Page 1 of 1

கையொப்ப விளம்பரமும் கையாளும் விதமும் - #GBDgift

Posted: Fri Oct 23, 2015 6:31 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=5YGHWoZHr-E[/youtube]
கையொப்ப விளம்பரமும் கையாளும் விதமும்

கையொப்ப விளம்பரமும் கையாளும் விதமும்::

கோல்டன் மெம்பர்களுக்கான சிறப்பு வசதியாக கையொப்பப் பகுதியில் விளம்பரங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை இன்னும் நாம் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் இருக்கிறோம் என்று கருதுகிறேன். ஆகையால் இன்று அதுபற்றிய எண்ணங்களை விரிப்போம்.

நாம் முதல் பதிவாகச் செய்தாலும் சரி, அப்பதிவுக்கு பின்னூட்டமாகப் பதிவு கொடுத்தாலும் சரி, நமது ஒவ்வொரு பதிவின் அடியிலும் கையொப்பம் என்ற Signature கட்டம் இணைக்கப்பட்டிருப்பதோடு, இக்கட்டத்திற்குள் நாம் கொடுக்கும் தகவல் தெரிகிறது.

கையொப்பப் பகுதியினை அவ்வப்பொழுது தேவைக்குத் தகுந்தாற்போல் மாற்றம் செய்து கொள்வதன் மூலம், இதன் தாக்கம் என்பது நாம் பதிவு செய்திருந்த அனைத்து இடங்களிலும் உடனடியாக மாற்றம் காண்கிறது.

ஒருவர் சுமார் 1000 பதிவுகள் செய்திருந்தார் என்றுச் சொன்னால், அவரது கையொப்பப் பகுதி விளம்பரம் ஆயிரம் பதிவுப் பக்கத்திலும் வெளியாகுகிறது என்று பொருள். இதில் எந்தவொரு பக்கத்தில் உள்ள தகவலையும் ஒர் வாசகர் படிக்க நேரிட்டாலும் நமது விளம்பரத்தினைப் பார்க்கிறார்.

நமது பதிவுகளின் எண்ணிக்கைக் கூடக் கூட, நமது கையொப்பப் பகுதி விளம்பரத்தினைப் பார்க்கும் வாய்ப்பும் வாசகர்களுக்கு கூடுகிறது. அதிக வாசகர்கள், அதிக வருவாய் என்பதுதான் இதன் சூட்சமம். இதன் காரணமாக உங்களிடம் தினம் பதிவுகள் செய்யுங்கள், பிறர் பதிவுக்கு பின்னூட்டம் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஏதேனும் ஒர் கருவினை எடுத்து முதல் பதிவினைச் செய்வது என்பது அதிக எண்ணிக்கையில் முடியாவிட்டாலும் தினம் ஒன்றாவது செய்வது, மற்றவர்களது பதிவுகளில் கருத்து பகிர்வது என்பது நமது வருவாய்க்கு உதவியாக இருக்கும்.

நமது படுகையில் பிறர் செய்யும் நல்ல பதிவுகளில் நாம் முதல் ஆளாகச் சென்று பதிவுப் பக்கத்திலேயே நமது பின்னூட்டமும் வரும் விதமாக முதல் நான்கு ஆட்களுக்குள் ஒருவராக பின்னூட்டத்தினைக் கொடுத்துவிட்டால், அப்பதிவினைப் படிக்கும் வாசகர்கள் நமது விளம்பரத்தினைப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பினை உருவாக்கிக் கொள்கிறோம்.

பல பல பதிவுகளைச் செய்து விளம்பர இடத்தினைப் பிடித்துக் கொண்ட நாம், அடுத்தக்கட்டமாக கவனம் செலுத்த வேண்டியது என்பது விளம்பரத்தில் தான்.

நாம் எதனை விளம்பரப்படுத்தப்போகிறோம், அதனில் வாசகர்களுக்கு பிடித்தமானது எது, அதனை எவ்வாறு சொன்னால் வாசகர்களின் மனதில் இடம் பிடிக்கும் வகையில் அமையும் என்று சற்று நிதானமாக யோசித்துக் கொடுக்க வேண்டும்.

