Page 1 of 1

பிட்காயின் மார்க்கெட் உச்ச வளர்ச்சி தொடருமா?

Posted: Thu Mar 16, 2017 8:54 am
by ஆதித்தன்
பிட்காயின் போதிய ஏற்றத்தினை முதல் காலாண்டில் அடைந்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஆனாலும் மார்க்கெட் தொடர்ந்து உச்ச நிலையை நோக்கி செல்வது ஆச்சர்யமாக இருக்கிறது.

2000 $ நோக்கி பிட்காயின் விலை வளர்ச்சி இருக்கிறது என்று ஒர் பக்கம் கட்டுரைகள் படித்தாலும், ஏற்றத்திற்கான இறக்கம் காணாமல் வளர்ந்து செல்லும் அளவிற்கா பிட்காயின் தேவைப்பாடு அதிகரித்துவிட்டது என்பதும் ஒர் கேள்விக்குறியே.

பிட்காயின் விலை சரிவினை அடையும் என்ற எனது கருத்துப்படியே பிட்காயினை விற்று இலாபம் பார்க்க முடிவெடுத்தேன். ஆனால் மார்க்கெட் தொடர்ச்சியாக உச்ச நிலையிலேயே இருப்பதும், அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு அச்சாரமா? என்ற ஒர் கேள்வியினை தற்போதைய டபுள் ரெசிஸ்ட்டன்ஸ் பகுதிதான் பதில் சொல்ல வேண்டும்.

என்னைப் பொறுத்தவரைக்கும் டபுள் ரெசிஸ்டன்ஸ் பகுதியிலிருந்து மார்க்கெட் சரிவினைச் சந்திக்கும் என்பதுதான். அதனை உறுதிப்படுத்தும் வகையில், மார்க்கெட் வர்த்தகர்கள் தங்களது முதலீடுகளை மற்ற பங்குகளுக்கு மாற்ற ஆரம்பித்துவிட்டார்கள் என்பது சில பங்குகள் திடீர் விலை உயர்வினை அடைவதன் மூலம் கணிக்க முடிகிறது.

பிட்காயின் விலை தற்பொழுது 1250 டாலர் ஆகிவிட்டதால், வாங்கி இலாபம் பார்ப்பது என்பது ஆபத்துடன் கூடிய முதலீடு ஆகும். ஏனெனில் சரிந்தால் 900$ விலைக்கு சட்டென போய்விடும் .. பின்னர் திரும்பி வர நீண்ட நாட்கள்... ஆகையால் குறைந்த நாட்களில் இலாபம் பார்க்க விரும்புபவர்கள் பிட்காயினை தேர்ந்தெடுக்காதீர்கள்.

Re: பிட்காயின் மார்க்கெட் உச்ச வளர்ச்சி தொடருமா?

Posted: Thu Mar 16, 2017 9:24 am
by marmayogi
2017 January மாதம் 10$ ஆக இருந்த dash தற்போது 99$ ல் வர்த்தகம் ஆகிகொண்டு இருக்கிறது. வர்த்தகர்கள் கொஞ்சம் கூட பயப்படாமல் பணத்தை crypto currency ல் அள்ளி கொட்டுகிறார்கள் . வருங்காலத்தில் crypto currency எந்த நிலைக்கு செல்லும் என்பது கேள்விக்குறிதான்!!!!

Re: பிட்காயின் மார்க்கெட் உச்ச வளர்ச்சி தொடருமா?

Posted: Thu Mar 16, 2017 9:49 am
by ganesh529
etherium also good two days before 30 dollar.now 45 dollar.