சிறந்த தமிழ் ஆன்லைன் ஜாப் தளம்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

சிறந்த தமிழ் ஆன்லைன் ஜாப் தளம்

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 10:24 pm

gayathri18 wrote:தமிழ் ஆன்லைன் ஜாப் என்றதுமே எம் எல்லோர் மனதிலும் முதலில் தோன்ற வேண்டியது படுகை.காம் தான். ஏனெனில் என்னுடைய அனுபவத்தில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட நுாற்றிற்கும் மேற்பட்ட ஆன்லைன் ஜாப் தளங்களில் ஆறு மாதத்திற்கும் மேலாக ஜாப்பிற்காக முயற்சி பண்ணியிருப்பேன். ஆனால் அதில் 99 வீதமான தளங்கள் ஏமாற்றுத்தளங்கள். முதல்முதலில் படுகை.காம்மில் இணைந்ததும் நான் படித்த டெமோ வேர்க்ஸ் எனக்கு படுகை.காம் இல் நம்பிக்கையை வரவழைத்தது.

ஆன்லைனில் உழைக்க வேண்டும் என்ற எண்ணமுடைய அனைவர்க்கும் முதலில் தெரிய வேண்டியது எவ்வாறு ஆன்லைனில் உழைக்கலாம் என்பது தான். அத்தகைய வழிமுறைகளை எந்த விதமான கட்டணமும் இல்லாமல் இலகு தமிழில் விளக்கும் டெமோ வேர்க்ஸ் தான் படுகை .காம் மீது எனது திடமான நம்பிக்கைக்குக் காரணமானது.

அதுமட்டுமன்றி ஒவ்வொரு டெமொ வேர்க்ஸ் செய்வதிலும் ஏதாவது பிரச்சினையோ அல்லது விளக்கக்குறைவோ இருந்தால் அதனையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவும் பின்னுாட்டப் பதிவுகள் தான் நம்பர் ஒன் தமிழ் ஆன்லைன் ஜாப் தளமான படுகை.காம் இன் சிறப்பம்சம்.

நம்பிக்கையூட்டும், ஊக்கமூட்டும், வழிகாட்டும் பின்னுாட்டங்கள் வழங்குவதில் படுகை.காம் இன் நிர்வாகி ஆதித்தன் சாரோ ஏனைய படுகை.காம் இன் உறுப்பினர்களோ குறைந்தவர்கள் அல்ல. எனவே படுகை.காம் இல் இணையும் எந்தவொரு நபரும் பதிவிடத் தெரியவில்லையே என்றோ அல்லது எவ்வாறு டெமோ வேர்க்சை செய்து ஆன்லைனில் உழைப்பதற்கான வழியைத் தெரிந்து கொள்வதோ என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

ஏதோவோர் துறையில் நம் எல்லோருக்குமே திறமை உண்டு. அது எது என்பதை நாம் தெரிந்து கொள்வதுடன் அடிப்படையான கணணி அறிவையும் கொண்டிருந்தால் மட்டும் போதும் என்பதும் வேலையே செய்யாமல் நிச்சயமாக ஆன்லைனில் சம்பாதிக்கமுடியாது என்பதும் சிறு சிறு சதங்களாகச் சேர்த்தே எமது இலட்சியக்கனவை நிறைவு செய்யலாம் என்பதும் தான் படுகை.காம் எனக்கு உணர்த்திய விடயங்கள்.

படுகை.காம் இன் இன்னோர் சிறப்பம்சம் எமது தாய் மொழியான தமிழிலேயே அனைத்துப் பயிற்சிப்பணிகளும் அவற்றிற்கான விளக்கமும் காணப்படுகின்றன. கணணியில் எவ்வாறு தமிழை எழுதுவது என்பது தொடர்பாகவும் பூரண விளக்கம் உண்டு. எனவே படுகை.காம் இல் இணைந்து பணம் சம்பாதிப்பதற்கு தமிழ் ரைப்பிங் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

தான் மட்டும் உழைத்தால் போதாது மற்றவர்களும் உழைக்க வேண்டும் என்ற படுகை.காம் இன் நிர்வாகி ஆதித்தன் சாரின் நல்லெண்ணத்தில் உருவான இந்த தமிழ் ஆன்லைன் ஜாப் தளம் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் மற்றும் உலகமெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உறவுகளும் தமது உணர்வுகளையும் திறமைகளையும் பகிர்ந்து கொள்ளும் பொழுது போக்குத் தளமாகவும் அமைகின்றது. சமையல், அழகு குறிப்புகள், விளையாட்டு, சினிமா, செய்திகள், மாணவர்களம், ஆன்மீகம் போன்ற பெரும்பான்மையான எமது வாழ்க்கைக்குத் தேவையான அம்சங்கள் பலவற்றின் இருப்பிடம் தான் படுகை.காம்.

அத்துடன் பணம் வழங்கும் பணிகள் என்பதன் கீழாகவும் பணப் பரிசு வழங்கும் பொது அறிவுப் போட்டிகள் மூலமாகவும் உறுப்பினர்கள் அனைவரும் பணம் சம்பாதிக்கும் வசதியையும் தமிழ் ஆன்லைன் ஜாப் தளமான படுகை.காம் அவ்வப்போது வழங்கி வருகின்றது.

இவை மட்டுமல்ல என்ன தான் நாம் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சர்வதேச மொழியான ஆங்கிலத்தை பேசத் தெரிந்து கொள்வதே நன்று என்ற எதிர்பார்ப்புடன் உறுப்பினர்கள் அனைவரிற்கும் இலவசமாகவே புரியக்கூடிய விதத்தில் சிறுசிறு படிகளாக கற்றுக் கொடுக்கின்றது படுகை.காம்.

இத்தகைய ஓர் சிறப்பான தளத்தினை எமக்காக உருவாக்கித்தந்த ஆதித்தன் சார் அவர்களிற்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன்பட்டவர்கள். ஒரு முறை நீங்களும் முயற்சி பண்ணினால் உண்மை புரியும்.
கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?......................
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”