3 வரிகளில் விளம்பரத்தினை அமைத்தாலும், அதன் தாக்கம் என்பது வாசகரின் மனதினை தொடும் அளவிற்கு இருக்க வேண்டும் என்பதுதான் விளம்பரத்துறையின் முக்கிய அம்சம்.
http://www.tamiloviam.com/site/wp-conte ... hinnis.jpg[/fi]விளம்பரத்துறை என்பது தற்பொழுது கல்லூரிகளில் ஒர் பாடப்பிரிவாகச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதனை எல்லோரும் படிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இவர்கள் செய்துகாட்டியவற்றை நாம் அனைவரும் தினம் தினம் பலமுறை பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். ஆகையால், இதனை பெரிதாக பட்டயப்படிப்பில் படித்துதான் அறிந்து கொள்ள முடியும் என்பதில்லை. நாம் பார்த்த பத்து விளம்பரங்களை நிதானமாக சிந்தித்தாலே, நம்மாளும் திறம்பட விளம்பரத்தினை அமைக்க முடியும்.

விளம்பரம்:
அசாத்தியமானதை எல்லாம் ரொம்ப ஜாலியா சாத்தியக்கூறு போல நடிச்சிட்டு போய்டுவாங்க... இத நாம ஒர் நாள் அல்ல.. நாளும் பார்த்துக்கிட்டே இருந்துட்டு, அப்படியும் இருக்குமோ என்று, நாமளும் வாங்கித்தான் பார்ப்போமே என்று வாங்கிடுவோம். இதனை பெரும்பாலும் அனைத்து விளம்பரத்துக்கும் இது பொறுந்தும், ஆகையால் விளம்பரம் என்பதே வசியம் என்பதனைப் போல்தான், திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால் அதனை மனம் ஏற்கும் விதத்தில் கொண்டு சென்றுவிடுவது.

[youtube]https://www.youtube.com/watch?v=iWKKz8Flz7E[/youtube]

ஒவ்வொருவரின் விருப்பமும் மாறி மாறி வீடுகளில் அமைந்தாலும், அவர்கள் அனைவரது விருப்பமும் ஒன்றாகும் விதமாக வசியம் வைப்பதில் விளம்பரத்தின் பங்கு மிகையானது.

[youtube]https://www.youtube.com/watch?v=rclttXF1VdE[/youtube]

பெரிய பெரிய நடிகர்களை வைத்தாவது நமது விளம்பரத்தின் மீது கவனத்தினைத் திருப்பிட வேண்டும், வியாபரப் பெயரை மக்கள் மனதில் விதைத்துவிட வேண்டும் என்று ஒவ்வொரு கம்பெனியும் பெரிய தொகையை செலவிடும் துறை விளம்பரத்துறை.

ஒர் கடைக்குப்போய் சோப்பு வாங்கப் போறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்... சோப்புல எந்த சோப்பு வாங்குவது என்பதனை நிர்ணயிப்பதே விளம்பரம் தான். இப்போ சோப்புலக்கூட, ஹமாம்மா...லக்சா என்று குழப்பம் வந்தால் கடைசியில் பெரிதும் விடை கொடுப்பது எதும்மா என்று அதுக்கும் விளம்பரம்தான் நிர்ணயம் செய்யும் என்று நினைக்கிறேன். ஏன்னா அவங்கதான் ரொம்ப அதிகமா நம்ம கண்களுக்குள் வர்றாங்க, மனசுக்குள் உட்கார்ராங்க... தரமோ உரமோ அவங்க சொல்றதுதான்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் விளம்பரம்:
நாம் செய்யும் ஆன்லைன் ஜாப்புக்கும் விளம்பரம் கொடுத்தால் தான் அதிகம் சம்பாதிக்க முடியும். அதற்காக டி.வி..யில் விளம்பரம் கொடுக்கணுமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம், அந்த அளவுக்கு எல்லாம் பணம் செலவு இல்லாமலே இலவசமாக நமது விளம்பரங்களை ஆன்லைனில் அமைத்து வருவாய் பார்க்கலாம்.

ஆன்லைனில் விளம்பரங்களை சரியாக பயன்படுத்தினாலே நாம் நல்ல வருவாயினைப் பார்க்க ஆரம்பித்துவிடலாம். ஆன்லைன் ஜாப் பற்றி பல விளம்பரங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. ஏன் நம்ம படுகையில் ஒவ்வொரு பதிவின் டைட்டில் எபக்ட்டுமே விளம்பர அமைப்பில் தான் இருக்கும்.

