அல்ட் காயின் மூலம் பணம் சம்பாதிக்க பிட் & அஸ்க்

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அல்ட் காயின் மூலம் பணம் சம்பாதிக்க பிட் & அஸ்க்

Post by ஆதித்தன் » Fri Jun 23, 2017 11:24 am

அல்ட் காயின் என பொதுவாக அழைக்கப்படும் கிரிப்டோகரன்சியில் அவ்வப்பொழுது புதியவைகள் வந்து கொண்டே இருக்கும். வரும் புதிய அல்ட்காயினில் சரியான நேரத்தில் சரியான விலையில் முதலீடு செய்தால், ஒர் சில நாட்களில் 300% முதல் 1000% விரைவாக இலாபம் பார்த்துவிடலாம்.

பணம் சம்பாதிப்பதற்கான அடிப்படைகள் தெரியாத ஒர் நபரால் சுயமாக சுயதொழில் செய்து சம்பாதிப்பது என்பது கொஞ்சம் கடினமான விடயம்தான், ஆனால் அதனை கற்றுக் கொள்வது என்பது ஒனறும் அத்தனை கடினம் கிடையாது. ஒர் சில பண்புகளை குணத்திலும் மனதிலும் வளர்த்துக் கொண்டால் போதும், எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.

அல்ட் காயின் பொறுத்தவரைக்கும், ஒர் பெரிய நெட்வொர்க் இயங்குகிறது.. அதுவும் இலட்சம்.. பல இலட்சம் என முதலீடு செய்யக்கூடிய பெரிய நெட்வொர்க் இயங்குகிறது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. ஏன் இதனைச் சொல்கிறேன் என்றுச் சொன்னால், ஒர் பொருளின் விலை உயர்கிறது என்றுச் சொன்னால் அங்கே வாங்குபவர்களின் எண்ணிக்கை அல்லது தேவைப்பாடு அதிகரித்துவிட்டது என்பதுதான் முதன்மைக் காரணம். அதைப்போல், அல்ட் காயின் எனப்படும் டிஜிட்டல் கரன்சி மூலம் பணம் சம்பாதிக்க மிகப்பெரிய நெட்வொர்க் கையில் பணத்தினை வைத்துக்
கொண்டு காத்துக் கொண்டிருப்பதால், வந்தவுடன் வாங்கும் பொழுது விலை சட்டென உயர்ந்துவிடுகிறது.

ஆரம்பத்தில் குறைந்த அளவிலான காயின் வருகை இருப்பதும், கிரிப்டோ நெட்வொர்க் ந்பர்கள் கையில் அதிகம் பணம் இருப்பதாலும் ஒர் சில நாட்களில் 1000% வரை விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. ஆம், இருக்கிற காயினை எல்லாம் கிரிப்டோ நெட்வொர்க் க்ரூப் வாங்கிவிட்டு, பின்னர் அதிக விலைக்கு விற்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த ஒர் நிகழ்வினைச் சுட்டிக்காட்டினால் உடனே உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்பதால், விளக்கமாக கூறுகிறேன். கவனமாக கருத்துக்களை உள்வாங்கி மனதில் பதிய வைத்துக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட்டால் இலாபம் என்பது 100% உறுதி.

சமீபத்தில் ராய்ப்ளாக்ஸ் என்றொரு அல்ட் காயின் வெளிவந்திருந்தது. அதனை எக்சேஞ்ச் செய்யும் வெப்சைட்டாக பிட்ஜிரெய்ல் என்ற தளம் புதியதாக ட்ரேடிங் தளமாக வெளிவந்தது. காயினும் புதுசு வர்த்தக தளமும் புதுசு.

தளம் இயங்க ஆரம்பித்த சிலநாட்களில் ஒவ்வொருவருத்தருக்காக சொல்லிச் சொல்லி.. அப்படியே 1000 நபர்கள் சில வாரங்களில் சேர்ந்துவிட்டனர்.

ஆரம்பத்தில் ராய்ப்ளாக்ஸ் என்ற காயின் 600 சத்தோசிக்கே விற்கப்பட்டது. ஆரம்பத்தில் களம் இறங்கிய அனுபவ முதலீட்டாளர்கள் பெரிய அளவில் பிட்காயினை முதலீடைச் செய்து விற்பனை ஆன ராய்ப்ளாக்ஸ் காயினை வாங்க ஆரம்பித்தனர்.

