புதிய உச்சம் தொட்ட பிட்காயின்

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

புதிய உச்சம் தொட்ட பிட்காயின்

Post by ஆதித்தன் » Tue Jun 06, 2017 3:53 pm

பிட்காயின் விலை உயர்வு என்பது ஒவ்வொரு வாரமும் புதிய மைல் கல்லை நோக்கிய விரைவுப் பயணம் போல் அதி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

போகும் வேகத்திற்கு ஏற்ப அவ்வப்பொழுது சிறு சிறு பலிகளையும் கொடுத்து மேலும் உற்சாகத்துடன் பாய்ந்து செல்வதனைப் பார்க்கையில் ஒர் பக்கம் ஆச்சர்யமாக இருந்தாலும், ஒர் பக்கம் இதனை சொல்லிக் கொண்டே இருப்பதால் அடுத்த மைல்கல்லையும் தொட்டுவிடலாம் என்று ஏறிக் கொள்ள ஆசையை ஒவ்வொருவர் மனதிலும் விதைத்துக் கொண்டே இருக்கிறது.

முன்பைக் காட்டிலும் தற்பொழுது பிட்காயினுக்கான டிமான்ட் மிக அதிகமாக அதிகரித்துவிட்டது. குறிப்பாக இந்தியாவுக்குள் பிட்காயின் இறங்குவது தினம் தினம் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது என்பதனை தினசரி விசாரிப்பு மூலம் அறிய முடிகிறது.

பிட்காயின் லீகலா? இல்லீகலா? என்ற கேள்விய்யினைப்போட்டு குழப்பிக் கொள்ளும் நம்ம மக்களா இப்படி இலட்சம் இலட்சமாகக் கொடுத்து பிட்காயினை வாங்குகிறார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்தாலும் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ரிப்போர்ட் பார்க்கும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்தியாவில் புதியதாக பிட்காயின் விற்பனையைத் தொடங்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தளங்கள், வங்கிகளோடு நெருக்கமான உறவு வைத்துக் கொள்ள முடிகிறது என்பதனையும் பார்க்கும் பொழுது ஒர் பக்கம் பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வந்து நிழலாடுகிறது.. அது யாதெனில் ஒர் வருடத்திற்கு முன், நெட் பேங்க் வழியாக சும்மா கிடந்த பிட்காயின் விற்பனை செய்ய கேட்வே கேட்ட பொழுது பல்வேறு கேள்விகளைக் கேட்டு நிராகரித்தவர்கள், இன்று செயல்பாட்டில் இருக்கும் தளங்கள் நெட் பேங்கிங் வசதியோடு இலட்சம் கோடி என பெரிய அளவில் லீகல் அற்ற பிட்காயினை விற்பனை செய்ய அனுமதி கொடுத்துள்ளன.

இப்படியான செயல்பாடுகளை எல்லாம் பார்க்கும் பொழுது பிட்காயின் டார்கெட் விலையான ஐயாயிரம் டாலர் என்பதனை உயர்த்துவதற்கான செயல்பாட்டினை எந்தளவுக்கு அதிகார மட்டத்தோடு இணைந்து இலுமினாட்டிகள் செயல்படுத்துகிறார்கள் என்பதனை உணர்ந்து கொள்ள முடிகிறது.

அடுத்த டார்க்கெட் விலை ஏற்றத்தில் பெரிய காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், கொஞ்சம் கவனத்தோடு முரட்டு வேகத்தில் செல்லும் காளை மீது பயணம் செய்யுங்கள்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”