தினம் 100 டாலர் ... ஒர் மணி நேரத்தில் 1000 டாலர் என்று பல பல விளம்பரம். வேலை செய்ய தயங்குகிறார்கள் என்றால்... அதுக்கும் ஏற்ற விளம்பரமாய்.. காப்பி பேஸ்ட் செய்தால் போதும்.. இரண்டே கிளிக் செய்தால் போதும் சாப்ட்வேர் பார்த்துக்கும் என்றோ ஆட்டோமெட்டிங் சிஸ்டம் என்று பல விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள்... பார்த்து, உள்ளேயும் போயிருப்பீர்கள்.. நீங்கள் மட்டும் அல்ல, பலரும் போயிருப்பார்கள்... ஆனால் சரியாக தெளிவில்லாமல் எதனையும் செய்ய முடியாமல் போயிருக்கலாம் அல்லது பணத்தினைக் கட்டுங்கள் என்று கேட்டிருப்பதால் திரும்பி ஓடி வந்திருக்கலாம்.

இப்படி ஆன்லைனில் பலர் விளம்பரங்களை பார்த்து முயற்சித்தாலும் போதுமான திருப்தி என்பது பலருக்கும் கிடையாது. ஏனெனில் பலரும் அடிப்படை ஆன்லைன் ஜாப் தகவல்கள் அறியாததால், வெப்சைட்டில் கொடுக்கும் பேனரினை மட்டும் நாம் விளம்பரம் செய்தால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. யாராவது சொல்லித் தரமாட்டார்களா, விவரம் சொல்லமாட்டார்களா என்று ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்களே தவிர, அதனை அத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும் என்பதற்கான எந்தவொரு அடிப்படையும் புதியவர்களுக்குத் தெரியாது.

புதியவர்களை நாம் உள்ளே நுழைத்துக் கொண்டே இருந்தால் தான் நமது வருவாய் என்பது அதிகரித்துக் கொண்டே செல்லும். அப்படி இருக்கையில் புதியவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நமது விளம்பரத்தினை அமைக்க வேண்டும். அதாவது, சைட்டின் விளம்பரப் பேனரை மட்டும் வைப்பது இல்லாமல்.. நாமும் கூடுதலாக இரண்டு வரியாக.. இத்தளத்தில் எனது டவுன்லைனாக சேர்ந்து கொண்டால் உங்களுக்கு இத்தளத்தில் எப்படி வேலை செய்வது என்பது பற்றி சொல்லித் தருகிறேன். இத்தளத்தில் தினம் ஆயிரம் சம்பாதிக்கலாம், அதற்கான விவரங்களையும் நான் கொடுக்கிறேன்.. என்னோடு சேர்ந்து கொள்ளுங்கள் .. என்று போட்டால் சேர்வார்கள்.
இத்தளத்தில் எனது டவுன்லைனாக சேர்ந்து கொண்டால் உங்களுக்கு இத்தளத்தில் எப்படி வேலை செய்வது என்பது பற்றி சொல்லித் தருகிறேன். இத்தளத்தில் தினம் ஆயிரம் சம்பாதிக்கலாம், அதற்கான விவரங்களையும் நான் கொடுக்கிறேன்.. என்னோடு சேர்ந்து கொள்ளுங்கள் .. என்று போட்டால் சேர்வார்கள்.
இதுதான் மிக முக்கியம். என்னதான் காசு கொடுத்தால் பல தளங்களில் விளம்பரம் செய்யலாம் என்றுச் சொன்னாலும் அதனால் பலன் என்பது முதன் முதலில் இருக்கிறோம் என்பதுதான். அவ்வாறு நாம் முதலாக இருந்தால், ஆன்லைன் ஜாப் பற்றித் தெரிந்தவர்கள் நமது விளம்பரத்தினைப் பார்த்தே இணைந்து செயல்பட ஆரம்பித்துவிடுவார். ஆனால், கிளிக்சென்ஸ் போன்ற தளங்களுக்கு ஆட்கள் சேர்க்க வேண்டும் என்றுச் சொன்னால் அதெல்லாம் முடியாது.. ஏனெனில் அனுபவஸ்தர்கள் எல்லோருமே அதில் மெம்பராக இருப்பார்கள். அப்படியானால், புதியவர்களைத்தான் பிடித்தாக வேண்டும். புதியவர்களைப் பிடிக்க டிஜிட்டல் விளம்பரத்தினை நம்புவதனைக்காட்டிலும் நமது உழைப்பின் மூலம் அவர்களுக்கு போதுமான விவரங்களைக் கொடுத்து தயார் செய்வதே நல்லது.

நமக்குத் தெரியும் என்பதனை வாசகர்கள் நம்ப வேண்டும் என்றுச் சொன்னால், நாம் அந்த ஜாப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும், அப்பொழுதுதான் நமக்குத் தெரியும் என்று நம்பி நம்மிடம் வருவார்கள். அடுத்ததாக, நமது வருவாய் நிலையினை அவர்களுக்கு காட்டுவது. இதற்காகத்தான் நாம் ஆன்லைன் ஜாப் மூலம் வாங்கும் ஒவ்வொரு பண ஆதாரத்தினை பதிவிடுகிறோம்.

