our expense and you will find them on your online bank statement within two to three working days, or on your next paper statement.

Here is how to enter the random deposits and confirm your bank account:

Log in to your PayPal account.
Click 'Profile' near the top of the page.
Click 'My money'.
Click 'Unconfirmed' next to the bank account you want to confirm.
Enter the exact amounts of the 2 deposits made to your account, then click 'Submit'.
Note: The bank account confirmation process:
- Does not cost you anything.
- Confirms you own this bank account because only you can access the two deposits.

D. How do I remove a bank account from my PayPal account?

Log in to your PayPal account.
Click 'Profile' near the top of the page.
Click 'My money'.
Click 'Update' beside 'bank accounts'.
Click 'Remove' next to the bank you want to remove.
Review your account information, and then click 'Remove'.
E. Can I alter the frequency of, or stop the auto-withdrawals from my balance?

To remain in compliance with the Reserve Bank of India's guidelines PayPal users in India are not allowed to hold money in their PayPal account balance. Instead, all payments received into your PayPal account must be withdrawn to your linked bank account in India. The daily auto-sweep of your balance is a part of this requirement. If this situation changes we will be the first to let you know.
ptcnanban
Posts: 24
Joined: Tue Dec 11, 2012 7:27 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ptcnanban » Sat Dec 15, 2012 3:04 pm

பேபால் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி என்று நான் இன்று பதிவு போடலாம் என்றிருந்தேன். நீங்களே போட்டுவிட்டீர்கள்.


4 வதாக கேட்பது PAN கார்டு நம்பர். உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன், இல்லாவிடில் ஒர் 350 ரூபாய் செலவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குக்கிறீர்களோ, அவரது பெயரில் பேன் கார்டு இருக்க வேண்டும்.

pancard ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் இதற்காக ஆகும் செலவு 150 ரூபாய்க்கும் குறைவே
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Sat Dec 15, 2012 6:34 pm

ptcnanban wrote:பேபால் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி என்று நான் இன்று பதிவு போடலாம் என்றிருந்தேன். நீங்களே போட்டுவிட்டீர்கள்.


pancard ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் இதற்காக ஆகும் செலவு 150 ரூபாய்க்கும் குறைவே
நல்லது விரைவாக அதிகப் பயனுள்ளப் பதிவுகளைச் செய்தால் தான், நாம் அடுத்தக் கட்டமான ரெபரலுக்குள் செல்ல முடியும்.

பேன் கார்டு எப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற விவரத்தினை விரைவாக பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

காத்திருக்கிறோம்.

:thanks:
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by sk3662 » Sat Dec 15, 2012 7:05 pm

மாலை வணக்கம் சார்.....

நான் தங்கள் கூறியது போல் PAYPAL...............அக்கௌன்ட் ஓபன் பண்ணிட்டேன் சார்....நன்றி
mohammednaseer
Posts: 75
Joined: Mon Mar 19, 2012 7:52 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by mohammednaseer » Tue Jan 08, 2013 3:01 pm

vanakkam athithan
pan card entraal enna ? credit card a
ennidam bank of ceylon visa card ullathu but athu electronic use only.
naan paypalil signup pannumbothu credit card number ketkirathu but ennidam credit card illay enna seyyalaam konjam vilakkam thaarungal please (vara vara ivan tholla thaangalada saami appudithane)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Tue Jan 08, 2013 3:05 pm

srilanka என்பதால் www.payza.com சென்று கிரியேட் செய்யுங்கள்,

நன்றி.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by dhaya1982 » Mon Apr 15, 2013 12:05 pm

வணக்கம்

திரு.ஆதித்தன் சார் Paypalல் ATM card number கேட்கிறார்கள் நம்பி கொடுக்கலாமா? அதனால் நமக்கு எதுவும் பிரச்சனையை இல்லையே?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Mon Apr 15, 2013 1:20 pm

அந்த ஆப்சனை டிக்/ரிமூவ் செய்து தவிர்த்துக் கொள்ளலாம்.

பெரும்பாலும் நாம் கொடுத்தாலும் நம் பேங்க் கார்டினை ஏற்றுக் கொள்வதில்லை.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by dhaya1982 » Fri Apr 19, 2013 4:31 pm

வணக்கம்

திரு.ஆதித்தன் சார் நான் Paypal account create செய்துவிட்டேன் successfully என்று வந்துவிட்டது ஆனால் 2 நாள் கழித்து Pancard Number invalid என்று அனுப்பி இருக்கிறார்கள்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Fri Apr 19, 2013 7:05 pm

திரும்பவும் மெயிலுக்கு, உங்களது பேன் கார்டினை ஸ்கேண் செய்து அனுப்புங்கள்.... அவர்கள் சரி செய்துவிடுவார்கள்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”