நாட்கள் செல்லச் செல்ல நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது, ராய்ப்லாக்ஸ் காயின் தேவைப்பாடும் அதிகரித்தது...

தேவைப்பாடு அதிகரிக்க ஆரம்பித்தவுடன், ராய்ப்ளாக்ஸ் காயின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.. 600 சத்தோசியாக இருந்தது 1000 சத்தோசியாக கூடியது... 1500 ஆக கூடியது...

1 மாதத்தில் ராய் காயின் 300% விலை உயர்வினை அடைந்தது.

அடுத்தடுத்து களம் இறங்கிய பெரிய முதலீட்டாளர்களால், 1800 சத்தோசிக்கு விற்கப்பட்ட போதும், 100 பிட்காயினுக்கும் மேல் முதலீடு செய்து ஒரே நாளில் வாங்கல் விற்கல் நடக்க ஆரம்பித்தது.

அடுத்த சில நாட்களில் ராய் ப்ளாக்ஸ் காயின் பெரிய முதலீட்டாளர்கள் கைவசம் சென்றடைந்தது. குறைந்தவிலைக்கு விற்கப்பட்டது எல்லாம் வாங்கப்பட்டது, பின் விற்பனை விலை எனப்படும் அஸ்க் விலை 7000 சத்தோசிக்கு கொடுக்க சம்மதம் வைக்கப்பட்டது.

600 சத்தோசி என விற்கப்பட்ட ஒர் காயின் விலை 2 மாதத்தில் 7000 சத்தோசி என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது என்பது முதலீட்டாளர்கள் நிகழ்த்தப்பட்டது என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

ஒர் பொருளுக்கான தேவைப்பாடினை உறுதி செய்வதும், பொருள்கள் அனைத்தினையும் வாங்கி தன் கைவசப்படுத்துவதுமே அல்ட்காயின் முதலீட்டாளர்களின் விளையாட்டு.

அல்ட் காயின் என்பது எந்தவொரு பயன்பாட்டுக்கும் அற்றது. ஆனால் பணத்தினை பல்மடங்கு பெருக்கலாம் என்ற ஒரே ஆசையின் காரணத்தினால் அதன் தேவைப்பாட்டினை உறுதி செய்கிறார்கள். அவ்வாறு தேவைப்பாட்டின் காரணமான விலை உயர்வை இவர்களே வாங்கி வாங்கி உருவாக்குகிறார்கள்.

ஆயிரத்திற்கு வாங்கி, இரண்டாயிரத்துக்கு விற்றால் இலாபம் ஆயிரம் ஆச்சே.. ஆசை விடுமா? ஆயிரத்துக்கு விற்று, இரண்டாயிரத்துக்கும் வாங்கி ஆசையை தூக்கிவிடும் செயல்பாட்டினை குழுவாக செயல்பட்டு அல்ட்காயின் முதலீட்டாளர்கள் செயல்படுவார்கள். அதிலும் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து செயல்படுவது என்பது இராஜதந்திரத்திலும் பெரும் தந்திரம்.

ஆயிரத்தில் வாங்கி பத்தாயிரத்திரத்திற்கு இலக்கு வைப்பதும், இலக்கினை நோக்கி செல்வதற்காக அடுத்தடுத்து உயர்விலைக்கு வாங்குவதும் என ஒர் விளையாட்டு விளையாடி, தனது வாங்கிய விலை என்பதனை கட்டுக்குள் வைத்து விற்பனை விலையை இலாபத்தில் வைத்து விளையாடுவது இவர்களது சூத்திரம்.

அல்ட் காயின் பொறுத்தவரைக்கும் இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால், வாங்குவது என்பது அடிப்படை விலை நேரத்திலேயே வாங்கிவிட வேண்டும் அல்லது இரட்டிப்பு விலைக்குள்ளாவது வாங்கிவிட வேண்டும் அதற்கும் மேல் கூடுதல் விலையில் வாங்குதல் கூடாது.