நமக்கு தெரியும் என்று கட்டுரைகள் எழுதுவது, வருவாய் பார்க்கிறேன் என்ற பண ஆதாரப் பதிவுகள் செய்வது என இருந்தால், விளம்பரப் பகுதியினால் பலன் அடையலாம்.

எனக்குத் தெரியும் என்று ஒர் தளத்தின் வருவாய் அமைப்புகளை தெளிவாக பதிவுகள் செய்திருப்பது மற்றும் பண ஆதாரத்தினை வெளியிட்டு வந்தாலும் கையொப்ப விளம்பரத்தினையும் திறம்பட செய்து கொள்வதோடு, பிறரது கட்டுரையிலும் முதல் ஆளாக சென்று பின்னூட்டமிட்டு வாழ்த்தினையும் கருத்தினையும் தெரிவித்து இடம் பிடித்துக் கொண்டால், ஐந்து செகண்டில் ஒர் நாள் முழுவதும் யோசிச்சி ஒர் பதிவு செய்து பிடிக்க வேண்டிய விளம்பர இடத்தினை பிடித்துக் கொள்ளலாம்.

இதன் நோக்கம், பெரும்பாலும் புதியவர்கள் கூகுள் மூலம் வருவார்கள்... அவர்கள் நமது பதிவுக்குத்தான் வருவார்கள் என்பது உறுதி கிடையாது. படுகையில் இருக்கும் பல ஆயிரம் பதிவுகளில் ஏதேனும் ஒன்றின் மூலமாக வருகிறார்கள்... அந்த ஏதோ ஒன்றில் நமது விளம்பரமும் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக பிறரது பதிவிலும் சென்று பின்னூட்டம் கொடுத்து இடம்பிடித்துக் கொள்வது புத்திசாலித்தானம். அதுமட்டுமில்லாமல், ஆன்லைன் ஜாப் பேமண்ட் ப்ரூப் பதிவுகளையும், பணம் சம்பாதிக்கலாம் வாங்க, இலட்சமே இலட்சியம் போன்ற பகுதிகளில் உள்ள பதிவுகளை வாசகர்களைப் படிக்கும் பொழுது நம்மையும் அறிந்து கொள்ள இலவச விளம்பரமாக நம் பின்னூட்டத்தினைக் கொடுத்துக் கொள்வதும் நல்லது. ஏனெனில் நம் பதிவு என்று அவர் தேடுவது கிடையாது.. இருக்கும் முதல் பதிவுகளையும்.. டைட்டில் நன்றாக இருந்தால் படிப்பது எனவும் இருப்பார்கள்.. ஆகையால் எந்தவொரு பதிவாக இருந்தாலும் பின்னூட்டத்தினை பயனுள்ளதாகக் கொடுத்து சேர்ந்து கொள்ளுங்கள்.

கையொப்பப் பகுதியின் மூலம் பலன் அடைய வேண்டும் என்றுச் சொன்னால் மேல் சொன்னபடி அனைத்து நல்ல பதிவுகளிலும் உங்களது பின்னூட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பலருக்கு பதிவுகள் செய்யும் திறமைகள் இருந்தும், வருவாய் பார்த்துக் கொண்டிருந்தாலும் இவற்றினை செய்யாமல் இருந்தால் உங்களைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லாமல் போய்விடுவதோடு, உங்களது வருவாயினை அதிகரிக்கும் வாய்ப்பினையும் உயர்த்துவது என்பதற்கு கடினமாக உழைப்பில் மட்டுமே முடியும்... ஆனால் நாங்கள், வேலை செய்யாமலே டவுன்லைன் மெம்பர்களை சேர்ப்பதற்காக உழைத்துவிட்டு, பின் அவர்கள் உழைப்பதன் மூலம் சும்மா இருந்தாலும் வருவாயினை பார்த்துக் கொண்டு ஜாலியாக இருப்போம்.

