பணக்கார மனப்பாங்கு ஏழை மனப்பாங்கு

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
வெங்கட்
Cash on hand: Locked

பணக்கார மனப்பாங்கு ஏழை மனப்பாங்கு

Post by வெங்கட் » Wed May 11, 2016 4:43 pm

இன்று இணையத்தில் படித்தது. (இம்மாதிரியான மனிதர்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள்)

ஏழைகள்தான் மிகவும் கடினமான மனிதர்கள். (பணம் இல்லாதவர்கள் ஏழைகள் அல்லர். ஏழைகள் என்போர் ஏழை மனப்பாங்கு கொண்டவர்கள்)

இலவசமாக எதையாவது கொடுத்தால் வலைவிரிப்பதாக சந்தேகப்படுவார்கள். சிறிய முதலீடு என்று கூறினால் "அதிகம் சம்பாதிக்க முடியாது" என்பார்கள். பெரிதாகச் செய்யலாம் என்று அழைத்தால் "பணம் இல்லை" என்பார்கள். புதிதாக ஏதாவது செய்யலாம் என்று அழைத்தால் "அனுபவம் இல்லாமல் செய்தால் சாிவராது" என்பாா்கள். சாி, பழகிய வியாபாரங்களை செய்யலாம் என்றால் "போட்டி அதிகம்" என்பாா்கள். ஒரு கடையைப் பாா்த்துக் கொள்ளச் சொன்னால் "சுதந்திரம் போய்விட்டது" என்பாா்கள். புதிய வகை வியாபாரம் என்று அழைத்தால் MLMஆ என்று தயங்குவாா்கள். வேறு புதிய ஏதாவது ஒன்றைச் சொன்னால் "நிபுணா்களால்தான் முடியும்" என்பாா்கள்.

இவா்கள் அனைவாிடமும் உள்ள ஒற்றுமை − இப்படித்தான் வேண்டும் என்று இவா்களுக்கே தெளிவாகத் தொியாத ஒரு வாய்ப்பை யாராவது உருவாக்கித் தருவாா்கள் என்று எதிா்பாா்ப்பது மட்டுமே. கையில் கிடைத்ததைக் கொண்டு மேலே வரமுடியுமா என்று பாா்க்காமல், பல்கலைக் கழகப் பேராசிாியா்களைவிட அதிகமாகச் சிந்திப்பவா்கள், கடைசியில் குருடனைவிடவும் குறைவாகச் செயல்படுபவா்கள்.

இவா்களுக்குத் தொிந்த நிபுணத்துவம் இவா்களைப் போன்ற அல்லது இவா்களைவிடக் கீழானவா்களிடம் ஆலோசிப்பது அல்லது அக்குவேறு ஆணிவேறு அலசுவது மட்டுமே.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”