ராய்ப்ளாக் அடிப்படை விலை 1000 சத்தோசி, அதன் இரட்டிப்பு விலை 2000 சத்தோசி.

ராய்ப்ளாக் அல்ட் காயினில் முதலீடு செய்ய விரும்பினால், 2000 சத்தோசிக்கு கீழ்தான் செய்ய வேண்டும்...

தற்போது வாங்க நினைத்தால் 4300 சத்தோசிக்குத்தான் கிடைக்கும் என்றாலும், அந்த விலைக்கு வாங்கக் கூடாது. ஏனெனில் அதன் இலக்கான 10000 சத்தோசியில் வாங்க ஆள் இருக்க மாட்டார்கள், கொடுப்பவர்கள் மட்டுமே தங்களது விற்பனை சூத்திரத்தினை பயன்படுத்தி 5000 சத்தோசி... 6000 சத்தோசி என்று விற்று இலாபம் பார்த்துவிடுவார்கள்.

பத்தாயிரம் போகும் என்று ஆறாயிரத்துக்கு வாங்கினால் நம்பாடு அதோபாடுதான்.

அதே நேரத்தில் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்றால், கொடுத்த விலைக்கு வாங்குவதனைக் காட்டிலும், இந்த விலைக்கு கொடு என்று குறைந்த விலைக்கு பிட் செய்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

நானும் ராய்ப்ளாக் காயின் வாங்க ஆசைப்படுகிறேன்... ஆனால் 1500 சத்தோசி என்ற விலைக்கு கொடுத்தால் மட்டுமே வாங்கிக்குவேன் என்று பிட் செய்துள்ளேன்.

1500 சத்தோசி என்ற விலைக்கு வாங்கிக்கும் பொழுது என்னாலும் 5000 சத்தோசி என்ற நிலையில் இடையில் விற்று இலாபத்தோடு வெளியேற முடியும்.

மார்க்கெட்டில் சம்பாதிக்க, எப்பொழுதுமே கொடுக்கும் விலையினைக் காட்டிலும், நமக்கு கட்டுப்படியான விலையில் வாங்குவதல் வேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

கட்டுப்படியான விலையில் வாங்குபவர்கள் கண்டிப்பாக இலாபம் சம்பாதிப்பார்கள், சம்பாதித்துக் கொண்டு இருக்கிறேன்.

அதைப்போல், கட்டுப்படியான விலை என்பதில் தங்களது கையிருப்பு பணம் மற்றும் விலைச் சரிவினைச் சமாளிக்கும் இருப்பு ஒதுக்கீட்டுப்பணம் என சரியாக பணத்தினை கையாளத் தெரிதல் வேண்டும்.

வர்த்தக வாய்ப்புகள் என்பது எப்பொழுதாவதுதான் கிடைக்கும். கிடைக்கும் பொழுது சரியாக இலட்சங்களை முதலீடு செய்து இலட்சங்களை சம்பாதித்துக் கொள்ளுதல் வேண்டும்.

இலட்சங்களை முதலீடு செய்யும் முன், நன்றாக வர்த்தகத்தினைப் பற்றியும், வர்த்தக ஆலோசகரைப் பற்றியும், வர்த்தக மேடைப்பற்றி ஆராய்ந்து முடிவெடுத்து செயல்பட்டால் உறுதியான இலாபம்.

வர்த்தகத்தினைக் கற்றுக் கொள்ள ஆயிரம் ரூபாய் போதும்.

என்னைப் பொறுத்த வரைக்கும் நம்பகமான பாரக்ஸ் வர்த்தக மேடை எப்.பி.எஸ் .. கடந்த 4 வருடமாக அதில் இயங்குகிறேன்.. உடனுக்கூடன் பணம் பெற்றுக் கொள்கிறேன்.

வர்த்தக பயிற்சி கணக்கு ஒபன் செய்ய > www.padugai.com/forextrading.html


Forex வர்த்தகத்தில் சிறிய முதலீடு செய்து நன்றாக வர்த்தகத்தினைக் கற்றுக் கொண்டப் பின், பெரிய முதலீடுகளை அல்ட் காயின் மற்றும் பிற பங்கு வர்த்தக வாய்ப்புகளில் செய்து நல்ல இலாபம் சம்பாதியுங்கள்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”