Page 1 of 1

GBDgift பதிவுகளுக்கு பலம் கொடுக்கும் படங்கள்

Posted: Wed Oct 07, 2015 4:11 pm
by ஆதித்தன்
Image
பணம் சம்பாதிக்கணும் என்று வந்துவிட்டால், என்னதான் சும்மா காசு வந்தாலும் கொஞ்சம் வொர்க் செய்யணும். இல்லாவிட்டால் வந்த காசு கூட வந்த வேகத்திலேயே திருப்தியில்லாமல் போய்விடும்.

உங்களது உழைப்பினை வெளிப்படுத்துவதற்காக எத்தனையோ வாய்ப்புகளை நான் கொடுத்தாலும், அவற்றினை எல்லாம் தவிர்த்து, உழைப்பில்லாமல் சம்பாதிக்க நினைக்கும் உங்களால் அத்தனை எளிதாக சம்பாதிக்க முடியுமா என்று கேள்விகள் அதிகமாக எழுகின்றன. ஏனெனில் உழைக்காவிட்டால், பிறரை வேலை வாங்கவாவது தெரிய வேண்டும், இரண்டுமில்லை என்றால் கையிலிருக்கும் காசு கரையும், பெருகாது.

வேலை செய்வதற்கு தயாராக இருக்கும் நபர்களுக்கு, வேலையை கற்றுக் கொள்ள நிறைய பதிவுகள் படுகையில் இருந்தாலும், உங்களுக்காகத்தான் சொல்கிறேன் என்று குறிப்பிட்டு பதிவுகளைச் செய்யும் பொழுது மேலும் உற்சாகமாக செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு, GBDgift பயிற்சியினை கொடுத்து வருகிறேன்.

அதில் இன்று குறிப்பிட இருப்பது போட்டோ எடிட்டிங்க்.
Image
கட்டுரைகள் எழுதுகிறோம் என்றுச் சொன்னால், அப்பதிவோடு இமேஜ் இருந்தால் நன்றாக இருக்கும். சார்ட்டாக இரண்டு வரியில் சொல்ல வருவதை புரிந்து கொள்ளும் விதத்தில் இமேஜ் ரெடி செய்யவும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இமேஞ் எடிட்டிங்க் அத்தனை கஷ்டம் எல்லாம் கிடையாது. எல்லாவற்றுக்கும் சாப்ட்வேர் வந்துவிட்டதால் மிக எளிதாக செய்திட முடியும். போட்டோ எடிட்டிங் என்றுச் சொன்னால் போட்டோஷாப் மிகவும் பிரபலம்.. போட்டோஷாப் பயன்படுத்தி இமேஜ் எடிட் செய்ய படுகையில் ஏற்கனவே பயிற்சி விடியோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், நிறைய பேரிடம் போட்டோஷாப் சாப்ட்வேர் இல்லாத காரணத்தினாலும், அது கட்டணம் என்பதால் இலவசமாக டவுன்லோடிங்க் செய்ய முடியாது என்பதாலும், இலவசமாக கிடைக்கும் மற்றொரு போட்டோ எடிட்டரான போட்டோஸ்கேப் சாப்ட்வேரை வரும் நாட்களில் பயிற்சிக்காக கொடுக்க இருக்கிறேன்.

போட்டோ எடிட்டிங் செய்ய, PhotoScape என்ற எடிட்டிங் சாப்ட்வேரை கீழ் உள்ள லிங்க் பக்கத்திற்குள் சென்று டவுன்லோடிங் செய்து கணிணியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

http://www.photoscape.org/ps/main/download.php

இன்ஸ்டால் செய்துவிட்டாலே எடிட்டிங் செய்ய பழகிக் கொள்வீர்கள், இருந்தாலும் கொஞ்சம் அவுட் லைனை நானும் அடுத்தடுத்து கொடுக்க இருக்கும் பயிற்சியில் கொடுப்பேன்... ஆகையால் இப்போதைக்கு பதிவுக்கு இமேஜ் செய்ய வேண்டும் என்பதனை உணர்ந்து அதற்கும் மனதினை தயார் செய்து கொள்ளுங்கள்.