நாமே உழைத்தால் நமது இரண்டு கைகள் தான். அதுவே பிறருக்கு சொல்லிக் கொடுப்பது என்பது நமது இரண்டு கைகளால், நூறு நபர்க்கும் என இருநூறு கைகளை நமக்குக் கீழே அவர்களை வேலை செய்ய வைத்துவிடலாம். இருநூறு கைகள் வேலை செய்து சம்பாதிக்கும் பொழுது அதற்கு ஏற்றாற்போல் நமது வருவாயும் உயரும்.. மேலும் மேலும் பல கைகளைக் கூட்டுவதற்காக, பதிவும் பின்னூட்ட விளம்பரமும் என்றே உழைத்தால் இலட்சம் பல இலட்சம் என உயரும்.

கையொப்பப் பகுதியின் மூலம் போதிய டவுன்லைன் ஏதும் இல்லை என்றுச் சொன்னால், உடனே கையொப்பத்தினை மாற்றியமைத்தல் வேண்டும். இவ்வாறு 30 நாட்களுக்கு ஒர்முறை நமது கையொப்பப் பகுதியின் ரிசல்ட் என்ன எனப் பார்த்து மாற்றிக் கொளுதல் என்பது அவசியம். அதுமட்டுமில்லாமல் நமது பதிவுகளும் சரியாக வாசகர்களைக் கவரவில்லை என்பதனை உறுதி செய்து, மேலும் சிறப்பாகச் செய்ய முயற்சிக்க வேண்டும்.

நம்மால் முடிந்தது, நமக்கு தெரிந்தது, நமது விருப்பம் என்பது இல்லாமல் வாசகர்க்களது விருப்பம் என்று நடந்து கொண்டால் மட்டுமே அதிக வருவாய் பார்க்க முடியும்.

வாசகர்களுக்கான பொதுவான மனநிலை என்பதனைப் பார்த்தால், இன்றைய நிலையில் தினம் ரூ.1000 என்பதுதான் ஒர் சராசரி நல்ல வருவாய். அப்படி இருக்கையில் தினம் ரூ.100 சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் அமைக்காமல்... தினம் ரூ.1000 சம்பாதிக்க உதவும் நல்ல ஆன்லைன் ஜாப் என்று கொடுக்கலாம்.

வருவாய் என்பதே நமது டவுன்லைன்கள் வேலை செய்வது அல்லது ரிஜிஸ்டர் செய்தப் பின்னர் அடுத்தக்கட்ட நிலை என்னவோ அதனை செய்யும் பொழுதுதான். ஆகையால், வேலை என்றுச் சொன்னால் எளிமையாக அவர்கள் புரிந்து செயல்படும் அளவிற்கு பதிவினைச் செய்தால் வெற்றி வெற்றி. அதைப்போல், முதலீட்டுத் தளம் என்றால் தகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவிற்கு பதிவினைச் செய்தால் தான் முதலீடு செய்வார்கள். வெறும் ரெபரல் லிங்கினை மட்டும் கொடுத்தால் வேலை செய்ய தெரியாமல் திரும்பிவிடலாம்.. தளம் பற்றி எதுவும் தெரியாததால் முதலீடு செய்ய அச்சப்பட்டு நகர்ந்துவிடும்.. எனவே கையொப்பப் பகுதி விளம்பரத்தில் பெரும்பாலும் ரெபரல் லிங்கினைக் கொடுப்பதற்குப் பதிலாக நமது சிறப்பு பதிவுக்குள் கொண்டு செல்ல வேண்டும்.

கையொப்பப் பகுதியில் நமது சிறப்புப் பதிவுக்குள் இட்டுச் செல்வதன் மூலம், கையொப்பப் விளம்பரம் வாசகர்களை கவர்ந்ததா என்பதனை நமது பதிவினை படித்தவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு சரி பார்க்கலாம், அதைப்போல் இத்தனை நபர்கள் பதிவினைப் படித்து எத்தனை நபர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்பதனைக் கொண்டு பதிவுக்கான தரத்தினை மதிப்பிடலாம். இவ்வாறு சரியாக நமது தரத்தினை மதிப்பீடு செய்து வேலை செய்தால் தான் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்குள் செல்ல முடியும்.

ஏதோ பின்னூட்டம் செய்தோம்.. என்று செய்துவிட்டு ரிசல்ட் கிடைக்கவில்லை என்று நினைப்பதனைக் காட்டிலும், நாம் இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நமது தரத்தினை உயர்த்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தால் பணம் என்பது தானாக வரும்.

நல்ல பதிவுகளில் தங்களது கருத்துக்களைப் பின்னூட்டப் பதிவாக செய்வதையும் பணமாக மாற்ற முடியும் என்பதனை உணர்ந்து சிறப்பாகச் செயல்படுங்கள்... பதிவுகள் ஒவ்வொன்றும் காசே! காசே!
:thanks: