விடியோ ஜாப் என்னாச்சு

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

விடியோ ஜாப் என்னாச்சு

Post by ஆதித்தன் » Tue Jan 03, 2023 6:06 pm

கூகுள் ஜாப் ரொம்ப நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று இலட்சங்களைச் சம்பாதிப்பவர்கள் சொல்வார்கள். கூகுள் ஜாப்பில் ஒர் பேமண்ட்டாவது வாங்கிட வேண்டும் என உழைப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்பதுதான் கேள்வியாக இருக்கும், அதிலும் நானும் கூகுள் ஜாப் பண்றேன்னு சொல்லிட்டோம்னா, நிறையபேர் சார், உங்கள் கூகுள் ஜாப் போய்ட்டிருக்குன்னு கேட்பாங்க... காரணம் அதன் மீது அவர்களது ஆர்வம்தான். அதைவிட அதிகமாக சொல்லணும்னா, அவங்களும் கூகுள் ஜாப்புக்கு முயற்சித்திருக்க வாய்ப்பு அதிகம். அவ்வாறு முயற்சி செய்தவர்கள், சரியான வழிமுறை பின்பற்றி நல்லத் தொகையாக பெமண்ட் வாங்காதவங்க எல்லாம் கண்டிப்பா, நம்ம முயற்சி எப்படி போய்ட்டிருக்கு??? அவங்ககிட்ட இருந்து எதேனும் டிப்ஸ் கிடைக்காதானு எதிர்பார்த்து காத்துக்கிடப்பார்கள்.

அப்படி நீங்களும் கூகுள் அட்சன்ஸ் யூடியூப் ஜாப்பில் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என விரும்பி, இங்கு டிப்சு கிடைக்குமானு எதிர்பார்த்தீங்கன்னா, கண்டிப்பாக வரும் ஆனால் வருமா வராதுனு தெரியாது... ஏன்னா, யாரோ சும்மா எம் ஜி ஆர் மாதிரி தகதகன்னு இருக்கீங்கன்னு சொல்லி வச்சதுபோல... சார்க்கு எல்லாம் தெரியும்.. சார் சூப்பரா செய்து, அடுத்த மாதம் போய்மண்ட் வாங்கிடுவார்னு.. அதிகபட்சமான எதிர்பார்ப்பினை கிளப்பி விட்டுட்டாங்க.. நானும் வாங்கிட ஆசைதான். ஆனால் அதற்கு என்ன பண்ணனும்தான் தெரியல..

யுடியூப்னா விடியோதான்.. ஒரு விடியோ கேமாராவ கையில எடுத்துட்டு சுத்தலாமா? அப்படின்னு யோசிச்சா... சார், இது போட்டோகிராபி இல்லைங்கோ.. அப்படின்னு நினைவுப்படுத்தியதாலா தப்பிச்சேன். கொஞ்சம் கிரியேட்டிவிட்டியா யோசிச்சி... கொஞ்சம் புதுமையா செய்யணும். அல்லது புதுமையா செய்வதனைப் பார்த்தாவது செய்யணும். ஆனால் எதுவுமே பிடிபடல.

அதென்னப்பா.. ஒர் காலத்தில் தினம் தினம் பிடிபட்டது இப்ப எதுக்குசார் பிடிக்கமாட்டேங்குது.. எதுவும் ஏழரைச்சனி வந்து பிடிச்சிருச்சா?/ இப்படி பல வருடமா.. முடியல முடியலன்னு சொல்லிட்டே இருக்கீங்கன்னு பிரண்ட் கேட்டாப்பலேயே.. என்ன அதுவும் முடியலையா... லாய்க்கு பட்டுவரமாட்டீங்கன்னு சொன்னது சரியாப்போச்சுன்னு சொன்னதுதான்... டபுக்குன்னு பதில் சொல்லிட வாய் அம்புட்டு பாஸ்ட்டா வந்துச்சி.. வந்து என்னதான் சொன்னதுன்னு ரொம்ப ஆர்வமா கேட்காதீங்க.. அதெல்லாம் ரொம்ப அதிகம்... போதும் போதும்கிற வரைக்கும் நிதானம் உண்டு. ஆனால், அந்த வேலையில் இருக்கிற ஆர்வம்.. அதென்ன வேலைன்னு கேட்காதீங்க.. அதெல்லாம் ஒர் எண்டர்டெய்ன்மெண்ட்தான்.. அதுல இருக்கிற ஆர்வம்.. வேலை செய்து, நாலு காசு சம்பாதிப்பதில் இல்லையேன்னு எனக்கும் தோனும்.. ஆனால் விதி வலியதாக முன் கூட்டியே வந்து தன் கடமையை செய்திடும் பொழுது நான் என் செய்வேன்..

ஆனால் இப்போ சனியார் இடத்தினை காலி செய்ய எழும்பிட்டார்.. அதன் விளைவாகத்தான் புதிய புரிதல் என்பது OMG திரைப்படம் வரை வந்திருக்கும் வருவாய்.. வெட்கப்படாம ... கூச்சப்படாம.. வேட்டியை கட்டாமல் பெரிய காமெடியை கொடுத்து சம்பாதித்திட முடியும் என்பதனை கொஞ்சம் மசலா உப்பு இனிப்பு எல்லாம் சேர்த்துதாங்க... டிரஸ் இல்லாமலே திரைப்படம் இல்லை... அதுவும் ஒன்றுதான் என்பதனை சொல்லிக்கத்தான்.

ஆகையால், பணம் சம்பாதிப்பது என்பது வேலை என்பதோடு இல்லாமல், பொழுதுபோக்காவும் இருக்கலாம் என்பதன் புரிதல்.. இனி பொழுதுபோக்கும் நமக்கான வருவாயினை கொடுக்கும் என்ற புரிதலோடு வேலையை செய்வோம்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”